ஒரு பெரும் இரைச்சலுடன் அந்த விமானம் வந்து நிற்கின்றது. வானத்திலிருந்த இறந்கி வரும் தேவ தூதனைப்போல வெள்ளை உடை அணிந்த அந்த மனிதர் கதவுகளைத் திறந்து, அமைதியாக இறங்கி வருகிறார். ஒரு பெரும் சாதனையாளரைப்போல அதே சமயம் தன்னடக்கத்துடன் இருப்பவரைப் போல அவர் தனது முகத்தை வைத்துக் கொள்கிறார்.
விமானத்தின் படிக்கட்டுகளில் மெல்ல இறங்கி வந்த அந்த மனிதரின் கால்கள் தரையில் பட்டதும் அப்படியே மெல்ல மண்டியிட்டு அமர்கின்றார். முட்டியிட்டு, நெற்றி நிலத்தில் பட தனது மண்ணை வணங்கிய அவர், தன்னைச் சுற்றி இருப்பவர்கள் ஆராவாரம் செய்ய மெல்ல எழுந்து புன்னகை செய்தவாறே தனது கூட்டத்துடன் செல்கின்றார்.
மேற்குறிப்பிட்ட அனைத்தும் ஸ்லோமோஷனில் நடந்து கொண்டிருக்கும் இந்தக் காட்சியமைப்பு மட்டும் ஏதேனும் திரைப்படத்தில் காண்பிக்கப்பட்டிருந்தால், பார்வையாளர்களாகிய நாம் அனைவரும், “க்ளைமாக்ஸ்ல பிச்சு உதறிட்டாண்டா மாப்ளை” என்று உணர்ச்சி வசப்பட்டு போய் இருப்போம். பரவசத்தில் நமது கைகளின் ரோமங்கள் குத்திட்டு நிற்க எழுந்து நின்று கைகளை தட்டி விட்டு திரையரங்கை விட்டு சந்தோசமாய் வெளியே வந்திருப்போம்.
ஆனால் மேற்குறிப்பிட்ட காட்சிகள் காண்பிக்கட்டது திரைப்படத்திலும் அல்ல. வெள்ளை உடை அணிந்த அந்த மனிதன் தேவதூதனும் அல்ல. லட்சக்கணக்கான தமிழ் மக்களை அழித்த, பல்லாயிரக் கணக்கான பெண்களின் வாழ்க்கைய அலங்கோலப்படுத்திய, இன்னும் மூன்று தலைமுறைகளுக்கு ஒரு இனமே எழுந்த வர முடியாத படி படுகுழியில் தள்ளிய ஒரு மாபெரும் கூட்டத்தின் தலைவன் அவன். மஹிந்த ராஜபக்ஷே.

Rajapakshe
விடுதலைபுலிகளை தீவிரவாதிகள் என்று சொல்ல எவர் ஒருவருக்கும் முழு உரிமைகள் இருக்கின்றது. ஏனெனில் புலிகளின் தாக்குதலில் பல அப்பாவிகள் பலியாகியுள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் புலிகளை தீவிரவாதிகள் என்று தூற்றுகின்ற வாய்கள் இனவெறி இலங்கை அரசாங்கத்தை மட்டும் எதிர்த்துப் பேச மறுக்கும் கையாலாகாத் தனத்திற்கு மட்டும் இன்று வரை எந்த ஒரு இலங்கை ஆதரவாளரிடமிருந்தும் பதில் இல்லை.
ஆயுதம் தாங்கி எதிர் போராட்டம் நடத்தும் எந்த ஒரு அமைப்பையும் தீவிரவாதிகளாக பார்க்க நமக்கு கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அரசாங்கம் என்ற லேபிளின் கீழ் கொலைக் குற்றங்களை புரிபவன் மட்டும் தியாகியாக, தேவதூதனாக, நாட்டைக் காக்க வந்த சரித்திர நாயகனாக நமக்கு அடையாளம் காட்டப் படுகின்றான். இதோ இன்று இன்னும் ஒரு சரித்திர நாயகன் உருவாகி இருக்கின்றான். நாளைய வரலாறு இனி இவன் குறித்து மெல்ல புகழ் பாட ஆரம்பிக்கலாம்.
கோவி.லெனின் அவர்கள் எழுதிய கவிதையின் ஒரு பகுதியை இங்கே சொல்ல விரும்புகின்றேன்,
அதிகாரத்தின் சொற்களால்
கட்டமைக்கப்பட்ட
ஊடகங்களின் மொழியை
உள்வாங்கி
என்மொழியாய் வெளிப்படுத்தும்
அநேகர்களில் நானும் ஒருவன்.
அரண்மனைகளின் பீரங்கி
பாதுகாப்பானதென்றும்
குடிமக்கள் ஏந்தும் துப்பாக்கி
பயங்கரமானதென்றும்
சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது எனக்கு.
எவர் ஆதரவுமற்று
எந்த உதவியுமின்றி
சொந்த மண்ணில்
போராடுபவன்
தீவிரவாதி.
அண்டை அயலார்
துணைகொண்டு
அதிகார வெறியின்
மேல் நின்று
இனஅழிப்புச் செய்பவன்
தேசம் காப்போன்.
உலகத்தின் அகராதியில்
புதுப்புது அர்த்தங்களால்
மலிகின்றன பிழைகள்.
மடிகின்றன உயிர்கள்.
இன்னும் ஒரே ஒரு விஷயம் மட்டுமே எங்களை எதிர்பார்ப்புடன் வைத்திருக்கின்றது. இனியும் நீங்கள் புலிகளின் பெயர்களைச் சொல்லி தமிழ் மக்களின் உயிர்களை பறிக்க முடியாது என்ற ஒரே ஒரு எண்ணம் மட்டுமே, அங்கே எங்கள் உறவுகள் அடுத்து விடும் மூச்சுக் காற்றுக்கு ஆதாரமாய் இருக்கின்றது.
யாருக்குத் தெரியும்? எந்த ஒரு ஊடகத்திற்கும் அனுமதியை மறுத்து, உலகத்தின் கண்களிலிருந்து மறைந்து நின்று இத்தனை நாட்களாய் படுகொலைகள் செய்து கொண்டிருந்த போது வேடிக்கை பார்த்த உலக நாடுகளும், ஐ.நாவும், இலங்கை அரசு இனி இதைத் தொடர்ந்தால் மட்டும் கேட்டு விடவா போகின்றன?
மிச்சமிருக்கும் நம் கொஞ்ச நஞ்ச மனித நேய உணர்வுகளாவது இனி சாகாமல் இருக்கட்டும்.
//இன்னும் ஒரே ஒரு விஷயம் மட்டுமே எங்களை எதிர்பார்ப்புடன் வைத்திருக்கின்றது. இனியும் நீங்கள் புலிகளின் பெயர்களைச் சொல்லி தமிழ் மக்களின் உயிர்களை பறிக்க முடியாது என்ற ஒரே ஒரு எண்ணம் மட்டுமே, அங்கே எங்கள் உறவுகள் அடுத்து விடும் மூச்சுக் காற்றுக்கு ஆதாரமாய் இருக்கின்றது.
யாருக்குத் தெரியும்? எந்த ஒரு ஊடகத்திற்கும் அனுமதியை மறுத்து, உலகத்தின் கண்களிலிருந்து மறைந்து நின்று இத்தனை நாட்களாய் படுகொலைகள் செய்து கொண்டிருந்த போது வேடிக்கை பார்த்த உலக நாடுகளும், ஐ.நாவும், இலங்கை அரசு இனி இதைத் தொடர்ந்தால் மட்டும் கேட்டு விடவா போகின்றன?//
நேற்றிலிருந்து ஒரு அடர்ந்த இருளாகப் படுகிறது. செய்தி சேனல்களை பார்க்கும் சக்தி மனதுக்கு வர மறுக்கிறது. பொய்யாக இருக்க வேண்டும் என்ற நப்பாசை மனதில் இன்னும் துளிராக இருக்கிறது, கண்களில் கண்ணீருடன்…
கடவுளே நீயாவது என் உறவுகளைக் காப்பற்று (எப்படியும் மனிதர்கள்(?) அதை செய்யப் போவதில்லை
(()
தமிழ் இனி மெல்லச்சாகும்,
தமிழ்நாட்டில் தமிழனில்லை. அனைவரும் கோழைகள். முதுகெலும்பு அற்றவர்கள். தன்கைகளால் உளைத்து உண்ணத்தெரியாதவர்கள். இலவசம், இலவசம் ! இலவசத்திற்க்காக தன்மானத்தையும் விற்க்க தயார். தமிழன் பச்சோந்தியாய் காறி உமிழும் எச்சிலை விட கேவலமானவன்.
தமிழுக்கென்று ஒரு தலைவன் இருந்தான். வஞ்சகர்களின் சூழ்ச்சிவலையில் அகப்பட்டு இன்று தன்குலமானம் காக்க திராணியற்று தன் உயிர்விடவும் துணிந்து விட்டான். வஞ்சகர்கள் உச்சத்தில் கூடி கொட்டமடிக்கிறார்கள். காலம் இனிமாறாது அது வஞ்சகர்களின் கட்டுப்பாட்டில், தமிழ் இனி மெல்லச்சாகும். நான் இனி என் நாவால் தமிழன் என்று சொல்லமாட்டேன். தமிழ்நாட்டில் பிறந்ததால் தமிழ் இனத்துரோகி என்ற நிலையான களங்கத்திற்க்கு ஆளாகிவிட்டேன். தமிழ்தான் உலகின் மூத்த மொழி, தமிழந்தான் உயர்ந்த நாகரீகத்துக்கெல்லாம் சொந்தக்காரன் என்று வாதிட்டுவந்த நான் இனி மேல் தமிழனில்லை, தமிழை படிக்க மாட்டேன், எனது வம்சத்திற்கே ந தமிழன் என்ற அடையாழமில்லாமல் வளர்க்கப்போகிறேன். நான் இனி தமிழனில்லை
நான் இனி தமிழனில்லை
நான் இனி தமிழனில்லை
பாலாஜி…
இந்த நிலையும் மாறும்,
தமிழர்களின் கண்களிலிருந்து தானாக ஓடும் கண்ணீர்க்கு சக்தி உண்டு என்று நம்புகிறேன்…
வரலாற்றை திருத்தி எழுதும் காலம் வரும்… நிச்சயம் வரும்…
என் பூமியின் புழுதிக் குளியலிலேயே
பூப்பின் புனிதம் ஆனது என் தேகம்.
இப்போ…
கந்தக பூமியாய் அது
சுடுகாடாய் அது
மனிதன் வாழமுடியா மண்மேடாய் அது.
பிணக்காடு கடந்து
இரத்த ஆறு தாண்டியே
விலங்கிட்ட என் தமிழ்த்தாயை
தூர நின்று தரிசிக்கிறேன்.
கண்ணீர் கூட வற்றியவளாய்
பேதலித்துப் பிதற்றியபடி.
தோழா கொஞ்சம் நில்…கவனி.
பறக்கும் நிலை தவிர்.
உன் சிறகு முறி.
அல்லது மடக்கி வை.
எங்களுக்கான இறுதி மணித்துளிகளின்
எல்லையில்தான் இன்றைய எம் பயணம்.
தனியாகப் பறக்கும் சக்தியைக்
சற்றுப் புறம் தள்ளு.
உனக்கு….இன்று
தனித்துப் பறத்தல் அவசியமற்றது.
கை கோர்த்துக்கொள்.
நடப்பது ஒன்றே
இப்போதைக்கு எமக்குத் தேவையானது.
கொடு உன் தோழமைக் கரத்தை !!
Good…Good… Very Good…
மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலில் இரண்டு இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். உடனடியாக வந்தது இஸ்ரேல் அதிரடிப்படை. ஆனால் நாம் நமது இனத்தை வேரறுக்க மேலும் ஆயுதங்களை வழங்கிக்கொண்டிருக்கிறோம்.
இன்று நீ, நாளை நான் என்ற நிலைதான் தமிழகத்திற்கு வரப்போகின்றது. ஒரு நாள் பாகிஸ்தானோ அல்லது சீனாவோ இலங்கையில் உள்ள தங்கள் போர்தளங்களில் இருந்து தென் இந்தியாவை குறிவைக்கும்போது நம் தமிழர்களுக்கு அறிவு வரும். யார் கண்டார், அப்போதும் உண்ணாவிரதம், தந்தியடித்தல், ராஜினாமா மிரட்டல் நடந்தாலும் நடக்கும்…….
அடுத்த வீட்டில் தீப்பிடிக்க நினைப்பவன் மனிதனா
அந்தநேரம் ஓடிவந்து அணைப்பவன் மனிதனா
தன் வீட்டில் இழவு விழுந்தால் மட்டுமே அழுவேன் என்று இருப்பவனை என்னென்று சொல்ல…………..
இதற்குமேல் சொல்ல என்னிடம் வார்த்தையில்லை.
வெளிநாடு வாழ் தமிழர்களே, தயவுசெய்து தாய்நாடு திரும்பாதீர்கள்…..
இந்த அசிங்கங்களுடன் வாழ்வதற்கு நாம் தற்போது இருக்குமிடத்திலேயே அடிமைகளாக இருந்துகொள்வோம்…
“புலிகளை தீவிரவாதிகள் என்று தூற்றுகின்ற வாய்கள் இனவெறி இலங்கை அரசாங்கத்தை மட்டும் எதிர்த்துப் பேச மறுக்கும் கையாலாகாத் தனத்திற்கு மட்டும் இன்று வரை எந்த ஒரு இலங்கை ஆதரவாளரிடமிருந்தும் பதில் இல்லை.”
அறிவுஜீவிகள் அப்படித்தான் பேசுவார்கள் நந்தா. கோட்பாடுகளையும் சித்தாந்தங்களையும் வைத்துக்கொண்டு கதைப்பவர்களுக்கு நடைமுறை குறித்த தெளிவில்லை.
Similar to my thoughts
http://vivasaayi.blogspot.com/2009/05/blog-post_18.html
மிச்சமிருக்கும் நம் கொஞ்ச நஞ்ச மனித நேய உணர்வுகளாவது இனி சாகாமல் இருக்கட்டும்./
ம்ம்.
என்ன சொல்ல ? கண்ணீர் தான் வருகிறது.
தமிழ் இனி மெல்லச்சாகும்,
தமிழ்நாட்டில் தமிழனில்லை. அனைவரும் கோழைகள். முதுகெலும்பு அற்றவர்கள். தன்கைகளால் உளைத்து உண்ணத்தெரியாதவர்கள். இலவசம், இலவசம் ! இலவசத்திற்க்காக தன்மானத்தையும் விற்க்க தயார். தமிழன் பச்சோந்தியாய் காறி உமிழும் எச்சிலை விட கேவலமானவன்.
தமிழுக்கென்று ஒரு தலைவன் இருந்தான். வஞ்சகர்களின் சூழ்ச்சிவலையில் அகப்பட்டு இன்று தன்குலமானம் காக்க திராணியற்று தன் உயிர்விடவும் துணிந்து விட்டான். வஞ்சகர்கள் உச்சத்தில் கூடி கொட்டமடிக்கிறார்கள். காலம் இனிமாறாது அது வஞ்சகர்களின் கட்டுப்பாட்டில், தமிழ் இனி மெல்லச்சாகும். நான் இனி என் நாவால் தமிழன் என்று சொல்லமாட்டேன். தமிழ்நாட்டில் பிறந்ததால் தமிழ் இனத்துரோகி என்ற நிலையான களங்கத்திற்க்கு ஆளாகிவிட்டேன். தமிழ்தான் உலகின் மூத்த மொழி, தமிழந்தான் உயர்ந்த நாகரீகத்துக்கெல்லாம் சொந்தக்காரன் என்று வாதிட்டுவந்த நான் இனி மேல் தமிழனில்லை, தமிழை படிக்க மாட்டேன், எனது வம்சத்திற்கே ந தமிழன் என்ற அடையாழமில்லாமல் வளர்க்கப்போகிறேன். நான் இனி தமிழனில்லை
நான் இனி தமிழனில்லை
நான் இனி தமிழனில்லை
கூல் டவுன் ரமேஷ். உங்கள் உணர்வுகள் புரிகின்றது. ஆனால் இந்த எண்ணம் தவறு என்று நினைக்கிறேன்.
True!
மிச்சமிருக்கும் நம் கொஞ்ச நஞ்ச மனித நேய உணர்வுகளாவது இனி சாகாமல் இருக்கட்டும்./
ம்ம்.
என்ன சொல்ல? கண்ணீர் தான் வருகிறது.
You Are Posting Really Great Articles… Keep It Up…
We recently have launched a website called “Nam Kural”… We want the links of your valuable articles to be posted in our website…
தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,
http://www.namkural.com.
நன்றிகள் பல…
- நம் குரல்
enn ivallavu kovapaduringa ellorum?ATHIRAKARANUKU PUTHI MATTU enru palla moliye irruku illaya.enga uravugal alinthathu unmayai than but ippo evalla vu uravugal puthui tha pirathu iruku engaluku ungalla mathiri .muthala a nannga mathum than tamil ellam virupinam ippo ulakathila ulla ella tamilar kalum atha thane virumpuringa.ithu vum oru vagailla oru vitri than.mudintha tha ninachi kannir vidamma .iranthu ponna enn uravugali asiya nire vetha etha vathu seiyalama enru yosinga.nann oru TAMILASCHI ennru solla ippo vum romba perumai paduran
// படுகொலைகள் செய்து கொண்டிருந்த போது வேடிக்கை பார்த்த உலக நாடுகளும், ஐ.நாவும், இலங்கை அரசு இனி இதைத் தொடர்ந்தால் மட்டும் கேட்டு விடவா போகின்றன? //
இத்துணை பேர்கள் கைகட்டி வேடிக்கை பார்த்தது ஒன்றும் பெரிய விஷயமல்ல…… !! நம் தமிழனே அரசியல் என்னும் துர்நாற்றம் வீசும் போர்வை கொண்டு , தன் செல்வத்தையும் , செல்வங்களையும் காப்பாற்ற …. கை கட்டி கொண்டு வேடிக்கை பார்த்த கூத்து … கொடுமையிலும் கொடுமை …..!!!
தமிழகத்தில் உள்ள தமிழர்கள் மாரிவிட்டாகள் …. , தேர்தல் எப்பொழுது வரும் , அவர்கள் கொடுக்கும் நூறு ருபாய் பிச்சை காச எப்பொழுது கிடைக்கும் என்று எதிர்நோக்கும் கழுகுகளாக மாறிவிட்டனர்……!!!!
நளினியிடம் கதை கேட்டுவிட்டுச் சென்ற சின்ன குமாரி . பிரியங்கா காந்தி , தன் தகப்பனாரை கொன்றது விடுதலை புழிகள்தான் என்று ஆனித் தரமாக ஊர்ஜிதம் செய்த பிறகுதான் இலங்கை அரசுக்கு முழு உதவிக் கரம் நீட்டினார் …. சிலரால் அன்னை என்று அழைக்கப்படுபவர்…!!
இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று நான் பிரதமருக்கு தந்தி அடித்துள்ளேன் , தமிழர்கள் எல்லோரும் ஆளுக்கொருவர் தந்தி அடியுங்கள் என்று கூறிய தமிழ்ப் புழவர் , தன் மகன் மற்றும் பேரனுக்கு மந்திரிப் பதவி வேண்டும் என்ற கட்டாயத்தில் …. தந்திகளை பறக்கவிட்டு … தலைமை இடத்துக்கு பறந்தது மற்றொரு வேடிக்கை…..!!!!!
போதும்….. போதும்….. இந்த கொடுமைகள்…..!!
நந்தா, பதிவிட்டு நீண்ட நாட்கள் ஆகிறது போல…இதுவரை 5 முறை வந்துவிட்டேன். ஏதாவது எழுதலாமே…
அன்புடன்
கிருஷ்ணப் பிரபு.
இனியும், இனிமேலும் என்ன தயக்கம். முதலாளித்துவம் கூறும் சமத்துவத்திற்கு முடிவுரை எழுதுங்கள். பொதுவுடைமைவாதிகள் கூறும் சமத்துவத்திற்கு முகவுரை எழுதுங்கள்.