nav-left cat-right
cat-right

வீர் சாவர்க்கர் – இலந்தை ராமசாமியின் புத்தகம் குறித்தான ஓர் அவசியமான விமர்சனம்

முன் குறிப்பு: வரலாற்று ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் என்று தன்னைச் சொல்லிக் கொள்பவர்கள் எவர் மீதும் இரண்டு காரணங்களுக்காக கண் மண் தெரியாமல் கோபம் கொள்ளலாம்.

1.வரலாற்றைத் திரித்தல். (பொய்களை பிரச்சாரப்படுத்துதல்)
2.புனித பிம்பப்படுத்துதல். (சில உண்மைகளை மட்டும் சொல்லாதிருத்தல் அல்லது தவறுகளை மறைத்தல்)
*********************************************************************************************************

Veer Savarkarவிநாயக் தாமோதர் சாவர்க்கர். தனது வாழ்க்கையில் மாபெரும் திருப்பங்களையும், குழப்பங்களையும் கொண்டவர். பின்னாளைய தலைமுறைக்கு இன்று வரை சரியாக அடையாளம் காட்டப்படாத ஓர் மனிதர்.

ஒரு பக்கச் சரித்திரம் இவரை தன்னிகரில்லா வீரத்தின் மொத்த உருவமாயும், பகத்சிங் போன்ற மாபெரும் புரட்சியாளர்களிற்கு இணையானவராகவும், பிரிட்டிஷார்கள் இவரைக் கண்டாலே நடுங்கும் அளவிற்கு பயந்திருந்தார்கள் என்றும், சிறந்த பேச்சாளர்,தன் கண்ணசைவிற்குக் காத்திருக்கும் ஓர் பெரும் சீடர் படைகளைக் கொண்டவர் என்றும் பல்வேறு விதமாய் இவர் புகழைத் தொடர்ந்துப் பாடிக் கொண்டிருக்கிறது.

ஆனால் இன்னொரு பக்கம் இவர் குறித்து தீவிர விமர்சனங்களும், குற்ற்ச்சாட்டுகளும் தொடர்ந்து வீசப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது. காந்தியடிகளின் கொலையில் மிகப்பெரும் பங்கு வகித்தவர், பிரிட்டிஷாரிடம் தொடர்ச்சியாய் மன்னிப்புக் கடிதங்கள் எழுதி மன்றாடியவர், இந்து மகாசபையைத் தோற்றுவித்து முஸ்லீம்களின் மீதான துவேஷத்திற்கு தொடர்ந்து பங்காற்றியவர், பல இளைஞர்களை தவறான பாதைக்கு வழிக்காட்டியவர் என்று இவர்மீதான மாற்று வரலாற்றுப் பார்வையும் முன்வைக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது.

இந்த சூழலில் கிழக்கு பதிப்பகம் மூலம் இலந்தை.சு.ராமசாமி அவர்களால் எழுதப்பட்ட வீர் சாவர்க்கர் புத்தகத்தை நான் படிக்கத் தொடங்கும் முன்பு என்னுள் பல்வேறு எதிர்பார்ப்புகள், கேள்விகள் இருந்தன. குறிப்பாய் வீர் சாவர்க்கரைப் பற்றி பல்வேறு தமிழ் மக்களால் விரும்பி படிக்கப்படும் கிழக்கு பதிப்பகம் எப்படிப்பட்ட வரலாற்றை முன்வைக்கப் போகின்றது என்ற பெரிய கேள்வி என் முன்னால் இருந்தது.

எடுத்த எடுப்பிலேயே சொல்லி விடுகிறேன். புத்தகத்தை படித்து முடித்ததும் நான் அடைந்த ஏமாற்றத்திற்கு அளவே இல்லை. சமீப காலங்களில் என்னை இந்தளவிற்கு கோபப்படுத்திய புத்தகம் வேறெதுவும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

புத்தகத்தின் முன் அட்டையில் இவ்வாறு போட்டிருக்கிறது. “தேசபக்தர். இந்து தீவிரவாதி. இஸ்லாமியர்களின் விரோதி. தீண்டாமையை ஒழிக்கப் பாடுபட்டவர். நிஜத்தில் யார் இந்த சாவர்க்கர்? அழுத்தம் திருத்தமாக பதில் சொல்கிறது இந்தப் புத்தகம்.” உண்மைதான் மிக அழுத்தமாய் இதைப் படிப்பவர்கள் மனதில் வீர் சாவர்க்கர் மீது ஒரு ஹீரோ வொர்ஷிப்பை ஏற்றி வைக்க அரும்பாடு பட்டிருக்கிறது இந்தப் புத்தகம்.

“படைப்பு உருவான பின்பு படைப்பாளி இறந்து விடுகிறான்” என்பதெல்லாம் வெகு நிச்சயமாய் இது போன்ற படைப்புகளிற்கு பொருந்தாது. ஏனெனில் இந்த நூலில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு சம்பவங்களும், சொல்லப்படுகின்ற காரணங்களும் முழுக்க முழுக்க படைப்பாளியின் கண்ணோட்டத்தின் வழியாகத்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு சில விஷயங்களைப் படிக்கும் போதே கூட “சாவர்க்கர் தவறு செய்து விட்டாரே” என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தாலும் அதற்கு சால்ஜாப்பாக தொடர்ச்சியாய் சில காரணங்களை சொல்லி சொல்லி தவறை இருட்டடிப்போ அல்லது நியாயப்படுத்தியோ சென்று வ்டுகிறார் ஆசிரியர்.

கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்கள் குறித்து ஒரு வருத்தம் ரொம்ப நாளாகவே எனக்கு உண்டு. அது பதிப்பகத்தின் டெம்ப்ளேட் எழுத்து முறை.

நான் ஃபிக்ஷன் வகை எழுத்துக்களை எழுதும் போது ஏதோ ஃபிஷன் வகை கதையை எழுதுவது போன்றதான எழுத்தாடல்கள், திடுக்கிடல் திருப்பங்கள், கதாநாயகன் அறிமுகத்தின் போது கொடுக்கும் பில்டப்புகளைப் போன்ற அறிமுகங்கள் போன்றவற்றைப் பற்றிச் சொல்லலாம்.

(உதாரணத்திற்கு இந்த புத்தகத்தில்: ஒரு காவலர் அவரை கைத்தடியால் பின் மண்டையில் தாக்கினார். சாவர்க்கர் சட்டென்று சுழன்று அதைக் கையால் பிடித்துக் கொண்டு சொன்னார். “நான் சாவதற்கு அஞ்ச வில்லை. ஆனால் நீங்கள் என்னைக் கொல்ல நினைத்தால் உங்களில் ஒருவனையாவது கொன்று விட்டுத்தான் சாவேன்” என்று சொன்னார்)

இது போன்ற பல உதாரணங்களைச் சொல்லலாம். இது போன்ற, ஏதோ சம்பவங்களை அருகிலிருந்து பார்த்தது போல் எழுதப்படும் எழுத்துக்கள் ஒரு மசாலா படம் பார்ப்பது போன்ற உணர்வைத் தருவது மட்டுமின்றி சம்பவங்களின் மீதான ந்ம்பகத் தன்மையை முற்றிலுமாய் குறைக்கின்றது.

ஆனால் இது முழுக்க முழுக்க எழுத்தாளர் மற்றும் பதிப்பகத்தின் தனிப்பட்ட உரிமை என்பது மறுக்க முடியாத உண்மை. அதேசமயம் அமெச்சூர் வாசகனை திருப்தி செய்ய வேண்டிய கட்டாயமாய் கூட இருக்கலாம். ஆகையால் இதை ஒரு குற்றச்சாட்டாய் இல்லாமல் தனிப்பட்ட ஒருவனின் கருத்தாய் பதிவு செய்கின்றேன்.

சாவர்க்கர் குறித்தான இந்த புத்தகமும் கிழக்கு பதிப்பகத்தின் டெம்ப்ளேட்டிலிருந்து சற்றும் அடி பிறழாமல் எழுதப்பட்டதே.

வரலாற்றுச் சம்பவங்கள் நிறைந்த புத்தகத்தை எழுதும் போது ஆதாரத்திற்காய் உபயோகப்படுத்திய தரவுகளை புத்தகத்தின் ஏதேனும் ஒரு சிறு மூலையிலாவது குறிப்பிட்டிருந்திருக்கலாம். வீர சாவர்க்கர் குறித்தான இந்த புத்தகம் என்றில்லை கிழக்கின் பல புத்தகங்களில் இது இல்லவே இல்லை.

ஆனால் மேற்குறிப்பிட்ட அனைத்தும் ஒரு சாதாரண விஷயங்களே. இதற்காக நான் கோபம் கொள்கிறேன் என்றால் அது ஓவர் ரியாக்ட் செய்வது போல் இருக்கும். என்னுடைய அடிப்படை கேள்வி இந்தப் பிரதியின் மூலம் எழுத்தாளர் தனது வாசகனுக்கு எதை உணர்த்த விரும்புகிறார் என்பதே?

சாவர்க்கரைப் பற்றி சுருக்கமாய் சொல்ல வேண்டுமென்றால் அந்தமான் சிறைக்கு செல்லும் வரை இருந்த சாவர்க்கர் மட்டுமே வீர் சாவர்க்கர். அதற்குப் பின்பு நடமாடிய சாவர்க்கர் முற்றிலும் வேறு மனிதர். இந்தியாவில் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கும் மத துவேஷங்களுக்கு வித்திட்டதில் தெரிந்தோ தெரியாமலோ அவருக்கும் பங்கிருக்கிறது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அவர் ஆற்றிய பணிகளை, துணிச்சலான நடவடிக்கைகளை போற்ற வேண்டியது எப்படி நம் கடமையோ, அதே போல அந்தமான் சிறையில் கோழைத்தனமாய் அவர் பிரிட்டிஷாரிடம் கெஞ்சிய மன்றாடல்களை, காந்தியடிகள் கொலையில் அவருக்கிருந்த பங்கினை (நேரடியாகவோ, மறைமுகமாகவோ), இந்து மகா சபையின் மூலமும், தனது தொடர் பிரச்சாரங்களின் மூலம் மக்களின் மனதில் அவர் விதைத்த மதத் துவேஷங்களை இடித்துரைப்பதும் நம் கடமையே.

ஆனால் இந்த புத்தகம் வாசகனுக்குள் விதைப்பது என்ன? “தேசபக்தியில் அவரது உயரத்தை எட்டிப்பிடித்தவர்கள் மிகக் குறைவு. சூரியனை மேகம் மறைப்பதால் சூரியனுக்குக் குறைவில்லை” என்பது போன்ற வாசகங்களும், புத்தகத்தின் இறுதியில், “இமயமலையின் சிகரங்கள் வெளியே தெரிவதில்லை என்பதற்காக சிகரங்கள் இல்லை என்று சொல்லி விட முடியுமா? சிகரம்தான் சின்னதாகப் போய்விடுமா? சிகரத்தை நோக்கிக் கை கூப்புவோம். அந்த மரியாதையையாவது செய்யக் கற்றுக் கொள்வோம்” என்ற இறுதி வரிகளும் வாசகனுக்கு எப்படிப்பட்ட பிம்பத்தை தோற்றுவிக்கிறது என்பது முக்கியம் அல்லவா?

சாவர்க்கர் குறித்தான தீவிர விமர்சனம் எழுப்ப வேண்டிய பகுதிகளில் எல்லாம் ஆசிரியர் விமர்சனத்திற்குப் பதிலாக சால்ஜாப்புக் காரணங்களை மட்டுமே அடுக்குகின்றார். ஒரு இடை நிலை வாசகன் வெகு எளிதாய் “பாவம்பா அவரு மட்டும் என்னதான் செய்வார்” என்பது போன்ற பிம்பத்தை வெகு எளிதில் ஏற்படுத்திக் கொள்ள தீவிர  முயற்சி செய்திருக்கிறார்.

அந்தமான் சிறையிலும், ரத்னகிரி சிறையிலும் இருந்த வார்டன்கள் அனைவரும் முஸ்லீம்கள். அவர்களால் அந்தமானில் அனைத்து இந்துக் கைதிகளும் கடும் துன்பப் பட்டார்கள். அதனாலேயே சாவர்க்கர் பெரும் மன மாற்றம் அடைந்தார் என்ற கருத்தை கொஞ்சம் கொஞ்சமாய் வாசகர்களுக்கு ஏற்றுகிறர் ஆசிரியர். ஆனால் அந்தமான் சிறையில் இருந்த வேறு எந்தக் கைதிகளும் இத்தகைய மன மாற்றத்தை அடைந்திருக்க வில்லை. அது மட்டுமல்லாமல் அந்தமான் சிறையின் புகார் பதிவேடுகளில் அது போன்று ஒரு குற்றச்சாட்டும் காணப்பட வில்லை.

“ஆயுள் காலத்திற்கு நாடு கடத்தப்பட்ட என் கதை” சாவர்க்கரால் 1927ல் வெளியிடப்பட்ட சுய சரிதை. இவரே 1908ல் “முதல் இந்திய சுதந்திரப் போர் – 1857” என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார். இந்த இரண்டு புத்தகங்களுக்கு நடுவேதான் எத்தனை எத்தனை வித்தியாசம்.இந்து முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தி இந்தப் புத்தகத்தில் எழுதிய அதே சாவர்க்கர், தனது சரிதையை எழுதும் போது முஸ்லீம்களுக்கெதிரான துவேஷங்களையும், விரோதப் போக்கையும் விதைக்கிறார்.

முதல் உலக்ப்போரில் இங்கிலாந்திற்கு எதிராக துருக்கியும் ஜெர்மனியும் இணைந்ததை தனது எதிரிக்கு எதிரான குழுவாய் அவரால் காண முடிய வில்லை. அதை அவர் முஸ்லீம்கள் ரஷ்யாவின் உதவியுடன் இந்தியாவிற்கு வந்து கொள்ளையடிக்கும் முயற்சியாக பார்க்கிறார். மதாபிமானம் ஒரு மனிதனின் தேச பக்தியை எவ்வாறு நீர்த்துப் போகச் செய்து விடுகிறது என்பதை அவர் வாழ்ந்து காட்டி இருக்கிறார்.

இந்தியா சுதந்திரம் அடைந்த அன்று, இந்தியா முழுக்க தேசிய கொடியை ஏற்றிக் க்ண்டாடிக் கொண்டிருந்த அந்த தருணத்தில், தனது வீட்டில் இந்து மகாசபையின் கொடியை ஏற்றி வைத்து இந்தியக் கொடியை முற்றிலும் நிராகரித்தவர் சாவர்க்கர். தனது புத்தகத்தில் அதற்குக் பக்கம் பக்கமாய் காரணங்களை அடுக்கியவர். மதாபிமானத்தால் அவர் செய்த இந்த செயல்கள் குறித்து புத்தகத்தில் எங்கும் மருந்துக்குக் கூட கோடிட்டுக் காட்டப்பட வில்லை.

சாவர்க்கர் 1911 ஆம் ஆண்டு ஜூலை 4 அன்று அந்தமானுக்குக் கொண்டு வரப்பட்டார். அவரது உடல் நிலை நலிவடையத் தொடங்கியது 1915 – 16 க்கு மேல்தான். மிக மோசமாகத் தொடங்கியது 1918ல் தான். ஆனால் சாவர்க்கர், தான் சிறைக்கு கொண்டுவரப்பட்ட அந்த ஆண்டிலேயே (1911) முதல் மன்னிப்புக் கடிதம் / மனுவை எழுதி இருக்கிறார்.

1911 அக்டோபரில் முதல் கடிதம், 1912 டிசம்பர் 15 அன்று இரண்டாவது கடிதம், 1913 – நவம்பரில் ஒன்று, 1914 – பிப்ரவரியில் ஒன்று, இன்னும் 1915… 1918 என்று அவர் தொடர்ந்து முயற்சி செய்திருக்கிறார். ஆனால் இந்தப் புத்தகத்தில் வசதியாக தேவைப்படும் இடங்களில் வெறுமனே வருடங்களை குறிப்பிடாமல் இருப்பதன் மூலமும், அவர் உடல் நிலை மோசம் என்று காரணங்களை அடுக்குவதன் மூலமும் எழுத்தாளர் சாவர்க்கர் மீதான புனித பிம்பம் கலைந்து விடாதவாறு பார்த்துக் கொள்கின்றார்.

இன்னும் பிரிட்டிஷாருக்கு அவர் எழுதிய கடிதங்களை அப்படியே நான் இங்கு பிரசுரித்தால் படிக்கும் எவருக்கும் அவர் எந்தளவு தரம் தாழ்ந்து போகத் தயாராயிருந்தார் என்பதை எளிதில் இனம் கண்டு கொள்ள முடியும். சாவர்க்கரின் வரலாறை எவர் ஒருவர் எழுதினாலும் இந்த கடிதங்களை படிக்காமல் இருந்திருக்க மாட்டார்கள். ஆனால் ஆசிரியர் வசதியாக இந்த வாசகங்கள குறித்தான எந்த ஒரு சிறு குறிப்பையும் வாசகனிற்கு தெரியப்படுத்தவே இல்லை. புனித பிம்பத்தைக் கட்டிக் காப்பாற்றுவதில் மீண்டும் ஒரு முறை இங்கே வெற்றி பெற்றிருக்கிறார்.

அந்தமான் சிறையில் மற்ற கைதிகளை தூண்டி விட்டு வேலை நிறுத்தத்தை தூண்டி விட்ட சாவர்க்கர் தான் அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளவே இல்லை. அதற்குக் காரணமாய் அவருக்கு அவர் மனைவியிடமிருந்து கடிதம் வர வேண்டி இருந்தது. இதில் கலந்து கொண்டால்  அவருக்கு அந்த கடிதம் கிடைக்காது. பாவம் என்று சாவர்க்காரின் மனசாட்சியாகவே இருந்து பதில் தருகிறார் ஆசிரியர்.

ஆனால் அதே போராட்டத்தில்தான் 60 வயது முதியவர் சீக்கிய அரசியல் கைதி சர்தார் சோஹன் சிங், பிரித்வி சிங் என்ற இளைஞனும் 12 நாட்களுக்கும் மேலாக, உண்ணாவிரதம் இருந்து தனது வீரத்தை, புரட்சித் தன்மையை நிரூபித்திருக்கிறார்கள்.ஆனால் வரலாற்றுப் பாடங்களில் அவர்களின் சுவடுகளை தேடித்தான் கண்டு பிடிக்க முடிகின்றது.

சாவர்க்கர் மீதான உச்சகட்ட விமர்சனமே காந்தியடிகள் கொலையில் அவரது பங்குதான். ஆனால் கோட்சே தன் வாக்கு மூலத்தில் சாவர்க்கருக்கும், இந்தக் கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லி விட்டான் என்ற ஒற்றை வரியின் மூலம் எல்லா குற்றச்சாட்டுக்களையும் புறம் தள்ளுகிறார் ஆசிரியர். அது மட்டுமின்றி தொடர்ந்து நடந்த கலவரத்தில் அவரது சகோதரர் தாக்க்கப்பட்ட தகவல்களையும் தேவைக்கும் அதிகமான அளவில் பதியச் செய்வதன் மூலம் ஏற்படும் சிறு சந்தேக உணர்வையும் அனுதாப உணர்வாய் மாற்றுவதன் மூலம்  ஆசிரியர் தனது எழுத்து அரசியலை தொடர்ந்து கடை பிடித்திருக்கிறார்.

ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ், பிஜேபி போன்ற இந்துத்வா அமைப்புகள் மாறி மாறி தன் பங்குக்கு இவரை புனித பிம்பப்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. அந்தமானில் இவரது நினைவுச் சின்னங்களை வைத்து அத்வானி போன்றவர்களால் நடத்தப்பட்ட அரசியல் விளையாட்டுக்கள், முரளி மனோஹர் ஜோஷி போன்றவர்களால் சாவர்க்கரின் இன்னொரு முகம் தெரியாத படி “சுதந்திரப் போராட்ட நூல் வரிசைகள்” மீதான தடை என்று இந்த திருவிளையாடல்களை பெரிய பட்டியலே இடலாம்.

இந்த சூழலில் வந்திருக்கும் இப்புத்தகம் பல வரலாற்றாசிரியர்கள் தெரிந்தே செய்த புனித பிம்பப் படுத்துதலை தொடர்ந்து செய்கிறது. எழுத்தாளர்களின் சார்பு அரசியலை விரும்பாத, மிகைப்படுத்தி எழுதப்படும் வரலாறுகளை விரும்பாத எந்த ஒரு வாசகனுக்கும் இந்த புத்தகம் வெகு நிச்சயமாக சிறிதளவேனும் கோபத்தை ஏற்படுத்தும்.

ஒட்டு மொத்த புத்தகத்தில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் எழுத்துப் பிழை தட்டுப்பட்டது. புத்தக அட்டை வடிவமைப்பு, பேப்பர் தரம், எழுத்துருக்கள், ஸ்பேசிங் என்று அச்சு ஊடகத்தில் புதியதோர் பரிணாம வளர்ச்சிக்கு வித்திட்ட கிழக்குப் பதிப்பகத்தை எனக்குப் பிடித்திருப்பதற்கு எழுத்தாளனுக்கான ராயல்டி நேர்மை, மார்க்கெட்டிங், துவண்டிருந்த அச்சு ஊடகத்தை உயிர்த்தெழச் செய்ததில் கிழக்கின் பங்கு என்று தனிப்பட்ட முறையில் என்னிடம் பல காரணங்கள் இருக்கின்றன.

கிழக்கு பதிப்பகத்திடம் நான் கேட்டுக் கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். உங்களது அடுத்த புத்தகத்தில் எழுத்துப் பிழைகளைச் சரி பார்க்கிறீர்களோ இல்லையோ, தயவு செய்து கருத்தியல் பிழைகளைச் சரி பாருங்கள்.

நூலின் பெயர் : வீர் சாவர்க்கர்
நூல் ஆசிரியர் : இலந்தை சு.ராமசாமி
விலை : ரூ.80
பக்கங்கள் : 200

வெளியீடு : கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் சாலை,
ஆழ்வார்ப்பேட்டை, சென்னை – 600 018.
தொலைபேசி : 044-42009601/03/04
தொலைநகல் : 044-43009701

நூலினை ஆன்லைனில் வாங்க இங்கே சொடுக்கவும்.

ஆதாரத்திற்காய உபயோகப் படுத்தப் பட்டவை:

 • http://www.savarkar.org
 • http://en.wikipedia.org/wiki/Vinayak_Damodar_Savarkar
 • சாவர்க்கரும் இந்துத்துவமும் – ஏ.ஜி.நூரணி
 • காந்தி படுகொலை – பேசப்படவேண்டிய உண்மைகள் – பேராசிரியர்.கே.ராஜூ
 • Freedom at Midnight
 • Pdf and Video Footages of Indian Freedom Struggles.

27 Responses to “வீர் சாவர்க்கர் – இலந்தை ராமசாமியின் புத்தகம் குறித்தான ஓர் அவசியமான விமர்சனம்”

 1. Rajalingam says:

  வீர் சாவர்க்கர் குறித்தான உங்களது பார்வையும், இப்புத்தகத்தின் மீதான உங்களது விமர்சனமும் நியாயமான முறையில் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது நண்பர் நந்தா.

  சும்மாவேனும் புத்தகங்களை பரவாயில்லை, படிக்கலாம் என்ற ரீதியில் விமர்சனம் செய்யாமல், அலசி ஆராய்ந்து விரிவாக எழுதியமைக்கு நான் போற்றுகிறேன். தவறான வரலாறுகள் குறித்து கோபம் கொள்ளும் புள்ளியில் நாம் ஒன்று படுகிறோம்.

  உங்களது தொலைபேசி எண் கிடைக்குமா? எனக்கு மடலாகவோ பின்னூட்டமாகவோ தெரியப்படுத்தவும்.

 2. Proud to be an Hindu says:

  இங்கே சிறுபான்மையினருக்கு ஆதரவாய் பேசினால்தான் அறிவுஜீவியாக முடியும் என்று ஒரு கூட்டம் இருக்கிறது. அந்த கூட்டத்தில் நீங்களும் சேர்ந்துக் கொள்ள விரும்புகிறீர்கள?

  வீர் சாவர்க்கர் இந்துக்களின் மனதில் ஓர் புரட்சியாளர்தான். அதை வந்து உங்களது பொய் பிரச்சாரத்தால் கெடுக்க வேண்டாம்.

 3. கோபிகுமார் says:

  மிக அருமையான விமர்சனம் நந்தா. வாழ்த்துக்கள்.

 4. நண்பர் நந்தா! நீங்கள் வீணாக ஒரு நல்லாசிரியரை,எடிசன்,பாரதி,போன்ற பலபேரைப்பற்றி
  உண்மையாக, விரிவாக அலசி ஆராய்ந்து எளிமையான, ருசிகரமான தகவல்கள் தந்தவரைப்
  பற்றி வேணுமென்றே அவதூறாக எழுதி உங்கள் பெயரை நிலைநாட்ட நினைக்கிறீர்களோ
  என சந்தேகம் கொள்கின்றேன்.பல தேங்காய்களின் உள்ளே கறுப்பாகத்தான் இருக்கும்
  என ச்சொல்லும் ஒரு விதண்டாவாதக்காரன் போல் தாங்கள் நடந்துகொள்ளலாமா?
  ஆசிரியர் கவிமாமணி இலந்தை பற்றி யான் 40 வருடமாக நன்கு அறிவேன்.

  உண்மையாக,வரலாற்றுத்
  தகவல்களை இன்னும் ஆழமாக ஆராய்ந்து அதன் உண்மைத்தன்மை நிரூபிக்கப்படவேணுமென
  பல நூல்களைக் காசு செலவழித்துப் பல நாட்களாக நுணுகிப்படித்துப்
  பின்பே எழுதுபவர் அவர்.அட்டவணைகள்,சரித்திரச் சான்றுகள் சில பக்கங்களைத்
  தின்றுவிடுமோ என்ற ஐயத்தில் கிழக்குப்பதிப்பகம் ஒருவேளை அதனைத் தவிர்த்திருக்கலாம்.
  ஆழமாக இதுபற்றி நீங்கள் உட்புகாமல்,ஆராயாமல் ஒரு மனிதரைப்புண்படுத்திவிட்டீர்கள் என்றே

  கருதுகின்றேன்.அவரது பதிலைச் சந்தவசந்தத்தில் இட்டிருக்கிறார் படியுங்கள்.
  பின்பு ஒரு முடிவுக்கு வாருங்கள்.உழைக்கின்ற ஒரு உண்மையான படைப்பாளியைப்பற்றி
  அவதூறாக எழுதி அதனால் நீவிர் புகழ் அடைய இனி எண்ணாதீர்கள்..தயவுசெய்து…-
  இது என் தனி வேண்டுகோள்!(யோகியார் வேதம்).

 5. நான் இதுவரை எட்டு வாழ்க்கை வரலாற்று நூல்கள் எழுதியிருக்கிறேன்.

  வாழ்க்கை வரலாறு எழுதுவதற்கு என்று சில வழிமுறைகள் உண்டு.

  நாம் யாரைப் பற்றி எழுதுகிறோமோ அவருக்கு உண்மையுள்ளவராக இருக்கவேண்டும்
  யாருக்காக எழுதுகிறோமோ அவருக்கு உண்மையுள்ளவராக இருக்க வேண்டும்.
  இவற்றை நான் நிச்சயம் முறைப்படி கடைப்பிடிக்கிறேன்.

  இந்த விமசரினத்தை எழுதிய நண்பர் ஆதாரங்களாகச் சுட்டிக்காட்டியவை பெரும்பாலும்வீர்சாவர்க்கரை எதிமறையாகக் காட்டும் புத்தகங்கள். அப்துல் கஃபூர் நூரானியின் புத்தகத்தைப் படித்துப்பாருங்கள். நான் சொல்வது விளங்கும்.

  நான் வாழ்க்கை வரலாறு யாரைப் பற்றி எழுதுகிறேனோ அவரைப் பற்றிய விவரங்கள் எவ்வளவு திரட்ட முடியுமோ , எங்கெல்லாம் திரட்டமுடியுமோ அவ்வளவையும் திரட்டிவிடுவேன். அதற்காகச் செலவு செய்வதற்கும் தயங்குவதில்லை. அவரைப்பற்றி நல்ல முறையாகப் பேசுபவையானாலும் சரி மாறுபட்ட கருத்தை உரைப்பனவானாலும் சரி எல்லாவற்றையும் படித்து சீர் தூக்கி அந்த வரலாற்று நாயகனைப்பற்றி என்னுள்ளே ஒரு உருவத்தை எழுதிவிடுவேன்.

  வீர் சாவர்க்கரைப் பற்றி என்னை எழுதச் சொன்னபோது அவரைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் அவரைப்பற்றிய செய்திகளைத் திரட்டிய போது ஒரு மாபெரும் மனிதன் திட்டமிட்டு மறக்கடிக்கப்பட்டிருக்கிறார் என்பதை உணர்ந்தேன். .

  கம்யூனிஸ்ட்களும், காங்கிரஸ்காரர்களும் , தன்னை மதச்சார்பற்றவர் என்று சொல்லிக்கொள்ளும் பெரிய மனிதர்களும் அவரை இருட்டடிப்புச் செய்துவிட்டார்கள். அப்படிச் சொல்வது கூடத் தவறு. அவரை வேண்டத்தகாத ஒரு மனிதராகச் சித்தரித்துவிட்டார்கள்.

  வீர் சாவர்க்கர் சுய சரிதை எழுதியிருக்கிறார். லண்டனில் வாழ்ந்தபோது லண்டன் நியூஸ் லெட்டெர் என்று வாரம் ஒரு கடிதம் இந்தியாவுக்கு எழுதியிருக்கிறார். அங்கே அவரது வாழ்க்கையை இன்சைட் தி எனிமி கேம்ப் என்று புத்தகமாக எழுதியிருக்கிறார்.கவிமாமணி இலந்தை-( தொடரும்)

 6. இதோ பட்டியலே தருகிறேன்

  1The story of my transportation for life..pdf

  2 letters froom Andaman.pdf

  3News letter from London.pdf

  4life of saavarkar net .pdf

  5 Inside the enemy camp.pdf

  6Essentials of hindutva.pdf

  7 Hindu rashtra darshan

  Veer saavarkar movie by films division

  Andaman and savarkar doc

  Shivaji and saavarkar doc

  Vir savakar leaps to liberty

  Savarkar unknown facts

  Was savarkar a Nazi by Dr. koenrad elst

  இவைதவிர வீர சாவர்க்கர் என்ற தலைப்பில் கன்னடத்துக்காரர் ஒருவர் எழுதிய புத்தகத்தின் தமிழாக்கம்.

  இவை தவிரப் பல கட்டுரைகள். அவர்றின் தொகுப்பு இந்தியாவில் உள்ள கண்ணியில் இருக்கிறது

  இந்திய வரலாற்றின் பொன்னேடுகள்- சாவர்க்கர் எழுதியது.

  The first war of independence – by Savarkar(

  இந்தப்புத்தகம் எரிமலை என்ற தலைப்பில் அல்லயன்ஸ்

  நிறுவனத்தால் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது.

  சாவர்க்கர் வேறு எதுவுமே செய்யாது போயிருந்தாலும் இந்த ஒரு புத்தகத்தின் மூலம்
  பிரிட்டிஷ் காரர்களால் மறைக்கப்பட்ட பல செய்திகளை வெளிக்கொணர்ந்து சிப்பாய்க்கலகம் என்று திரித்துக்கூறப்பட்ட ஒன்று கலகமல்ல சுதந்திர எழுச்சி என்று நிறுவியதற்காக அவர் நமது பாராட்டுக்கு உரியவராகிறார். இந்த வரலாற்றை எழுதி முடிக்க அவர் பட்ட பாடு கொஞ்சமா.? இதை நேதாஜி அச்சிட்டுத் தனது படைவீரர்களுக்குக் கொடுத்திருக்கிறார். சர்தார் பகத்சிங் இதைப் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். நேதாஜியின் படையில் தமிழ் வீரர்கள் அதிகம் இருந்த்தால் இது தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டது. கையெழுத்துப் பிரதியாக இருக்கும் போதே தடை செய்யப்பட்ட பெருமையுடையது.

  முதன் முதல் விதேசிப்பொருட்களை எரித்துச் சுதேசியத்துக்கு வித்திட்டவர் சாவர்க்கர்.

  இந்தியர்கள் என்றால் அடிவருடிகள் என்றும் கோழைகள் என்றும் என்ணியிருந்த ஆங்கிலேயரை அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று இந்தியர்கள் எழுச்சிமிக்கவர்கள் என்று உணர வைத்தவர் சாவர்க்கர்.

  அவர் கப்பலில் இருந்து குதித்துத் தப்ப முயன்ற அந்த சாகசம் என்ன சாதாரணமானதா?

  அவர் தனது அண்ணிக்கு எழுதிய கடிதமும் கவிதையும் அவரது உயிலும் படிப்பவர்கள் கண்களில் நீரை வரவழைக்கும். என் தாய் மூன்று ஆண்மக்களை மட்டும்தானே பெற்றாள் இன்னும் நிறையப்பெற்றிருந்தால் அத்தனை பேரும் அன்னைக்குப் பலியாக முடியுமே என்று பேசியவர் வீர சாவர்க்கர். இங்கே சந்தவசந்தத்தில் அவர் அண்ணிக்கு எழுதிய கவிதையை வெளியிடிருக்கிறேன், அது புத்தகத்தில் சேர்க்கப்படவில்லை

  அந்தமான் சிறையில் ஒருநாள் சிறைவாசம் செய்தவன் கூடத் தற்கொலை செய்துகொள்ளலாம் என்று எண்ணுவானாம். அந்தச் சிறையில் 10 ஆண்டுகள் இருந்தவரை ஏன் மன்னிப்புக்கடிதம் எழுதிக்கொடுத்தார் என்று கேட்கிறார்கள்.
  முட்டையிடுகிற கோழிக்குத் தானே —– வலிக்கும் என்பது ஒரு சொலவடை. சிறைவாசம் என்றால் என்னவெனத் தெரியாதவர்களெல்லாம் சாவர்க்கரைப்பற்றிச் சொல்லும் குற்றச் சாட்டு இது.

  ஹிந்துத்வா வேறு ஹிந்து மதம் வேறு என்று சாவர்க்கர் விளக்கியிருப்பதை அவர் புத்தகத்தைப் படித்துத் தெரிந்துகொள்ளட்டும்.
  அடுத்து தாழ்த்தப்பட்ட மக்களில் ஒருவராவது மேடையில் இருந்தால்தான் நான் பேசுவேன் என்று சொன்னவர் சாவர்க்கர்.

  இந்தியர்கள் இராணுவத்தில் சேர்ந்து பயிற்சிபெறவேண்டும் என்றும் கட்டாய இராணௌவப்பயிற்சி கொடுக்கவெண்டும் என்றும் சொன்னார் சாவர்க்கர். பாகிஸ்தான் பிரிவினை வராமல் இருக்க என்ன செய்யவேண்டுமென்பதைப் பல ஆண்டுகளுக்கு முன்னமே சொன்னவர் அவர். சாவர்க்கர் சொன்னதைக் கேட்டிருந்தால் எஈன யுத்தத்தில் நமக்கு இழிநிலை ஏற்பட்டிருக்காது என்றார் ஜெனரல் கரியப்பா.

  இந்து மஹாசபை இளைஞர்கள் சுதந்திர தினத்தன்று காவிக் கொடியைத்தான் ஏற்றவேண்டும் என்றார்கள். ஆனால் சாவர்க்கர் காவிக்கொடியோடு சக்கரம் பதித்த தேசக்கொடியையும் எற்றவேண்டும் என்றார். அதனால் வெறுப்புண்ட நாதுராம் கோட்சே அவரிடமிருந்து விலகித் தன்னிச்சையாகச் செயல்பட்டான். இதை அவனது வாக்கு மூலத்தில் தெரிவித்திருக்கிறான்..

  தலித்துகள் கோயிலுக்குள் போக வேண்டுமென்பதற்காகவே பதித பாவன மந்திர் கட்டியவர் வீர சாவர்க்கர்.

  வீர சாவர்க்கருக்கு நான் வக்காலத்து வாங்க வரவில்லை. நான் படித்து அறிந்து கொண்டதைச் சொன்னேன்.

  சிறைச் சுவரிலே எழுதி மனப்பாடம் செய்து கமலா என்ற காவியத்தை எழுதினார்.

  சிறைக்கைதிகளுக்கு எழுதப்படிக்கச் சொல்லிக்கொடுத்தார்.

  இதோ அவர் இலண்டனில் சிறைப்பட்ட போது அண்ணிக்கு எழுதிய கடிதமும் உயிலும்(இந்தப்பகுதி நீளம் கருதிப் புத்தகத்தில் சேர்க்கப்படவில்லை).

  எனவே சிகரத்தை நோக்கிக் கைகூப்புவோம் என்று சொன்னதை இப்பொழுதும் சொல்வேன்

  எந்தெந்த நூல்கள் ஆதாரமானவை என்று கொடுத்திருக்கவேண்டும் என்று விமரிசகர் கூறியிருப்பதை முழுமையாக ஏற்கிறேன்.
  கவிமாமணி இலந்தை(சந்தவசந்தம் கடிதத்திலிருந்து எடுத்துத் தந்தவர்(கவிதாயினி சுதா வேதம்)

 7. வீர சவார்க்கர் தன் அண்ணிக்கு எழுதிய உயிலின் ஒரு பகுதி-
  “ பாரத-«ý¨É§Â, ±í¸û ±ñ½í¸¨Ç ¯ÉìÌ «÷ôÀ½¢ì¸¢§È¡õ. , ±í¸û §ÀîÍ ±í¸û ¬üÈø «¨ÉòÐõ

  ¯É째 º÷ôÀ¢ì¸¢§È¡õ. ±ýÛ¨¼Â Å£¨½ ¯ý¨É§Â À¡Îõ. ±ýÛ¨¼Â ±ØЧ¸¡ø ¯ý¨É ÁðÎõ,

  ¯ý¨É ÁðΧÁ ±ØÐõ.

  ¯ÉÐ ÀலிÀ£¼ò¾¢ø ±ÉÐ ¦ºøÅò¨¾Ôõ ¯¼ø ¿Äò¨¾Ôõ þÆó§¾ý. ±ýÅ花¾¢÷À¡÷òÐì

  ¸¡ò¾¢ÕìÌõ þÇõ Á¨ÉŢ¢ý §Á¡¸ôÀ¡÷¨Å§Â¡, ÌÆ󨾸Ǣý ÌõÁ¡Ç§Á¡, ¬¾ÃÅ¢ýÈ¢ô ÀðÊÉ¢

  ¸¢¼ìÌõ ±ý «ñ½¢Â¢ý «ÅħÁ¡ ¯ý «¨ÆôÒìÌ ஓÊÅÕž¢Ä¢ÕóÐ ±ý¨Éò ¾ûǢŢ¼ÓÊ¡Ð.

  н¢×ûÇ , ¯Ú¾¢ÔûÇ, «§¾ ºÁÂõ ¸Õ¨½ ¯ûÇõ ¦¸¡ñ¼ ±ý «ñ½ý ¯ÉÐ ÀலிÀ£¼ò¾¢ø

  ¾¢Â¡¸¢Â¡¸ì ¸¢¼ì¸¢È¡ý. Á¢¸×õ þ¨ÇÂÉ¡É ±ý «ýÒò ¾õÀ¢ «§¾ ¾£Â¢ø ¬Ì¾¢Â¡¸¢È¡ý. þ§¾¡

  þô¦À¡ØÐ ¿¡ý ¯ýÛ¨¼Â ÀÄ¢ò àÉ¢ø ¸ð¼ôÀðÊÕ츢§Èý. «¾É¡ø ±ýÉ?

  ¾¡§Â ãýÚ º§¸¡¾Ã÷¸û ÁðÎõ ¾¡§É þÕ츢§È¡õ. ²Ø º§¸¡¾Ã÷¸û þÕó¾¢Õó¾¡ø, «ý¨É§Â,

  ¯É측¸, «ò¨¾¨É §À¨ÃÔõ ÀÄ¢ ¦¸¡Îò¾¢Õô§À§É!

  ¯ýÛ¨¼Â À½¢ ÒÉ¢¾Á¡ÉÐ. ¯ýÛ¨¼Â À½¢ ¸¼×Ç¢ý À½¢. «ÅÙìÌ ÓôÀÐ §¸¡Êì ÌÆ󨾸û.

  «ÅÙ측¸ þó¾ô ÒÉ¢¾ô §À¡Ã¢ø ÁâôÀÅ÷¸û ±ýÚõ Å¡úÅ¡÷¸û §Å§Ã¡Î À¢Îí¸¢ ±Îì¸ôÀð¼ ¿ÁÐ

  ÌÎõÀ ÁÃõ Á£ñÎõ §Å÷Å¢ðÎî º¢ÃﺣŢ¡¸ ÁÄÕõ.

  IV

  «ôÀÊ ÁÄÃÅ¢ø¨Ä ±ýÈ¡ø¾¡ý ±ýÉ? ÁüÈ ±øÄ¡ «Æ¢Ôõ ¦À¡Õû¸¨Çô §À¡ø «Ð×õ Áñ§½¡Î

  Áñ½¡¸ô §À¡É¡ø¾¡ý ±ýÉ? ¿¡õ ¿ÁÐ ¯Ú¾¢¦Á¡Æ¢¨Âì ¸¡ôÀ¡üÈ¢¢ ÅÕ¸¢§È¡õ. ¾£¨Á¨Â «Æ¢òÐ

  ¿ý¨Á ¦ÅýÈ¢¼ò ¾ýÉÄõ ÁÈóÐ ¯¨Æ츢§È¡õ. «Ð§À¡Ðõ, «Ð ´ý§È §À¡Ðõ.

  ¸¼×¨Ç Á¸¢úÅ¢ì¸ §ÅñÊ, ±ýɦÅøÄ¡õ ¿õÁ¢¼õ ¦¸¡Îì¸ôÀðÊÕ츢ýÈɧš «Åü¨È¦ÂøÄ¡õ

  ¯ý ¸¡ÄÊ¢ø ¨Å츢§È¡õ. þýÛõ ²§¾Ûõ «Åý ¦¸¡Îò¾¡ø «¨¾Ôõ ¯É째 º÷ôÀ¢ì¸¢ý§È¡õ.”’–

  «ýÒûÇ «ñ½¢, ¿¡ý ¦º¡ýÉ ÅƢ¢ø ¯ý ±ñ½í¸¨Ç μðÊôÀ¡÷. ¬öóÐ À¡÷. ¿¡õ ±Îò¾

  ¸¡Ã¢Âò¨¾ ¦ÅüÈ¢¸ÃÁ¡¸ì ¦¸¡ñÎ ¦ºÖòÐõ À¡¨¾Â¢ø ¿ÁÐ ÌÎõÀô À¡ÃõÀ÷Âò¨¾ì ¸¡ôÀ¡üÚ.

  ÀÉ¢À¼÷ó¾ Á¨Ä¢ø ¸Î¨ÁÂ¡É ¾ÅÁ¢ÕìÌõ ¯Á¡, Òýɨ¸ ¾ÅÆò ¾£Â¢ø ̾¢òÐ ¯Â¢÷¿£ò¾

  º¢òà÷ô¦Àñ¸û ¬¸¢§Â¡÷ ¯ÉÐ þÄðº¢õ ¬¸ðÎõ. ´Õ ¸¾¡ ¿¡Â¸É¢ý Á¨ÉÅ¢ ¿£! À¡Ã¾ò¾¢ý

  ¦Áý¨ÁÂ¡É ¦Àñ¸û ¸¡ðÊ ¯Ú¾¢Ôõ Å£ÃÓõ ¾£ÃÓõ þýÛõ Áí¸¢Å¢¼§Å¡ Á¨ÈóÐÅ¢¼§Å¡ þø¨Ä

  ±ýÀ¨¾ ¯ÉРţÃÁ¡É Å¡ú쨸 ¸¡ð¼ðÎõ. þо¡ý ±ÉÐ ¸¨¼º¢ Å¡÷ò¨¾. þо¡ý ±ÉÐ ¯Â¢ø.

  ±ÉÐ ²üÀ¡Î. «ñ½¢, §À¡öÅÕ¸¢§Èý. ±ýÛ¨¼Â «ý¨À ±ý Á¨ÉÅ¢ìÌò ¦¾Ã¢Å¢ì¸×õ.

  þ¨¾Ôõ ¦º¡øÖí¸û :

  “ÌÕðÎò ¾ÉÁ¡¸ ¿¡í¸û þó¾ô À¡¨¾Â¢ø ¦ºøÄÅ¢ø¨Ä. ÓØ «È¢¢§Å¡Îõ ¬öó¾ ÓʧšÎõ¾¡ý

  þÈí¸¢§É¡õ. º¡×ôÀ¡¨¾ ÅƢ¢ø¾¡ý ±í¸û À½õ ¿¢¸Øõ ±ýÚ ±í¸ÙìÌ ¿ýÈ¡¸§Å ¦¾Ã¢Ôõ.

  ±í¸û ¦¸¡Ê¨Âò à츢 ,§ÅñΦÁý§È «Å¨ளô À¢ý¦¾¡¼÷¸¢§È¡õ!
  வாழ்க பாரதம்!(வீர சாவர்க்கர்)

 8. யோகியார் வேதம் நல்ல பெயர். நண்பர் நந்தா என்று இனிய முறையிலே ஆரம்பித்திருக்கிறீர்கள். ஆனால் தவறாக நினைத்திருக்கிறீர்கள் நண்பரே. என்னுடைய நோக்கம் இந்த புத்தகத்தின் மீதான விமர்சனம் மட்டுமே. அதில் ஆசிரியரின் மீதான குற்றச்சாட்டுகள் என்பவை தவிர்க்க முடியாதவை.

  குற்றச்சாட்டுகள் என்று நான் சொல்லுபவற்றையும் எனக்குரிய முயற்சிகளுடன், ஆதாரங்களுடன் மட்டுமே சொல்லி இருக்கிறேனே தவிர, சும்மாவேனும் போகிற போக்கில் சொல்லிச் செல்லவில்லை என்று நம்புகிறேன். உங்களுக்கு என்னுடைய குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்று தோன்றினாலோ, அல்லது முழுக்க தவறு என்று கருதினாலோ தாராளமாக நீங்கள் தலையில் குட்டி இடித்துரைக்கலாம்.

  மாறாக எதிர் விமர்சனம் எழுதிய ஒன்றிற்காகவே விதண்டாவாதக்காரன், குறுக்கு வழியில் புகழ் அடைய எண்ணுபவன் என்பதெல்லாம்… சரி விடுங்க ஏதோ நண்பரைச் சொல்லி விட்டார்களே என்று உணர்ச்சி வசப்பட்டு எழுதி விட்டீர்கள்.

  அப்புறம் அவரது பதிலை கண்டிப்பாய் சந்த வசந்தத்தில் படிக்கிறேன். இன்னொன்றையும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஏற்றுக் கொள்ள முடிகின்ற பதில்கள் கிடைத்தால் வீம்புக்கேனும் நான் சொன்னதுதான் சரி என்று சொல்லிக் கொண்டிராமல் “ஒத்துக் கொள்கிறேன். தவறுதான்” என்று மன்னிப்பு கேட்கும் பக்குவமும் என்னிடம் இருக்கிறது. ஆகையால் இது போன்ற வார்த்தைகளைத் தவிருங்கள். நன்றி.

 9. //நாம் யாரைப் பற்றி எழுதுகிறோமோ அவருக்கு உண்மையுள்ளவராக இருக்கவேண்டும்
  யாருக்காக எழுதுகிறோமோ அவருக்கு உண்மையுள்ளவராக இருக்க வேண்டும்.
  இவற்றை நான் நிச்சயம் முறைப்படி கடைப்பிடிக்கிறேன்.//

  எது எழுதுகிறோமோ அது உண்மையாக இருந்தாலே போதும் என்று நினைக்கிறேன் நான். சரி விடுங்கள் இது தர்க்கம் சார்ந்த விஷயம்.

  //இந்த விமர்சனத்தை எழுதிய நண்பர் ஆதாரங்களாகச் சுட்டிக்காட்டியவை பெரும்பாலும்வீர்சாவர்க்கரை எதிமறையாகக் காட்டும் புத்தகங்கள். அப்துல் கஃபூர் நூரானியின் புத்தகத்தைப் படித்துப்பாருங்கள். நான் சொல்வது விளங்கும்.//

  அப்படியல்ல. எரிமலை புத்தகத்தை நானும் படித்திருக்கின்றேன். நீங்கள் குறிப்பிட்ட PDF டாக்குமெண்டுகளில் சிலவற்றையும் படித்திருக்கிறேன். தொடர்ச்சியாய் நான் படித்த பல்வேறு வகைப்பட்ட புத்தகங்கள் எனக்கு சாவர்க்கர் குறித்தான எப்படிப்பட்ட உருவை தருகின்றது என்பதற்கும் உங்களது புத்தகம் ஒட்டு மொத்தமாய் எப்படிப்பட்ட கற்பிதத்தைத் தருகின்றது என்பதில்தான் நாம் மாறுபடுகின்றோம்.

  நான் சுட்டிக் காட்டுபவை எதிர்மறையான புத்தகங்கள் என்று சுட்டிக் காட்டும் நீங்கள் ஆதாரங்களாய் சுட்டிக் காட்டுகின்ற புத்தகங்களில் பெரும்பாலானவை அவரால் எழுதப்பட்டவையும், ஒரு சில அவரை போற்றுபவர்களால் எழுதப்பட்டவைதான். அதனால்தானோ என்னவோ மாற்றுப் பார்வை என்ற ஒன்றை நீங்கள் முன்வைக்கவே இல்லை.

  //பிரிட்டிஷ் காரர்களால் மறைக்கப்பட்ட பல செய்திகளை வெளிக்கொணர்ந்து சிப்பாய்க்கலகம் …………………………………..அவர் கப்பலில் இருந்து குதித்துத் தப்ப முயன்ற அந்த சாகசம் என்ன சாதாரணமானதா?//

  சத்தியமாக மறுக்க வில்லை. என்னுடைய குற்றச்சாட்டும் அந்த இடங்களில் இல்லை. நான் எனது பதிவில் எந்த இடத்திலுமே சாவர்க்கரின் 1857 – முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு புத்தகத்தையோ அல்லது அவர் இங்கிலாந்தில் இருந்த போது மேற்கொண்ட முயற்சிகள் குறித்தோ விமர்சனம் வைக்கவே இல்லை.

  சொல்லப்போனால் ஒரு இடத்தில் தெளிவாய் சொல்லி இருக்கின்றேன்.

  சாவர்க்கரைப் பற்றி சுருக்கமாய் சொல்ல வேண்டுமென்றால் அந்தமான் சிறைக்கு செல்லும் வரை இருந்த சாவர்க்கர் மட்டுமே வீர் சாவர்க்கர். அதற்குப் பின்பு நடமாடிய சாவர்க்கர் முற்றிலும் வேறு மனிதர். இந்தியாவில் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கும் மத துவேஷங்களுக்கு வித்திட்டதில் தெரிந்தோ தெரியாமலோ அவருக்கும் பங்கிருக்கிறது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அவர் ஆற்றிய பணிகளை, துணிச்சலான நடவடிக்கைகளை போற்ற வேண்டியது எப்படி நம் கடமையோ, அதே போல அந்தமான் சிறையில் கோழைத்தனமாய் அவர் பிரிட்டிஷாரிடம் கெஞ்சிய மன்றாடல்களை, காந்தியடிகள் கொலையில் அவருக்கிருந்த பங்கினை (நேரடியாகவோ, மறைமுகமாகவோ), இந்து மகா சபையின் மூலமும், தனது தொடர் பிரச்சாரங்களின் மூலம் மக்களின் மனதில் அவர் விதைத்த மதத் துவேஷங்களை இடித்துரைப்பதும் நம் கடமையே.

  “ஆயுள் காலத்திற்கு நாடு கடத்தப்பட்ட என் கதை” சாவர்க்கரால் 1927ல் வெளியிடப்பட்ட சுய சரிதை. இவரே 1908ல் “முதல் இந்திய சுதந்திரப் போர் – 1857″ என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார். இந்த இரண்டு புத்தகங்களுக்கு நடுவேதான் எத்தனை எத்தனை வித்தியாசம்.இந்து முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தி இந்தப் புத்தகத்தில் எழுதிய அதே சாவர்க்கர், தனது சரிதையை எழுதும் போது முஸ்லீம்களுக்கெதிரான துவேஷங்களையும், விரோதப் போக்கையும் விதைக்கிறார்.

  முதல் உலக்ப்போரில் இங்கிலாந்திற்கு எதிராக துருக்கியும் ஜெர்மனியும் இணைந்ததை தனது எதிரிக்கு எதிரான குழுவாய் அவரால் காண முடிய வில்லை. அதை அவர் முஸ்லீம்கள் ரஷ்யாவின் உதவியுடன் இந்தியாவிற்கு வந்து கொள்ளையடிக்கும் முயற்சியாக பார்க்கிறார். மதாபிமானம் ஒரு மனிதனின் தேச பக்தியை எவ்வாறு நீர்த்துப் போகச் செய்து விடுகிறது என்பதை அவர் வாழ்ந்து காட்டி இருக்கிறார்.

  மேற்குறிப்பிட்ட வரிகளைப் பாருங்கள். இந்த இடங்களில் எல்லாம் நான் சரி தவறுகளை சரி விகிதத்திலேயே சொல்லி இருக்கின்றேன். சொல்லப்போனால் இது போன்ற சர்ச்சைக்குரிய விஷயங்களை எல்லாம் ஆசிரியர் எடுத்துச் சொல்ல தவறி விட்டார் என்பதுதான் என்னுடைய முக்கிய குற்றச்சாட்டே.

  தொடரும்.

 10. கம்யூனிஸ்டுகளைக் காயடிப்போர் சங்கம் says:

  //
  எடுத்த எடுப்பிலேயே சொல்லி விடுகிறேன். புத்தகத்தை படித்து முடித்ததும் நான் அடைந்த ஏமாற்றத்திற்கு அளவே இல்லை. சமீப காலங்களில் என்னை இந்தளவிற்கு கோபப்படுத்திய புத்தகம் வேறெதுவும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
  //

  இந்த ஒரு வரி போதும். புத்தகம் உண்மையைச் சொல்லியுள்ளது என்பதற்கு நெத்தியடி சாட்சி. நீங்களும் உங்கள் செக்குலர் சனியன்களுக்கும் கோபம்வருகிறது என்றாலே அது சிறந்த புத்தகம் என்று கருதிவிடலாம்.

 11. நந்தா

  உமக்கு இதே வேலயா போச்சுய்யா..எத படிக்க கூடாதோ அத தேடிப்பிடிச்சி படிச்சி காண்டாகி வெளக்கும் கொடுக்கிரத எப்ப நிறுத்தப் போறீர்னு தெரில

  நம்ம எலக்கிய வெலி ல மாற்றுப் பார்வைன்னு ஒண்ணு கெடையவே கெடயாது..புரியுதா ..இவங்க என்ன எளுதுறாங்களோ அதான் வரலாறு.. அதான் உன்னதம் மாத்தி கீத்தி எதையாச்சிம் எளுதிட்ட அவ்ளோதான்.. டமால் னு மண்டைல ரெண்டு தட்டு தட்டி தம்பி நான் இம்மாம் புக்க படிச்சி கீறேன் நீ இன்னாத்த படிச்சிகீரன்னு ஒரு கேள்வி.. இல்லனா நெத்தியடியா எங்கள பத்தி தப்பா எயுதி பேர்வாங்கிக்க பாக்கிறியான்னு இன்னொரு கொட்டு…

  இவங்களோட இலக்கிய வரலாற்று சேவை நமீதா த்ரிஷா ன்னு தொடர்ந்தா விற்பனை சக்க போடு போடும் எழுதுறத்துக்கு பிரபல வலைப்பதிவர்களும் கொட்டி கெடக்கிறாங்களே துட்ட தட்டிவுட்டா வரலாற்றுல கூட மாஜிக்கல் ரியலிசத்த நுழைச்சி சுவாரசிய வாசிப்புக்கு எங்களால முடிஞ்ச இலவச சேவைன்னு வெளம்பரமும் பண்ணுவாங்க

  வாழ்க!!

 12. //அவரைப்பற்றி நல்ல முறையாகப் பேசுபவையானாலும் சரி மாறுபட்ட கருத்தை உரைப்பனவானாலும் சரி எல்லாவற்றையும் படித்து சீர் தூக்கி அந்த வரலாற்று நாயகனைப்பற்றி என்னுள்ளே ஒரு உருவத்தை எழுதிவிடுவேன்.

  வீர் சாவர்க்கரைப் பற்றி என்னை எழுதச் சொன்னபோது அவரைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் அவரைப்பற்றிய செய்திகளைத் திரட்டிய போது ஒரு மாபெரும் மனிதன் திட்டமிட்டு மறக்கடிக்கப்பட்டிருக்கிறார் என்பதை உணர்ந்தேன். கம்யூனிஸ்ட்களும், காங்கிரஸ்காரர்களும் , தன்னை மதச்சார்பற்றவர் என்று சொல்லிக்கொள்ளும் பெரிய மனிதர்களும் அவரை இருட்டடிப்புச் செய்துவிட்டார்கள். .//

  ஆனால் உங்கள் புத்தகத்தில் எதேனும் ஓர் இடத்திலாவது அவரது மேல் விமர்சனம் போன்ற ஒன்றையோ அல்லது மாறுபட்ட கருத்துக்களையோ பதிவு செய்திருக்கிறீர்களா என்பதே எனது கேள்வி. இவ்வளவு தூரம் இருட்டடிப்புச் செய்யப்பட்டார், தவறாகச் சித்தரித்து விட்டார்கள் என்று பதறும் அளவுக்கும் ஒன்றும் நடக்க வில்லை. கம்யூனிஸ்டுகளும், காங்கிரசும் அப்படி செய்தார்கள் என்று நீங்கள் குற்றம் சாட்டினால் பிஜேபியும் இந்துத்துவ அமைப்பும் தேவைக்கதிகமாய் அவரை புனிதபிம்பப் படுத்தி இருக்கிறார்கள் என்று நான் குற்றம் சாட்டுவேன்.

  அவ்ரது உருவச் சிலைகள் திறப்பு, அந்தமான் விமான நிலையத்திற்கான பெயர் மாற்றம், எந்த அந்தமான் சிறையிலிருந்து அவர் பிரிட்டிஷாருக்கு மன்னிப்பு கடிதம் எழுதினாரோ அந்த இடத்தில் அவரை துதிபாடி வாசகங்கள் பொறிப்பு என்று அவர் எந்த விதத்தில் குறைந்து போய் விட்டார். ஆகையால் உங்களது இந்த குற்றச்சாட்டை வெகு திடமாய் நான் மறுக்கின்றேன்.

  //இதோ பட்டியலே தருகிறேன்//

  இந்த பட்டியல்கள் ஒவ்வொரு வாசகனுக்கும் போய் சேர்வதாய் இருக்க வேண்டும். கேட்டுப் பெறுவதாய் இருக்கக் கூடாது என்று நினைக்கிறேன். நீங்களே சொல்லுங்கள் ஆதார மூலங்கள் இல்லாத ஒரு வரலாற்று புத்தகத்தை எந்த நம்பிக்கையில் வாசகர்கள் கண்ணை மூடிக் கொண்டு நம்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்.

  //பிரிட்டிஷ் காரர்களால் மறைக்கப்பட்ட பல செய்திகளை வெளிக்கொணர்ந்து சிப்பாய்க்கலகம் என்று திரித்துக்கூறப்பட்ட ஒன்று கலகமல்ல சுதந்திர எழுச்சி என்று நிறுவியதற்காக அவர் நமது பாராட்டுக்கு உரியவராகிறார்.//

  இதை ஒத்துக் கொள்கின்றேன். இந்த புத்தகம் எழுதப்பட்ட போது சாவர்க்கர் மனதில் சுதந்திர உணர்வு நிரம்பி இருந்தது என்பதை இதை எழுத அவர் எடுத்துக் கொண்ட சிரமங்களின் மூலமும், இந்த புத்தகத்திலுள்ள பொருளடக்கத்தை வைத்தும் சொல்லலாம்.

  //அந்தமான் சிறையில் ஒருநாள் சிறைவாசம் செய்தவன் கூடத் தற்கொலை செய்துகொள்ளலாம் என்று எண்ணுவானாம். அந்தச் சிறையில் 10 ஆண்டுகள் இருந்தவரை ஏன் மன்னிப்புக்கடிதம் எழுதிக்கொடுத்தார் என்று கேட்கிறார்கள். முட்டையிடுகிற கோழிக்குத் தானே —– வலிக்கும் என்பது ஒரு சொலவடை. சிறைவாசம் என்றால் என்னவெனத் தெரியாதவர்களெல்லாம் சாவர்க்கரைப்பற்றிச் சொல்லும் குற்றச் சாட்டு இது.//

  மனதில் ஒருவரை ஹீரோவாய் உருவகம் செய்து விட்டால் அப்புறம் என்ன சொன்னாலும் அதற்கு காரண காரியங்கள் சொல்லி என் எண்ணத்தை மாற்றிக் கொள்ள மாட்டேன் என்று சொல்லுகிறீர்கள். அந்தமான் சிறையில் வேறு எவருமே இல்லாதது போலவும் இவர் ஒருவர்தான் இருந்தது போலவும் எழுதுகிறீர்கள். அதிலும் ஒரு நாள் இருந்தாலே தற்கொலை செய்து கொள்வானாம் என்ற மிகைப்படுத்தல்கள் வேறு. இந்திய விடுதலைக்குப் பாடுபட்டவர்களில் எத்தனை பேர் சிறை செல்லாமல் இருந்திருக்கிறார்கள். இவர் ஒருவர்தான் சிறை சென்றாரா? சரி எத்தனை பேர் அதில் மன்னிப்புக் கடிதம் எழுதி இருக்கிறார்கள். அப்படி பிரிட்டிஷாரிடம் மன்னிப்புக் கடிதம் தொடர்ந்து எழுதி மன்றாடிய ஒருவர்க்கு எதற்கு இவ்வளவு அதிகப்படியான விளம்பரங்கள்? அதுவும் இவர் சாத்வீக முறையில் போராடியவர் அல்ல. ஆயுதப் போராட்டத்தை நடத்தியவர். அப்படி இருக்க இவ்வளவு தூரம் வீரம் குறைந்து மன்னிப்புக் கேட்பதை விமர்சிக்கவே கூடாது என்கிறீர்களா? இல்லை ஒரு முறையேனும் ஜெயிலுக்கு போனவர்தான் விமர்சிக்கவே வேண்டும் என்கிறீர்களா?

  அந்தமானில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில்தான் 60 வயது முதியவர் சீக்கிய அரசியல் கைதி சர்தார் சோஹன் சிங், பிரித்வி சிங் என்ற இளைஞனும் 12 நாட்களுக்கும் மேலாக, உண்ணாவிரதம் இருந்து தனது வீரத்தை, புரட்சித் தன்மையை நிரூபித்திருக்கிறார்கள்.ஆனால் வரலாற்றுப் பாடங்களில் அவர்களின் சுவடுகளை தேடித்தான் கண்டு பிடிக்க முடிகின்றது. மன்னிப்புக் கடிதம் எழுதிய சாவர்க்கர் சரித்திர நாயகனாய் அடையாளம் காண்பிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறார். இந்த முரண்பாட்டைத்தான் நான் சுட்டிக் காட்டி இருக்கின்றேன்.

  //இந்து மஹாசபை இளைஞர்கள் சுதந்திர தினத்தன்று காவிக் கொடியைத்தான் ஏற்றவேண்டும் என்றார்கள். ஆனால் சாவர்க்கர் காவிக்கொடியோடு சக்கரம் பதித்த தேசக்கொடியையும் எற்றவேண்டும் என்றார்.//

  இந்துஸ்தானத்தின் அதிகாரப் பூர்வமான கொடி சிந்து நதியில் இருந்து கடல்கள் சூழ்ந்த, பிரிக்க முடியாத புனித பூமியான அன்னை பூமீயின் தேசியக் கொடி. காவிக் கொடியைத்தவிர வேறு எதுவாகவும் இருக்க முடியாது. அக்கொடியில் நம் இனத்தின் இருப்பை உணர்த்தும் குண்டலினியும், வீரவாளும் பொறிக்கப்பட்டிருக்கும். அது இந்துக்களின் வரலாற்றைப் பிரதிபலிக்கும். அது இந்துக்களால் புனிதமாய் கருதி வணங்கப்படும். பிற கட்சிக்கொடிகளைக் கூட மரியாதை நிமித்தம் சகித்துக் கொள்ளப்படலாம். ஆனால் இந்துக்கள் தேசிய அளவில் இந்தக் காவிக் கொடியை விட வேறு எந்தக் கொடியையும் வணங்கமாட்டார்கள்.

  இந்தியாவை இந்து நாடாய் மட்டுமே பார்க்கும் இந்த வரிகள் சாவர்க்கர் அவர்களால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது எவ்வளாவு ஒரு குறுகிய கண்ணோட்டம். இதே இந்தியாவில்தான் முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள், பார்சிக்கள், என்று பல்வேறு வகைப்பட்ட்வர்களை ஏற்றுக் கொள்ள மறுத்த இந்த மத உணர்விற்கு என்ன செய்வது. போற்றிப் பாராட்ட வேண்டுமா? இது விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதா?

  அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியில் 1942 ஆகஸ்ட் 8 அன்று வெள்ளையனே வெளியேற்ய் தீர்மானம் நிறைவேறும் முன்பு காந்தி பேசிய சொற்பொழிவில் கூறப்பட்டது : “வாள் வலிமையால் முஸ்லீம்களை இந்துக்களின் மேலாதிக்கத்தின் கீழ் வைக்க வேண்டும் என டாக்டர் முன்ஷி, திரு சாவர்க்கர் ஆகியோர் நினைக்கிறார்கள். அவர்களை என்னால் பிரதிந்தித்துவப் படுத்த முடியாது” என்று சொல்லி இருக்கிறார். இது வரலாற்றில் பதியப் பட்ட ஒன்றுதானே. ஆக சர்ச்சைக்குரிய ஒரு மனிதராய் சாவர்க்கர் இருந்தார் என்று நான் தொடர்ந்து சொல்லும் கூற்றுக்கள் எப்படி முழுக்க தவறாகும்?

  //எனவே சிகரத்தை நோக்கிக் கைகூப்புவோம் என்று சொன்னதை இப்பொழுதும் சொல்வேன்//

  மன்னிக்கவும் நண்பரே. என்னுடைய கேள்விகளுக்கும் இன்னும் தெளிவான பதில் அளிக்கப்படாத நிலையில் என்னுடைய கருத்துக்களிலும் மாற்றமில்லை. இதைக் கேட்டதற்கு விதண்டாவாதக்காரன், புகழ் விரும்பி என்ற பட்டமளிப்புகள் வேறு.

  தொடரும்.

 13. //இந்த ஒரு வரி போதும். புத்தகம் உண்மையைச் சொல்லியுள்ளது என்பதற்கு நெத்தியடி சாட்சி//

  அய்யா போஸ்டரைப் பார்த்தே கதை சொல்றவரே, இப்படி ஒரு பரிதாப வாழ்க்கை உனக்கு தேவைதானா?

 14. saravana raja says:

  //ஆனால் இது முழுக்க முழுக்க எழுத்தாளர் மற்றும் பதிப்பகத்தின் தனிப்பட்ட உரிமை என்பது மறுக்க முடியாத உண்மை. அதேசமயம் அமெச்சூர் வாசகனை திருப்தி செய்ய வேண்டிய கட்டாயமாய் கூட இருக்கலாம். ஆகையால் இதை ஒரு குற்றச்சாட்டாய் இல்லாமல் தனிப்பட்ட ஒருவனின் கருத்தாய் பதிவு செய்கின்றேன்.//

  புரியவில்லையே. உங்களது மொத்த விமர்சனத்தையும் தலைகீழாக்குவது போலிருக்கின்றன இந்த வரிகள்.பரிசீலிக்க வேண்டுகிறேன்.

 15. கீதா சாம்பசிவம் says:

  //பின்னாளைய தலைமுறைக்கு இன்று வரை சரியாக அடையாளம் காட்டப்படாத ஓர் மனிதர்.//

  அரசியல் காரணங்களால் சரியானபடி வெளிக்காட்டப் படவில்லை.

  //ஆனால் இன்னொரு பக்கம் இவர் குறித்து தீவிர விமர்சனங்களும்,குற்ற்ச்சாட்டுகளும் தொடர்ந்து வீசப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது. காந்தியடிகளின் கொலையில் மிகப்பெரும் பங்கு வகித்தவர், பிரிட்டிஷாரிடம் தொடர்ச்சியாய் மன்னிப்புக் கடிதங்கள் எழுதி மன்றாடியவர், இந்து மகாசபையைத் தோற்றுவித்து முஸ்லீம்களின் மீதான துவேஷத்திற்கு தொடர்ந்து
  பங்காற்றியவர், பல இளைஞர்களை தவறான பாதைக்கு வழிக்காட்டியவர் என்று இவர்மீதான மாற்று வரலாற்றுப் பார்வையும் முன்வைக்கப்பட்டுக் கொண்டுதான்
  இருக்கின்றது.//

  pseudo secularists அப்படித் தான் சொல்லுவாங்க. யாரைச் சொல்லலை? பாரதியாரையும் இப்படித் தானே சொல்றாங்க???

  //காந்தியடிகளின் கொலையில் மிகப்பெரும் பங்கு வகித்தவர்,//

  இவருக்குப் பங்கு இல்லை என்பது நீதிமன்றத்திலேயே நிரூபிக்கப் பட்டது.

  //பிரிட்டிஷாரிடம் தொடர்ச்சியாய் மன்னிப்புக் கடிதங்கள் எழுதி மன்றாடியவர்//

  அந்தமானில் தனிமைச் சிறையில் சோறு, தண்ணீர் இல்லாமல் கல் உடைச்சுட்டு இருந்திருந்தால் காந்தியுமே மன்னிப்புக் கடிதம் தான் அனுப்பி இருப்பார். காந்திக்குச் சிறைவாசத்தின்போது கூடவே மனைவி, காரியதரிசி, மருத்துவ வசதி, அவர் என்ன சாப்பாடு சாப்பிடும் பழக்கமோ அந்தச் சாப்பாடு, தினசரிப் பத்திரிகைகள், அவர் கடிதப் போக்குவரத்து வைத்துக் கொள்ளும் வசதி, யங் இந்தியாவுக்கு எழுதும் வசதி எல்லாமும் இருந்தது. சிறை இருந்ததும் எரவாடா மாளிகையிலே. இவருடைய வாழ்க்கை வரலாறு தென் மாநில மக்களுக்கு முழுமையாகத் தெரியவில்லை என்பதே உண்மை.

 16. //அரசியல் காரணங்களால் சரியானபடி வெளிக்காட்டப் படவில்லை.//

  கம்யூனிஸ்டுகளும், காங்கிரசும் அப்படி செய்தார்கள் என்று எந்தளவு குற்றம் சாட்டப்படுகிறதோ, அந்தளவு பிஜேபியும் இந்துத்துவ அமைப்பும் தேவைக்கதிகமாய் அவரை புனிதபிம்பப் படுத்தி இருக்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது….

  அவரது உருவச் சிலைகள் திறப்பு (பாராளுமன்றம் உட்பட), அந்தமான் விமான நிலையத்திற்கான பெயர் மாற்றம், எந்த அந்தமான் சிறையிலிருந்து அவர் பிரிட்டிஷாருக்கு மன்னிப்பு கடிதம் எழுதினாரோ அந்த இடத்தில் அவரை துதிபாடி வாசகங்கள் பொறிப்பு என்று அவர் எந்த விதத்தில் குறைந்து போய் விட்டார்???

  //pseudo secularists அப்படித் தான் சொல்லுவாங்க. யாரைச் சொல்லலை? பாரதியாரையும் இப்படித் தானே சொல்றாங்க???//

  குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிப்பதை விடுத்து எதிராளிக்கு ஒரு பட்டம் செலுத்தி அதன் பின்னே நாம் மறைந்து கொள்ளும் பழக்கம் எந்த விதத்தில் சேர்த்தி என்று புரியவில்லை???

  இப்பொ நான் ஒண்ணு சொல்லட்டுமா? இந்துத்துவா ஆட்கள் எல்லாம் இப்படித்தான்? மதவெறியரை விட்டுக் கொடுக்காம, எல்லா தவறுகளையும், தவறே இல்லை என்று பேசுவார்கள்ன்னு சும்மா அடிச்சு விடுவது எந்த விதத்தில் சேர்த்தியோ அது போல்தான் செக்குலர் பார்ட்டி ஆளுங்க என்று பேசுவதும்…

  இந்த ஒரு வரியின் மூலம், எப்படி எல்லா குற்றச்சாட்டுகளையும் அப்படியே புறம் தளள முடியும்?

  நான் விமர்சித்தவைகளில் எங்கேயும் இது போன்ற போகிற போக்கில் சொல்லிச் செல்லும் குற்றச்சாட்டுகளே இல்லை. தெளிவாக சாவர்க்கரின் வார்த்தைகளையோ அல்லது நடவடிக்கைகளையோ சொல்லிதான் விமர்சித்து இருக்கிறேன்.

  //அந்தமானில் தனிமைச் சிறையில் சோறு, தண்ணீர் இல்லாமல் கல் உடைச்சுட்டு இருந்திருந்தால் காந்தியுமே மன்னிப்புக் கடிதம் தான் அனுப்பி இருப்பார். //

  அந்தமான் சிறையில் வேறு எவருமே இல்லாதது போலவும் இவர் ஒருவர்தான் இருந்தது போலவும் எழுதுகிறீர்கள். அதிலும் காந்தியும் அப்படித்தான் செய்வார் என்ற என்ற மிகைப்படுத்தல்கள் வேறு. இந்திய விடுதலைக்குப் பாடுபட்டவர்களில் எத்தனை பேர் சிறை செல்லாமல் இருந்திருக்கிறார்கள். இவர் ஒருவர்தான் சிறை சென்றாரா? சரி எத்தனை பேர் அதில் மன்னிப்புக் கடிதம் எழுதி இருக்கிறார்கள். அப்படி பிரிட்டிஷாரிடம் மன்னிப்புக் கடிதம் தொடர்ந்து எழுதி மன்றாடிய ஒருவர்க்கு எதற்கு இவ்வளவு அதிகப்படியான விளம்பரங்கள்? அதுவும் இவர் சாத்வீக முறையில் போராடியவர் அல்ல. ஆயுதப் போராட்டத்தை நடத்தியவர். அப்படி இருக்க இவ்வளவு தூரம் வீரம் குறைந்து மன்னிப்புக் கேட்பதை விமர்சிக்கவே கூடாது என்கிறீர்களா?

  அந்தமானில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில்தான் 60 வயது முதியவர் சீக்கிய அரசியல் கைதி சர்தார் சோஹன் சிங், பிரித்வி சிங் என்ற இளைஞனும் 12 நாட்களுக்கும் மேலாக, உண்ணாவிரதம் இருந்து தனது வீரத்தை, புரட்சித் தன்மையை நிரூபித்திருக்கிறார்கள்.ஆனால் வரலாற்றுப் பாடங்களில் அவர்களின் சுவடுகளை தேடித்தான் கண்டு பிடிக்க முடிகின்றது. மன்னிப்புக் கடிதம் எழுதிய சாவர்க்கர் சரித்திர நாயகனாய் அடையாளம் காண்பிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறார். இந்த முரண்பாட்டைத்தான் நான் சுட்டிக் காட்டி இருக்கின்றேன்.

  என்னுடைய வெகு எளிதான கேள்விகள்:

  1. இந்து மதத்தின் மேலுள்ள அபிமானத்தால் இந்தியக் கொடியில் இந்து மத அடையாளங்கள் மட்டும்தான் வரவேண்டும் என்று நினைத்தாரா இல்லையா? இல்லைன்னு சொல்ல முடியாது. அவர் கைப்பட எழுதிய வார்த்தைகளை நான் ஆதாரமாய் பதிவின் பின்னூட்டத்தில் போட்டிருக்கின்றேன்.
  2. தனது உடல் நலம் கெடுவதற்கு முன்பே, அதுவும் அந்தமானுக்கு வந்து சேர்ந்த ஆண்டிலிருந்தே பிரிட்டிஷாரிடம் மன்னிப்பு கடிதம் எழுதினாரா இல்லையா?
  3. மன்னிப்புக்கடிதம் என்று ஒற்றைவார்த்தையில் முடிக்காமல், “ஆங்கில அரசுக்கு விவாசமாக நடந்து கொள்வேன்” “இந்திய இளைஞர்கள் தவறாக வழிகாட்டப் பட்டிருக்கிறர்கள். என்னை விடுவித்தால் நானும் எங்கள் இளைஞர்களும் உங்கள் அரசுக்குப் பணியாற்றி உங்கள் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவோம்” “வழி தவறிப்போன மகன், அரசாகிய பிறந்த வீட்டு வாசலுக்கு வரும் போது சர்வ வல்லமை பொருந்திய தங்களையன்றி வேறு யார் கருணை காட்ட இயலும்? தயவுசெய்து எனை விடுவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்பது போன்ற மன்றாடல்கள் நிறைந்த வாசகங்கள் நிரப்பப்பட்டிருந்ததா இல்லையா? (இது போன்று பல வரிகளை என்னால் அடையாளம் காட்ட இயலும்).
  4. அந்தமானில் வேறு எவருமே வருடக் கணக்கில் சிறையில் இருந்ததே இல்லையா? ஆனால் இவரைப் போல எத்தனை பேர் தன்னை மட்டுமன்றி, தன் கூட்டத்தையும் ஆங்கில அரசுக்கு ஆதரவாய் நடந்து கொள்ள வைப்பேன் என்று மன்னிப்புக் கடிதம் எழுதி இருக்கின்றார்கள். பத்து வருடம் சிறையில் இருந்தார் என்பது இருக்கட்டும். இவர் எத்தனை முறை கடிதங்கள் எழுதி இருக்கிறார் என்பதயும் முதல் கடிதத்தை தான் சிறைக்கு சென்ற அந்த வருடத்திலேயே எழுதி இருக்கிறர் என்பதையும் பாருங்கள். இத்தனைக்கும் இவர் அறவழிப் போராட்டத்தை தேர்ந்தெடுத்தவர் இல்லை. ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர். அந்தமான் சிறையில் தாய் நாட்டிற்காக எத்தனையோ பேர் மன்னிப்புக் கடிதம் எழுதாமல் வெஞ்சினத்துடன் ஆங்கிலேயரை எதிர்த்து உயிர் துறந்திருக்கிறார்கள். வெகு சிலர் பல ஆண்டுகளை கழித்து விட்டு நாடி நரம்புகள் தளர்ந்து வீடு திரும்பி இருக்கிறார்கள்.
  5. மன்னிப்பு கடிதங்கள் தொடர்ச்சியாய் எழுதிய இவர் “வீரர், சரியாக அடையாளப்படுத்தப் படாதவர்” என்றால் இறுதி மூச்சு வரை தாய் நாட்டுக்காக எல்லாவற்றையும் தாங்கிக் கொண்ட அவர்கள் வரலாற்றின் பதிவேடுகளில் ஒரு மூலையில் இருக்கிறார்களே அவர்களை என்ன சொல்லி அனுப்புவது? மாவீரர்கள், எரிமலைக்கெல்லாம் எரிமலை என்றா?
  6. காந்திக் கொலையில் இவருக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ பங்கு இருந்ததா இல்லையா? இவரது இந்து மகாசபையும், ஆர்.எஸ்.எஸ் சும் மத வெறியை இளைஞர்கள் மத்தியில் ஊட்டியதா இல்லையா? நீதிமன்றத்தில் இவரது செயல்கள் அவர்களது சீடர்களுக்கே மன வருத்தத்தை தருவதாய் இருந்தது என்பது பதிவு செய்யப்பட்டிருக்கிறதா இல்லையா?
  7. இதை எல்லாவற்றையும் விட எழுத்தாளரின் சார்பு அரசியல் என்ற நிலையில் இருந்து நான் கேட்கும் கேள்வி ஒன்றே ஒன்றுதான். புத்தகத்தின் எந்த ஒரு மூலையிலாவது, ஒரு சிறு துளியாவது சர்ச்சைக்குரிய விஷயங்களை மாற்று வரலாற்றுப் பார்வையோடு பதிவு செய்திருக்கிறாரா என்பதே. எல்லா இடங்களிலும் ஆசிரியரே சாவர்க்கரின் மனசாட்சியாய் இருந்து பதில் சொல்லுகிறாரே தவிர இரண்டு விஷயங்களையும் சொல்லி வாசகர்களின் கைகளில் முடிவு செய்யும் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறாரா? அப்புறம் என்ன “Author is Dead”?

 17. நான் சொல்லவிரும்பும் கருத்துகள்

  1. சாவர்க்கரைப் பற்றி எதிர் மறையான கருத்துகள் மட்டுமே ஊடகங்களில் கேட்டிருக்கிறோம். அவையும் அவரது சிலை திறப்பில் ஏற்பட்ட பிரச்சனையின் போதே. வரலாற்றுப் பாட புத்தகங்களில் அவரைப்பற்றி படித்த நினைவில்லை. அப்படி பார்க்கையில் அவர் காங்கிரஸால் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது உண்மையே. நேர்மறையான தகவல்களை தந்திருப்பதால் இது ஒரு முக்கிய நூலே. சர்ச்சைக்குரிய விசயங்களை கொஞ்சம் சேர்த்திருக்கலாம்.

  2. சாவர்க்கர் மன்னிப்புக் கடிதம் எழுதியது கோழைத்தனத்தால் அல்ல. தன் வாழ்க்கை 50 வருடங்கள் சிறையில் இருந்து வீணாவதை விட ஏதாவது உருப்படியாகச் செய்யலாம் என்பதால். தீவிர அரசியல் இல்லாவிட்டாலும் பின்புலத்தில் இருந்து இயங்கலாம் என்பதால். பிற்காலத்தில் சமூகப் போராட்டங்களின் மூலம் அத்தகைய பங்களிப்பை தரவும் செய்தார். போர்க்களத்தில் உயிரை விடுவதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. உண்ணாவிரதத்தில் உயிரை விடுவதில் வீரமும் நெஞ்சுரமும் இருந்தாலும் அது பயணற்றது உங்கள் எதிராளி கருணைமிக்கவராக இல்லாத போது !

  3. இந்துக்கள் பிரார்த்தனை செய்ய அந்தமான் சிறையில் உரிமை இல்லை. அந்த உரிமை முஸ்லீம்களுக்கு மட்டும் இருந்தது. சாவர்க்கர் போராடி அந்த உரிமையை பெற்றுத் தந்தார். இவ்வாறு இந்துக்களுக்காக நல்லது எதுவும் செய்தாலே அவர் மதச்சார்புள்ளவர், இந்து தீவிரவாதி என்று சொல்லும் ஒரு கூட்டம் உள்ளதா? இல்லையா? நீங்கள் அப்படி இல்லாமல் இருக்கலாம்… !

 18. Madusudanan says:

  “முதல் உலக்ப்போரில் இங்கிலாந்திற்கு எதிராக துருக்கியும் ஜெர்மனியும் இணைந்ததை தனது எதிரிக்கு எதிரான குழுவாய் அவரால் காண முடிய வில்லை. அதை அவர் முஸ்லீம்கள் ரஷ்யாவின் உதவியுடன் இந்தியாவிற்கு வந்து கொள்ளையடிக்கும் முயற்சியாக பார்க்கிறார்.”

  ஏன் முதல் உலகப்போருடன் நிறுத்தி விட்டீர்கள்? 2ஆம் உலகப்போரில் ஜெர்மனி,பாலஸ்தினை ஆதரிக்கவில்லைனு கேள்வி கேளூம்…. விட்டா சவர்க்கரை எதிர்க்க ஹிட்லரையும் ஆதரிப்பீர்

 19. தாமதத்திற்கு மன்னிக்கவும்.

  மதுசூதனன், எனது கேள்வியில் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறேன். இருப்பினும் இதை உங்களால் புரிந்து கொள்ள முடியாமல் போவது என் துரதிருஷ்டமே.

  சாவர்க்கார் துருக்கியும் ஜெர்மனியும் இணைந்ததை எதிர்த்ததன் காரணமாக ஹிட்லர் ஒரு பாசிஸ்ட் என்றோ,கொடுங்கோலன் அல்லது இனப்படுகொலை செய்தவன் என்ற முறையில் எதிர்ப்பு தெரிவித்திருந்தால் அதை ஒரு மனிதாபிமான அல்லது நேர்மையினடிப்படையிலான அறச்சீற்றம் என்று புரிந்து கொள்ளலாம். இந்திய இந்துக்களுக்கெதிரான முஸ்லீம்களின் ஒருங்கிணைப்பு என்று சொல்வதை எந்த அடிப்படையில் பாராட்டிவது. Vஏஎண்டுமென்றால் ஒரு இந்துத்துவாவாய் இருந்தால் இதற்கு உச்சி குளிர்ந்திருக்கலாம்.

  அப்புறம் கட்டுரையில் ஆதாரத்துடன் அவர் செய்ததாய் சொன்ன சில விஷயங்களுக்கு தங்களிடமிருந்து ஏதேனும் பதில் உண்டா?

 20. Madusudanan says:

  Well I dont know much about Savarkar and i didnt read any of the books u mentioned… so i cannot able to comment on. But the said statement was looking ex-aggregated for me hence that comment.

 21. mayuresh says:

  can’t read Tamil. Can you post this article in english plz. Vande Mataram.JAi Hind.
  plz rply on mayuresh1234@gmail.com

 22. muthu selvan says:

  mr. nanda thank you veri much .about you write savarkkar. i know some people like mathusudan thinking aganest muslim. or gristian. yadum uoorae, yavarum kelir. ellorum onnu. edai marantha india urupada poradillai

 23. R.Sriram says:

  May be this article will try to answer some of your questions.

  http://www.hvk.org/Publications/veer.html

  I am not saying all that is mentioned is true in the above article, but it is another perception.

  By the way. You had asked “Is Savarkar the only one who suffered at Andaman”. Same applies to Gandhi. Is Gandhi the only one who fought for freedom. Yet only few are considered as leaders. So there must have been some quality that would have made him a leader at that point of time.

  Also please not that Savarkar is an athiest. So his concept of Hindusthan is not based on Religion atleast by his own words.

  My problem with the Left historians or historians in general is that they quote and write history in a way that suit their idealogy.

  So we have to hear from ppl close to Savarkar or read his Biography to really understand the real picture.

 24. Naresh Kumar says:

  //My problem with the Left historians or historians in general is that they quote and write history in a way that suit their idealogy.
  So we have to hear from ppl close to Savarkar or read his Biography to really understand the real picture//

  I realy dont understand how one could understand or get a real picture from a person’s own biography…

  //By the way. You had asked “Is Savarkar the only one who suffered at Andaman”. Same applies to Gandhi. Is Gandhi the only one who fought for freedom.//

  Funny logic. என்னுடைய புரிதலில், சும்மா போகிற போக்கில் சவார்க்கரை கேல்விக்குட்படுத்தவில்லை. மாறாக பதிவு முழுக்கவே இலந்தை அவர்களின் புத்தகம் எழுதிய விதம், அதில் விடுபட்ட அல்லது மறைக்கப்பட்ட விஷயங்கள் பற்றி மட்டுமே கேள்வியெழுப்பியிருக்கிறது (ஸ்ரீராம் சொன்ன //Left historians or historians in general is that they quote and write history in a way that suit their idealogy// வகையைச் சார்ந்ததுதான் இந்தப் புத்தகமும் என்பதுதான் எழுப்பப் பட்ட கேள்வியே!!!

  இதுவரை பதிவில் எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கு பதில் யாரும் தரவேயில்லை என்றே தோன்றுகிறது…

 25. bhuvana says:

  romba bramippa irukku sir.. evalo visayam therinjuka vendi irukku oru pathivu eluthurathukku! great!!

 26. ZULFIKARALI says:

  நீ உன் பெயரை மாற்றி கம்யுனிஸ்ட் போர்வையில் எழுதினால் நல்லவன் ஆகி விட முடியும் போது நாங்களும் அதயே செய்ய வேன்டிய கட்டாயம்.
  இந்தியாவின் உடனடியாக தேவை ராணுவ ஆட்சி. எப்போது தான் இந்த வோட்டு அடி வருடிகளின் காலம் முடியுமா.
  வாழ்க ஜனநாயகம்.வளர்க ஒட்டு பொறிக்கிகள்.
  ——————–தமிழன்.

 27. kalkisamban says:

  வீர் சாவர்க்கர்

  சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கர் என அறியப்படும் விநாயக் தாமோதர் சாவர்க்கர் ஓர் சுதந்திர போராட்ட வீரர் மட்டும் அன்று. இவர் ஓர் சமூக சீர்திருத்தவாதி, அஞ்சாநெஞ்சர், எழுத்தாளர், நாடகாசிரியர், கவிஞர், வரலாற்று ஆசிரியர், அரசியல் தலைவர், மற்றும் தத்துவஞானி எனப் பன்முகத்தன்மை வாய்ந்த மனிதராவார். இருப்பினும், பல வருடங்களாக இவரைப் பற்றி பரப்பபட்டுள்ள விஷமப் பிரச்சாரங்களால் பெருவாரியான மக்களால் அறியப்படாமலோ அல்லது தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டோ வருகிறார். எனவே இப்பொய்ப்பிராச்சரங்களை முறியடித்து இம்மாமனிதரின் வாழ்க்கை, எண்ணம், செயல், மற்றும் தேவையை உலகினருக்கு உணர்த்தவே இவ்விணையதளம் விழைகிறது.

  வீர் சாவர்க்கர் – ஒரு காவியத்தலைவன்
  •பூரண அரசியல் சுதந்திரத்தை 1900லேயே துணிவுடன் பிரகனபடுத்திய முதல் அரசியல் தலைவர்.
  •1905ல் அந்நியத் துணிகளை தீரமுடன் பகிஷ்க்கரித்த முதல் அரசியல் தலைவர்.
  •இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக 1906ல் சர்வதேச அளவில் புரட்சி இயக்கத்தை ஏற்பாடு செய்த முதல் இந்தியர்.
  •தேசவிடுதலைக்கான நடவடிக்கைகளில் ஈடுப்பட்டிருந்ததினால் சட்டம் பயின்று அதற்க்கான தேர்வுகளில் தேர்ச்சியுற்றும் ஆங்கிலேய வழக்குரைஞர் அவையில் (பார் கவுன்சில்) சேர அனுமதி மறுக்கப்பட்ட முதல் இந்திய மாணவர். (1909)
  •லண்டனில் கைது செய்து தொடரப்பட்ட வழக்கினால், பிரிட்டிஷ் நீதிமன்றத்திற்கு சட்டச் சிக்கலை ஏற்படுத்திய ஒரே இந்தியத் தலைவர். மேலும் தப்பியோடிய குற்றம் புரிந்தோருக்கான ஆணை மற்றும் ஆட்கொணர்வு ஆணை (ஹேபியஸ் கார்பஸ்) ஆகியவற்றிற்கான பொருள் விளக்கத்திற்காக இவ்வழக்கு இன்றளவும் குறிப்பிடபடுகிறது. (Rex Vs Governor of Brixton Prison, ex-parte Savarkar)
  •இந்திய வரலாற்று ஆசிரியனின் புத்தகம் ஒன்று முதன் முதலாக தடை உத்திரவுக்கு உள்ளானது எனில் அது சாவர்க்கரின் ‘1857 முதல் சுதந்திரப் போர்’ என்னும் புத்தகமே ஆகும். இப்புத்தகம் அச்சிடப்படுவதற்கு முன்னரே பிரிட்டிஷ் அரசாங்கத்தால் 1909ல் தடை செய்யப்பட்டது. அரசின் தடையுத்திரவு வருவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே அன்றைய கவர்னர் ஜெனரல் அனைத்து புத்தகங்களையும் பறிமுதல் செய்யுமாறு அஞ்சலகத் தலைவருக்கு ஆணைப்பிறபித்தார்.
  •ஆங்கிலேய அரசிடமிருந்து தப்பி பிரஞ்சு தேசத்தில் கைது செய்யப்பட்டு மக்கள் கவனத்தைக் கிளறிவிடும் வழக்காக ஹேக் நகரத்தில் உள்ள சர்வதேச நீதி மன்றத்தில் நடப்பதற்கு காரணமாயிருந்த முதல் அரசியல் கைதி. இவ்வழக்கு இன்றளவும் பல சர்வதேச ஒப்பந்தங்களில் குறிப்பிடபடுகிறது. (1910)
  •தேசவிடுதலைக்கு பாடுபட்டதற்காக ஓர் இந்தியப் பல்கலைகழகம் ஒரு பட்டதாரிக்கு வழங்கியப் பட்டதை முதன் முதலில் திரும்பப் பெற்றதேனின் அது இவரிடமிருந்துதான். (1911)
  •காகிதமும் எழுதுகோலும் மறுக்கப்பட்டதால் தான் இயற்றிய கவிதைகளை சிறைச்சாலை சுவர்களில் கிறுக்கியும், பத்தாயிரம் வரிகளை தானும் தன் சக கைதிகளும் மனப்பாடம் செய்தும் பின்னாளில் அச்சிட்ட முதல் கவிஞர், உலகளவில்.
  •மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ரத்னகிரி மாவட்டத்தில் பாதுகாப்பு காவலில் வைக்கப்பட்ட காலத்தில், பத்து வருடங்களுக்கு குறைவான காலத்தில், அங்கு நிலவிய தீண்டாமை கொடுமையை ஒழித்த முதல் புரட்சியாளர்.
  •ஓர் இந்திய அரசியல் தலைவர் முதன் முதலில் வெற்றிகரமாக நடத்திய சில சமூக சீர்திருத்த நடவடிக்கைகள்- ◦தீண்டத்தகாதவர்களாக கருதப்பட்டவர்களையும் இதர இந்துக்களையும் சேர்த்து விநாயகர் பூஜை. (1930)
  ◦தீண்டத்தகாதவர்களாக கருதப்பட்டவர்களையும் இதர இந்துக்களையும் சேர்த்து சமபந்தி போஜனம். (1931)
  ◦தீண்டத்தகாதவர்களாக கருதப்பட்டவர்களுக்கும் இதர இந்துக்களுக்கும் சேர்த்து “பதிதபாவன” கோயில். (22 பிப்ரவரி1910)
  ◦தீண்டத்தகாதவர்களாக கருதப்பட்டவர்களும் இதர இந்துக்களும் சேர்ந்து தேனீர் அருந்தும் நிலையம் (01 மே 1933)

  •ஐம்பதாண்டு தேசாந்தர தண்டனையை உலக அளவில் பெற்ற முதல் அரசியல் கைதி. பிரிட்டிஷ் பேரரசின் ஆட்சியில் இதுபோன்ற உத்தரவு வேறு ஒருவருக்கு வழங்கங்கபட்டதில்லை.
  •வடக்கிருத்தல் (ஆத்ம சமர்ப்பணம்) எனும் உயரிய யோக முறையினை கடைப்பிடித்து உயிர் துறந்த முதல் அரசியல் தலைவர். (26 பிப்ரவரி 1966)

Leave a Reply