nav-left cat-right
cat-right

கொளத்தூர் மணி அவர்களின் பேச்சு – இறுதி

இதன் முந்தைய பகுதி

ஒரே ஒரு பொற்கோயிலுக்குள் நுழைந்ததற்காக, இந்திரா காந்தியை சுட்டுக் கொன்றது நியாயம் என்று இன்றளவும் சீக்கிய சமுதயம் சொல்லி வருகின்றது. சுட்டுக் கொன்றவர்களை தியாகிகள் என்று சொல்லுகின்றார்கள். சத்வந்த் சிங், பீந்த் சிங் என்று இருவர் சுட்டுக் கொல்கின்றனர். பீந்த் சிங் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் சத்வந்த் சிங்கும், அவருக்கு உடந்தையாக இருந்தவரும் கைது செய்யப் பட்டு அவர்கள் இருவரும் கைது செய்யப் படுகின்றனர்.

உடனே சீக்கிய மத பீடம் அறிவிக்கின்றது. அவர்கள் மூவரும் தியாகிகள் என்று. அவர்கள் குடும்பத்தை தங்கள் பொறுப்பில் இன்று வரை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் சுட்டுக் கொல்லப்பட்ட பீந்த் சிங்கின் மனைவி தேர்தலில் நிற்கிறார். காங்கிரசைத் தவிர வேறு எவரும் அவரை எதிர்த்துப் போட்டியிட வில்லை. கமல் கவுன் ஹௌசா என்ற அவரது மனைவி போட்டியிய்யு 5,40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். காங்கிரஸ்காரனுங்க வாங்கின் ஓட்டு வெறுமனே ஐம்பதாயிரம்தான். இன்று வரை இந்திய வரலாற்றில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்ற சாதனைக்குச் சொந்தக்காராராய் இருகிறார்.

அவர் ராஜீவ் காந்திக்கு எதிராக ஐந்து ஆண்டுகள் நாடாளுமன்றத்தில் அமர்ந்துதான் இருந்தார். இன்றளவுக்கும் அவர்கள் மூவரும் தியாகிகளாய் போற்றப்படுகிறார்கள். ஆண்டுதோறும் ந்டக்கும் வைசாகி திருவிழாவில் அவர்களாது படங்கள் வைத்து வணங்கப்படுகின்றது. ஆக சீக்கிய மக்கள் இது தவறு என்று இம்மியளவும் கருத வில்லை. இவ்வளவிற்கும் பின்னாலும் ராஜீவ் காந்தி, ராகுல் காந்தி, சோனியா,மன்மோகன் சிங், ஜெயில் சிங் உள்ளிட்ட அமைத்து காங்கிரஸ் தலைவர்களும் நெடுங்காலமாக தொடர்ந்து மன்னிப்பு கேட்டுக் கொண்டே வந்திருக்கின்றார்கள்.

கொன்றது குற்றம் இல்லை. அது நியாயம் தான் என்று சொன்னவர்களிடம் நீங்கள் தொடர்ந்து மன்னிப்பு கேட்கிறீர்கள். நாங்கள் தான் துன்பியல் நிக்ழவு என்று சொல்லி இருக்கிறோமே எங்களுக்கு நீங்கள் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள். அதை அவர்கள் செய்தார்களா என்று தெரிய வில்லை. என்னுடைய கருத்து, செய்திருந்தால் உங்களைப் பாராட்டுகிறோம். செய்யாவிடின் கண்டிக்கிறோம். ஏனெனில் நீங்கள்தானே ஈழத்து மக்களுக்கு பாதுகாப்பு.உங்கள் மக்களின் மீதான படுகொலைகளுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது உங்கள் கடமைதானே.எனவேதான் சொல்கிறேன். நீங்கள் செய்யாதிருந்தால் உங்களை கண்டிக்கிறேன். செய்திருந்தால் பாராட்டுகிறேன்.

************

22 வருடங்கள் கழித்து இப்போதுதான் 1987 ஒப்பந்தத்தைப் பேசுகிறீர்கள். அதுவும் அரசியல்வாதிகள் பேச வில்லை. சிவசங்கரமேனன் எனும் அதிகார் பேசுகிறார். நாங்கள் கேட்டதும் அதேதானே. ஒப்பந்தத்தை ஒழுங்காக நிறைவேற்றுங்கள் என்று சொல்லிதானே திலீபன் அவர்கள் உண்ணாவிரதம் இருந்து அறவழியில் போராடி தனது உயிரை மாய்த்துக் கொண்டார். எனில் ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்தத் தவறிய நீங்கள் எந்த முறையில் புலிகளை குற்றம் சாட்டுகிறீர்கள்.

திலீபன் அவர்கள் உண்ணாவிரதம் இருந்த போது அது குறித்துப் பேச இந்திய அதிகாரிகளிடம் பேச பிரபாகரன் அவர்கள் வருகிறார். ஹர்கிரத் சிங் தனது புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார், அப்போதய தூதர் தீட்சித் அவர்களிடம் இருந்து பிரபாகரனைக் கொன்று விடும் படி ஆணை பிறப்பிக்கப் பட்டது. சமாதானம் பேச வருபவனை கொல்வது ராணுவ வீரனின் செயல் அல்ல என்று சொல்லி மறுத்து விடுகிறார்.இது எனது உத்தரவு அல்ல. பிரதமர் ராஜீவின் உத்தரவு என்று தீட்சித் சொல்லி தனது புத்தகத்திலும் பதிவு செய்திருக்கிறார். சொல்லியவர் இன்னும் உயிருடன் தான் இருக்கிறார். புத்தகமும் புழக்கத்தில்தான் இருகிறது.

ஒரு நாட்டின் தலைவன், காந்தீய வழியில் வந்தவன் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் ஒரு பாரதப் பிரதமர் சமாதானம் பேச வந்தவரை கொல்ல்ச் சொல்கிறார் எனில், அவருக்கு என்ன தண்டனை கொடுப்பது?

************

கலைஞர் சகோதர யுத்தம் என்று சொல்லி வருந்துகிறாரே. 2004 ல் தேர்தல் நடந்தது. TELO இயக்கத்தில் சபாரத்தினம் அவர்களுடன் நின்று ஆயுதம் எடுத்துப் போராடிய சிவாஜிலிங்கம் போட்டியிடுகிறார். ஆயுதம் தாங்கிப் போராடியவர்கள். இன்னும் சொல்லப் போனால் சபாரத்தினத்தை சுட்டுக் ஒன்ற போது அந்த பக்கம் நின்று புலிகளைப் பார்த்து சுட்டவர் சிவாஜிலிங்கம். அவர், செல்வம் அடைக்கலநாதன், ஸ்ரீகாந்தா, தன்னுடைய தலைவர் பத்மநாபாவைச் சுட்டுக் கொன்றதாக புலிகள் மீது பழி சுமத்திய சுரேஷ் பிரேமச்சந்திரன், இன்னொரு கட்சியைச் ச்சேர்ந்த சம்பந்தம் ஆகிய அனைவரும் புலிகளுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

அவர்கள் மறந்து விட்டார்கள். ஆனால் இங்கே இவர்கள் இன்னமும் சகோதர யுத்தம் என்று கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்பொது அவர்கள் புலிகள் தான் த்மிழ் மக்களுக்கு பாதுகாப்பு என்று சொல்கிறார்கள். ஆனால் இங்கிருந்து தொடர்பில்லாத நாம் பேசுகிறோம் சகோதர யுத்தம் என்று. ஸ்டாலின் – அழகிரி யுத்தம் வேண்டுமானால் சகோதர யுத்தமாய் இருக்கும்.

கனகரத்தினம் என்று ஒருஎம்.பி இருந்தார். தமிழ் மக்களிடம் ஆசி பெற்று வெற்றி பெற்று சிங்கள கட்சியில் போய் சேர்ந்தார். இந்த துரோகம் கண்டு கோபமுற்று அவருக்கு மரண தண்டனை என்று அறிவித்த புலிகள் 1978 -79 ல் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது குடும்பத்திற்கு எவ்வளவு கோபம் வந்திருக்கும். ஆனால் 1983 ல் நான்கே வருடங்களில் அவரது மகன் புலிகளின் இயக்கத்தில் சேர்ந்தார். சைமன் என்ற புனை பெயரில் இருந்தார். அவரது உண்மையான் பெயர் ரஞ்சன். தனது தந்தையைக் கொன்ற பின்பும் கூட அவர் புலிகள் இயக்கத்தில் சேர்ந்தார். ஆனால் இங்கிருந்துக் கொண்டு நாம் சகோதர யுத்தம் என்கிறோம்.

விமர்சனம் செய்யுங்கள். எவரொருவரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரல்ல. அவர் மீது மனித உரிமை மீறல் குறித்து விமர்சனம் செய்யுங்கள் தவறில்லை. ஆனால் எபபோது சொல்கிறீர்கள். ராஜபக்சே அரசு தமிழர்களின் கழுத்தில் கத்தியை வைத்திருக்கும் இந்த நேரத்தில்தானா சொல்லுவீர்கள்?

************

1984ல் பிரபாகரன் விடுதலை பெற்ற ஈழம் எப்படி இருக்கும் என்று கேட்கிறார்கள். அதற்கு பிரபாகரன் ஒரு கட்சி ஜனநாயக நாடாகத்தான் இருக்கும் என்று பேட்டி அளிக்கின்றார். அதுவும் 85ல். 24 வருடங்களில் அவரது கருத்துக்கள் மாறி கூட இருந்திருக்கலாம். அதை கலைஞர் தொடர்ந்து பேசி வருகின்றார் மிகப்பெரும் குற்றமாக.

கலைஞரிடம் ஒருமுறை நீங்கள் யாரை சந்திக்க விரும்புகிறீர்கள் என்று கேள்வி எழுப்பப் படுகின்றது. இதை பல பேரிடம் கேட்பார்கள். விபி.சிங் எனும் மாமனிதரிடமும் கேட்டார்கள்.

நம்மால் மறக்கப்பட்டவர், இறந்த போது எந்த பத்திரிக்கையும் அவர் குறித்து எழுத விலை. புகழை யாரும் பேச வில்லை. ஒரு நல்ல ஜனநாயகவாதி. அவரது காலத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைக் கூட தமிழ் நாடு தரவில்லை. ஆனால் அவரது கட்சி கர்நாடகத்தில் இருந்தது. எதைப்பற்றியும் கவலைப்படாமல் ”காவிரி நடுவர் மன்றத்தை” அமைத்தது அவர்தான். இட ஒதுக்கீட்டை அமல் படுத்தியவர், 56 ல் மறைந்து போன அம்பேத்கார் அவர்களுக்கு பாரத ரத்னா கொடுத்தவர். ந்ம்மாளுங்க தமிழனாய் பிறந்து தமிழ் பெண்ணாய் வளர்ந்து “நீராரும் கடலுடுத்த” தமிழ் தாய் வாழ்த்தை பாட மாட்டேன் என்று பாட மறுத்த சுப்புலட்சுமியைத்தான் பாராட்டுவார்கள். ஆனால் புரட்சியாளர் அம்பேத்கார் இறந்து 33 வருடங்கள் கழித்து வி.பி.சிங் பாரத ரத்னா பட்டம் கொடுத்தார்.

அப்படிப்பட்ட மனிதர் சொன்னார். தன் வாழ்நாளில் ஒருமுறையாவது பிரபாகரனைச் சந்திக்க வேண்டும் என்றார்.

அதே பொன்று கலைஞரிடம் கேட்டார்கள். கலைஞர் சொன்னார். நான் ஃபிடல் காஸ்ட்ரோவை ஒரு முறையேனும் பார்க்க விரும்புகிறேன். மக்களே ஃபிடல் காஸ்ட்ரோவும் ஒரு கட்சி ஆட்சிமுறையைதான் நடத்தியவர்தான்.

தான் வாழ்நாளில் ஒருமுறையேனும் சந்திக்க விரும்புபவர் என்று சொன்னவர் ஒரு கட்சி ஆட்சி முறையை நடத்தியவர். ஆனால் இவர் 25 வருடங்களுக்கு உந்திய பேட்டியை வைத்துக் கொண்டு பிரபாகரனை சர்வாதிகாரி என்கிறார்.

ரஷ்யாவிலும் ஒரு கட்சி ஆட்சி முறைதான். சீனாவில் ஒரு கட்சி ஆட்சி முறைதான்.அட ஏன்யா இவர் மகனுக்கு பேர் வைத்திருக்கிறாரே ஸ்டாலின் அவரும் ஒரு கட்சி ஆட்சி முறைக்காரர்தானே.

கலைஞர் அவர்களே ஏன் முரண்படுகிறீர்கள். ஏன் இந்த வன்மம்? எதை மனதில் வைத்துக் கொண்டு இப்படி முன்னுக்குப் பின் முரணாய் பேசுகிறீர்கள். என்ன கட்டாயம் உங்களுக்கு???

இதைத்தான் நாங்கள் கேட்கிறோம். நீங்கள் நடுநிலையுடன் இருந்து பதில் சொல்லுங்கள்.

7 Responses to “கொளத்தூர் மணி அவர்களின் பேச்சு – இறுதி”

 1. SenthilKumar says:

  Hi Nandha,

  Article is very good..
  But u missed one important point..
  Please post that information regarding rajiv gandhi assasination, in next post.

  I expecting ur next post very eagerly

 2. k.pathi says:

  காங்கிரசு சொறி நாய்களை சுண்ணாம்பு காளவாயில் போட்டால்தான் நன்றாக வெந்து போவார்கள்:
  மே மாதம் 16 தேதிக்கு பிறகு சொறி நாய்கலை கல்லால் அடிது விரட்டுவோம்

 3. SenthilKumar says:

  Hi Nandha,

  naan muthal paagam padikkamal comment seythu vitten..

  mannikkavum…

  But ur post is really good…

 4. நன்றி செந்தில்குமார், பதி.

 5. deepan says:

  அருமை அருமை.

 6. வசந்த் ஆதிமூலம் says:

  வணக்கம் அண்ணே… அருமையான பதிவு. அப்புறம் எப்போ சந்திக்கலாம்? 10 ம் தேதி வாரியளா? சந்திக்கலாமா?

Leave a Reply