nav-left cat-right
cat-right

கைது செய்யப்பட காரணமாயிருந்த கொளத்தூர் மணி அவர்களின் பேச்சு – பாகம் 1

ஈழத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற படுகொலைகள், அவலங்கள் எல்லார் மனதையும் உருக்கி இருக்கின்றது. ஏதேனும் ஒரு நல்ல தீர்வு வர வேண்டும், அங்கிருக்கின்ற தமிழ் மக்களுக்கு நல்ல தீர்வு அமைய வேண்டும், கண்ணியமான, உரிமை பெற்ற வாழ்வு அமைய வேண்டும் என்று எல்லாரும் விரும்புகிறோம். இப்படிப்பட்ட எண்ணம் வருவதற்கு ஒருவர் தமிழனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒருவன் மனிதாக இருந்தாலே போதும்.

ஈழ்ச் சிக்கல் என்று நாம் பேசத் தொடங்கும் போதெல்லாம் தொடர்ந்து சில முழக்கங்களை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். காங்கிரஸ்காரர்கள் மறக்க மாட்டோம் மன்னிக்க மாட்டோம் என்கிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு என்கிறார்கள். கலைஞர் அவர்களோ சகோதரயுத்தம் என்றும், சர்வாதிகாரி என்றும் சொல்கிறார்.

1987 ல் போடப்பட்ட ஒப்பந்தத்தை இப்போதுதான் காங்கிரஸ் பேசத் தொடங்கி இருக்கிறது. 1983 ல் கொடுத்த பேட்டியை இப்போதுதான் கலைஞர் நினைவு படுத்துகிறார். இன்றைய சிக்கல்களுக்கு என்ன்னய்யா தீர்வு என்றால் 25 வருடங்களுக்கு முந்தைய கதையைப் பேசுகிறார்கள். பழம் வரலாறு மட்டுமே பேசுகின்றார்கள் என்றால் இப்போது அவர்கள் உருப்படியாக எதையும் செய்ய வில்லை என்றுதான் பொருள்.

எதற்கும் இவர்கள் கூறும் ஒரே பதில் இதை ராஜீவ் கொலைக்கு முன், ராஜீவ் கொலைக்குப் பின் என்று பாருங்கள் என்கிறார்கள். எனவேதான் நாமும் அதைப் பற்றி பேச வேண்டிய தேவையாய் இருக்கிறது.

ஜாலியன் வாலாபாக் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். 1919ல் மிகக் கொடுமையான அடக்கு முறைச் சட்டமான ரௌலட் சட்டம் இயற்றப்பட்டது. (ரௌலட் – குமாரசாமி சட்டம்) அது இரண்டு காங்கிரஸ் தலைவர்களை நாட்டை விட்டே வெளியேற்றியது. அடக்குமுறையான அச்சட்டத்தைக் கடித்து ஜாலியன் வாலாபாக் எனும் பூங்காவில் அமைதியான முறையில் ஒரு பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அப்ப்போது முன்னறிவிப்பின்றி அக்கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டது. 340 பேர்தான் இறந்தனர் என்று ஐரோப்பியர்கள் சொன்னார்கள். 1000 பேர் என்று நாம் சொன்னோம்.

அந்த அவலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான் 20 வயதான உத்தம் சிங் எனும் இளைஞன். ”தன் நாட்டு மக்களை இன்னொரு நாட்டிலிருந்து வந்த ஒருவன் கொல்லுகிறான்” என்பதைப் பார்க்கிறான். அவனுக்கு ஆத்திரம் ஏற்படுகிறது. இந்தப் படுகொலைகளுக்கு காரணமானவனை எப்படியேனும் பழி வாங்க வேண்டும் என்று சபதம் ஏற்கிறான். இங்கிலாந்திற்கு செல்கிறான். உணவு விடுதியில் வேலை செய்வது உட்பட பல்வேறு முயற்சிகளின் மூலம் ஆயுதம் வாங்க முயல்கிறான். 21 வருடங்கள் கழித்து பிரச்சினைக்கு காரணமான உத்தரவைப் பிறப்பித்த கவர்னல் ஜெனரல் மைக்கேல் ஓ டயரை 1940ல் சுட்டுக் கொல்கிறான்.

அவன் மீது கொலைப்பழி சுமத்தப்பட்டு மூன்று மாதங்களில் விசாரணை நடத்தப் பட்டு 1940 ஜூலை 31ல் அவன் தூக்கிலிடப்படுகிறான். இந்த நாட்டில் படுகொலைகள் நிகழ்த்தியவனை அவர்களது நாட்டிற்கே சென்று 21 வருடப் போராட்டத்திற்குப் பின்பு சுட்டுக் கொல்கிறான் உத்தம் சிங். அப்படிப்பட்ட ஒரு சுதந்திரப் போராட்ட வீரனுக்கு நாம் உரிய மரியாதையைக் கொடுக்கத் தவறி விட்டோம் என்று கருதிய இந்திரா காந்தி 1974ல் சாது சிங்கை அனுப்பி அவரது உடலின் எச்சங்களைக் கொண்டு வர ஏற்பாடு செய்தார்.

34 ஆண்டுக்ளுக்கு பின்னால் புதைத்த உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அவரது எச்சங்கள் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடல் எச்சங்களும் அவையங்களும் இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்ட போது அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, அப்போதைய காங்கிரஸ் அகில இந்தியத் தலைவர் சங்கர் தயாள் சர்மா, அப்போதைய பஞ்சாபின் முதல்வர் ஜெயில் சிங் (இருவரும் பின்னாளில் குடியரசுத் தலைவர் ஆனவர்கள்) ஆகிய மூவரும் விமான நிலயத்திற்கே சென்று வரவேற்று மலர் வளையம் வைத்து மரியாதை செய்து அவரது சொந்த ஊரிலேயே அடக்கம் செய்தார்கள். அது ஒரு தியாகிக்கு தந்த மரியாதை. அதை நாம் பாராட்ட வேண்டும்.

இதை நான் இங்கு சொல்ல காரணம் இருக்கிறது. இப்படித்தான் ஈழத்தில் 6400 பொது மக்கள் கொல்லப்பட்டார்கள். 1000 பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள். இப்படிப்பட்ட ஓர் மனித பேரவலத்தால் கோபமடைந்து இதற்கு ஆணையிட்ட மனிதனை பழி தீர்க்க வேண்டி அந்த நாட்டுக்காரன் இந்த நாட்டுக்கு வந்தான். 21 ஆண்டுகள் ஆக வில்லை. ஒரு ஆண்டில் தனது காரியத்தை முடித்தான். உங்களிடம் நான் கேட்டுக் கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். 34 ஆண்டுகள் கழித்தும் உத்தம் சிங்கின் உடலை இந்தியா, மரியாதை செய்து பாராட்டுகின்றதென்றால் தானுவும் சிவராசனும் ஈழத்து மக்களுக்கு யார்?

340 அல்லது 1000 பேரைச் சுட்டுக் கொல்ல ஆணையிட்டவனை கொல்வது தியாகம் எனில், 6000 பேருக்கு மேல் கொல்லப்பட, 1000 பெண்கள் கற்பழிக்கப்பட, தனது நாட்டின் விதலைப் போராட்டம் 20 ஆண்டுகள் பின் தள்ளிப் போக காரணமாய் இருந்தவரைக் கொல்வதை மட்டும் எப்படி நீங்கள் கொலை என்று சொல்கிறீர்கள். அதனால்தான் நாங்கள் சொல்லுகிறோம். அது கொலை அல்ல. மரண தண்டனை.

எனவே தான் சொல்லுகிறோம் ஈழ வரலாற்றை ராஜீவ் கொலைக்கு முன் பின் என்று பார்க்காதீர்கள். அமைதிப்படைக்கு முன், அமைதிப்படைக்குப் பின் என்று பாருங்கள்.

**************************

1987 ஒப்பந்தத்திற்கு வருவோம். இப்போது கேட்கிறார்களே பிரபாகரன் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்று. 29 ஆம் தேதி ஒப்பந்தம் போடப்பட்டது. 30 ஆம் தேதி பிரபாகரனுடன் பேச்சு வார்த்தை ந்டத்தி ஆயுதத்தை ஒப்படைக்க்ச் சொல்லி வலியுறுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து 1987 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் தேதி “சுதுமலை” எனும் கிராமத்தில் பொதுக் கூட்டத்தில் தோன்றி, “நாங்கள் ஆயுதத்தை விரும்பி ஏற்க வில்லை. நாங்கள் போரின் மீது காதல் கொண்ட மன நோயாளிகளும் இல்லை. அற வழியில் எழுப்பப்பட்ட எங்களது கோரிக்கைகள் ஆயுதம் கொண்டு அடக்கப் பட்ட போது வேறு வழியற்று நாங்கள் ஆயுதம் ஏந்தினோம். ஆயுத்ங்களை ஒப்படைக்கச் சொல்லி இந்தியா எங்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறது. பாரதப் பிரதமரும் பல உறுதி மொழிகளை அளித்திருக்கிறார். முக்கியமாக தமிழ் மக்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று உறுதியளித்திருக்கிறார். இந்தியப் பிரதமரின் நேர்மையில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எனவே இந்த ஆயுதத்தை கையளிக்கிற இந்த நொடியிலிருந்து தமிழ் மக்களின் பாதுகாப்பை இந்திய அரசின் பொறுப்பில் விடுகிறேன்” என்று சொல்லி ஒப்படைத்தார்.

ஆகஸ்ட் 4 தொடங்கி 21 வரை இது தொடர்ந்தது. அது ஏன் த்டபட்டது என்பதை நான் சொல்ல வில்லை. அப்போது இந்தியா சார்பாக இலங்கையிலிருந்து, அமைதிப்படைக்குத் தலைமை தாங்கிப் போரை நடத்திய ஹர்கிரத் சிங் புத்தகம் எழுதி இருக்கிறார். அவர் சொல்கிறார். “இந்திய அரசு ஒரு புறம் அமைதிப் பேச்சு வார்த்தை என்று பேசிக் கொண்டே மறுபுறம் அவர்களுக்கு எதிராக ஆயுத சப்ளை உட்பட பல எதிர் வழிகளை செய்து கொண்டிருந்தார்கள். அதுவே 21 ஆம் அன்று யுத கையளிப்பை நிறுத்தக் காரணமாயிற்று.

ஒப்பந்தம் ஒப்பந்தம் என்கிறார்களே. ஒப்பந்தத்தின் அரசியல் கைதிகள் உட்பட அனைவருக்கும் பொது மன்னிப்பு மற்றும் விடுதலை என்றார்களே, ஏன் செய்ய வில்லை. 1987 அக்டோபர் 2 ஆம் நாள் இந்தியாவிலிருந்து ஆவணங்களை எடுத்துச் சென்ற வி.புலிகளை கைது செய்கிறார்கள். 17 பேர் இருக்கும் படகில் 2 துப்பாக்கிகள் மட்டுமே இருந்தது. புலிகளின் தலைவர்கள் மட்டும் தங்கள் பொறுப்பில் துப்பாக்கிகளை வைத்துக் கொள்ளலாம் என்று இருக்கிறது. இரண்டு தளபதிகள் படகில் இருக்கிறார்கள் 2 துப்பாக்கிகள் மட்டுமே இருக்கிறது. ஆக அவர்கள் ஆயுதமும் கடத்த வில்லை.

தளபதிகள் இந்திய தூதர் தீட்சித்திடம் சொல்லுகிறார். கொழும்புவிற்கு அவ்ர்கள் கூட்டிச் செல்வார்களேயானால் எங்களுக்கு அங்கு பாதுகாப்பு இல்லை. ஆகவே நாங்கள் நஞ்சருந்தி விடுவோம். அது மிகப் பெரும் அனர்த்தத்தில் முடியும். எனவே நீங்கள் நல்ல முடிவெடுங்கள் என்று பதிவு செய்கிறார். அவர்களது விருப்பத்திற்கு மாறாய் வலுக்கட்டாயமாய் அவர்களை கொழும்பு செல்ல முயலுகையில் 14 பேரர்கள் நஞ்சருந்தி மாளுகின்றனர்.

இப்போது இன்னொரு செய்தியை நான் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். இந்திராகாந்தி படுகொலையைத் தொடர்ந்து ஆயிரக் கணக்கான சீக்கியர்கள் காங்கிரஸ்காரர்களால் படுகொலை செய்யப் படுகின்றனர். டெல்லியில் மட்டும் 3000 சீக்கியர்கள் இறக்கின்றனர். இது குறித்து அப்போது பிரதமராக வந்து விட்ட ராஜீவ் காந்தி சொல்லுகிறார். “ஒரு பெரிய ஆலமரம் சாயும் போது பூமியில் சில அதிர்வுகள் ஏற்படத்தான் செய்யும்”

ஒரே ஒரு ஆலமரத்திற்கு இப்படி என்றால் இங்கே சாய்ந்தது ஒரு ஆலமரம் இல்லை. இரண்டு ஆலமரங்கள். புலேந்திரன் குமாரப்பா என்று இரண்டு பேர். ராஜீவ் காந்தி அவர்கள் விமான ஓட்டியாக இருந்து வேறு ஒரு நாட்டில் மது அருந்தி உல்லாச வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில், தங்கள் இளமையைத் துறந்து மக்களுக்காக, உரிமைகளுக்காக இயக்கத்திற்கு அர்ப்பணித்துக் கொண்டவர்கள் அவர்கள். 17 பேராக புலிகள் இயக்கம் இருந்த போது தம்மை இணைத்துக் கொண்ட போராளிகள் அவர்கள். ஒருவர் வடக்கு பகுதியின் தளபதி. இன்னொருவர் கிழக்கு மாகாணத்தின் தளபதி.

அப்படிப்பட்ட இரு ஆலமரங்கள் சாய்ந்த போது அந்த ம்க்களிடத்தில் என்ன அதிர்வு ஏற்பட்டிருக்கும்? ஜனநாயக வாதிகளாகிய உங்களுக்கே இப்படி என்றால் ஆயுதம் தாங்கிப் போராடிய அவர்களிடத்தில் எப்படி இருந்திருக்கும்? பெரியார் சொல்லுவார் விரல் உரலானால் உரல் என்னவாகும்? என்று. கோபமும், கொந்தளிப்பும் உங்களுக்கு மட்டுமே உரியது அல்ல. அது எல்லாருக்கும் பொதுவானதுதான்.

இன்னும் சீக்கியர்கள் குறித்தும், கருணாநிதி அவர்கள் குறித்தும் சகோதர யுத்தம் குறித்தும் இதன் தொடர்ச்சியாய் அடுத்த பாகத்தில் பேசப்படும்.

11 Responses to “கைது செய்யப்பட காரணமாயிருந்த கொளத்தூர் மணி அவர்களின் பேச்சு – பாகம் 1”

 1. prabu says:

  I Read all the speech of Mani. He said, Rajiv assocination is punishment, because of killing 6000 tamil people. I ask him, LTTE and Prabhakaran also have killed lot of tamil people and other leaders and RAJIV. Now who is going to give the punishment to PRABhakaran, YES that is SRILANKAN ARMY.

  I expect punishment by ARMY or sucide by himself.

 2. பிரபு உங்களது மனிதாபிமானம் மெய்சிலிர்க்க வைக்கிறது. எவருக்கு எவர் தண்டனை கொடுப்பது? ஏன் உங்கள் கண்களுக்கு கொத்து கொத்தாய் இலங்கை ராணுவத்தினரால் கொலை செய்யப்படும் தமிழ் மக்கள் கண்களுக்கு அகப்படவே இல்லையா?

  ஒரு வேளை அரசாங்கம் என்ன செய்தாலும் சரிதான் என்று நினைக்கும் கூட்டமோ நீங்கள்.

  பிரபாகரன் மீது கோபபடாதீர்கள் என்று எவரும் சொல்ல முடியாது. அவரும் பல தவறான முடிவுகளை எடுத்துதான் இருந்திருக்கிறார். ராஜீவ் காந்தியை விட அப்போது உடன் இறந்த அனைத்து போலீஸ் காரர்கள் குடும்பத்திற்கும் அந்த உரிமைகள் இருக்கிறது.

  நான் கேட்டுக் கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். பிரபாகரன் மீது விமர்சனம் வைக்கும் போது இப்படி சொத்தையாய் ஒன்றை வைக்காதீர்கள். இதை விட அதி வீச்சுடன் வேறு சில தவறுகளை சுட்டிக் காட்டி வையுங்கள்.

  நான் இங்கே பிரபாகரனிற்கு கொடி பிடிக்க வில்லை. அது எனது நிலைப்பாடுமில்லை. எம் தமிழ் மக்களை அழித்த சிங்கள பிணந்திண்ணி அரசையும், முறைதவறி நடந்து ஒரு பெரும் பேரவலம் இலங்கையில் நடக்கக் காரணமாயிருந்த இந்திய அரசையும் கேள்விக்குட்படுத்தியே தீர வேண்டும்.

  அர்ஜூன் படம் பார்த்து தேசபக்தி என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் குறித்து நான் எதுவும் பேச விரும்ப வில்ல.

 3. prabu says:

  I dont support ARMY. I dont support to kill Tamil people, But I want, Prahakaran should be killed because of Rajiv Family and Police men families (அப்போது உடன் இறந்த அனைத்து போலீஸ் காரர்கள் குடும்பத்திற்கும் அந்த உரிமைகள் இருக்கிறது)

  You support Prabhakaran and oppose RAJIV. But I oppose both Prabhakaran and RAJIV.

  RAJIV got funishment but your Prabhakaran did not get.

 4. Kiri says:

  No bodys in india (politicians) never say Rajiv should be punished for war crimes.

  Specially Congress.

  Is anyone there in congress to tell Rajiv should be punished for his crimes in eelam..

 5. //You support Prabhakaran and oppose RAJIV. But I oppose both Prabhakaran and RAJIV. //

  அப்படியும் ஒரேயடியாகச் சொல்லி விட முடியாது.

  உலகப் பொது நீதிமன்றத்தின் முன்பு பிரபாகரன் ஒப்படைக்கபட வேண்டுமானால், ராஜபக்ஷே, கோத்தபாய உள்ளிட்டவர்களும்தான் ஒப்படைக்கப் பட வேண்டும் என்பதே எனது எண்ணம். நாடு, அரசாங்கம் எனும் லேபிளுக்கு கீழே செய்யும் எந்த தீவிரவாதச் செயல்களையும் அப்படியே ஒத்துக் கொள்கிறோம் எனும் தவறான விஷயங்களை நாம் ஆதரிப்பவர்களாய் இருந்து விட கூடாது..

 6. amal says:

  History is full of cruelties both sides.Any national chauvinism- singala chavinism included- has to be opposed. Do we oppose chingal chavinism by eliminating all other dissenting views? TELO,PLOTE,EPRLF,Amirthalingam,Thiruchelvan etc.While I am not clear why OSLO talks failed I still believe lot of things can be wrested from ruling class by negotiations and taking all the people into confidence about what we need and what the columbo govt is willing to grant.Guns did not get us anywhere near a viable solution.Negotiations and failing which a mass upraisal of a non violent nature in a Gandhian way may be the only answer.

 7. amal says:

  History is full of cruelties both sides.Any national chauvinism- singala chavinism included- has to be opposed. Do we oppose chingal chavinism by eliminating all other dissenting views? TELO,PLOTE,EPRLF,Amirthalingam,Thiruchelvan etc.While I am not clear why OSLO talks failed I still believe lot of things can be wrested from ruling class by negotiations and taking all the people into confidence about what we need and what the columbo govt is willing to grant.Guns did not get us anywhere near a viable solution.Negotiations and failing which a mass upraisal of a non violent nature in a Gandhian way may be the only answer.

 8. நந்தா,
  உத்தம் சிங் உதாரணம் இங்கே சரியாகவருமா என்று தெரியவில்லை.

  விடுதலைப்புலிகள் இன்றுவரை ராஜிவின் கொலைக்கு பொறுப்பு ஏற்கவில்லை.
  சிறையில் இருக்கும் நளினி/முருகன் போன்றோரும் இன்றுவரை ராஜீவை இதற்காகத்தான் கொன்றோம்(அல்லது கொலைக்கு உடந்தையாக) நாங்கள் செய்தது எங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு பரிகாரம் என்று சொல்லவில்லை.

  உத்தம் சிங் ,பகத்சிங் போன்றோர் செய்த செயல்களை பகிங்கரமாக அறிவித்தவர்கள்.

  ராஜிவின் கொலைக்கு விடுதலைப்புலிகள் பொறுப்பு ஏற்காமல் இன்னும் இது கூலிப்படைகளின் செயல்போல சந்திரசாமி தொடங்கி பல மர்மங்களைக் கொண்டதாக வலம் வந்து கொண்டுள்ளது.

  ***

  ராஜிவின் கொலைக்கு முன்னும் பின்னும் ஈழ மக்கள் படும் கொடுமை அப்படியேதான் உள்ளது. எல்லாவற்றையும் மறந்து இப்போது செய்யவேண்டியது என்ன என்று சிந்தித்தால் நல்லது.

 9. கல்வெட்டு தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். 3 நாள் கன்னியாகுமரி, திருநெல்வேலி என்று ஊரைச் சுற்றி விட்டு இன்றுதான் திரும்பினேன்.

  //ராஜிவின் கொலைக்கு முன்னும் பின்னும் ஈழ மக்கள் படும் கொடுமை அப்படியேதான் உள்ளது. எல்லாவற்றையும் மறந்து இப்போது செய்யவேண்டியது என்ன என்று சிந்தித்தால் நல்லது.//

  மறு பேச்சு பேசாமல் ஏற்றுக் கொள்கிறேன். நான் சொல்ல வருவதும் ஏறக்குறைய இதேதான்.

  ராஜீவ் கொலை என்பது போன்ற காரணங்களைச் சொல்லி படுகொலைகளிற்கு உதவி செய்வதென்பது எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது. ஆகையால் இத்தகைய சொத்தை காரணங்களை (என்னைப் பொறுத்த வரை)சொல்லி சொல்லி பிரச்சினைகளை திசை திருப்பாதீர்கள் என்பதே.

  இந்த கொலையை அவர்களே பண்ணி இருந்தாலும் அதற்கான நியாய காரணங்கள் அவர்களிடம் இருக்கிறது. அவர்கள் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதற்கு வேறு சில அரசியல் காரணங்களும் இருக்கலாம். உலக அரங்கில் அவர்களுக்கான ஆங்கீகாரத்தை இதன் மூலம் ஒரு சில நாடுகளிலாவது இழந்து விடக் கூடாதே என்பதாய் கூட இருக்கலாம்.

  நான் நியாயப் படுத்த வில்லை. பிரபாகரன் போர் குற்றவாளி, அவரை உலகப் பொது மன்றத்தின் முன் ஒப்படைக்க வேண்டும் என்று சொல்லும் எவரும் ராஜ பக்சே, கோத்தபாய குறித்து பேசுவதில்லை.

  அரசாங்கம் எனும் லேபிளின் கீழ் இருந்துக் கொண்டு செய்யும் எதுவும் நியாயமாகி விடும் என்ற அவர்களது மனிதாபிமான உணர்வுகல் கூறித்து எள்ளி நகையாடுவதைத் தவிர எனக்கு வேறு எதுவும் செய்யத் தோன்ற வில்லை.

  ஒன்று சாமாதான பேச்சு வார்த்தையின் மூலம் அரசியல் தீர்வு அல்லது உலகப் பொது மன்றத்தின் முன்பு இருவரும் ஒப்படைக்கப் படவேண்டும் என்பதுதான் உண்மையான நடுநிலையாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களின் கருத்தாய் இருக்க வேண்டுமே ஒழிய “பிரபாகரன் தீவிரவாதி, அவன் எனது பிரதமரைக் கொன்றவன்” என்று தேய்ந்த ரெக்கார்டினைப் போல் சொல்லிக் கொண்டிருப்பது மனிதாபிமானமற்ற இதயங்களால் மட்டுமே முடியும்.

 10. பதிவையும் தாண்டிய பின்னூட்டங்கள்.பிந்தைய பக்கங்களை விமர்சித்தால் அது நீண்டு கொண்டே போகும்.மனித அவலங்களுக்கும் வாழ்வுரிமைக்கும் என்ன செய்வது என்பது மட்டுமே இப்போதைக்கான தேவை.

Leave a Reply