nav-left cat-right
cat-right

காங்கிரஸ், பிஜேபி: எவருக்கு வாக்களிப்பது?

நான் மட்டுமல்ல. காங்கிரஸ் அரசின் மீது உச்ச கட்ட கொதிப்பில் இருக்கும் எந்த ஒரு ஈழ ஆதரவாளர்களுக்கும், முதுகெலும்பில்லாத இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்து துடித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரின் முன்பும் தொக்கி நிற்கும் கேள்வி இதுதான். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் எந்த அரசு மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும் என்று விரும்புவது? நம்முடைய ஓட்டுக்களை எவருக்கு அளிப்பது? என்பதுதான்.

தமிழகத்தைப் பொறுத்த வரை நமக்கு இருப்பது நான்கு வாய்ப்புகள் உள்ளன.

1. திமுகவிற்கோ – காங்கிரசு உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகளுக்கோ வாக்களிப்பதன் மூலம் மீண்டும் காங்கிரஸ் அரசு அரியணை ஏறுவதற்கு நாம் ஆதரவு தருவது.

2. அதிமுக, பாமக, மதிமுக கட்சிகளுக்கு வாக்களிப்பதன் மூலம் மூன்றாவது அணிக்கோ அல்லது பிஜேபி அரசுக்கோ நமது ஆதரவைத் தெரிவிப்பது.

3.பிஜேபி – சமக போட்டியிடும் ஒரு சில தொகுதிகள் உங்களது ஏரியாவாய் இருந்தால் நேரடியாய் அவற்றிற்கு வாக்களித்து உங்கள் ஆதரவைத் தெரிவிப்பது.

4. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தொடர் வெறியாட்டத்தை தடுக்கும் பொருட்டும், ஒரு வலுவான மாற்றுக் கட்சியை தமிழகத்தில் காலூன்றச் செய்யும் பொருட்டும் தேமுதிகவிற்கு வாக்களிப்பது. இதன் மூலம் அடுத்த சட்டமன்றத் தேர்தலிற்குள் இந்தக் கட்சியை இன்னும் பலப்படுத்த ஒரு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பது.

நான்காவதை நான் வலியுறுத்த காரணங்கள் இருக்கின்றது. ஒரு சில நாய்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். எவ்வளவுதான் எட்டி உதைத்தாலும் திரும்ப வந்து நம் காலையே முகர்ந்துக் கொண்டிருக்கும். இவனை விட்டால் நமக்கு வேறு நாதி இல்லை என்று நாம் ஆடும் ஆட்டங்களை அது தாங்கிக் கொண்டிருக்கும். நம்மை விட சிறந்த எஜமானனை அது கண்டு பிடிக்கும் வரை நம்முடைய ஆட்டத்தை நாம் தாராளமாய் ஆடலாம். கலைஞருக்கும், நமக்கும் இடையே இருக்கும் தற்போதைய உறவினைக் கூட இந்த எஜமானன் – நாய் உறவிற்கு ஒப்பிடலாம். ஏனெனில் நமக்கும் இப்போது இவரை விட்டால் நாதி இல்லை என்று சொல்லலாம்.

ஆகையால் இப்போதைய நிலையில் நாம் இவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெத்தே ஆக வேண்டும். எவனும் யோக்கியமில்லை எனவே நான் ஓட்டே போடப் போவதில்லை என்று எவரேனும் சொல்பவராயிருந்தால் உங்களுக்கு நான் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். உண்மையில் திமுக, அதிமுக இரண்டில் எவருக்கேனும் நீங்கள் பெரும் உதவியைத்தான் செய்பப் போகிறீர்கள். வெகு நிச்சயமாய் உங்களது ஓட்டுக்கள் அவர்களில் எவருக்கேனும் ஆதரவு வோட்டுக்களாய் கள்ளத்தனமாய் எப்படியேனும் சேர்க்கப் பட்டு விடும். ஆகையால் மறந்தும் வாக்களிக்காமல் இருக்காதீர்கள். சுயேச்சை எவருக்கேனுமாவது வாக்களியுங்கள்.

வலைப்பதிவுகளில் காங்கிரஸ் எதிர்ப்பு என்பது அதிமுக ஆதரவாய் போய் விடக்கூடாது என்பது குறித்து சில பதிவுகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன. அவற்றைக் குறித்தும் இங்கே நாம் சிந்திக்க வேண்டியதாய் இருக்கிறது. காங்கிரஸ் அளவுக்கு ஈழத் தமிழர் விவகாரத்தை பொழுது போக்காக அணுகிய கட்சி என்று பார்த்தால் தாராளமாய் அதிமுகவைச் சொல்லலாம். வெகு நிச்சயமாய் அந்த விஷயத்தில் திமுகவுக்கு பல அடிகள் முன்னால் அதிமுக நிற்கும் என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்தில்லை.

ஆனால் அதே சமயம் நாடாளுமன்ற தேர்தலினை நாம் வெறுமனே திமுக – அதிமுக என்ற அளவிலேயே மட்டும் பார்க்க முடியாது.

அதிமுகவை எதிர்க்க வேண்டியே திமுகவிற்கு வாக்களித்து மீண்டும் திமுக கூட்டணி வெற்றி பெற்று இதே காங்கிரஸ் மத்தியில் அமர்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த ஐந்து வருடமும் கடந்த ஒரு வருடமாய் இருந்த சூழ்நிலைகள்தான் நிலவும் என்பதையும் ஈழத்தமிழர்கள் விஷயத்தில் அடுத்த 5 வருடங்களிலும் இந்தியாவின் தலையீடுகள் இப்போது இருக்கும் மனிதாபிமான அளவில்தான் இருக்கும் என்பதையும் என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.

எனவே தீவிர மதவாதத்தை முன்னெடுத்துச் செல்லும் பிஜேபியா அல்லது மித மதவாதமும், மனிதாபிமானம் அறவே அற்ற காங்கிரஸ் கூட்டணியா என்பதை முடிவு செய்ய வேண்டிய தருணம் இது.

இப்படி ஒரு சாத்தியத்தை ஆராயலாம். மத்தியில் ஆளும் கூட்டணி அரசு ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் அக்கறை காட்ட வேண்டுமென்றால் இரண்டு விஷயங்களில் ஏதேனும் ஒன்று கண்டிப்பாய் நடந்தேற வேண்டும்.

1. ஈழத் தமிழர் விவகாரத்தில் தமிழக மக்களிடையே பெரும் விழிப்புணர்வு ஏற்பட்டு, இது ஒரு முக்கியப் பிரச்சினையாக தமிழகத்தின் பெரும்பான்மையான மக்கள் உணர்வுப் பூர்வமாய் நினைக்க வேண்டும். அது ஒரு பெரும் ஓட்டு வங்கியை உருவாக்க வேண்டும். மிக முக்கியமாய் இலங்கையின் மனித உரிமை மீறல்களை மீடியாக்கள் பலமாய் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். இதன் மூலம் ஈழத் தமிழர் விவகாரத்தில் துரோகம் செய்ய நினைக்கும் எவரும் அரசியல் காரணங்களுக்காகவாவது ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க வேண்டி வரும்.

2.மத்திய அரசிடம் தமிழகத்திலிருந்து பெரும்பான்மையான அல்லது அனைத்து கட்சிகள் அரசியல் கூட்டணிகளைத் தாண்டி ஒரு தலைமையின் கீழ் ஒன்று பட்டு ஒரே குரலாக தீவிர முடிவுகளை எடுக்கச் சொல்லி வற்புறுத்த வேண்டும். அப்படி ஒரு ஒருமித்த குழு ஒரு வலிமையான, மதிப்பு மிக்க தலைவரின் கீழ் அமையுமானால் அதற்கு தலைமைப் பொறுப்பில் இருக்க இப்போதைய சூழ்நிலையில் கலைஞரைத் தவிர வேறு எவருக்கும் தகுதி இல்லை. (நம் சாபக் கேடு இது). வைகோ ராமதாஸ் திருமா போன்றோரெல்லாம் ஒரே லெவல் லீடர்கள்தான். அனைவரையும் தாண்டி அனுபவத்திலும், வயதிலும், வாய்சிலும் பல படிகள் கலைஞர் மட்டுமே முன் நிற்கிறார். (அதிமுக எப்போதும் இது போன்றவற்றில் சேராது என்பது எனது ஆழமான நம்பிக்கை). இப்படி ஒரு கூட்டணி தொடர்ச்சியாய் மத்திய அரசை வலியுறுத்தி வந்தால் ஒருவேளை மத்திய அரசு பணிய வேண்டி வரலாம்.

இந்த இரண்டில் முதலாவது இப்போதைக்கு நடக்க வாய்ப்பில்லை. அதற்கு நாம் இன்னும் பல தூரம் பயணிக்க வேண்டும்.

இரண்டாவது நடக்க வேண்டுமென்றால் கண்டிப்பாய் மத்தியில் காங்கிரஸ் அரசு இருக்கக் கூடாது. ஏனெனில் மீண்டும் காங்கிரஸ் அரசு அமைந்தால் அமைச்சர் பதவிகளுக்காகவும், தனது ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளவும் கலைஞர் மீண்டும் அடுத்த சட்ட மன்றத் தேர்தல் வரை நாடகங்களை மட்டுமே மேற்கொள்ள வேண்டி இருக்கும். ஆனால் ஒரு வேளை பிஜேபி அரசு அமைந்தால், அந்த அரசிடம் தனது இன உணர்வை கலைஞர் வெளிப்படுத்த எந்த வித தடையும் இருக்காது. அதுவுமில்லாமல் எதிர்க்கட்சியாய் இருக்கும் போது கலைஞரிடம் இருக்கும் வீரத்தையும், ஆளுங்கட்சியிலிருக்கும் போது இருக்கும் வீரத்தையும் நாம் பார்த்தவர்கள்தானே.

அப்படி ஒருவேளை பிஜேபி அரசு அமைந்தால் நான் சொன்ன இரண்டாவது சாத்தியக் கூறு நடக்க வாய்ப்புகள் அதிகம். ஒரு வேளை காங்கிரஸ் அரசை பழிவாங்குவதற்காகவேனும் பிஜேபி அரசு ஈழத் தமிழர் விஷயத்திலோ அல்லது விடுதலைப்புலிகள் விஷயத்திலோ சற்றே ஆதரவு நிலைப்பாடுகளை எடுக்கலாம்.

ஆகவே இப்போது நம்முன் இருக்கும் ஒரே கேள்வி ஈழத் தமிழர் விவகாரத்தை மட்டும் கணக்கில் கொண்டு மதவாத பிஜேபியை ஆதரிக்க வேண்டுமா? ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாமே என்ற முடிவை எடுக்கலாமா? அல்லது காங்கிரஸ் கட்சியைத் தேர்ந்தெடுத்து கடந்த ஐந்து வருடங்களைப் போலவே அடுத்த ஐந்து வருடங்களைக் கழிக்கலாமா என்பதே.

பி.கு: கட்டுரை எந்த விதமான தீர்க்கமான முடிவையும் முன்வைக்காமல், வெறுமனே குழப்பங்களை மட்டுமே பேசி விட்டுச் சென்று இருக்கிறது. உண்மையில் நான் உட்பட என்னைப் போன்ற பலரும் குழம்பிப் போய்தான் இருக்கிறார்கள். இதைச் சொல்ல நான் வெட்கப் பட வில்லை. கண்ணை மூடிக் கொண்டு வாக்களிக்க நான் உடன்பிறப்பாகவோ, ரத்தத்தின் ரத்தமாகவோ இல்லாமல் இருப்பதன் வெளிப்பாடே இந்தக் குழப்பங்கள். சொல்லப்போனால் ஏதேனும் ஓர் கட்சியின் அடிமட்டத் தொண்டனாய் இருப்பதை விட, இப்படி குழம்பி இருப்பதை மோசமானதாகவோ, கேவலமானதாகவோ கருத வில்லை. இந்தளவுக்கு எந்த கட்சியின் மீதும் நம்பிக்கை இல்லாமல் போகச் செய்ததற்கு கட்சித் தலைவர்கள் வேண்டுமானால் வெட்கப் பட்டுக் கொள்ள்ட்டும்.

26 Responses to “காங்கிரஸ், பிஜேபி: எவருக்கு வாக்களிப்பது?”

 1. பி ஜெ பி க்கே வோட்டு போடலாம்.. ஆனால் வாஜ்பாய் இல்லாமல், அத்வானி பிரதமர் என்பது ரொம்பவே நெருடுகிறது..
  [ஆட்சிக்கு வரதுக்கு முன்னாடியே வருண் காந்தி மிரட்டுகிறார்..]

 2. ஆனால் இந்த முறை பிஜேபி ஆட்சியமைக்க இன்னும் பல கட்சிகள் ஆதரவு வேண்டும், தேர்தலுக்கு பிறகு.. (more than 18)
  எனவே உள்நாட்டில் அடக்கி வாசித்தே ஆகணும்.. தீவிர மத போக்கை எடுக்க முடியாது என்பதும் என் எண்ணம்..
  (ஆருடங்களை நம்பவும் முடியாது)

 3. நல்ல அலசல் நந்தா. கடைசியில் நீங்கள் சொன்னது போல் குழப்பம் கூடத்தான் செய்கிறது

 4. அருமையான பதிவு.

  நானும் உங்களைப் போலத்தான் . தெளிவு பட ஏதாவதும் சொல்லலாம் என்று ஆரம்பித்து குழப்பத்திலேயே முடித்தேன்….!!!அதே சமயம் , விஜயகாந்திற்கு அளிக்கப்போகும் ஆதரவோ , பிஜேபிக்கு அளிக்கப்போகும் ஆதரவோ அவர்களுக்கு வெற்றியை ஈட்டித் தராது என்ற சூழலில் அவர்களுக்கு அளிக்கும் ஆதரவு விழலுக்கு இறைத்த நீர்தானே நண்பரே. இந்தக் கோணத்தில் சிந்தியுங்களேன்…!

 5. தனசேகரன் says:

  பி.ஜெ.பிக்கு வாக்கு அளித்தால் கன்டிபாக இலங்கையில் மாற்றம் வரும் என் ஓட்டு பி.ஜெ.பிக்கே

 6. வணக்கம் நந்தா!!
  தமிழக சகோதரர்கள் எவ்வாறு வாக்களிக்கப் போகின்றார்கள் என்பதை சுயநலம் கலந்த ஆவலுடன் நோக்கியிருக்கும் ஈழத்தமிழர்களில் நானுமொருவன். இதற்கு காரணம் அடுத்து ஆட்சிக்கு வரவிருப்போர் எமக்கான விடியலை இந்தா பிடியென தூக்கித்தரப்போகின்றார்கள் என்ற நம்பிக்கையில் அல்ல….தலை கிறுகிறுக்க வைக்கும் தமிழக அரசியல் கூத்துக்களுக்கு மத்தியில் எவ்வாறு தெளிவாக நீங்கள் உங்கள் ஓட்டுரிமையை எ(உ)ங்களுக்காக காட்டப்போகிறீர்கள் என்பதை காணவே!!இந்த பின்னூட்டத்திற்கு காரணமே தங்கள் கருத்துக்களுடன் 98% நான் உடன்படுவதே.
  இத்துடன் தோழர் மதிபாலாவினுடைய கட்டுரைக்கு நான் வழங்கிய பின்னூட்டத்தையும் இணைத்துள்ளேன்.ஏனென்றால் முரண்பாடுகளில் இருந்தே தெளிவு பெறலாம் என நம்புபவன் நான்.

  >>////நிச்சயம் தவறே!!!
  ஆனாலும் இந்த தடவை தேர்தலில் அத்தவறைச் செய்து “வாக்கு” மாறிப்போயுள்ள தி.மு.க விற்கு மாற்று மருந்து கொடுத்து நல்வழிப்படுத்தி மீண்டும் அண்ணா கண்ட தி.மு.க வாக மாற்ற வேண்டும். என்னை கேட்டால்
  “எப்போதும் துன்புறுத்தும் எதிரியை விட அரவணைத்துக் கொல்லும் துரோகியே ஆபத்தானவன் என்பேன்” மதிபாலா.
  ஏன் கடந்த தேர்தலில் பெற்ற வெற்றியை குடும்பத்துக்கு அர்ப்பணித்ததிற்குப் பதில் ஈழத்துக்கு தந்திருந்தால்???

  “////இந்த தேர்தல் என்பது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான இந்தியாவின் கொள்கையை தீர்மானிக்கப் போவது. இந்த வாய்ப்பை விட்டுவிட்டால் நாம் இன்னும் ஐந்து ஆண்டுகள் காத்திருக்கலாம்தான். அதுவரைக்கும் ஈழத்தமிழர்களின் சாம்பலாவது மிஞ்சுமா என்பதையும் சிந்திக்க வேண்டும் அனானி அவர்களே.”””/////

  சரி விடுங்க….உங்க பாணியிலேயே கேட்கிறேன்…இத்தடவை தி.மு.க “கூத்தணி” வெற்றி பெற்றால் மட்டும் உதயமாகுமா ஈழவர் வாழ்வு???
  உங்க பதில் ” நல்லதே நம்புவோம்” என்றால்………
  அ.தி.மு.க “கூத்தணி” வெற்றி பெற்று ஈழவர் வாழ்வு துளிர்க்கும் என்பதையும் நம்புவதில் தவறில்லையே????

 7. எனது முடிவு : பாஜக மட்டுமே. காரணம் என்ன வென்று பிளாக்கில் எழுதி இருக்கிறேன்.

 8. நன்றி சரவண குமார். வெகு நிச்சயமாய் வருண் காந்தியின் மீது துளியளவு கூட மரியாதை இல்லை. அதிலும் மேனகா வருண் காந்தி இயல்பாகவே மிகவும் துணிச்சலானவர். அவரை நினைத்து பெருமைப் படுகிறேன் என்றெல்லாம் பேட்டியளிக்கும் போது கடும் கோபமே வருகிறது.

  அதே சம்யத்தில் இந்த காங்கிரஸ் அரசும் தேசிய பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் ஆடும் ஆட்டங்கள் கேவலமாய் இருக்கின்றது. இந்த விஷயத்தில் காங்கிரசும் பிஜேபியும் மிகவும் ஒத்த கருத்துடையவர்கள். ஒருவருக்கு பொடா.மற்றொருவருக்கு தேசிய பாதுகாப்புச் சட்டம்.

  வாழ்க இந்திய ஜனநாயக நாடு.

 9. ஒருசில மையப்புள்ளிகளைச் சுற்றி மட்டுமே அலசியிருப்பதாக நினைக்கிறேன். இன்னும் விரிவாக பார்க்க வேண்டியிருக்கிறது.

  நிச்சயம் இந்தத் தடவை காங்கிரஸோ, பி.ஜே.பியோ தேசீய அளவில் மெஜாரிட்டி பெறப் போவதில்லை. எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் மாநிலக் கட்சிகளின் ஆதிக்கம் அதிகமாயிருக்கும் எஅன் நினைக்கிறேன். அதுதான் கவனத்தைத் திசை திருப்பி போட்டி தங்களுக்கும், காங்கிரஸுக்கு மட்டுமே என்பது போல காட்சிப்படுத்த மன்மோகனை தொலைக்காட்சியில் லைவ் ஷோக்கு அழைத்தார்.

  கடந்தகால அனுபவங்களை வைத்துப் பார்க்கும்போது, பா.ஜ.க, காங்கிரஸ் தவிர்த்து ஆட்சியமைவதுதான் இப்போதைக்கு நல்லது என நினைக்கிறேன்.மாநிலக் கட்சிகள் அதிகாரம் பெறுவது ஜனநாயக ரீதியாக முக்கியமானது இல்லையா?

 10. முரளி கண்ணன் உங்களுக்குமா? Same Pinch.

  //நானும் உங்களைப் போலத்தான் . தெளிவு பட ஏதாவதும் சொல்லலாம் என்று ஆரம்பித்து குழப்பத்திலேயே முடித்தேன்….!!!//

  ஹா ஹா புரிந்துக் கொள்ள முடிகிறது மதிபாலா.

  //அதே சமயம் , விஜயகாந்திற்கு அளிக்கப்போகும் ஆதரவோ , பிஜேபிக்கு அளிக்கப்போகும் ஆதரவோ அவர்களுக்கு வெற்றியை ஈட்டித் தராது என்ற சூழலில் அவர்களுக்கு அளிக்கும் ஆதரவு விழலுக்கு இறைத்த நீர்தானே நண்பரே.//

  அப்படி தீர்மானமாக சொல்லி விட முடியாது மதிபாலா. இது நடக்கலாம் அல்லது நடக்காமல் போகலாம். ஆனால் மீண்டும் நாம் திமுகவிற்காக அதன் கூட்டணிக்கட்சிகளுக்கு வாக்களித்தோமேயானால் கண்டிபாய் வெகு நிச்சயமாய் அடுத்த ஐந்து ஆண்டுகளும் மோசமானவையாகவே இருக்கும்.

  ஆக கண்டிப்பாய் ஆதரவில்லை (காங்கிரஸ்) என்ற சூழ்நிலையா அல்லது ஒருவேளை ஆதரவு கிடைக்கலாம் (பிஜேபி)என்ற சூழ்நிலையா என்பதை ஏன் நாம் யோசித்துப் பார்க்கக் கூடாது???

 11. ரவி says:

  எல்லார் மனதிலும் உள்ள குழப்பத்தை வெளிப்படுத்தி உள்ளீர்கள். ஈழப் பிரச்சினையை மட்டும் கருத்தில் கொண்டால் எந்தக் கட்சிக்கும் அருகதை இல்லை. பரிந்து பேசும் ஒன்றிரண்டு கட்சிகள் கூட தேர்தலைக் கணக்கில் கொண்டே பேசுகின்றன. பதவி வந்த பிறகு அவர்களுக்கு “இந்திய ஒருமைப்பாடு” கண்ணில் தெரியும்.

  ஈழப் பிரச்சினை தவிர்த்த பிற பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டால், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்தில் ஏற்படும் தாக்கத்தில் பெரும் மாற்றம் இருப்பதாகத் தெரியவில்லை.

  பேசாமல் யாராவது கட்சி சாரா வேட்பாளருக்கு வாக்களிக்கலாம். அவர் செலவழித்த காசுக்கு ஒன்றிரண்டு வாக்குகளாவது கிடைத்ததே என்று மகிழ்வார் :(

 12. saravana raja says:

  //எவனும் யோக்கியமில்லை எனவே நான் ஓட்டே போடப் போவதில்லை என்று எவரேனும் சொல்பவராயிருந்தால் உங்களுக்கு நான் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். உண்மையில் திமுக, அதிமுக இரண்டில் எவருக்கேனும் நீங்கள் பெரும் உதவியைத்தான் செய்பப் போகிறீர்கள்.//

  அப்படியா? ஓட்டு போட்டாலும் அதைத்தானே செய்யப் போகிறீர்கள்…

  //ஆகையால் மறந்தும் வாக்களிக்காமல் இருக்காதீர்கள். சுயேச்சை எவருக்கேனுமாவது வாக்களியுங்கள்.//

  வேடிக்கையாக இருக்கிறது நந்தா…கையறு நிலை,இலக்கற்ற பேத்தலின் உச்சத்தை எட்டி வருகிறார்கள் தமிழக இளைஞர்கள். ஒரு குடிதண்ணீர் பிரச்சினைக்கு கூட தேர்தல் புறக்கணிப்ப்பு என்ற வடிவத்தை பல கிராமங்கள் ஒவ்வொரு தேர்தலிலும் மேற்கொண்டுள்ளன. இந்நிலையில் இப்பொழுது கையை பிசைவது அபத்தமாக மட்டுமல்ல,-தாக்குதலாக எடுத்துக் கொள்ள வேண்டாம்- அயோக்கியத்தனமாகவும் தென்படுகிறது.

  விசயம் எளிமையானது. ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகள் அனைத்தும் இந்திய ஆளும் வர்க்க, அரசியல் பொருளாதார நலன்களுக்காக ஈழத் தமிழர் உயிரை மயிராக கருதுகின்றன. இந்த கேடு கெட்ட தேர்தலை புறக்கணிப்பதன் மூலம்தான், இந்த போலித்தனமான ஜனநாயக சட்டகத்தை மக்களிடம் அம்பலப்படுத்தி புறக்கணிப்பதுதான் நியாயமான, அறிவுபூர்வமான, நேர்மையான எதிர்வினையாக இருக்க முடியம். இதே பா.ஜ.க தான் தான் ஆட்சியில் இருந்த பொழுது, யாழ் கோட்டை புலிகளால் முற்றுகையிடப்பட்ட போது புலிகளை வெளியேற மிரட்டி பணிய வைத்தது என்பதை மறக்க நமக்கு உரிமை இல்லை.

  போராட மறுக்கும் கோழைத்தனத்தை கையறு நிலையாக கற்பிதம் செய்து கொள்ளும் சுய ஏமாற்று தற்காலிகமாக திருப்தியளிக்கலாம். நெடு நாள் நீடிக்காது.

 13. sreedhar says:

  unmaiya romba nalla purinchikingukka…

  nadakarathu indiyavoda election.

  first avananga namakku enna seivanganu yosinga…

  india orupuda evan nalla seivanu yosinga..

  onnu nalla purinchukunga…

  dmk or admk aatcchi vantha oru 50% aavathu seivanga,,

  athea vijayakanth vantha 80 to 90% adichuttu oru 10% than seivanga.. athan unmai…

  mathapadi elllamea tiruttu payalugathan..

  ilangai pirachanai innnakku irukkurathu araciyal pannathan..

  ramadoss, tirumavalavan aalunga tamilnattu makkulukka ethanai porattam panni itrukkkannga.

  ilankaiya poruthavarai viduthalai pulinga kandipaga sathipaga…
  puli paduthunki kandipa payum.

  no pbm…

  keep cool…

 14. நன்றி தனசேகரன், குடிகாரன் பாரதி.

  பாரதி உங்களது கேள்வியிலும் நியாயம் உள்ளதே. சுற்றி வளைத்து இதைத்தான் நானும் கேட்டிருக்கிறேன். இது குறித்து நாம் செய்யும் யோசனைகளும், விவாதங்களும் சரியான ஒரு முடிவை எடுக்க உதவும்.

 15. //ஒருசில மையப்புள்ளிகளைச் சுற்றி மட்டுமே அலசியிருப்பதாக நினைக்கிறேன். இன்னும் விரிவாக பார்க்க வேண்டியிருக்கிறது.//

  உண்மைதான் மாதவராஜ். இது ஒட்டு மொத்த பிரச்சினைகள்யும் பேசி விட வில்லை. ஒரு குறிப்பிட்ட எல்லைகளுக்குள் நின்று கொண்டு தமிழகம், மாநிலக் கட்சிகல், ஈழத் தமிழர்கள், மனிதாபிமானம் ஆகிய சில விஷயங்களின் அடிப்படையில் மட்டுமே பேசி இருக்கிறது.

  //நிச்சயம் இந்தத் தடவை காங்கிரஸோ, பி.ஜே.பியோ தேசீய அளவில் மெஜாரிட்டி பெறப் போவதில்லை. எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் மாநிலக் கட்சிகளின் ஆதிக்கம் அதிகமாயிருக்கும் எஅன் நினைக்கிறேன்.//

  அதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் நம் மக்க்ளின் கடைசி நேர மன மாற்றங்களை எவருமே புரிந்துக் கொள்ள முடியாதுதான். அதே சமயம் மாநில கட்சிகளின் முக்கியத்துவம் இருந்தாலும் அவர்கள் எந்தளவுக்கு இந்தப் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்பது சந்தேகமே. முக்கியத்துவம் அதிகமாக அதிகமாக, மேலும் சில மந்திரிப்பதவிகளையோ அல்லது பிடித்த துறைகளையோ பெற மட்டுமே முயற்சிப்பார்கள் என்பது நமக்கு விதித்த சாபக் கேடு.

 16. ரவி சுத்தம். நீங்க எனக்கு மிச்சமா குழம்பி இருக்கீங்க போல. :) நம்ம தலை எழுத்து இது.

 17. //வேடிக்கையாக இருக்கிறது நந்தா…கையறு நிலை,இலக்கற்ற பேத்தலின் உச்சத்தை எட்டி வருகிறார்கள் தமிழக இளைஞர்கள். ஒரு குடிதண்ணீர் பிரச்சினைக்கு கூட தேர்தல் புறக்கணிப்ப்பு என்ற வடிவத்தை பல கிராமங்கள் ஒவ்வொரு தேர்தலிலும் மேற்கொண்டுள்ளன. இந்நிலையில் இப்பொழுது கையை பிசைவது அபத்தமாக மட்டுமல்ல,-தாக்குதலாக எடுத்துக் கொள்ள வேண்டாம்- அயோக்கியத்தனமாகவும் தென்படுகிறது.//

  தாக்குதலாக எடுத்துக்கொள்ள எல்லாம் ஒன்றுமில்லை சரவண ராஜா. தேர்தல் புறக்கணிப்பு எனும் வடிவத்திற்கு நான் முழு எதிரி இல்லை.

  //1. ஈழத் தமிழர் விவகாரத்தில் தமிழக மக்களிடையே பெரும் விழிப்புணர்வு ஏற்பட்டு, இது ஒரு முக்கியப் பிரச்சினையாக தமிழகத்தின் பெரும்பான்மையான மக்கள் உணர்வுப் பூர்வமாய் நினைக்க வேண்டும். அது ஒரு பெரும் ஓட்டு வங்கியை உருவாக்க வேண்டும். மிக முக்கியமாய் இலங்கையின் மனித உரிமை மீறல்களை மீடியாக்கள் பலமாய் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். இதன் மூலம் ஈழத் தமிழர் விவகாரத்தில் துரோகம் செய்ய நினைக்கும் எவரும் அரசியல் காரணங்களுக்காகவாவது ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க வேண்டி வரும்.//

  இந்த வரிகளைக் கவனியுங்கள். இப்படி ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டுஒட்டு மொத்தமாய், ஒரு பெரும் புறக்கணிப்புப் போராட்டம் நடந்தாலொழிய இது கவன ஈர்ப்புப் பெறாது. ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் இத்தகையை பெரும் புறக்கணிப்போ அல்லது மக்கள் எழுச்சியோ சாத்தியமா? அப்படியும் மீறி அங்காங்கே சின்ன சின்ன கூட்டமாய் செய்யும் இத்தகைய புறக்கணிப்புகள் வெளியில் வராமலே போய் விடும். அதைவிட முக்கியமாய் ஓட்டுப் பொறுக்கிகளுக்குமிக வசதியாகவும் போய் விடும்.

  //கையறு நிலை,இலக்கற்ற பேத்தலின் உச்சத்தை எட்டி வருகிறார்கள் தமிழக இளைஞர்கள்.//

  ஓய் நீரும் இளைஞர்தான் ஓய்.

 18. saravana raja says:

  //ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் இத்தகையை பெரும் புறக்கணிப்போ அல்லது மக்கள் எழுச்சியோ சாத்தியமா? //

  ஆம். இந்த யதார்த்தத்தை நானும் புறக்கணிக்கவில்லை. ஆனால் இந்த புறநிலை யதார்த்தத்தில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு உண்மை இருக்கிறது. தொடக்கம் முதலே இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு இனவாதச் சாயம் பூசவும், இந்திய ஆளும் வர்க்கத்தின் காலை நக்குவதாகவும் மாற்றுவதில் கருணாநிதி, நெடுமாறன், வைகோ, திருமாவளவன், மணியரசன் முதலான தமிழின பிழைப்புவாதிகள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். தமிழகப் பார்ப்பனிய சக்திகள், பார்ப்பன ஊடகங்களின் எதிர்நிலை, துரோகிகளால் ஊதி பெருக்கப்பட்டதன் விளைவாக தமிழகத்தை தவிர்த்த பிற மொழி ஜனநாயக சக்திகள் இப்பிரச்சினையில் கொண்டுள்ள பாராமுகம் ஆகிய கடினமான யதார்த்த உண்மைகளினூடாகத்தான் நாம் பயணிக்க வேண்டியிருக்கிறது.

  //அப்படியும் மீறி அங்காங்கே சின்ன சின்ன கூட்டமாய் செய்யும் இத்தகைய புறக்கணிப்புகள் வெளியில் வராமலே போய் விடும். அதைவிட முக்கியமாய் ஓட்டுப் பொறுக்கிகளுக்குமிக வசதியாகவும் போய் விடும்.//

  குறைந்தபட்சம் அத்தகைய ‘சின்ன சின்ன கூட்டமாய் செய்யும் புறக்கணிப்புகளில்’ வெளிப்படும் ‘சின்ன சின்ன’ அரசியல் பிரச்சாரங்கள் மக்களிடம் ஒரு சலனத்தையாவது ஏற்படுத்தும் மாறாக, பேயிடமிருந்து தப்பிக்க பிசாசிடம் தஞ்சம் புகும் செயல்தந்திரம் அரசியல் தற்கொலையாகும்.

  //கண்டிப்பாய் ஆதரவில்லை (காங்கிரஸ்) என்ற சூழ்நிலையா அல்லது ஒருவேளை ஆதரவு கிடைக்கலாம் (பிஜேபி)என்ற சூழ்நிலையா என்பதை ஏன் நாம் யோசித்துப் பார்க்கக் கூடாது???//

  இவையனைத்தும் ஈழப் பிரச்சினையில் இந்தியாவின் அணுகுமுறையை ஒரு சில அதிகாரிகள், சில தனிநபர்கள், ஒரு கட்சி தீர்மானிக்கின்றன எனத் தமிழினப் பிழைப்புவாதிகளாலும்,சந்தர்ப்பவாதிகளாலும் மிக நீண்டகாலமாக மக்கள் மனதில் பதிய வைத்துள்ள தவறான கருத்தில் அடிப்படையில் எழுவதாகும். புதிய ஜனநாயகத்தில் வெளி வந்த கட்டுரைகளின் சில மேற்கோள்களை கீழே தருகிறேன்.

  //காசுமீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் உள்ள மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை துப்பாக்கி முனையில் ஒடுக்கிவரும் இந்திய அரசு, ஈழ மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகக் குரல் கொடுக்கும் என்று நம்புவது பகற்கனவு மட்டுமல்ல; இந்திய பிராந்திய மேலாதிக்க அரசின் கொலைவெறி முகத்தை மறைக்கும் மக்கள் விரோதச் செயலுமாகும்.

  தென்கிழக்காசிய நாடுகளின் “ஏசியான்” (ASEAN) ஐரோப்பிய நாடுகளின் “ஐரோப்பிய ஒன்றியம்” (EU) போலவே, தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பை (SAARC) பொருளாதார ஒன்றியமாக உருவாக்கவே இந்திய ஆளும் வர்க்கங்கள் விரும்புகின்றன. இந்தியத் தரகு அதிகார வர்க்க முதலாளிகள் வெளிநாடுகளில் மூலதனமிட்டுள்ள வகையில், அவர்களுக்கு இலங்கை முக்கிய பொருளாதாரமாக உள்ளது. ஆயுத விற்பனை உள்ளிட்டு பொருளாதார வர்த்தக உறவிலும் முக்கிய இடத்தை வகிக்கிறது. தேயிலை எஸ்டேட்டுகள், கட்டுமானத் துறை, இலகுரக மோட்டார் வாகனங்கள் முதலானவற்றில் ஏற்கெனவே காலூன்றியுள்ள இந்தியத் தரகுப் பெருமுதலாளிகள், தற்போது தொலைதொடர்புத் துறையிலும் இலங்கையில் மூலதனமிட்டுள்ளனர். இந்தியப் பெருங்கடலில் இராணுவப் போர்த் தந்திர முக்கியத்துவம் வாய்ந்த திரிகோணமலை, கொழும்பு ஆகிய துறைமுகங்களும் கடல்வழித் தடங்களும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. தெற்காசியக் கூட்டமைப்பில் பாகிஸ்தானை எதிர்கொள்ள, அதற்கடுத்த பெரிய நாடான இலங்கையுடனான நட்புறவு இந்தியாவுக்கு அவசியமாக உள்ளது. இந்திய “அமைதிப்படை’ இலங்கையை ஆக்கிரமித்த போது பிரேமதாசா ஆட்சிக் காலத்தில் இந்தியஇலங்கை உறவுகள் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டதே தவிர, மற்றபடி நீண்ட காலமாக இலங்கை ஆளும் வர்க்கங்கள் இந்தியாவுடன் நட்புறவையும் அதன் வட்டார மேலாதிக்கத்தையும் ஆதரித்தே வந்துள்ளன.

  இன்றைய உலகமயச் சூழலில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உள்ளதைப் போல, இந்தியாஇலங்கை இடையே உள்ள வரி, கடவுச் சீட்டு கட்டுப்பாடுகளை அகற்றி நெருங்கி வர இந்தியஇலங்கை அரசுகள் திட்டமிட்டுள்ளன. இதற்காக ஒப்பந்தம்கூடக் கொள்கையளவில் ஏற்கப்பட்டுள்ளது. அண்மையில் இலங்கையில் நடைபெற்ற “சார்க்’ மாநாட்டில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், தெற்காசிய நாடுகளிடையே ஒரே நாணயமுறையை உருவாக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

  இப்படி இலங்கை அரசின் பக்கம் இந்தியா நிற்பதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. ஆனால், ஈழ விடுதலையை ஆதரிப்பதற்கு ஒரு காரணமும் இல்லை. இலங்கை மீது மேலாதிக்கம் செலுத்தவும் மிரட்டிப் பணிய வைப்பதற்கும் பகடைக் காயாகப் பயன்படுத்துவதற்கு வேண்டுமானால், ஈழப் பிரச்சினையை இந்திய அரசு ஆதரிக்கலாம். இதை நம்பி இந்திய அரசிடம் ஆதரவு கோருவதும் பெறுவதும் அப்பட்டமான துரோகமாகும்.

  எனவே, சிங்கள இனவெறித் தாக்குதலுக்கு எதிராகவும் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாகவும் போராடுவது மட்டுமின்றி, இந்தியாவின் மேலாதிக்கத்துக்கு எதிராகவும் போராட்டங்கள் கட்டியமைக்கப்பட வேண்டும். ஈழத் தமிழருக்கு சிங்கள அரசு மட்டுமல்ல, இந்திய அரசும்தான் எதிரி என்பதைப் புரிந்து கொண்டு போராடாதவரை ஈழத்தின் கண்ணீருக்கு விடிவே இல்லை.//

  அரசியல் கட்சிகளின் சண்ட மாருதங்களுக்கு அப்பாற்ப்பட்டு இந்திய தரகு முதலாளிகளின் நலன் இலங்கைப் பிரச்சினையில் சிங்களப் பேரினவாதத்தோடு கைகோர்ப்பதிலேயெ அடங்கியுள்ளது. எனவே, இந்தியாவின் பிராந்திய மேலாதிக்கத்தை எதிர்ப்பதென்பது இந்தக் கட்சிக்கு பதிலாக அந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடுவதல்ல.

 19. saravana raja says:

  ‘இந்தியாவின் தயவில்தான் ஈழத் தமிழன் உயிர்வாழ முடியும்’ என்பது ஒடுக்குபவனின் கருத்து மட்டுமல்ல, ஈழ ஆதரவாளர்களின் நிலையும் அதுதாவாகத்தான் இருக்கிறது. தமிழக மக்கள் மனங்களில் மனிதாபிமான அடிப்படையிலான இரக்க உணர்ச்சியைத் தாண்டி, ‘நீயும் தமிழன், நானும் தமிழன்’ என்ற உணர்ச்சியைத் தாண்டி அரசியல் ரீதியாக இதனுடைய நியாயம் விளக்கப்படவில்லை. அது பாரதூரமான அளவு அரசியல் பிரச்னையாகும் அளவுக்கு மக்களிடம் கொண்டு சேர்க்கப்படவில்லை.

  ஆனந்த விகடனில் வெளிவந்த தோழர் மருதையனின் பேட்டியையும் படித்துப் பாருங்கள்!

 20. வருகின்ற தேர்தலில் நிச்சயமாக காங்கிரஸ் , பாஜக ஆட்சிக்கு வரபோவது இல்லை நடந்துகொண்டு இருக்கிற இந்திய அரசியல் சூழ்நிலைகளை பார்க்கும்போது நிச்சயம் மூன்றாவது அணி ஆட்சிக்கு வருவது உறுதிபோல தெரிகிறது அதனால் நன்பர்கள் கவலைப்படதேவையில்லை காங்கிரஸ் க்கு வாக்களிப்பதா பாஜகாவிற்கு வாக்களிப்பதா என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

 21. SP SUNDAR says:

  இது மத்திய அரசை தேர்ந்தெடுக்கும் தேர்தல் என்பதால்
  ஈழத் தமிழர்களை காட்டுக்கு அனுப்பிய காங்கிரஸ், திமுக கூட்டணியை கட்டாயம் வீட்டுக்கு அனுப்ப இவர்களை தவிர்த்த பிற கூட்டணிகளுக்கு வாக்களிக்கலாம். ஆனால் தமிழ்நாட்டில் இவரகளை வீட்டுக்கு அனுப்பகூடிய அளவிற்கு பீ.ஜே.பி யோ, விஜயகாந்தோ வலுவான கூட்டணியை ஏற்படத்த வில்லை. ஆகவே தமிழி(ஈ)னத் துரோக தலைவரை தோற்கடிக்க, அந்தந்த தொகுதியில் வெற்றிவாய்ப்பு இருக்கும் வேறு கட்சிளை தேர்ந்தெடுக்கலாம். கூட்டணியை பொருத்த வரையில் அதிமுக கூட்டணியே தற்போது காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்கும் வலிவுடன் இருக்கிறது.

 22. VIMALA says:

  very poor article which does not see the India as whole.And also you totally ignored the “Left parties” and their impacts in Indian politics.certainly they are going to do something better.article should consider the whole political atmosphere
  –R.SELVAPRIYAN-CHALAKUDY

 23. Mastan says:

  Hi Nanda,

  very nice analysis. superb one…

  I’m going to support Vijayakant, let we give a chance to him…

  Thanks
  -Mastan

 24. தி.மு.க காங்கிரஸ் தவிர மாற்றுக்களில் எதனையாவது தேடுவதே பரிட்சித்துப் பார்க்கும் ஒன்றாக முடியும்.இல்லையென்றால் பழைய கதைதான் மீண்டும் ஆரம்பம்.

 25. mohideen kader says:

  BJP – NO vote for why? reason below

  1)Not at all, Advani is not a good pm candidate. why?
  -> Babri Masjid case, suppose if he is good man, he should follow indian law and court decision, but not. But he always said i love india, not at all. May be he from bakistan(born in bakistan?)
  -> good pm candidate or nationality always think about national future, but he is not.
  -> Kandhagar case, he said lot of them including his book. he is home ministre, without knowing him, vajpayee take action. Means he is not good man.
  -> Never keep his word any time.

  2)Elam case
  -> i don’t trust bjp will solve elam issue.
  -> still bjp agree ltte is terrorist.
  -> bjp not supporting sethu case project, this is for tamil people. same as they can tell latter for elam case.

  3)Black money issue from swiss bank
  -> think about killed 3000 indian national people from Gujarat. Think about if atleast 2000 people earns per month rs 2000 rs for 1 year, multiple by alteast 30 years.
  how much money india lost?

  4)forget about muslim people. even bjp won’t agree sc/st peoples are hindu religions.
  -> what every they give respect to cow. not even single respect to sc/st people.

  So strongly ‘NO VOTE’ for BJP

  Same case for ADMK. it is just mirror of bjp.

 26. Puli says:

  Puli…

  Interesting Puli infomation…

Leave a Reply