நந்தாவின் கிறுக்கல்கள்

March 10, 2009

பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம்

இரண்டரை வருடங்களாய் உபயோகித்துக் கொண்டிருந்த என்னுடைய Splendor plus வண்டியை உடன் பிறப்புக்கு கொடுத்து விட்டு வேறொரு வண்டி வாங்கலாம் என்று முடிவு செய்ததிலிருந்து, நான் செய்த ஆராய்ச்சிகள் கொஞ்ச நஞ்சமில்லை. இப்போ நம்மகிட்ட வந்து எந்த பைக்குப்பா பெஸ்ட்டு என்று கேட்டால் உட்கார வைத்து அரை மணி நேரம் மொக்கையைப் போடும் அளவிற்கு அறிவு ஜீவியாகி விட்டேன்னா பார்த்துக்கோங்களேன். என்ன செய்ய கேக்கதான் ஆளில்லை. அதான் சுய தம்பட்டம் அடிக்கறதுக்குன்னே இங்க ஒரு இடம் இருக்கேன்னு இங்கெயே வந்துட்டேன்.

125 CC போகலாமா, 150 CC போகலாமா? என்பதிலிருந்து எல்லாவற்றையை அலசி ஆராய வேண்டியதாய் போயிற்று. 100 CC வண்டிகளின் மிகப் பெரிய பலவீனம் 50 கி.மீக்கு மேல் நாம் போனால் கன்ட்ரோல் கிடைக்காது என்பதுவும், அதன் சஸ்பென்ஷனும்தான். மிகப்பெரிய பலம் கையாளுதல் மிகவும் எளிது. கொஞ்சமேனும் Speed உம் Comfortability யும் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இவை உதவாது.

125 CC யில் இப்போது மார்க்கெட்டில் போட்டியிலிருப்பவை Honda Shine, Yamaha Gladiator, Suzuki Zeus, Bajaj Discover (135) ஆகியவை மட்டுமே. யாராவது XCD, Platina, TVS வண்டிகள் என்று வந்தீங்கன்னா நான் டென்ஷன் ஆயிடுவேன். நான் மோட்டார் சைக்கிள்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன். (அப்போ உபயோகிக்கிற நாங்க எல்லாம் கேனையனுங்களா என்று நீங்க டென்ஷன் ஆகாதீங்க. Opinion Differs. :) )

ஒப்பிட்டுப் பார்த்தால் TVS எஞ்சினின் தரத்திற்கும் பஜாஜின் தரத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இல்லை என்றுதான் தோன்றுகிறது. ஒருகாலத்தில் TVS 50, Bajaj M80, Bajaj Cheetak வண்டிகளைக் கொடுத்த கம்பெனிகளா இவைகள் என்று பாவமாய் பார்க்கத் தோன்றுகிறது.

எனக்குத் தெரிந்தளவில் மற்றும் அனுபவத்தில் பஜாஜில் பல்சர் மற்றும் டிஸ்கவரைத் தவிர மற்ற வண்டிகள் மற்றும் அதன் எஞ்சின்கள் டப்பா வகையைச் சேர்ந்தவையே. டிஸ்கவர் வண்டிகளிலும் முதல் ஓரிரு வருடத்திற்கு எஞ்சின் நன்றாக உள்ளது அதற்கப்புறம் சல சல என்று ஆகி விடுகிறது என்று பரவலாய் சொல்கிறார்கள். “பதமா உபயோகிச்சா வண்டி கொஞ்ச நாளைக்கு தாங்கும்பா இல்லைனா டண்டணக்காதான்” என்று மெக்கானிக்குகள் சீரியசாய் அட்வைஸ் கொடுக்கிறார்கள். பஜாஜ் ஷோரூம்களிலேயே பஜாஜ் வண்டிகளுக்கு ரீசேல் மதிப்பு இல்லை. இதில் எங்கு போய் வெளியில் விற்பது?

யமாஹா க்ளாடியேட்டர் வண்டி பரவாயில்லை. ஆனால் யமாஹா வண்டிகளுக்கேயிரிய மைலேஜ் அதன் மிகப்பெரிய பலவீனம். அதிக தூரம் பிரயாணிப்பவர்கள் பின்னாடி ஒரு சின்டெக்ஸ் டேங்கை வாங்கி கட்டிக் கொண்டி நேரடியாய் பெட்ரோல் டேங்கிற்கு கனெக்ஷன் கொடுக்க வேண்டும். அந்தளவுக்கு இருக்கிறது மைலேஜ் பிராப்ளம். மற்றபடி இதில் மிகப்பெரிய அளவில் பிரச்சினை இல்லை. ஒரு சிலருக்கு இதன் ஸ்டைல் பிடித்திருக்கிறது. ஒரு சிலருக்கு ஸ்டைலிஷா இல்லை என்பது குறையாய் இருக்கிறது.

Suzuki Zeus வண்டியும் பரவாயில்லை என்று அதனை உபயோகிப்பவர்கள் சொல்கிறார்கள். இதன் மைலேஜ் இதன் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட். கண்டிப்பாய் 65 கிடைக்கும் என்று எல்லாருமே சொல்கிறார்கள். ஆனால் இதன் எஞ்சின் வெறுமனே 8.7 BHP மட்டுமே. மற்ற  Shine, Gladiator வண்டிகளில் இது 10 BHP. இது 5 கியர் வசதிகளைக் கொண்டது. அதனால் 80 கி.மீ ல் கூட நன்றாக போக முடிகிறது. அதே சமயம் 125 CC க்கு 5 கியர் என்பதுவும் யோசிக்க வேண்டியதாய் இருக்கிறது. இதன் ஸ்டைல் மிகவும் கன்சர்வேட்டிவ்வாய் இருக்கிறது. என்னைக் கேட்டால் “A Good bike and Value for Money”.

100 CC மார்க்கெட்டிங் பகுதியை தம் கையில் வைத்திருக்கும் ஹீரோ ஹோண்டா 125 மற்றும் 150 யில் கை விட்டு விட்டது என்றே சொல்லலாம். க்ளாமர் வண்டி அந்தளவு பலரைக் கவர வில்லை. மைலேஜ், எஞ்சின் கோளாறு என்று பல பிரச்சினைகள் எழுகின்றன. 150 CC யில் இப்போதுதான் விட்ட மார்க்கெட்டை கைப்பற்றுவதற்காய் Hunk களத்தில் இறங்கி வேட்டையை ஆரம்பித்துள்ளது. இருப்பினும் ஹீரோ ஹோண்டா க்ளாமரிலும்,Hunk லும் மைலேஜை அதிகரிக்கச் செய்தாலொழிய பெருவாரியான மக்களை திருதி செய்ய முடியாது. Hunk மற்ற விஷயங்களில் பரவாயில்லை. அதன் ஸ்டைலிஷ் லுக், பிக் அப், Top Speed Smoothness, பில்லியன் சீட்டிங் பொசிஷன் (காதலர்களுக்கு ஏற்றது) என்று பல நிறைகள் இருக்கின்றன.

இப்ப்படிப்பட்ட தொடர் ஆராய்ச்சிகளுக்குப் பின் எனது லிஸ்ட்டில் மிச்சமிருந்தவை Honda Shine, Unicorn, Pulsar, TVS Apache, Yamaha FZ16 மட்டுமே.

பல்சர் வண்டிதான் இப்போதைய இளைஞர்களின் கனவு பைக்காய் இருக்கிறது. அதற்குக் காரணம் அதன் ஸ்டைலிஷ் லுக்தான். ஆனால் நான் இந்த வண்டியை எடுத்த உடனேயே நிராகரித்து விட்டேன். காரணம் அந்த வண்டியை சற்றே முன்னோக்கி குனிந்தவாறுதான் ஓட்ட வேண்டும். அது வெளியிலிருந்து நம்மை பார்ப்பவர்களுக்கு மிகவும் ஸ்டைலாக இருக்கலாம். ஆனால் பிற்காலத்தில் முதுகு வலி வருவது நிச்சயம் என்று டாக்டர்கள் அடித்துச் சொல்கிறார்கள்.

அடுத்தது TVS Apache. இந்த வண்டியும் சீக்கிரத்திலேயே நிராகரிக்கப்பட்டு விட்டது என்னால். காரணம் TVS க்கே உரித்தான பராமரிப்புச் செலவு அதை விட முக்கியமய் இதன் உயரம். நான் இதில் ஏறி அமர்ந்தால் முட்டி இடைப்பது பெகு நிச்சயம். அந்தளவுக்கு உயரம் குறைவு இந்த வண்டி. ஆனால் இதன் ஸ்போர்ட்ஸ் மாடல் சமீப காலங்களில் பல இளைஞர்களைக் கவர்ந்துள்ளது. என்னைக் கேட்டால் பலசரை விட Apache RTR FI தான் படு அசத்தலாய் இருக்கிறது என்று சொல்வேன். ஆனால் என்ன செய்ய நான் தான் உயரமாய் பிறந்து விட்டேனே.

Yamaha FZ 16. பைக் பிரியர்களைத் தவிர இன்னும் அதிக பேரைச் சென்றடையாத பைக் இது. இந்த வண்டி மட்டும் சரியாக விளம்பரப்படுத்தப்பட்டால் Apache, Pulsar எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விடும். இதை நீங்கள் ஓட்டிச் செல்லும் போது ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்து பேராவது உங்களைத் திரும்பி பார்க்கா விடில் நீங்கள் தாராளமாய் என்னைக் கேள்வி கேட்கலாம்.

ஒரு 150 CC பைக்கில் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள். ஸ்பீடா? ஸ்போர்ட்ஸ் மாடல் ஸ்டைல் லுக்கா, அட்ராக்டிவ் கலரா, திறமையான டிஸ்க் ப்ரேக்கிங்கா? பெட்ரோல் டேங்க் டிசைனா? பெரிய்ய டியூப்லஸ் டயரா? இது எல்லாவற்றையும் சேர்த்துப் போட்டால் உங்களுக்கு கிடைப்பது இந்த பைக்தான். காதலியோடு அடிக்கடி சண்டை போடுபவரா நீங்கள். கவலை வேண்டாம். எவ்வளவுதான் சண்டை போட்டாலும் நீங்கள் இந்த பைக்கில் போகும் போது உங்களை தானாக அணைத்துக் கொள்வார். உங்கள் இருவருக்கும் நடுவே சமாதானப் புறாவாய் இந்த வண்டி உபயோகப்படும். “மைலேஜை பத்தி எல்லாம் எனக்கு கவலை இல்லைடா மச்சான். வண்டி நச்சுன்னு இருக்கணும்” என்று நண்பர்கள் நடுவே புலம்புபவர்கள் கண்ணை மூடிக் கொண்டு இதை வாங்கலாம்.

இது எல்லாம் இருந்தாலும் நான் இந்த பைக்கை வாங்கலை. ஒரே காரணம் என்னைப் பொறுத்த வரை This bike is purely for couples. Not for others. குடும்பத்திற்கும் சேர்த்து ஒரு பைக் வேணும்னா இது கொஞ்சம் கஷ்டம்தான்.

Honda Shine – 125 CC யில் இப்போது இருக்கும் நிலையில் பெஸ்ட் பைக் இதுதான் என்று சொல்லலாம். ஓரளவு சஸ்பென்ஷன், தரமான எஞ்சின், பிக் அப் என எல்லாமே சரியான தரத்தில்தான் இருக்கின்றது. இதை நிராகரிக்க வேண்டுமென்றால் ஒருவேளை உங்களுக்கு இதன் லுக் பிடிக்க வில்லை என்று நினைதால்தான் உண்டு. மற்ற படி என்னைப் பொறுத்த வரை இந்த வண்டிக்கென்று தனிப்பட்ட குறைகள் எதுவுமில்லை. 125 CC வண்டிகளுக்கென்று இருக்கும் வேகம், பிக் அப், ஸ்மூத்னஸ் ஆகியவற்றிலுள்ள எல்லைகள் மட்டும்தான் இதன் பிரச்சினை. (அதாவது எவ்வளாவுதான் நல்ல பிக் அப் இருந்தாலும் இது 150 CC வண்டியின் பிக் அப்பை விட குறைவாகத்தான் இருகும். மற்ற விஷயங்களிலும் அப்படியே). இவைகள் மட்டுமே இதன் குறைகள். எனக்கு ரொம்ப ஸ்பீடு எல்லாம்  வேண்டாம்பா. இன்னிக்கு இல்லைன்னாலும் என்னிக்காவது டேஞ்சர்தான். அதுவுமில்லாம நமக்கெல்லாம் மீடியம் ஸ்பீடு, மீடியம் வெயிட் இருக்கிற பைக்தான் கரெக்டு என்று சொல்லும் மத்திம வயதுக்காரர்கள் அல்லது மற்ற எல்லோரும் நம்பி இதை வாங்கலாம்.

Honda Unicorn – The Wing Rider. பெயருக்கேற்றார் போலவே இது நிஜமாலுமே விங் ரைடர்தான். சென்னையில் இன்றைக்கு ஆர்டர் கொடுத்தாலும் வண்டியை எடுக்க உங்களுக்கு குறைந்தது மூன்று மாதங்கள் ஆகும். Accessories விலையையும் சேர்த்து மொத்த ம்விலை 67,000 ஆகும் இந்த வண்டியை எடுக்க. இருப்பினும் இந்த வண்டிக்கு எக்கச்சகமான டிமாண்ட் இப்போது. காரணம் ஒன்றே ஒன்றுதான். இந்த வண்டியை ஓட்டும் ஒவ்வொரு கணங்களிலும் பறப்பது பொலத்தான் உணர்வீர்கள்.

இது அதிகப்படியான மதிப்பீடு அல்ல. இதன் Mono Suspension வேறு எந்த வண்டிகளிலும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. மற்ற வண்டிகளை விட இதில் முதுகு வலி வருவதற்கான சாத்தியக் கூறுகள் குறைவு. ஹெல்மெட் போட்டு ஓட்டும் போது எஞ்சின் சவுண்டை நீங்கள் கேட்டீர்கள் என்றால் உங்கள் காது ரொம்ப ஷார்ப் என்று உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளலாம். அவ்வளவு ஸ்மூத்தான எஞ்சின் சவுண்ட். அதை விட ஸ்மூத்தாய் கியர் பாக்ஸ். வெண்ணெய் மாதிரி வழுக்கிக் கொண்டு விழுகிறது கியர்கள். நமபி வாங்கக் கூடிய தரத்தில் ஹோண்டாவின் எஞ்சின்கள்.

தனது வண்டிகளின் ஒவ்வொரு உதிரிப்பாகங்களின் தரத்திலும் கூட மிகவும் கவனம் செலுத்தி இருக்கிறது ஹோண்டா. குவாலிட்டியில் இவர்கள் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளவே இல்லை என்பது உறுதி. இந்த வண்டியின் பலவீனங்கள், டெலிவரிக்காக காத்திருக்க வேண்டிய நிலை மற்றும் Post Sales Services. ஹோண்டா கண்டிப்பாக இன்னும் அதிக சர்வீஸ் சென்டர்களை அனைத்து ஊர்களிலும் பரவலாய் ஆரம்பிக்க வேண்டும்.

ஆகவே Honda Unicorn ஆ அல்லது Shine ஆ என்று கணக்குப் போட்டுப் பார்த்து யுனிகார்னையே தேர்ந்தெடுத்து விட்டேன். நான் இந்த வண்டியை வாங்கியது தாம்பரத்திலுள்ள லோதா மோட்டார்ஸில். நானும் எனது நண்பனும் 2 பைக் வாங்கறோம். கொஞ்சம் பார்த்து போட்டுக் கொடுங்க என்று சொன்ன போது. “சார் விலையில எல்லாம் கையை வெக்க முடியாது. வேணும்னா 20 நாளில் வண்டியை தருவித்துத் தருகிறேன்” என்று சொன்ன போது அவரு ஒரு ஆயிரம் ரூபாயைக் குறைச்சுக்கறேன் சார் என்று சொல்லி இருந்தால் கூட நாங்கள் அவ்வளவு சந்தோசப் பட்டிருக்க மாட்டோம்.

அவ்வளவு காசு கொழுத்துப் போயிடுச்சான்னு எல்லாம் யாரும் கேக்க வேண்டாம். ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங். என்ன செய்ய? 20 நாட்களில் தருகிறேன் என்று சொன்னவர் பத்தே நாட்களில் சார் வண்டி வந்துடுச்சுன்னு சொல்லி அடுத்த 2 நாட்களில் மற்ற வேலைகளை எல்லாம் முடித்து விட்டு 13 ஏ நாட்களில் வண்டியைக் கையில் வாங்கினோம். யுனிகார்ன் பைக்கை சமீப காலங்களில் இவ்வளவு சீக்கிரமாய் வாங்கியவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். உங்களில் எவரேனும் வாங்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தால் தயவு செய்து அடையார் GUN Motors பக்கமோ, அண்ணாசாலை Didar Motors பக்கமோ ஒதுங்கி விடாதீர்கள். எனக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடி ஆர்டர் கொடுத்த ஒருத்தர் இன்னும் 40 நாள்ல தந்துடறேன்னு சொல்லி இருக்காங்க என்று பாவமாய் சொல்லி விட்டுப் போனார்.

ஒருவழியாய் வண்டியை எடுத்து விட்டு, தாம்பரத்திலிருந்து வேளச்சேரி வரை வண்டியை ஒட்டிக்கொண்டு வந்த ஒவ்வொரு நொடியிலும் நானும் என் நண்பனும் காற்றில் மிதந்துக் கொண்டிருந்தோம். அது ஒரு பரவச அனுபவம்.  Yesss. Honda Unicorn is the real Wing Rider.

பி.கு: இது மோட்டார் பைக்குகள் குறித்தான எனது மதிப்பீடு. இது உங்களுடன் ஒத்து போக வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒத்துப் போச்சுன்னா நம்ம க்ரூப்புல இன்னொரு ஆளுடான்னு சந்தோசப் பட்டுக்கோங்க. படலைன்னா மொக்கையா எழுதி இருக்காண்டா மச்சான்னு மனசுக்குள்ள திட்டிக்கோங்க. விடுங்க பாஸ் இதெல்லாம் நமக்குள்ள சகஜம் தானே.

37 Comments »

  1. மிக உபயோகமான பதிவு. ரசிக்கும் படியான உங்கள் நடையில். செல்வேந்திரனும் தன் யுனிகார்ன் அனுபவங்களை சொல்லியிருந்தார்

    Comment by முரளிகண்ணன் — March 10, 2009 @ 2:34 am

  2. நீங்க மேல செஞ்ச வேலையைத்தான் நானும் கொஞ்ச நாளா பண்ணிட்டிருக்கேன்.

    உங்க தகவல் மிகவும் பயனுள்லதாய் இருந்தது…
    மிக்க நன்றி…

    Comment by Balaji — March 10, 2009 @ 2:38 am

  3. அனைத்தும் சரி.

    shine பற்றிய விவரங்கள் விட்டுப் போயிருக்கிறது.

    திருப்பூரிலெல்லாம் 3 மாதங்களுக்கு மேல் தான் வண்டி கைக்கு கிடைக்கிறது.

    தலைப்பை சரி செய்யுங்கள் நந்தா!

    Comment by வெயிலான் — March 10, 2009 @ 2:54 am

  4. நன்றி நந்தா தகவல்களுக்கு..

    சில குழப்பங்கள் தீர்ந்திருக்கின்றன.. சில குழப்பங்கள் உருவாகி இருக்கின்றன..

    In Honda Unicorn – how many gears? CC?
    how about mileage and services?
    On road cost? 67000/- ?
    weight and height?

    Comment by Saravana Kumar MSK — March 10, 2009 @ 2:54 am

  5. Thanks for your detailed analysis. Its very useful. I am planning to buy either shine or unicorn. Maybe i will go for it:)

    Comment by sowri — March 10, 2009 @ 3:11 am

  6. hope fz16 is also sharing the mono suspension.

    R15 is also come in to 150 cc :)

    Comment by dhanaraj — March 10, 2009 @ 3:15 am

  7. ok.. i saw all the spec now..

    but wats the rate difference b/n normal and GranPrix Edition?

    Is GranPrix Edition available in the market? (they are saying its limited)

    Comment by Saravana Kumar MSK — March 10, 2009 @ 3:28 am

  8. நான் பைக் வாங்குனா நிச்சயமா உங்களை
    ஞாபகம் வெச்சுக்கிறேன்.

    Comment by Shirdi.Saidasan — March 10, 2009 @ 3:41 am

  9. நன்றி பாலாஜி, முரளிகண்ணன். முரளி அந்த பதிவை நானும் படித்தேன். ரசிக்கக் கூடிய ஒன்று.

    வெயிலான் தலைப்பை சரி செய்தாயிற்று. ஷைன் பற்றி விவரங்களையும் சேர்த்து விடுகிறேன். நன்றி.

    நன்றி சௌரி தன்ராஜ்.

    சரவண குமார் On Road price 64,000 வரும். ரெஜிஸ்டரேஷன் செலவு, மற்றும் அக்சசரீஸ் செலவுகள் இரண்டாயிரத்திற்கு மேல் வந்து விடும். மொத்தமாய் 67,000க்குள் முடித்து விடலாம்.

    பல்சரை விட, அபாச்சியை விட யுனிகார்னின் வெயிட் அதிகம்தான். 146 கிலோ. ஆனால் இந்த வண்டியைப் பொறுத்த வரை வெயிட் என்பதை நீங்கள் எஞ்சின் ஆஃப் செய்திருக்கும் போது மட்டும்தான் உணர்வீர்கள். எஞ்சினை ஆன் செய்த பின்பு யுனிகார்ன் வெயிட்டுன்னு எவன் சொன்னான் என்று சண்டைக்கு நிற்பீர்கள்.

    மைலேஜ் அவர்கள் சொல்வது 55 முதல் 60. ஆனால் நான் எதிர்பார்ப்பது 45 முதல் 50 வந்தாலே போதும் என்று.

    GP edition மார்க்கெட்டில் கிடைக்கிறது. விலையும் 1000 போலதான் வித்தியாசம் வரும். ஆனால் ஒரே ஒரு மாடல் மட்டுமே GP edition ல் இருக்கிறது. அது எனக்கு பிடிக்கவே இல்லை. இரண்டுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. ஸ்டிக்கரிங் மட்டும்தான் என்று மெக்கானிக்குகள் சொன்னார்கள். ஸ்பெசிஃபிகேஷனிலும் வித்தியாசம் இல்லை.

    உங்களுக்கு அந்த ஸ்டிக்கரிங் பிடித்திருந்தால் தாராளமாய் எடுக்கலாம்.

    Comment by நந்தா — March 10, 2009 @ 4:08 am

  10. Hi Nandha,

    Ravishankar (ravidreams) sent me the link to this blog…..i bought a unicorn in 2005. If I were to write my unicorn buying and ownership experience I would exactly replicate nandha’s words…im surprised u used the same yard stick i used to reject other brands and till date its the best bike in 150cc save fz16….

    Comment by ravindra boopathi — March 10, 2009 @ 4:42 am

  11. மங்குணி…
    ஒரு பைக்குக்கு ஒரு போரா?
    பெரிய அக்கப்போராக அல்லவா இருக்கிறது?

    Comment by saravana raja — March 10, 2009 @ 4:59 am

  12. wow..!! usefull blog . thanks

    Comment by bala — March 10, 2009 @ 6:37 am

  13. நன்றி சாய்தாசன், பாலா..

    //I would exactly replicate nandha’s words…im surprised u used the same yard stick i used to reject other brands and till date its the best bike in 150cc save fz16….//

    ரவீந்திர பூபதி மிக்க மகிழ்ச்சி.

    ஓய் சரவணராஜா இங்கேயுமா? நல்லா இரும் ஓய்.

    Comment by நந்தா — March 10, 2009 @ 8:08 am

  14. அப்படியே scooty pep, honda activa போன்றவற்றின் அலசலையும் போடவும் ;-) ) சரி.. சரி.. அடிக்க வராதீங்க. சும்மாத்தான்.

    நல்ல பதிவு. ஆமாம். இதையேன் இவ்வளவு சுய எள்ளலோட எழுதியிருக்கீங்கன்னுதான் புரியலை(முதல் பத்தி).அரசியல், சினிமா தாண்டி இது போன்ற விவரமான நிகழ்கால வாழ்வியல் பிரச்சனை, product review பதிவுகள் தாங்க தேவை. கலக்குங்க

    அப்படியே enticer பத்திய உங்கள் மதீப்பீட்டை போட்டால் மகிழ்வேன்.

    Comment by msathia — March 10, 2009 @ 9:10 am

  15. அருமையான பதிவு நந்தா, நான் முதன்முதலில் யுனிகர்ன் அறிமுகம் செய்தபோதே வண்டி வாங்கிவிட்டேன், நானும் எத்தனையோ பைக்குகள் ஓட்டியிருக்கிறேன் ஆனால் யுனிகார்ன் மாதிரி எதுவுமே எனக்கு திருப்தி அளிக்கவில்லை.

    முக்கியமாக இதன் மைலேஜ் 60௦ கிலோ மீட்டர் கொடுக்கும், பராமரிப்பு செலவும் ரொம்ப குறைவு.

    400 கிலோ மீட்டரெல்லாம் தொடர்ந்து ஒட்டியிருக்கேறேன்.

    நன்றி…

    Comment by கே.ஆர்.பி.செந்தில் — March 10, 2009 @ 8:36 pm

  16. நீங்கள் ஏன் Suzuki B-Kingஐ முயற்சி செய்து பார்க்க கூடாது?? அதன் இணைய விமர்சன முகவரி கீழே தந்துள்ளேன்……..
    http://www.bikepoint.com.au/portal/alias__bikepointau/tabID__5760/ArticleID__120769/DesktopDefault.aspx

    இதில் 2 வகைகள் உண்டு… ஒன்று 600cc, மற்றது 1300cc… என்ன எரிபொருள்(petrol) செலவுதான்… அதிகம்…. இந்த 600ccஆல் தான் பதிவு எழுதக்கூட நேரமில்லாமல் தவிக்கிறேன்…… try பன்ணிப்பாருங்கள்….

    Comment by ஆதவன் — March 10, 2009 @ 10:20 pm

  17. நல்ல அலசல்.
    இன்னும் கொஞ்ச நாளில் கார் வாங்கும் போது இதே மாதிரி ஒரு பதிவை(காரைப் பற்றி) போடுங்க,தெரிந்துகொள்கிறோம்.

    Comment by வடுவூர் குமார் — March 10, 2009 @ 11:41 pm

  18. Hi nandha, it is a very useful informations for the people, are going to buy a new bike. but actually yamaha gladiator 125 cc is a superb bike. mileage is 60 kmpl . sporty look. but low pick up. it cannot be compared to pulsar or unicorn as they are 150cc. mileage of shine is low as compared to yamaha gladiator 125cc and also look. thanks.

    Comment by santhosh — March 11, 2009 @ 12:24 am

  19. நம்ம க்ரூப்புல இன்னொரு ஆளுடான்னு சந்தோசப் பட்டுக்கோங்க//
    எங்க க்ருப்ள நீங்க, நான் unicorn வாங்கி ஒன்றரை வருடங்கள் முடிந்தது. நானும் காற்றில் தான் பரந்துக்கொண்டுரிகன். இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை. கொசுறு தகவல் : புதுவைஎல் வாங்கினால் விலை மிகவும் குறைவு, டெலிவரி நாட்களும் குறைவு. 5000 மேல் மிச்சம்.

    Comment by Balaji — March 11, 2009 @ 12:26 am

  20. yamaha FZ 16 konjam parazhagan surya mathiri illai..? ippedi iruntha road la nalu per thirumbi parka than saivanga.. yenna solreenga nanbare..?

    Comment by Nadodi.. — March 11, 2009 @ 12:35 am

  21. //நல்ல பதிவு. ஆமாம். இதையேன் இவ்வளவு சுய எள்ளலோட எழுதியிருக்கீங்கன்னுதான் புரியலை(முதல் பத்தி).அரசியல், சினிமா தாண்டி இது போன்ற விவரமான நிகழ்கால வாழ்வியல் பிரச்சனை, product review பதிவுகள் தாங்க தேவை. கலக்குங்க

    அப்படியே enticer பத்திய உங்கள் மதீப்பீட்டை போட்டால் மகிழ்வேன்.//

    நன்றி சத்யா. சுய எள்ளல்ங்கிறது சும்மா ஒரு பில்டப் விடுறதுக்கு. தன்னடக்கம்ங்கிறது கூட ஒரு வகையான கர்வத்தின் வெளிப்பாடுன்னு சொல்லுவாங்க. இதுவும் அந்த மாதிரி ஒண்ணுதான். :)

    துரதிர்ஷ்ட வசமாக என் நண்பர்கள் குழுவில் எவரிடமும் எண்டைசர் கிடையாதுங்க. அதனால் நேரடியான அனுபவம் இல்லை. கேள்விப்பட்ட விவரங்கள் உண்டு. இதை வைத்துக் கொண்டு எழுதினால் வெறுமனே ஏட்டுச் சுரைக்காயாகத்தான் இருக்கும். :(

    //அருமையான பதிவு நந்தா, நான் முதன்முதலில் யுனிகர்ன் அறிமுகம் செய்தபோதே வண்டி வாங்கிவிட்டேன், நானும் எத்தனையோ பைக்குகள் ஓட்டியிருக்கிறேன் ஆனால் யுனிகார்ன் மாதிரி எதுவுமே எனக்கு திருப்தி அளிக்கவில்லை.

    முக்கியமாக இதன் மைலேஜ் 60௦ கிலோ மீட்டர் கொடுக்கும், பராமரிப்பு செலவும் ரொம்ப குறைவு.

    400 கிலோ மீட்டரெல்லாம் தொடர்ந்து ஒட்டியிருக்கேறேன்.

    நன்றி…
    //

    செந்தில் க்ரூப் பெரிசாகிட்டே போகுது. இது வரை எந்த வண்டியைப் பற்றி பேசும் போதும் எதிர் மறை விமர்சங்கள் வந்து பார்த்திருக்கிறேன். ஆனால் யுனிகார்னைப் பற்றி பேசும் போது மட்டும் எதிர் கருத்துக்கள் வெகு வெகு குறைவாகவே வந்துள்ளது.

    Comment by நந்தா — March 11, 2009 @ 12:49 am

  22. நல்ல அலசல் பதிவு நந்தா… நானும் பல ஆய்வு + விசாரிப்புகளுக்குப் பின் கடந்த நவம்பர் மாதம் யூனிகார்ன் தான் எடுத்தேன். ஆனால் அடையார் குன் ஹோண்டாவில் என்னை காக்க வைத்து டென்ஷாக்கி விட்டார்கள். 70 நாட்களாகும் எனத் தெரிந்த போதும், வேறு வண்டிகளின் பக்கம் செல்ல மனசில்லாமல், யூனிகார்ன் ஜிபி என்ற லிமிடட் எடிஷன் (நீலம், கறுப்பு மற்றும் வெள்ளை நிறங்கள் கலந்த ஸ்டிக்கர்)வண்டியை அரை மனசாக வாங்கினேன். விலை 68,000.
    இந்த பதிவை நீங்கள் நவம்பர் மாதம் அளித்திருந்தால், நானும் லோதா மோட்டார்ஸில் எடுத்திருப்பேன் (கறுப்பு கலர்).

    ஆனாலும் செம வண்டி… லிட்டருக்கு 55 கி.மி தருகிறது. எனக்கும் பறக்கும் அனுபவம் தான்.

    Comment by பிரேம் — March 11, 2009 @ 12:50 am

  23. good article mr.nandha. But i think in Unicorn, it is difficult for the back seater to sit comfort.(in our indian roads). this is my personal experience.

    Also u did not consider about suzuki’s new launch GS150R.

    Regarding service issues, honda is worst. they r taking 2-3 days for service.

    Comment by velu — March 11, 2009 @ 1:03 am

  24. //இதன் Mono Suspension வேறு எந்த வண்டிகளிலும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது//

    Actually FZ16 also having the mono suspension.

    Comment by Raamji — March 11, 2009 @ 1:58 am

  25. //இதில் 2 வகைகள் உண்டு… ஒன்று 600cc, மற்றது 1300cc… என்ன எரிபொருள்(petrol) செலவுதான்… அதிகம்…. இந்த 600ccஆல் தான் பதிவு எழுதக்கூட நேரமில்லாமல் தவிக்கிறேன்…… try பன்ணிப்பாருங்கள்….//

    ஆதவன் நீங்க பெருங்கையா இருக்கீங்க. சென்னையில் இந்த வண்டியை வெச்சுக்கிட்டு என்ன பண்ண. :(

    வடுவூர் குமார் அப்படி ஒரு நாள் வரும் போது உங்க ஆசையை கண்டிப்பா தீர்த்து வைக்கிறேன்.

    Comment by நந்தா — March 11, 2009 @ 1:58 am

  26. Hero Honda Splendor +, Passion,
    Yamaha Crux Pathiyum Eluthiruntha nalla irukkum.

    Budjet bike patri eluthavaum.

    Neenga sonna vandiya vaangarathukku Car Vankicalam

    Comment by kathIR — March 11, 2009 @ 2:09 am

  27. சமிபத்தில் என் தம்பி பைக் வாங்க இதே போல் சில பல ஆராய்ச்சி செய்து, கடைசியில் ஹோண்டா unicorn வாங்க போவதாக சொன்னான். booking செய்ய சென்ற பொது தான் தெரிந்தது வண்டிக்கு செம டிமாண்டுனு..

    அப்புறம் 45 நாள் கழித்துதான் வண்டி கெடைச்சது.. சும்மா சொல்ல கூடாது வண்டி செம ஸாப்ட் தான். நான் இன்னும் கூட splendor plus தான் – (family man-ங்க )

    UNICORN ROCKS

    Comment by shaaji — March 11, 2009 @ 4:22 am

  28. //Hi nandha, it is a very useful informations for the people, are going to buy a new bike. but actually yamaha gladiator 125 cc is a superb bike. mileage is 60 kmpl . sporty look. but low pick up. it cannot be compared to pulsar or unicorn as they are 150cc. mileage of shine is low as compared to yamaha gladiator 125cc and also look. thanks.//

    நன்றி சந்தோஷ். நான் கேள்விப்பட்ட வரை இதன் பெரிய்ய பிரச்சினை பிக் அப்பும், மைலேஜும்தான். ஸ்போர்ட்டி லுக் என்று சொல்லி இருக்கிறீர்கள். சில பேர் க்ளாடியேட்டரை ரொம்ப பிடித்திருக்கிறது என்று சொல்லி பார்த்திருக்கிறேன். அதே சமயம் எனது நண்பர்கள் சிலர் எனக்குப் பிடிக்கலை என்றும் சொல்லி இருக்கிறார்கள்.

    //நம்ம க்ரூப்புல இன்னொரு ஆளுடான்னு சந்தோசப் பட்டுக்கோங்க//
    எங்க க்ருப்ள நீங்க, நான் unicorn வாங்கி ஒன்றரை வருடங்கள் முடிந்தது. நானும் காற்றில் தான் பரந்துக்கொண்டுரிகன். இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை. கொசுறு தகவல் : புதுவைஎல் வாங்கினால் விலை மிகவும் குறைவு, டெலிவரி நாட்களும் குறைவு. 5000 மேல் மிச்சம்.//

    பாலாஜி புதுவையில வாங்கினால் இங்க சென்னையில பயந்துக்கிட்டே வண்டியை ஓட்டணும். மாசக் கடைசி ஆனா புதுசு புதுசா ஒரு செக்ஷன் சொல்லி ரூலை மாத்திட்டாங்க. காசை எடும்பானுங்க. :(

    நாடோடி FZ 16 பட்டையைக் கிளப்புது. நானே 3 முறை என்னா வண்டிடா அதுன்னு பார்த்துட்டு அட என்று வியந்திருக்கிக்கிறேன்.

    Comment by நந்தா — March 11, 2009 @ 4:25 am

  29. //ஆனால் அடையார் குன் ஹோண்டாவில் என்னை காக்க வைத்து டென்ஷாக்கி விட்டார்கள். //

    பிரேம் எனக்குத் தெரிந்த ஒருத்தருக்கும் இதே அனுபவம்தான். அடையார் குன் மோட்டார்சில் சர்வீஸ் சென்டர் சற்றுத் தள்ளி இருப்பதால் அங்கே போனீங்கன்னா மருந்துக்குக் கூட வண்டியப் பார்க்க முடியாது. வெறுமனே போஸ்டரைப் பார்த்துட்டு ஆர்டர் கொடுக்கணும்.

    நான் Black & Red மாடல் பைக்கை எடுக்கலாம்னு இருந்தேன். அதை ரோட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிக்னல்களில் பார்த்ததோடு சரி. நின்று நிதானமாய் பார்த்ததே இல்லை. லோதா மோட்டார்சில் பொறுமையாய் சர்வீசிற்கு வந்த வண்டியை அங்குலம் அங்குலமாய் ஆராய்ந்து தேர்ந்தெடுத்தேன்.

    ஏன்னா நான் ஷோரூம் போரதுக்கு முன்னாடி Red & black தான் நல்லா இருக்குன்னு நினைச்சு போனேன். (சிக்னல்ல சில நொடிகள்ல பார்த்தா அப்படித்தான்)

    அப்புறம் அங்கே ஷோரும்ல போய் பார்த்த பின்பு அந்த மாடல் பிடிக்கலை. அப்புறம் Full black or Black – Red மாடலான்னு யோசிச்சு Black – Red model தான் தேர்ந்தெடுத்தேன்.

    Comment by நந்தா — March 11, 2009 @ 4:57 am

  30. Very nice and detailed analysis.
    If you could add a table at the end highlighting the pluses and minues, I would have comprehended better.

    Comment by bala gansan — March 11, 2009 @ 10:44 am

  31. // ஆகவே Honda Unicorn ஆ அல்லது Shine ஆ என்று கணக்குப் போட்டுப் பார்த்து யுனிகார்னையே தேர்ந்தெடுத்து விட்டேன்.//

    நல்ல தேர்வு

    இங்க ஈரோட்டுல 4 மாசம் ஆகுது வண்டி புக்பண்ணிவந்து சேர.

    சரிங்க புது வண்டி வாங்குனா டிரீட் வெக்கனும்குரது எழுத்தப்படாத விதி :-) )

    Comment by கார்த்திக் — March 14, 2009 @ 6:48 am

  32. பைக் பற்றிய அலசல் நன்றாக இருக்கிறது. ஸ்கூட்டி ஓட்டுவதற்கே பயப்பட்ட நான் இப்பொழுது கார் ஓட்டிக் கொண்டிருக்கிறேன் :) . நான் இருக்கும் நாட்டில் பைக் -கை விட கார் சிறந்தது . இருந்தாலும் பைக் ஓட்டிச் செல்லுவதில் உள்ள சுதந்திரம் கார் ஓட்டிச் செல்லுவதில் இல்லை என்பது உண்மை.

    மற்றபடி நீங்கள் சொல்லும் விஷயங்கள் சரி. காசு எவ்ளோ ஆகுதுன்னு சொல்லலையே ..!! கூடவே ஒரு லட்ச ரூபாய் கார் பற்றியும் எழுதி போடுங்கள்.. முடிந்தால்.. !!!

    சியர்ஸ் ,
    ஜானு

    Comment by Janu — March 16, 2009 @ 9:27 pm

  33. யூனிகார்ன் வண்டி வாங்கிய பின் சிறிய அளவிலான எரிச்சல்களை நீங்கள் சந்திக்க நேரிடும். அவை:
    1. இலவசமாக அளிக்கப்படும் 4 சர்வீஸ் வசதி. இலவசமாக சர்வீஸுக்கு வண்டியை விட்டால் குறித்த நேரத்தில் எடுக்க முடியாது, ஒன்றிரண்டு நாட்கள் இழுத்தடித்து வண்டியை அளிக்கின்றனர். குறிப்பாக, சென்னையில் உள்ள குன் ஹோண்டா, திதார் ஹோண்டா போன்ற நிறுவனங்கள் இலவச சர்வீஸ் என்பதால் சரியான நேரத்துக்கு தருவதில்லை. ஆனால் வேப்பேரியில் உள்ள ஜேஎஸ்பி ஹோண்டா தேவலாம். சனிக்கிழமைகளில் வண்டியை சர்வீஸ் விட்டால் மாலை 4 மணிக்கெல்லாம் எடுத்துக்கொள்ளலாம். குறைகளை சரியாக நிகர்த்தி செய்கின்றனர்.

    2. கியர் லீவர். புல்லட்களில் இருப்பது போல முன்புறம் சிங்கிள் லீவர் உள்ளது. 2-ஸ்ட்ரோக் வண்டிகள் ஓட்டி பழக்கப்பட்டவர்கள் இந்த கியர் சிஸ்டத்தில் சற்று திணறத்தான் செய்வார்கள். நல்ல ஷூக்கள் சேதமடையவும் வாய்ப்புண்டு. எனவே, ஸ்பேர் பார்ட்ஸ் கடைகளுக்கு நீங்களே சென்று, சாதாரண கியர் லீவர் கேட்டு வாங்கி மெக்கானிக் கடைகளில் பொருத்திக் கொள்ளுங்கள். 100 ரூபாய்க்குள் கதை முடிந்து விடும். ஹோண்டா சர்வீஸ் சென்டரில் லீவர் விலை மட்டும் 250 ரூபாய்.

    Comment by பிரேம் — March 17, 2009 @ 12:43 am

  34. அனைவருக்கும் நன்றி.

    கார்த்திக் ட்ரீட்டுதானே அதுக்கென்ன. வெச்சுட்டாப் போச்சு.

    Comment by நந்தா — March 17, 2009 @ 12:48 am

  35. னைவருக்கும் நன்றி.

    கார்த்திக் ட்ரீட்டுதானே அதுக்கென்ன. வெச்சுட்டாப் போச்சு.//

    எப்போ , எப்போ , எப்போ , எப்போ தல?

    Comment by மதிபாலா — March 23, 2009 @ 11:54 pm

  36. nandha.. vaaipae illanga.. ennoda experiance a apdiyae neenga eluthina madhri iruku.. athe lodha motors la thaan naanum vaanginen.. but in 10 days… so happy to read ur post.. :)

    Comment by Guru — April 8, 2009 @ 2:15 am

  37. [...] http://blog.nandhaonline.com/?p=82 [...]

    Pingback by A nice review about indian motorbikes « Rathees1458 — July 15, 2009 @ 6:41 am

RSS feed for comments on this post. TrackBack URL

Leave a comment

Powered by WordPress