nav-left cat-right
cat-right

ஏர்டெல் ப்ராட்பாண்ட் : நுகர்வோர்கள் என்ன பைத்தியக்காரர்களா?

ஒவ்வொரு முறையும் நம்மால் தடுக்க முடியாத இடத்தில் தெரிந்தே நடக்கும் அநியாயங்கள் அளவுக்கதிகமான கோபத்தை ஏற்படுத்தி விட்டு நகர்வதுண்டு. அது அச்செயல் ஏற்படுத்தும் விளைவுகளால் மட்டுமல்லாது நம்மால் ஒன்றும் செய்ய முடியாத கையாலாகத்தனத்தின் காரணமாக சற்று அதிகமாகவே எதிரொலிக்கும்.  ஏர்டெல் ப்ராட்பேண்ட் தற்போது அறிவித்திருக்கும் Fair Usage Policy யும் அப்படிப்பட்ட ஒரு கோபத்தைக் கிளப்பிச் சென்றிருக்கிறது.

இதன் படி நீங்கள் Unlimited ப்ளானை உபயோகிப்பவராய் இருந்தாலும், உங்களுக்கென்று ஒரு குறிப்பிட்ட அளவு டவுன்லோட் அளவு நிர்ணயிக்கப்பட்டு விடும். உங்களது உபயோகம் அதைத் தாண்டிச் செல்லும் பட்சத்தில் உங்களது ப்ராட்பேண்ட் ஸ்பீடானது, சரி பாதியாக குறைக்கப்படும். (உதாரணத்திற்கு நீங்கள் 512 kbps உபயோகித்தால் 256 ஆக மாறி விடும்). இதே அளவு வேகத்தைதான் உங்களது அடுத்த பில் தேதி வரை நீங்கள் உபயோகிக்க முடியும். ஆனால் பில் மட்டும் உங்களது ஒரிஜினல் ப்ளானுக்கேற்றவாறுதான் வரும். (512 kbps க்குதான் வரும்). மீண்டும் அடுத்த மாதத்திலிருந்து நீங்கள் உங்களது சாதாரண ஸ்பீடிலேயே பயன் படுத்தலாம். ஆனால் நீங்கள் உங்களது உச்ச டவுன்லோடு அளவைத் தாண்டாதவரைதான். இல்லையெனில் மீண்டும் அதே கதைதான்.

ஏர்டெல்லின் இந்த அறிவிப்பானது தனி ஒருவரே அதிக பேண்ட்வித் உபயோகத்தை எடுத்துக் கொள்ளக் கூடாதென்று அறிமுகப் படுத்தப் பட்டிருக்கிறதாமாம். அப்புறம் என்ன வெங்காயத்துக்குடா Unlimited ப்ளான்னு இதைச் சொல்றீங்கன்னு கோபம்தான் ஏற்படுகிறது.

இந்தியாவில் ப்ராண்ட்பேண்ட் ஸ்பீடானது மற்ற நாடுகள் அளவுக்கு இல்லை என்பதும் இப்போது வசூலிக்கப்படும் கட்டணங்களே அதிகமாய் இருக்கிறது என்ற ஒரு மட்டகரமான சூழ்நிலையில் இப்படி ஒரு அறிவிப்பை ஏர்டெல் செய்திருக்கிறது. அனைத்து உபயோகிப்பளர்களுக்கும் பயன் படும் வகையில் பேண்ட்வித் வசதி அமைப்பது, அதிக வேகத்தை தரத் தேவையான டெக்னாலஜி விஷயங்களை முன்னெடுத்துச் செல்வது போன்ற விஷயங்களில் அக்கறை காட்ட வேண்டிய ஏர்டெல் தனது கஸ்டமர்களை கொஞ்சமும் மதிக்காமல் இப்படி ஒன்றை முன்னெடுத்துச் சென்றிருக்கிறது.

நீங்கள் நினைக்கலாம். இது என்னை எந்த வகையிலும் பாதிக்காது. இது இன்டர்நெட் மூலம் படம், மென்பொருள் போன்றவற்றை தரவிறக்கம் செய்பவர்களுக்குத்தான். ஆகையால் நான் கவலைப்பட தேவையில்லை என்று. இல்லை. இதனால் இன்னும் பலருக்கு பாதிப்புதான்.

Video conferencing/telecommunication
Video streaming
Distribution of legitimate software
Legal distribution of movies, music etc.
Work from home
Connecting businesses
VOIP

For more detailed info: http://afup.broadbandforum.in/how-does-the-fup-aff ect-me

சிம்பிளாக சொல்ல வேண்டுமென்றால் யூடியூபில் ஏதாவது ஒன்றை பார்க்க வேண்டுமென்றாலோ, அல்லது ஏதேனும் பெரிய ஃபைலை பகிர்ந்துக் கொள்ள வேண்டு மென்றாலே நாம் யோசிக்க வேண்டும்.

இன்று இவர்கள் இவ்வளாவுதான் உபயோகப்படுத்த வேண்டும் என்பார்கள். நாளை நாம் எந்த எந்த தளங்களுக்கு போகக்கூடாது என்றும் கட்டளை இடுவார்கள். இதை விட மிக முக்கியமாய் ஒன்று இருக்கிறது. இவர்களே ஒரு கூட்டமாய் சேர்ந்துக் கொண்டு மற்ற எல்லா ISP க்களும் இதை அறிவிக்குமாறு செய்யலாம். தம்மை ஓர் சிறந்த ராஜதந்திரியாய் நினைத்துக் கொண்டு, பயனாளர்களை அற்பர்களாய் பார்க்கும் ஓர் அதி மேதாவித் தனம் இது.

**********

இது குறித்து தெரிந்ததும், உறுதி செய்து கொள்வதற்காக ஏர்டெல் கஸ்டமர் கேருக்கு போன் செய்தேன். அவர்கள் மிகத் தெளிவாக “ஆமாம் சார். இது அமலுக்கு ஏற்கனவே வந்து விட்டது. சென்னை, பெங்களூர் உள்ளிட்ட இந்தியாவின் பல இடங்களில் நாங்கள் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறோம்” என்று சொன்னார்கள்.

என்ன ஒரு அலட்சியம். எனக்கோ அல்லது வேறு எந்த ஏர்டெல் பயனாளர்களுக்கும் இது குறித்து ஒரு சின்ன மேசேஜ் கூட தரப்பட வில்லை. எங்களது அனுமதியோ அல்லது ஒரு சின்ன விவரம் கூட தெரிவிக்கப்படாமலேயே தனது பயனாளர்கள் மீது எந்த விதமான கட்டுப்பாடுகளையும் ஏர்டெல் பிரயோகிக்கலாம் போல. எங்களை எல்லாம் பார்த்தா கேனையணுங்க மாதிரியாடா தெரியுது என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

இதில் இன்னொரு அழகு என்னவென்றால் அப்படி எனக்கோ அல்லது மற்ற பயனாளார்களுக்கோ எவ்வளவு ஸ்பேஸ் நிர்ணயித்திருக்கிறார்கள் என்று கஸ்டமர் கேரில் எவருக்கும் தெரிய வில்லை. அது 10 GB யாய் இருக்கலாம். 25 GB யாய் இருக்கலாம். வெறுமனே 4 ஆகவும் இருக்கலாம். நாங்கள் என்ன ஏர்டெல்லுடன் செஸ் விளையாட்டா விளையாடிக் கொண்டிருக்கிறோம். எதிராளி எப்படி காய் நகர்த்துவான் என்று தெரியாமல் மலங்க மலங்க விழித்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்க.

Man! We are all customers and we all expect some respect from them and don’t want to be treated like slaves.

கடைசியாய் போனை வைப்பதற்கு முன்பு கஸ்டமர் கேரில் சொன்னது இதுதான். “ஏற்கனவே இது குறித்து நீங்கள் அதிகமாய் புகார்களை பெற்றுக் கொண்டிருக்கலாம். எனக்குத் தெரிய வில்லை. ஆனால் உங்களாது இந்த திமிர்த்தனமான நடவடிக்கையை மிக கோபத்துடன் எதிர்ப்பவன் என்று என்ன்னை முதலில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதிக நாள் உங்களது சேவை எனக்குத் தேவைப்படாது “.

உலகம் எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது. அடுத்த தலைமுறை Software installation என்ற ஒன்றே இல்லாமல் கூட இருக்கப் போகிறது. 3D கம்ப்யூட்டர் கேம்ஸ், MS ஆபீஸ், போட்டோ எடிட்டிங் மென்பொருட்கள், ஆடியோ – வீடியோ எடிட்டர்கள், போர்னோகிராபி, டாரண்ட், ஃபைல் ஷேரிங், வீடியோ சாட்டிங் என்று நாம் இணையத்தை உபயோகப்படுத்த ஆரம்பிக்கும் ஒவ்வொரு புள்ளிகளிலும் இந்த டவுன்லோடு ஸ்பேஸ் லிமிட் நம்மை எரிச்சலடைய வைக்கும்.

எல்லாவற்றுக்கும் மேலாய் என்னை ரௌத்ரம் கொள்ள வைப்பது ஏர்டெல்லின் தனது கஸ்டமர்களின் மீதான அடிமைத்தனமான பார்வை.

இந்த அறிவிப்பு உங்களியும் கோபம் கொள்ள வைக்கிறதென்றால் உங்களது கண்டனக் குரல்களை இங்கேயும் பதிவு செய்யுங்கள். http://afup.broadbandforum.in/

49 Responses to “ஏர்டெல் ப்ராட்பாண்ட் : நுகர்வோர்கள் என்ன பைத்தியக்காரர்களா?”

  1. இதை பற்றி நானே பதிவிட இருந்தேன் நன்பரே…

    அருமையான பதிவு..

    அவர்கள் செய்வது தான் அவர்களின் சட்டம் போல செயல்படுகிறார்கள்..

    ( இது ஏர்டெல்க்கு மட்டும் அல்ல, ரிலையன்ஸ்க்கும் பொருந்தும்..)

  2. vbk says:

    அன்பு நந்தா,

    ஏர்டெல்லின் இந்த அறிவிப்பு உண்மையானது. அதிக பட்ச பயன்பாடு
    25ஜிபியாம். சமீபத்தில் எனக்கு அந்தப் ஸ்பீடு பிரச்சினை வந்த போது,
    வேறு வழிகளைப் பயன்படுத்தி அறிந்து கொண்டேன். உங்களிடம் கனெக்‌ஷன்
    எடுத்த அப்ளிகேஷன் இருந்தால் கோர்ரில் கம்ப்ளைண்ட் இடவும்.
    core.nic.in
    இது ஒரு இலவச கவர்மென்ட் நுகர்வோர் மன்றம். நோட்டீஸ் அனுப்பி
    விளக்கம் கேட்பார்கள். நோட்டீஸ் சென்றாலே அலறி விடுவார்கள்.
    இது மட்டுமின்றி செபியிடம் புகார் செய்யலாம். பிரைம் மினிஸ்டர் மற்றும்
    ஜனாதிபதிக்கும் இமெயில் மூலம் புகார் அளிக்கலாம்.காவல்துறைக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் இமெயில் மூலம் புகார் பதிவு செய்யலாம். ஏதாவது ஒன்று நடந்தே தீரும் அல்லவா.

  3. kumar says:

    உண்மை. நானும் ஏர்லடெல்லில் நொந்துகொண்டுள்ளவந்தான்,
    இப்படி ஒரு பதிவு எழுதிய உங்களுக்கு நன்றீ.

  4. unlimited mealsனு போட்டிருந்தாலும் நாம சாப்பிடச் சாப்பிட
    கடைக்காரர் முறைப்பது மாதிரி இருக்கே ;)

  5. a reader says:

    Nandha,

    Though I’m a BSNL unlimited plan user, I support you. It only shows that Airtel is not smart enough in estimating the future bandwidth needs of it’s customers.

    A Reader

  6. shanmugam says:

    நான் ஒரு ஆன்லைன் ப்ரொஜெக்டை நம்பியே இந்தியா வர வுள்ளேன்.

    எந்த broadband service தான் நல்லது.

    BSNL இணைப்பு தாமதம் ஆகும் என்றால் எந்த இணைப்பை வாங்குவது.

    நான் வசிக்கபோவது தஞ்சாவூரில். குறைந்தது தினம் 4 மணி நேர இணைய இணைப்பு அவசியம்.

    நண்பர்கள் வழிகாட்டவும்.

  7. ss says:

    உண்மைதான் நண்பரே… இதை இன்றல்ல… கடந்த 6 மாதங்களாகவே செய்து வருகிறார்கள். தெரிந்தவர்களுக்கெல்லாம் நானும் கூறி வருகிறேன்.

    இந்த கருமாந்திரம் புடிச்சவனுங்க மட்டுமல்ல, ரிலையன்ஸ், டாடா நிறுவனங்களும் இதே லட்சணத்தில்தான் திருடிக் கொண்டிருக்கிறார்கள். டாடாவின் பில் சேவை மையத்தில் பெரிதாக இதை எழுதி வேறு ஒட்டியிருக்கிறார்கள்.

    பிஎஸ்என்எல் நிலை என்னவென்று தெரியவில்லை. அவர்களுக்கே அதுபற்றி யாராவது சொன்னால்தான் தெரியும் போலிருக்கிறது!!

  8. ss says:

    “நான் ஒரு ஆன்லைன் ப்ரொஜெக்டை நம்பியே இந்தியா வர வுள்ளேன்.

    எந்த broadband service தான் நல்லது.

    BSNL இணைப்பு தாமதம் ஆகும் என்றால் எந்த இணைப்பை வாங்குவது.

    நான் வசிக்கபோவது தஞ்சாவூரில். குறைந்தது தினம் 4 மணி நேர இணைய இணைப்பு அவசியம்.

    நண்பர்கள் வழிகாட்டவும்.”

    -தயவு செய்து டாடா, ரிலையன்ஸ், ஏர்டெல் போன்ற மகா திருடர்களை நம்ப வேண்டாம். பிஎஸ்என்எல் எவ்வளவோ பரவாயில்லை.

    அவர்களிடம் சோம்பேறித்தனம், அலட்சியம் இருக்குமே தவிர, இந்த மாதிரி திருட்டுத் தனம் இல்லை. நண்பரின் இந்தக் கட்டுரையைப் படித்தபிறகு, பிஎஸ்என்எல் கஸ்டமர் கேரில் போன் செய்து கேட்டுத் தெரிந்து கொண்டேன். அன்லிமிடெட்டில் இந்த மாதிரி வரையறை எதுவும் பிஎஸ்என்எல்லில் இல்லையாம்.

    நீங்கள் விசாரித்துக் கொள்ளுங்கள்.

    எஸ்

  9. என்னடா கொடுமையா இருக்கு.?

    அவனவன் சுரண்டுறதுலேயே குறியா இருக்கான்..!

    கேள்வி கேக்க வேண்டியவனும் தனக்கு சம்பாதிக்கிறதுலேயே வெறியா இருக்கான்..

    ம்ஹும்.. நந்தா தம்பி.. ஏதேனும் ஒரு வகையில் புரட்சி வந்தால்தான் இந்த முகமூடி திருடர்களை ஒழிக்க முடியும்..!

  10. சேம் பிளட் அணிமா.

    தகவலுக்கு நன்றி VBK. நான் கேர்ஐ முயற்சி செய்து பார்க்கிறேன்.

    நன்றி குமார் மற்றும் ரீடர். ரவிஷங்கர் ரொம்ப நாளா ஆளையே காணோம். இணையம், ஸ்பீடுன்ன உடனே எனக்கு உங்க ஞாபகமும் வந்தது. :)

  11. KANNEN says:

    இப்படியானவர்களை நிச்சயமாக தட்டி கேட்க வேண்டும்

  12. Ravi says:

    Is it possible to file a case against Airtel in consumer court?

  13. நான் BSNL தான் உபயோகப் படுத்துகிறேன். சேவை இதுவரை நன்றாகவே உள்ளது (ஒரு மாதம்தான் ஆகிறது வாங்கி).

    நான் அப்ளிகேஷன் கொடுத்து ஒரு வாரத்தில் போனும், மற்றும் ஓரு வாரத்தில் இண்டர்நெட்டும் வந்து விட்டது..

    நான் வைத்திருப்பது 1 GB home combo plan, 299 ரூபாய் மாதத்திற்கு.. இன்னும் நிறைய plans உள்ளன..
    மேலும் விபரத்திற்கு BSNL இணைய தளத்தை பாருங்கள்..

  14. BhavaniShankar says:

    பிராட்பேண்ட் பொறுத்தவரையில் BSNL மட்டுமே சிறந்தது. நான் 500C என்ற plan உபயோகிக்கிறேன். BSNL unlimited plan ல இது மாதிரி எந்த problem கெடயாது… ஆனா சென்னைல இருந்தா உடனடியா (குறைந்த பட்சம் ஒரு வாரம்) கெடைக்கும்… Side la காசு தள்ளி விட்ட உடனே கெடைக்கும்… BSNL பத்தின சந்தேகங்கள என்ன கேளுங்க என்னால முடிஞ்சத நான் சொல்றேன். நன்றி.

  15. sruthimadurai says:

    Hi,

    I am using bsnl braod band connection it speed really wonderfull my plan is 500 per month i am getting
    1 150 calls free
    2 1.5 GP free
    3 Midnight 2.00am to morning 8.00am unlimited usage
    4 speed 200mps

    pls use

  16. கண்ணன் says:

    இங்கே அமெரிக்காவில் comcastல இத விட மோசம்..நீங்க மாத லிமிட்ட தாண்டினால் முதலில் ஒரு எச்சரிக்கை கடிதம் வரும்..அடுத்த முறை disconnect செய்து விடுவார்கள், ஆறு மாதத்திற்க்கு..மாத அளவு 250gb (unoffical)னு கேள்வி…

  17. நந்தா, ஏர்டெல் என்று இல்லை எல்லா தனியார்/அரசு நிறுவனங்களில் வாடிக்கையாளர் சேவையும் இப்படித்தான் இருக்கிறது. வாங்கும் வரை நம் தாவாங்கட்டையை பிடித்து தொங்கும் ஆட்களின் தோரணை வேறு, வாடிக்கையாளர் சேவை பிரிவில் இருக்கும் ஆட்கள் நடந்து கொள்ளும் முறை வேறு. விதிமுறைகள் தெளிவாக இருக்கும் என்கிற வகையில் உண்மையிலேயே அரசுத் துறை கொஞ்சம் பரவாயிலைதான். ஆனால் அவர்களிடம் வரட்டுத்தனமான விதிகளும், அதன் அர்த்தம் தெரியாமலே அதை பிடித்து தொங்கிக் கொண்டிருப்பதும் அதிகம். Whirlpool washing machine, aqua guard water purifier தொடங்கி butterfly electric stove வரை எல்லாவற்றிலும் கஸ்டமர் சர்வீஸ் பிரிவோடு மல்லுகட்டுவதையே நாங்கள் part time job-ஆக வைத்திருக்கிறோமாக்கும். :) ))

    Shanmugam, BSNL-லில் இப்போதெல்லாம் சேவையும் தரமானதாகவே இருக்கிறது. நாங்களும் BSNL-தான் உபயோகிக்கிறோம். கனெக்ஷன் எடுக்கையிலும் அதிக பிரச்சனைகள் எதுவுமில்லை. பில்லிலும் இதுவரை குளறுபடிகள் எதுவுமிருந்ததில்லை. இது சென்னை நிலவரம். தஞ்சையில் எப்படி என்று தெரியவில்லை. யாரையேனும் கேட்டு சொல்கிறேன்.

  18. நந்தா,

    எனது அனுபவத்தையும் இங்கே பதிவு செய்ய விழைகிறேன்… 2004 ல்… சென்னையில் வணிக அகலபட்டை இணையம் ஏர்டெல் வாங்கினேன். மாத கட்டணம் ரூ8000.00. சில மாதங்கள் கழித்து ரூ5000.00 ஆக மாற்றி விட்டர்கள். ஆனால் தொடர்ந்து எனக்கு ரூ8000.00 ஆக பில் வந்துக்கொண்டிருந்து! கிட்டதட்ட 6 மாதங்கள் கடந்த நிலையில்… நான் அதிகமாக கட்டிய தொகைக்கும் வழியில்லை.. கட்டணத்தையும் குறைக்கவும் இல்லை! மிகப்பொறுமையாக ஆவணங்களை சேகரித்தேன்… ஒவ்வொரு படிநிலையாக பாரதி நிறுவனத்தில் முறையிட்டேன்…! எந்த நடவடிக்கையும் இல்லை…!

    இறுதியாக நுகர்வோர் வழக்கு தொடுக்க முதல் அறிக்கை வழக்கறிஞர் வழியாக அனுப்பினேன்…! அதன்பிறகு டெல்லியில் இருந்து பேசினார்கள்..!

    அதுவரை அதிகமாக பில் செய்த மொத்த தொகையையும் இனிவரும் பில்களில் கழித்துக்கொள்வதாக உறுதியளித்தார்கள்!
    சரியென்று நானும் ஒத்துக்கொண்டேன்!

    ஏர்டெல் நிலைதொலைபேசியிலும் இதே பிரச்சினை… கடைசியாக மொத்தமாக அவர்களுடைய இணைப்பை துண்டித்தேன்!

    இப்ப வீட்டில் BSNL இதில் வேறுவிதமான பிரச்சினைகள்… அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு என்று சொல்லி இணைய இணைப்பு கிடைப்பதில்லை! ரொம்ப உள்ள போயி விசாரித்ததில்… BSNL அதற்கு தொழில்நுட்ப வழங்கும் நிறுவனங்கள் எங்கும் ஊழல்…!

    தொலைதொடர்பு துறை இப்ப இந்தியாவில் மிகப்பெரிய வருவாய் கிடைக்கிறது! ஊழலும் மலிந்து கிடக்கிறது!

  19. kathIR says:

    Airtel customer care best nu sollikkaranga. aana plan migration or any migration nammalukku theriyapaduthamale maatharanga. oru plan kku migration request kudutha avanga paatukku vera oru plan kku migration pandranga. naama kekkama vitomna next bill egiridum. en sontha anubavam. ippo limited speed in unlimited plan. enna kodumai. naa surrender panna poren airtel connection na. epdi bsnl surrnder aacho athumaathiri Airtel surrender nadakkum. ippo larnthu start aagum.

  20. நாமும் அப்படியே மாச காசையும் குறைச்சிட வேண்டியதுதான். ஏர்டெல் யூஸ் பண்ற எனக்கு இப்பதான் தெரியுது.

  21. வடுவூர் குமார் says:

    சரி,நிறுத்திட வேண்டியது தான்.வாடிக்கையாளர்கள் கையில் இருப்பது அது ஒன்று தானே?

  22. ss இங்கே எனக்குத் தெரிஞ்சு ஏர்டெல்ல்லுக்கு அடுத்த படியாய் BSNL தான் பரவாயில்லை. அதிலுள்ள ஒரே பிரச்சினை சர்விஸ் ஏர்டெல் அளவிற்கு இருக்காது என்பது மட்டுமே. விலையும் ஏர்டெல் அளவிற்குத்தான் இருக்கிறது.

    சிஃபி மற்றும் ஹாத்வே வாங்கினால் பாதி நேரம் சார் கனெக்ஷன் வரலை சார் என்று மல்லு கட்டுவதற்கே நேரம் சரியாய் இருக்கும். தாமதமாய் சொன்னதற்கு ஒரு மாப்பு கேட்டுக்கறேன்.

    உ.தமிழன், ரவி, கண்ணன் நம்மால் செய்ய முடிந்தது, அவர்களிடம் நமது கண்டனக் குரலை எழுப்புவது, கேட்காவிடில் அந்த சேவையை துண்டிப்பது என்பது மட்டுமே.

  23. naren says:

    Hai,
    Im using BSNL @ salem. I think they giving best services. Last 3 years only 2 or 3 days, server was dicconnected.
    Im recommended BSNL to all friends, including you.
    naren

  24. krish says:

    நமக்கும் நமுடைய சூழ்நிலைக்கும் ஒத்துவராத எந்த ஒரு காரியத்தையும் நாம் ஒதுக்கிவிடவேன்ன்டும். அதுவே நமக்கு நன்மையை தரும். இதைப்போல் புறக்கணிப்பை எல்லா துறையிலும் தொடங்கிவிட்டால் நல்ல பங்களிப்பை நுகர்வோருக்கு கொடுக்க கூடிய நிர்வாகம் மக்களை சென்றடையும் -நன்றி

  25. சங்கர்ராம் says:

    hmmm.. I use BSNL.. And have never been cheated. May be sometimes connectivity problems would come.. but they never cheat like Bharthi, reliance, sify & tataindicom.

    btw, I had sify before and I must say IT WAS A HORRIBLE EXPERIENCE..

  26. தகவல்களுக்கு நன்றி பழூர் கார்த்தி மற்று பவானிசங்கர். தற்போது BSNL க்குத்தான் நான் மாற உத்தேசித்துள்ளேன்.

    அதிலும் Unlimited தான் எடுக்க வேண்டும். நமக்கு அதுதான் கட்டுப்படி ஆகும். :)

  27. //Is it possible to file a case against Airtel in consumer court?//

    ரவி நண்பர்களிடம் கேட்டுள்ளேன். இன்றைக்குள் விவரம் தெரியலாம்.

    ஸ்ருதிமதுரை நான் ஆடும் ஆட்டத்திற்கு லிமிடெட் எல்லாம் ஒத்து வராது. ஸ்பீடும் வேண்டும். அன்லிமிட்டேட் ஸ்பேசும் வேண்டும்.

    தற்போது ஏர்டெல்லில் 448 kbps – Unlimited உபயோகித்துக் கொண்டிருக்கிறேன். மாதம் 1200 வரை கட்டணம் செலுத்த நான் ரெடி. அதற்கு ஏதுவான ப்ளான்களை நான் BSNL ல் தேட வேண்டும்.

  28. வஜ்ரா says:

    சரியான போட்டி இல்லாததால் தான் மார்கெட்டில் ஏர்டெல் இப்படி ஆட்டம் போடுகிறது என்று நினைக்கிறேன்.

    போட்டியை வலியுருத்தும் வகையில் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போதாதகுறைக்கு அரசே டெலிகாம் தொழிலில் ஈடுபட்டு இலாபம் சம்பாதிக்கிறது. இத்தகய நாட்டில் இப்படித்தான் தொழில் நடக்கும். இஷ்டமிருந்தால் வாங்கு, இல்லாட்டி போ என்கிறார்கள் போலும்.

  29. //Whirlpool washing machine, aqua guard water purifier தொடங்கி butterfly electric stove வரை எல்லாவற்றிலும் கஸ்டமர் சர்வீஸ் பிரிவோடு மல்லுகட்டுவதையே நாங்கள் part time job-ஆக வைத்திருக்கிறோமாக்கும். :) ))//

    எனக்கு தெரிஞ்சு அக்வாகார்டு மட்டும்தான் இருந்தது. இப்போ லிஸ்டு பெரிசாயிடுச்சு போல. எஞ்சாய் பண்றீங்க போங்க. :)
    அதான் தலை இப்போ எல்லாம் ரொம்ப பிஸி போல.

    லக்ஷ்மி BSNL ஐப் பொறுத்தவரை எனக்கு இரண்டே சந்தேகம் மட்டுமே. கனெக்ஷன் அடிக்கடி டிஸ்கனெக்ட் ஆகிறதா என்பது மட்டுமே. அப்புறம் பில்லிங் செலுத்தும் வசதி. இதில் க்ளியர் ஆகி விட்டால் நான் ஏர்டெல்லிற்கு டாட்டா சொல்லி விடுவேன்.

    பாரி அரசு குடும்பஸ்தர் ஆன பின்பு அதிகம் பார்க்க முடிவதில்லை. :)

  30. நன்றி கதிர் கேபிள்சங்கர் வடுவூர்குமார்.

    எனது நண்பர்களிடமும் தெரிந்தவர்களிடமும் நான் சொல்வது என்னவென்றால் அவர்களது இணைப்பைத் துண்டிப்பதுதான் அவர்களுக்கு நாம் தெரிவிக்கும் தார்மீக எதிர்ப்பு.

    கிரிஸ்ஸும் அதைத்தான் வலியுறுத்தியுள்ளார்.

  31. agent000 says:

    there is a big rival in choolai, among students

  32. Maduraikaran says:

    No problem at all in BSNL. Instead of relying these private service providers, BSNL is far better.

    Similary somebody should collect information on Loans provided and collected by Pvt. Banks and Public sector banks.

  33. நந்தா, கனெக்ஷனில் ஒரு பிரச்சனையும் இல்லை. கிட்டத்தட்ட 8 மாதமாய் உபயோகிக்கிறோம். ஒரே ஒரு நாள் கனெக்ஷன் படுத்துவிட, தொலைபேசியில் ப்ரியன் உதவ நாங்களே சரி செய்துட்டோம். நாங்கள் பில்லை ஐசிஐசிஐன் ஆன்லைன் வசதி மூலம் செலுத்துகிறோம். ஒரு பிரச்சனையும் இல்லை இதுவரை.

    சண்டைகளை என்ஜாய் செய்யறது… ஹ்ம்ம்.. அது வாழ்வின் ஒரு அங்கம்னு ஆயிருச்சு நந்தா. தவிர்க்கவே முடியறதில்லை. அதுலயும் வாஷிங் மிஷினே மாற்றி விடலாம் என இருக்கிறோம். அதுல அந்தளவுக்கு பிரச்சனைகள். ஒரு நாள் வீட்டுக்கு வரப்ப அதை ஓடவிட்டு காமிக்கறேன், அந்த சத்தத்தை கேட்டால் அலறி அடிச்சு ஓடிருவீங்க. ரெண்டு தரம் சர்வீஸ் பண்ணினப்புறமும் கூட அப்படியிருக்கு, .. :( ((

  34. BhavaniShankar says:

    என்னை பொருத்த வரைக்கும் BSNL unlimited சிறந்தது. ஆனால் வேகம் 256kbps மட்டுமே, 750 மாதத்திற்கு. வரி உட்பட 900 வரும். ரெண்டு வருஷத்துல 3-5 முறை connection பிரச்சனை வந்திருக்கும். அவ்ளோதான். இது சென்னை நிலவரம். மற்ற ஊர் பத்தி தெரியல.எனக்கு தெரிஞ்ச வரைக்கும் ப்ச்ன்ல் தொழில்நுட்பம் நல்லவாவே இருக்கு. அத செயல் படுத்தற ஆளுங்க தான் சரி இல்ல.ஏதோ அவங்க சொத்த எழுதி கேக்ற மாதிரி சலிச்சுக்குவாங்க. ஆனா முன்னாடி இருந்ததுக்கு இப்போ தேவல.

  35. arun says:

    dear friend…,

    this speed reduing technique is to promote their new plan of speed on demand service. that is if u hav paid more like 50,100, according to plan speed will be increseed like booster cards in prepaid cell networks………these r all the indirect methords of incresin the bucks for unlimted plans

  36. ரொம்ப அநியாயம் பண்றானுங்க!
    இந்த மாதிரி ஏதாவது பண்ணனும்!

    இதப்பாருங்க!
    http://cybersimman.wordpress.com/2009/01/18/

  37. வணக்கம்!
    நான் BSNL Broadband வாடிக்கையாளர்.சென்னையில் பி.எஸ்,என்.எல் பிராட்பேண்ட் அறிமுகம் செய்த பொழுது அன்லிமிடெட் பிளானில் சேர்ந்த முதல் நபர். முதலில் 900 ரூபாயாக இருந்தது.ஒரு சில மாதங்களுக்கு முன்பு 750 ரூபாயாக குறைத்து விட்டார்கள். ஆரம்பத்திலிருந்தே 256 kbps ஸ்பீட் கிடைக்கிறது.நான் 24 மணி நேரமும் ஆன்லலைனில்
    இருக்கிறேன். பிரேக் டவுன் கிடையாது. வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை செர்வர் பிராபளம் வரும். ஒரு நாளில் சரியாகிவிடும். பிரச்சனையே இல்லை. பிரைவேட் காரன் அத்தனை பேரும் பந்தாவாக விளம்பரம் செய்து ஏமாற்றுகிறான். பிராபளம் என்றால் ஒருபயலும் பதில் சொல்ல மாட்டான். பில் மட்டும் வரும். BSNL னில் சம்பட்டப்பட்ட எக்சேஞ்சுக்கு போன் பண்ணினால் அன்றே சரி செய்து விடுகிறார்கள். DOT காலத்து கசப்பான அனுபவங்கள் இப்போது BSNLல் உங்களுக்கு கிடைக்காது. அப்ளை செய்த 5/6 நாட்களில் இணைப்பு கிடைத்து விடும்.

  38. I am from Erode, I have used BSNL unlimitted 750 cplus at home (rural area 10km away from erode) for last 8 months. I have got connection in 2 weeks, The first week i got telephone connection and the next week i got internet connection. Often I pay the previous month’s bill at the time of next bill date. Almost I could use the connection after 20 days from the last month’s due date with fine amount Rs.20 extra. The service is good. But the technicians at BSNL are not updated with current plans and other technical issues here. I have faced atleast a problem (during that time 1 or 2 days no connection) in a month in BSNL, they take some time to rectify it. Thats all!

    Now i got airtel service this month at the center of erode, the same unlimitted plan. I havent find any difference in speed and service. It is also good here. But now only i know this 25GB limit problem. But in airtel i got connection with in a day. Only Rs.1000 deposit is enough for connection and the rest is just bill. But in BSNL you have to pay the amount for modem either in installment or bulk.

  39. கிரி says:

    எனக்கும் இந்த கஸ்டமர் கேர் கூட சண்டை போட்டே பாதி வாழ்க்கை போய்டும் போல இருக்கு..

    நல்லா பதிவுங்க நந்தா..இதில் உள்ள விவரங்கள் மற்றும் பின்னூட்டங்கள் பல தகவல்களை எனக்கு கூறி இருக்கிறது

  40. நல்ல பதிவு.

    தமிழகத்தில் முதன் முதலில் செல்லுலார் சேவை ஆரம்பித்தது பிபிஎல் நிறுவனம். இவர்கள் போஸ்ட் பெய்ட் இணைப்புகளுக்கு முதலில் இன் கமிங் இலவசமாக கொடுத்தார்கள். திடீரென இன் கமிங்க்கிற்கு காசு என்று மாற்றினார்கள். அப்போது தான் தனது சேவையை ஆரம்பித்திருந்த ஏர்செல் இன்கமிங் இலவசம் என்றது. அப்ப விழ ஆரம்பிச்ச பிபிஎல் அதுக்கு அப்பறம் எழுந்திரிக்கவேயில்ல. எல்லா வாடிக்கையாளர்களும் மாறிட்டாங்க.
    இது தான் தனியார் நிறுவனங்களுக்கு சரியான பாடமாக அமையும்.
    இப்போது ஏர்டெல் நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்றினைந்து அந்நிறுவனச் சேவையைப் பயன்படுத்துவதில் இருந்து விலகினால் போதும். அவர்களது விற்பனைப் பிரதிநிதிகள் என்ன காரணத்தால் வடிக்கையாளர்கள் விலக இருக்கின்றார்கள் என தங்கள் மேலாளர்களுக்கு சொல்லுவார்கள் இதன் மூலம் இது போன்ற கட்டுப்பாடுகளை நீக்க ஏர்டெல் நினைக்கலாம்.

    BSNL நிறுவனத்தின் சேவை நன்றாக இருக்கின்றது என நண்பர்கள் பலரும் சொன்னார்கள்.
    விரைவில் கேபிள் மூலம் இணைய வசதி வரும்.

    தஞ்சையில் இணைய வசதி குறித்து ஒரு நண்பர் கேட்டிருந்தார். அவருக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் என்னை தொடர்புகொள்ளச் சொல்லுங்கள். நான் உதவுகிறேன்.

  41. broadpriyan says:

    For BSNL Broadband Services inThanjavur Please Conduct : Technical information : 04362-275400, Commercial Information : 04362-231198

  42. மதிப்பிற்குறிய நந்தா அவர்களே!

    உங்களின் இந்த படைப்பு வெறும் தகவலாக அல்லாமல், ஏமாற்றப்படும் நுகர்வோரின் உள்ளத்தின் வலியை வெளிப்படுத்தும் வண்ணம் அமைந்தது..

    தகவலுக்கு மிக்க நன்றி…!

    இப்படிக்கு….

    ஏமாற்றும் ஏர்டெல்-லால்..ஏமாற்றப்பட்டவன்..
    பிரேம்குமார்

  43. buhari says:

    ஏர்டெல்லின் இந்த அறிவிப்பு உண்மையானது. அதிக பட்ச பயன்பாடு
    25ஜிபியாம். சமீபத்தில் எனக்கு அந்தப் ஸ்பீடு பிரச்சினை வந்த போது,
    வேறு வழிகளைப் பயன்படுத்தி அறிந்து கொண்டேன். உங்களிடம் கனெக்‌ஷன்
    எடுத்த அப்ளிகேஷன் இருந்தால் கோர்ரில் கம்ப்ளைண்ட் இடவும்.
    core.nic.in
    இது ஒரு இலவச கவர்மென்ட் நுகர்வோர் மன்றம். நோட்டீஸ் அனுப்பி
    விளக்கம் கேட்பார்கள். நோட்டீஸ் சென்றாலே அலறி விடுவார்கள்.
    இது மட்டுமின்றி செபியிடம் புகார் செய்யலாம். பிரைம் மினிஸ்டர் மற்றும்
    ஜனாதிபதிக்கும் இமெயில் மூலம் புகார் அளிக்கலாம்.காவல்துறைக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் இமெயில் மூலம் புகார் பதிவு செய்யலாம். ஏதாவது ஒன்று நடந்தே தீரும் அல்லவா

  44. Kumari Wimax says:

    Great website. It was pleasant to me.

  45. இது போலதான் இங்க டயலக் ப்றோட்பாண்ட்டும் . ஏர்ட்டெல் பரவாயில்ல, அரைவாசியாத்தான் குறைக்குது வேகத்தை. ஆனா டயலக் மிக மிக மோசம். ஒரு கஸ்ட்டமர் சர்வீஸ் ஆபீசர் சொன்னார், குறிப்பிட்ட தொகைக்கு பிறகு அதனது வேகம் 3ஜி வேகத்தில இருந்து ஜி.பி.ஆர்.எஸ் வேகத்துக்கு வந்திடும் எண்டு. சரியாத்தான் இருக்குது. நான் இப்ப இண்டர்நெட் கபே க்கு தான் போய்க்கொண்டிருக்கிறேன்,அடுத்த பில் திகதி வரும்வரை பல்லை கடித்துக்கொண்டிருக்கிறன்.

  46. Jegan says:

    Hi,
    I am using bsnl broadband Rs.750 unlimited plan.
    I think bsnl is a best service provider.
    If any problem in broadband with in a day the problem will be solved.
    My best advice bsnl is best compare then other network.

  47. BBG says:

    That was great information. You have done a good job communicating your message. Keep up the good writing.

  48. surya says:

    சார் airtel ரொம்ப மோசம் சார்.

  49. surya says:

    சார் நான் airtel mobile கனெக்சன் யூஸ் பண்ணும் போது தீடீர்னு ரூ.50 ரூ.100 பணம் குறையும்.காஸ்டமர் கேர்க்கு போன் பண்ணி “சார் நிங்க AIRTEL LIVE ல இருந்து game,apps,songs,ringtone இல்ல ஏதே ஓரு கருமத்த டவுண்லோடு செய்ந்ங்க அதனலா கணவாண் அவர்களே பணம் எடுத்துக்கிட்டோம் ரொம்ப மரியதையா சொல்லூவங்க.நாம கரைக்ட பாய்ண்டா பேசின உடனே லைன காட் பண்ணிடுவாங்க மறுபடியும் கால் பண்ணிணா கஸ்டமர் கேர்க்கு லைன் கிடைக்கவே கிடைக்காது”ரொம்ப ரொம்ப நல்ல கம்பெணி.பல தடவை இதே மாதிரி பிரச்ணை பண்ணுங்க உடனே அந்த சிம்கார்டை ஆத்திரம் தீர கல்லை வைத்து உடைத்து சாக்கடை போட்டுட்டு இப்ப aircel use பண்ணுரன் இப்ப no பிரப்ளாம்.

Leave a Reply