உச்சகட்ட வெறுப்பாய் இருக்கின்றது. கண்முன்னே பரந்து கிடக்கும் கையாலாகாத்தனம் வாழ்வின் இருப்பை கேலி செய்துக் கொண்டிருக்கிறது. எவரைத்தான் நம்புவது எனும் கேள்வி ஒன்று மனதினுள் தொடர்ந்து ஊசலாடிக் கொண்டிருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாய் எல்லா பிரச்சினைகளுக்கும் பதிலாய் ஒரே ஒரு பதிவு போடுவதோடு நின்று போய்விடுகிறோமே(னே) என்ற எண்ணம் என்னை ஓர் குற்றவாளியாய் நிறுத்தி வைத்திருக்கின்றது.
அரசியல் சதுரங்கக் காய் நகர்த்தல்கள், ராஜதந்திரம், சாணக்கியத்தனம் இன்னும் எத்தனை எத்தனையோ அரிதாரங்கள் பூசிய வார்த்தைகளின் பின்னே கலைஞரின் செயல்கள் மீண்டும் ஒரு முறை விவாதிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றது. நடு நடுவில் “கலைஞரே ஏமாந்து விடாதீர்கள்… இது அவர்களின் திசை திருப்பல்” என்பது போன்ற குரல்கள் உயர் எழும்பிக் கொண்டிருக்கின்றன. வை.கோ வைக் கைது செய்ய கலைஞர் என்னமோ ஜெ அம்மையாரின் அறிக்கையால் பயங்கரமாய் நிர்ப்பந்திக்கப் பட்டாற் போலவும், அந்த சூழ்ச்சியில் கலைஞரும் தெரியாமல் வீழ்ந்து விட்ட மாதிரியும் பலர் பேசி விட்டுச் சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் உண்மையில் கலைஞர்தான் இப்படி வை.கோ கைது மூலமாய் பிரச்சினையை மொத்தமாய் திசை திருப்பிக் கொண்டிருக்கிறாரோ என்று பலமாய் தோன்றுகிறது. மீண்டும் ஒரு முறை ஈழத் தமிழர் விவகாரம் படு கேவலமான முறையில் அரசியலாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. தங்கபாலு, ஞானசேகரன் இளங்கோவன் என எல்லா காங்கிரஸ்காரர்களும் என்ன சொல்லியாவது தான் ராஜீவ் காந்தியின் பொருட்டு கடும் கோபத்துடன் இருப்பது போலக் காட்டிக் கொள்ள ரொம்பவே பிரயத்தனம் செய்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது தொடர் அறிக்கையை படிக்க படிக்க கெட்ட வார்த்தைகள்தான் தோன்றுகிறது.
உச்சநீதி மன்ற உத்தரவுக்குப் பின்பும் காவிரியை திறந்து விட மறுக்கு கர்நாடக காங்கிரஸ் முதலமைச்சர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கூட அவர்களைக் கைது செய்யலாம் என்று திருவாய் மலர்ந்தருளியுள்ளார். ஒரு வேளை சேரன், சீமான், அமீர் உள்ளிட்டோர் காவிரி பிரச்சினையைப் பற்றியும் கோடு காட்டிப் பேசியிருக்கா விட்டால் “எனக்கென்ன போச்சு, எப்படியோ அடிச்சுக்கிட்டு சாவுங்கடா” என்று அவர் தேமேன்னு உட்கார்ந்திருக்கலாம். அறிக்கைகளை விட்டவர்களில் எத்தனை பேர் ஈழத்து தமிழர்களின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுக் கொண்டிருக்கும் கொடுமைகள் அடங்கிய சி.டியை பார்த்திருப்பார்கள் என்று தெரிய வில்லை.
மனதின் ஏதேனும் ஓர் மூலையில் ஈரம் இன்னமும் கொஞ்சமேனும் ஒட்டிக் கொண்டிருப்பவர்கள் இந்த பிரச்சினையை இவ்வளவு மோசமாய் கையாள்வார்களா என்று தெரிய வில்லை. வை.கோ கைது, சீமான் கைது, அமீர் கைது, திருமாவளவன் கைது, காங்கிரஸ் மனித சங்கிலிக்கு ஆதரவு தருகிறது.(கலந்துக் கொள்ளுமா என்றெல்லாம் தெரியவில்லை) அப்புறம் என்ன கருமத்துக்குடா மனித சங்கிலி போராட்டம்னுட்டு. ஊரை ஏமாத்தறதுக்கா என்று சத்தம் போட்டு கத்த வேண்டும் போல் இருக்கிறது. எவ்வளவு மழை பெய்தாலும் இன்று மனித சங்கிலி நடந்தே தீரும் என்று உணர்ச்சி வசப்பட்டு டயலாக் விட்டால் மட்டும் போதுமா? ராஜினாமா கடித்தத்திற்கே ஒரு மரியாதையும் இல்லை.
சரி இந்த மனித சங்கில் தாம்பரம் தாண்டி, வண்டலூர் தாண்டி நீண்டு விட்டது என்றே வைத்துக் கொள்ளுவோம்.அப்போ மட்டும் என்ன நடந்து விட முடியும் என்று தெரிய வில்லை. ஈழத் தமிழர் விஷயத்தில் ராகுல் காந்தியின் நிலைப்பாடு ஒரு மாதிரியாய் இருக்கின்றது. சோனியா பட்டும் படாமலும் நடந்து கொள்கிறார். பிரியங்காவின் நிலைப்பாடு ராகுல் காந்திக்கு எதிராய் இருக்கிறது. தமிழக காங்கிரஸ் தத்தமது பங்குக்கு மூவர் காலடியிலும் இடம் பிடிக்க மாற்றி மாறி கருத்துக்களைச் சொல்லி சொல்லி இடம் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஜெயலிதா அம்மையார் இந்த விஷயத்தில் எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற் போல் நடந்துக் கொண்டிருக்கிறார். “நளினி ஓர் தியாகி போல அவர்களை விடுதலை செய்ய இத்தனை கோரிக்கைகள் எழுகின்றன” என்று முழங்கி இருக்கின்றார். நளினி எத்தனை வருடங்களாய் சிறையில் இருந்துக் கொண்டிருக்கிறார் என்று தெரிந்துதான் பேசுகிறாரா இல்லையா என்று சந்தேகப் பட வேண்டியதாயிருக்கிறது. சீமான், அமீரைக் கைது செய்ய கோரி இவ்வளவு ஆவேசப்படும் அம்மையார் மீனவர்களை இலங்கை அரசாங்கம் கொன்றுக் குவித்த போது கூட இவ்வளாவு ஆவேசப்பட்டிருக்கிறாரா என்று தெரிய வில்லை. அப்பவும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது, அரசை கலைக்க வேண்டும் என்று தான் சொல்லிக் கொண்டிருந்தார். எழவு வீட்டில் கூட தான்தான் பிணமாய் இருக்க வேண்டும் எனும் புத்தி வேறு என்ன செய்ய?
இனி தமிழக அரசு என்ன செய்யப் போகின்றது. கலைஞர் மனித சங்கிலியை விட கைதுக்களில்தான் ஆர்வம் காட்டிக் கொண்டிருக்கிறார். அவருக்கும், ஜெயலலிதாவிற்குமிடையே “யார் பெரிய ராஜ தந்திரி” எனும் சறுக்கு மர விளையாட்டு நடந்துக் கொண்டிருக்கிறது. இந்த விளையாட்டில் ஜெயிப்பது யாராயிருந்தாலும் தமிழர்கள் தோற்றுப் போகப் போகின்றார்கள்.
இன்னும் சில மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் வரப் போகின்றது. காங்கிரஸ்காரர்கள் எவராவது ஓட்டுப் போடுங்க என்று கேட்டுக் கொண்டு வீதிகளில் நுழைந்தால் விளக்குமாறைக் கொண்டுதான் வரவேற்க வேண்டும். பா.ஜ.க – அத்வானியோ “இந்திய தேசிய பாதுகாப்பு” என்ற பெயரில் அழித்தெடுப்பை பல காலமாய் செய்துக் கொண்டிருப்பவர்கள். அவர்களுக்கு நமது தர்ம நியாயங்கள் புரியப் போவதில்லை.
ஏன் பாராளுமன்ற தேர்தலைப் பற்றி பேச வேண்டும். அடுத்த சட்ட மன்ற தேர்தலின் போது ஈழத் தமிழர்கள் விஷயத்தில் இவர் நியாயமாய் நடந்துக் கொள்வார் என்று சொல்லி எவரைத் தேர்ந்தெடுப்பது. தி.மு.க உண்மையில் திராவிட கட்சிதானா எனும் ஐயம் அவர்கள் உத்தப்புரம் மற்றும் ஈழ விவகாரத்தில் காத்து வரும் மௌனம் மற்றும் இரட்டை நிலைப்பாடுகள் கிளப்பி விட்டிருக்கின்றன. ஜெ. அம்மையார் சத்தியமாய் ஆதரவாய் நடந்துக் கொள்ள மாட்டார். பழிவாங்குதல் நடவடிக்கைக்கே அவருக்கு நேரம் சரியாய் இருக்கும். இவ்வளவு நடந்த போதும் மாநாடு நல்ல படியாய், வெற்றிகரமாய் முடிந்தது என்று அறிக்கை விடும் தே.மு.தி.க, தான் என்ன செய்து கொண்டிருக்கிறோ என்று தெரிந்துதான் செய்து கொண்டிருக்கிறாரா என்று எண்ணத் தோன்றும் வை.கோ, எவரை நம்பி ஓட்டளிப்பது….
எல்லாவற்றிற்கும் மேலாய் பிரணாப் முகர்ஜியின் பேச்சு.
“இலங்கையில் நடக்கும் சண்டையால், அங்குள்ள தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வருவதை நாங்கள் விரும்பவில்லை. இலங்கை நிலவரத்தை நாம் கட்டுப்படுத்த முடியாது என்பதால், அகதிகள் இந்தியாவுக்கு வராமல் பார்த்துக் கொள்ளும்படி இலங்கை அரசை கேட்டுக் கொண்டுள்ளோம்.
புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே நடக்கும் சண்டையால் இடம் பெயரும் மக்களுக்கு உணவும், தங்குமிட வசதியும் அளித்து அவர்களை பாதுகாக்க வேண்டியது இலங்கை அரசின் பொறுப்பு. இலங்கையில் நடக்கும் சண்டையால், அப்பாவித் தமிழர்களின் நலனும், உரிமையும் பாதிக்கப்படக் கூடாது என தெரிவித்துள்ளோம். இலங்கை இனப் பிரச்னைக்கு ராணுவ ரீதியாக தீர்வு காண முடியாது. ஐக்கிய இலங்கையின் வரையறைக்கு உட்பட்டு அரசியல் ரீதியாக தீர்வு காண வேண்டும். அதே நேரத்தில், தமிழர்கள் உட்பட சிறுபான்மையினர் அனைவரின் சட்டப்பூர்வமான உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்.
மேலும், இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் ஜனநாயக நடவடிக்கைகளைத் தொடர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளோம். சர்வதேச கடல் எல்லையை இந்திய மீனவர்கள் மதிக்க வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்ளும் அதே நேரத்தில், இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதையும் இலங்கை கடற்படை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளோம்”
இலங்கை பிரச்சினை என்பது பொறுமையாய் பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சினை. அதை வேறு எந்த வகையிலும் கையாள முடியாது…. ப்ளா ப்ளா ப்ளா…. காங்கிரஸ் அரசு இனி வரும் காலத்தில் இலங்கை பிரச்சினையில் ஒன்றையும் கிழித்து விடப் போவதில்லை என்பதை இதை விட அழகாய் பூசி மெழுகப்பட்ட வார்த்தைகளால் சொல்லி விடப் போவதில்லை.
என்ன சொல்லி திட்டினால் உங்களுக்கு உறைக்கும். போங்கடா மயிரானுங்களா….
‘இந்தி’தேசியம் பேசும் பன்னாடைகளுக்கு தமிழ் உணர்வை கற்க சில யோசனைகள்
——————————————————————–
1)ஒரு மாதம் இன உணர்வை கற்க சிங்களவனிடமோ அல்லது மாராத்திகாரனிடமோ அல்லது கன்னடகாரனிடமோ ஒரு புரோகிறாம் போல செட் பண்ணி அனுப்பி வைக்கலாம்.
2)மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் உடன் அனுப்பலாம்..
3)தமிழ் ரத்தம் ஓடுகிறதா என ப்ள்ட் செக்கப் செய்யலாம்..
4)தமிழர் வேறு மாநிலங்களில் தாக்க படும் போது மக்கள்காவல் படையாக தமிழர்களை காக்க இவர்களை நியமிக்கலாம்
5)வடக்கத்தியானுக்கு விளக்கு பிடிக்கும் வேலைக்கு நியமிக்கலாம்..
6)இந்தி கம் தமிழ் டிரான்சுலேட்டராக கூலி வேலைக்கு நியமிக்கலாம் அப்போது தான் தமிழர்களை எப்படி மதிக்கிறார்கள் என தெரியவரும்
–இத்தனைக்கு பிறகும் இவர்கள் சரிவர வில்லை என்றால் மொத்த ரத்ததையும் உறிஞ்சிவிட்டு இந்திகாரன் ரத்ததை ஏற்ற வேண்டும்!
தமிழ்தேசியன்
கடந்த 2 தினங்களாக நடைபெறும் சம்பவங்களின் போக்கு தமிழனை மீண்டும் இ.வாயனாக மாற்றும் முயற்சிதான்.சிறப்பாக
எழுதியிருக்கிறீர்கள்.
தமிழ் தேசியன், கோவை சிபி எவ்வளவுதான் எழுதினாலும் மனம் அடங்க மறுக்கிறது. சென்னையில் இப்போது அடித்துக் கொண்டிருக்கும் மழையில் மனித சங்கிலி இடம் தெரியாமல் போனாலும் போகக் கூடும். வெற்றியடைந்தாலே மதிக்காத மத்திய அரசு இப்போ மட்டும் என்ன செய்து விடும்.
nanda,nondu poi irukkireergal.eelam varakkoodadhu enpathil singalavanai vida inge ulla congress bjp ,cpm,alum varga kumbalukku than adhiga akkarai.ivargalukku val pidikkum dmk ,admk nilaimakku eththa madhri vesam podaranga.puvi sar arasiyal nalangalukku munnal manithabamavathu vengamavathu.
What you have said is correct. Bloody politicians made this as fully to their politics. Whenever some of the ministers gave some statements for us we got delighted and expected that something is really going to happen. But each time its just statements.
I dont want to use the bad words, so i just want to finish it here.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாய் இப்படி அவ்வப்போது நடப்பதும், பின்பு அடங்கி விடுவதும் எங்களுக்கு பழக்கமாகி விட்டது. இது போன்ற விஷயங்கள் எங்களுக்கு இப்போதெல்லாம் கோபத்தை வரவழைப்பதில்லை. மறுத்துப்போய் விட்டிருக்கிறோம்.
உங்கள் கோபம் கூட கூடிய சீக்கிரத்தில் அடங்கி விடலாம். நன்றிகள் உங்களுக்கு.
உங்களது ஆதரவுக்கு நன்றி.
உங்களது கோபம் நியாயமானதே. என்ன செய்வது எதையும் அரசியல்லாக்கியே பழக்கப் பட்டுவிட்டார்கள் உங்களது நாட்டில். (எனக்கு இப்போது எல்லாம் உங்களது) என்றுதான் வருகிறது. சகோதர தேசம் என்ற எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்துக் கொண்டு வருகிறது.
நந்தா,
நம்முடைய இருப்பும், வாழ்வதற்கான அடிப்படை நியாயங்களுமே இன்று கேள்விக்குறியாகி வரும் சூழலில் இந்த ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகளின் நிலைப்பாடுகளும் அவர்களுக்கு ஒத்து ஊதும் உடன்போக்கு பொறுக்கிகளும் நம்மை ஆளும்படியான சூழலை நினைத்தால் மனம் வெதும்புகிறது.
மிக்க வருத்தத்துடன் நித்யகுமாரன்
” Manithane un unarvugalai nee vali nadthu pin ulagam unnai arindu kollum” Ungal unarvugalkku nan thalai vanangugeren Tholare…
தரமான பதிவு.
“பிச்சைக்காரன் பார்த்திருக்க பெருமாட்டிக்கு பால்வார்த்தாராம்” என்ற பழமொழி ஞாபகத்துக்கு வருகிறது.
எந்தவகையிலாவது உலகத்தமிழ் உணர்வுகள் ஒன்றிணைந்து இலங்கைத் தமிழ் உணர்வுகளுக்கு உயிர்கொடுத்தால் போதும்.
பொருத்திருந்து பார்ப்போம் என்னதான் நாடக்கப்போகிறது என்று.
பதிவுக்கு நன்றி.
வணக்கம் நந்தா,
தங்கள் பதிவு சிலவாரங்கள் முன் பதியப்பட்டிருந்தது.ஆனால் எனது கருத்து தாமதமாகவே வருகிறது.
தங்கள் நியாயமான ஆதங்கமும் ஈழத்தமிழர் மீதான பற்றையும் ஒரு ஈழத்தமிழச்சியாகிய நான் தலைவணங்கி வரவேற்கிறேன்.
30ஆண்டுக்கும் மேலான துயரம் எங்களது. சிங்களவர்கள் தமிழரை என்றுமே வாழவிட்டதில்லை. எனக்கு தற்போது 34வயது. நினைவு தெரிந்த நாள் முதல் எங்கள் ஊரும் உறவுகளும் சிங்களத்தின் இனவெறிக்கு பலியாகிக் கொண்டேயிருக்கிறார்கள்.
இந்தியா எங்களைக் காக்க வருமென்று 87ம் ஆண்டுக்கு முதல் சிறுவர்களாய் வானத்தைப் பார்த்திருப்போம். தேவதூதர்களாக இந்தியா வந்திறங்கி எங்களை சொர்க்கத்திற்கு அழைத்துப்போகுமென்று. ஆயினும் நாம் பரிசாகப்பெற்றது கண்ணீரையும் உறவுகள் இழப்பையும் தான்.
அண்மைய கலைஞரின் மாற்றம் கொஞ்சம் ஆசுவாசப்பட வைத்துள்ளது. ஆயினும் அண்மையில் அவரது மாறுதல் அச்சத்தை தருகிறது. நாங்கள் மீண்டும் ஏமாற்றப்படுவோமோ என்பதுதான்.
- சாந்தி -
****
என்ன சொல்லி திட்டினால் உங்களுக்கு உறைக்கும். போங்கடா மயிரானுங்களா…****
உங்களுடைய நேர்மையான ஞாயமான நயன்மையான மாந்தநேய அறச்சினத்தில் இன்னும் கூடக் கடுமையாகக் கூறலாம்!
தொடர்புடைய எவருக்கும் உறைக்கப் போவதில்லை!
அவர்களுக்கு உறைக்கின்ற வகையில் என்ன செய்வது என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.
நந்தா..
எங்கே ஆளையே காணோம்.. இப்போ நிறைய விஷயங்கள் இருக்கு.. நீங்க எழுதனும்.. உங்களிடமிருந்து பதிவுகளை எதிர்பார்க்கிறேன்..
இதுவே ஹிந்திகாரனுங்களுக்கு நடந்தா இந்தியாவில் மிக பெரிய போராட்டம் நடைபெற்றிருக்கும், சாவது தமிழன்தானே இந்தியாவுக்கு ஏன் அக்கறை, தமிழகத்தில் உள்ள தமிழர்களை அடித்து கொண்றால்கூட இந்தியா கவலை படாது, தமிழகத்தில் உள்ள வளங்கள் வேண்டும், மண் வேண்டும் ஆனால் நாமும் நம் மொழியும் வேண்டாதவர்கள், நம்மவர்களை முழுவதும் அழிக்க முடியாது உலகநாடுகளிடம் இருந்து எதிர்ப்பு வரும் அதனால் முடிந்தவரை மதம் மாற்றம் போல நம்மளை மொழிமாற்றம் செய்ய முயச்சிக்கிறார்கள்,தில்லிகாரன் நம் தமிழகத்தில் உள்ள பல துறைகளில் நம் தமிழை அழித்துகொண்டு இருக்கிறான், சிங்களன் நம் தமிழ் இனத்தவரை அழித்துகொண்டு வருகிறான், நம்மையும் நம் மொழியையும் பாதுகாத்துகொள்ள நமக்கும் ஒரு தனி நாடு வேண்டும், நம்மளை விட சிறிய நாடுகூட நல்ல நிலையில் உள்ளன, ஏன் நம்மால் மட்டும் முன்னேற முடியாது, இந்தியா பலதுறைகளில் முன்னேறினாலும் அது ஹிந்தியையே முதன்மையாக பறைசாட்டுகிறது, இதனால் நம் தமிழ்மொழிக்கு ஒரு அடையாளமே இல்லாமல் போய்விடும், அப்படிதான் நடந்துகொண்டு இருக்கிறது, வரும் சுதந்திர தினத்தையும், குடியரசு தினத்தையும் கருப்புதினமாக கொண்டாடுவோம்,
மேலும் ஜன கன மன கதி கீழ விழுந்தா என்ன கதி,
வந்தே மாத்திரம் வந்ததே மோத்திரம்னு இப்படி புரியாத தேசிய கீதம், பாடல் தேவையில்லை இனிவரும் காலங்களில் நம் தாய்மொழியில் இயற்றிய பாடலை பாடுவோம், ஆண்மையே இல்லாத இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரானவன் அல்ல ஆனால் தனித்துவாழ்வதே நல்லது, உதாரணத்துக்கு ஐரோப்பாவைபோல் வாழலாம்
கடைசியாக ஒன்று,
ஆங்கிலம் ஒரு வர்த்தக மொழியாக இருந்து வருகிறது அதை கற்பதில் தவறு இல்லை ஆங்கிலத்தை கற்று நன்கு சம்பாதிப்போம் நிற்க ஆனால் தமிழகத்தில் நாம் வாங்கும் ஒவ்வொறு பொருள்களிலும் தமிழ் இருந்திட வேண்டும், இல்லை என்றால் கேள்வி எழுப்ப வேண்டும், தேவைப்பட்டால் போராட்டமும் செய்ய வேண்டும், என் பதிவை படித்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி
உலகத் தமிழனுக்காக ஈழத்தமிழனால் ஆரம்பிக்கப் பட்ட யுத்தம் உலகத் தமிழனாலும் தோற்கடிக்கப் பட்டுள்ளது. எந்த ஒரு ஈழத்தமிழனும்(நானும்) தனது இறுதி மூச்சு இருக்கும் வரை அவ்வுலகத்தமிழனை மறக்கவேமாட்டான்.(இது புரியவேண்டியவர்களுக்கு புரியலாம் இல்லையேல் புரியாமலும் போகலாம். எது எவ்வாறாயினும் முடிந்தது முடிந்ததுதான்)
நன்றி.
ஈழத் தமிழர்களில் ஒருவன்