தனிப்பட்ட முறையில் உங்களுக்கு பிடித்திருக்கலாம் அல்லது சுத்தமாய் பிடிக்காமல் போய் இருக்கலாம். ஆனால் இந்திய கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத ஆட்டக்காரர் மற்றும் கேப்டன்களில் கங்குலியை புறந்தள்ளி விட்டு எவரும் பேசிவிட முடியாது. கடந்த சில மாதங்களாகவே எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்று எதிர்பார்க்கப் பட்டதுதான் என்றாலும் அறிவிப்பை வெளியிட்ட போது ஒரு கணம் இந்திய ரசிகர்கள் அதிர்ந்துதான் போனார்கள்.
சற்றே மெல்லிய வருத்தத்தையும் கிளப்பியது எனக்குள். ஃபிப்ரவரியில் வலிந்து எப்படியும் நான் 2011 வோர்ல்டு கப் விளையாடப் போவதில்லை, இன்னும் 8 மாதங்களுக்காவது நான் ஒரு நாள் போட்டிகளில் விளையாட விரும்புகின்றேன் என்று சொன்ன பின்பும் இவருக்கான வாய்ப்புகள் ஏனோ மறுக்கப்பட்டே வந்தது. இறுதியாக இரானி கோப்பை போட்டிக்குக் கூட தனக்கு மறுக்கப்பட்ட அனுமதி அவரை இந்த முடிவுக்கு தள்ளியிருக்கிறது.
இது உணர்ச்சி வசப்பட்ட முடிவோ அல்லது சாதக பாதகங்களை அலசி எடுத்த முடிவோ, எதுவாயினும் இனி கங்குலியின் ஆட்டத்தை IPL ல் மட்டுமே (அதுவும் கொஞ்ச நாளைக்கு) பார்க்க வேண்டும் எனும் போது ஒரு கிரிக்கெட் ரசிகனாக இது என்னைப் போன்றோருக்கு மிகப் பெரும் சோகமே. அட என்னய்யா அதான் 20 – 20 டொமஸ்டிக் மேட்சஸ்ல எல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்கு ஆடுவார் இல்லை, அப்புறம் எதுக்கு இப்படி புலம்பறீங்க என்று கேட்கலாம். 20 ஓவர் மேட்சுல 5 அல்லது 6 ஓவர் காட்டு அடி அடிக்க பார்ப்பது எல்லாம் 50 ஓவர் அல்லது டெஸ்ட் மேட்சில் நின்று ஆடுவதற்கு அருகில் கூட வர முடியாதுங்க. அழகான ஆட்ட நுணுக்கங்களை இதில் ரசிக்க முடியாது.
ஒரு ப்ளேயராய் மட்டுமல்லாமல் ஒரு கேப்டனாய் இந்திய அணிக்கு அவர் செய்திருக்கும் பணிகள் பலப்பல. அவரது கேப்டன்ஸியில் சில தவறுகள் இருப்பதாய் சேப்பலால் சில காலம் சர்ச்சைக்குள்ளாக்கப் பட்டாலும், அவரது பணிகளை மறந்து விட முடியாது. யுவராஜ் சிங், கைஃப், சேவாக், ஜாஹீர், நெஹ்ரா, உள்ளிட்ட பலரை வளர்த்தெடுத்த பெருமை அவரைச் சேரும்.
நியோ ஸ்போர்ட்ஸ் சேனல் வைத்திருப்பதில் ஒரு வசதி. எப்போது ஆன் செய்தாலும் இந்தியா ஆடிய ஒரு பழைய மேட்சை அதில் பார்க்கலாம். அய்யோ பொழுது போக வில்லையே என்று கத்த வேண்டிய ஒரு சூழல் இருக்காது. அப்படி பல பழைய மேட்சுகளைப் பார்க்கையில் உள்ளுக்குள்ளிருந்து ஆச்சர்யம் பொங்குவதுண்டு. இப்போது இருக்கும் இந்திய அணியின் பேட்டிங் வரிசையுடன் மனதுக்குள் ஒப்பிட்டுப் பார்த்து, அடப்பாவிகளா இவ்வளவு மோசமா எல்லாம் லைன் – அப் வைத்திருந்தோமா என்று கூவத் தோன்றும்.
சஞ்சய் பாங்கர், சிவ்சுந்தர் தாஸ், ஆகாஷ் சோப்ரா, பதானி, பர்தீவ் படேல், தினேஷ் மோங்கியா, சோதி, ரெய்னா…. என்று இவரது காலத்தில்தான் கணக்கிலடங்கா பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டன. சரியான பேட்ஸ்மேன் / கீப்பர் இல்லாமல் எத்தனையோ மேட்சுகள் மயிரிழையில் வெற்றி வாய்ப்புகளை இழந்திருக்கின்றன. அடித்துச் சொல்வேன் இப்போதிருக்கும் இந்திய அணியின் ஒரு மிகப் பெரிய பலம் ஒரு நல்ல பேட்ஸ்மேன் கீப்பராய் வாய்த்திருப்பது.
அசாருதீனின் காலகட்டங்களில் இருந்தது போன்று 5 பேட்ஸ்மேன், 5 பௌலர், 1 கீப்பர். இந்த கடைசி 6 பேரும் டெய்லேண்டர்கள்,என்ற நிலையை மாற்றியமைக்க இவர் செய்த பரிசோதனை முயற்சிகள் ஏராளம். டிராவிட்டையே கீப்பராய் வைத்து தாக்கு பிடிக்க பார்த்தது எல்லாமெ அதன் ஓர் அங்கம்தான். லார்ட்ஸ் மைதானத்தில் ஃப்ளிண்ட்ஆஃபுக்கு பதிலடி கொடுத்த சட்டை சுழற்றலை அவ்வளவு எளிதில் எவரும் மறந்து விட முடியாது. ஒன் மேன் ஷோ என்பதை ஒரு மேட்சில் நாம் பார்த்திருப்போம். டோரோண்டோவில் ஒட்டு மொத்த இந்திய அணியையும் ஒன் மேன் ஷோ நடத்தி கோப்பையை பெற்று தந்ததை ஒரு மைல்கல்லாய் இவரது கிரிக்கெட் வாழ்வில் சொல்லலாம்.
புள்ளி விவரங்கள், சதவீதங்கள், விகிதாச்சாரங்கள் ஆகியவற்றை எல்லாம் தெளிவாக இன்னும் அதிகமாகவே cricinfo வில் பார்க்கலாம் எனும் போது இந்த சின்ன சின்ன விவரங்கள் தேவையில்லைதான். இருப்பினும் இது ஒரு வசதி எதிரில் ஆள் இருப்பவர் போல அது சூப்பர் இல்லை, இது கலக்கல் இலை என்று மனதார பேசுவது போல் ஒரு சௌகர்யமான சவெளிப்பாடு. 4 பேரு சேர்ந்து கிரிக்கெட் பார்க்கும் போது புள்ளி விவரமோ, பழைய மேட்சுகளை பற்றிய நினைவு கூர்தலோ இல்லாமல் ஒரு இன்னிங்ஸை பார்த்து விடச்சொல்லுங்கள் பார்ப்போம். அடப் போங்க சார் அப்படி இல்லைன்னா அப்புறம் எதுக்கு அந்தக் கருமத்தைப் பார்க்கணும். ![]()
ஒரு சிலரின் ஓய்வு பெறல்கள் மட்டுமே நமக்குள் திடுக்கிடும் உணடர்வுக்ளை ஏற்படுத்துகின்றன. மற்றவைகளெல்லாம் சாதாரண சம்பவங்களாய் இடம் காணாமல் ஓடி விடுகின்றன.
2003-2004 இப்போது நடப்பதைப் போன்ற அதே பார்டர் – கவாஸ்கர் டிராஃபி ஆஸ்திரேலியாவை அதன் மண்ணிலேயே பயம் கொள்ள வைத்த சீரிஸ். ஆஸ்திரேலியாவின் சிறந்த கேப்டன் என்று புகழப்பட்ட ஸ்டீவ் வாகின் கடைசி போட்டி. தன் காலத்தில் 73% க்கு மேல் வெற்றி சதவிகிதத்தை வைத்திருந்த மனிதர் தனது கடைசி சீரிஸை படு மோசமான முறையில் தோற்று விடக் கூடாதே என்று மிகவும் பிரயத்தனப் பட வேண்டியதாய் போயிற்று. அந்த மேட்சில் கங்குலி ஆஸ்திரேலியாவிற்கு ஃபாலோ ஆன் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று அப்போது நினைத்ததுண்டு. (பவுலரைப் பத்தி எல்லாம் யாரு கவலைப்பட்டா?
)அந்தப் போட்டிக்குப் பிறகு ஸ்டீவ் வாகின் கம்பீரமான, மரியாதைகளுடன் கூடிய ஓய்வு பெறல்…
இதுதான் உங்களது கடைசி கேள்வியாயிருந்தால் உங்களுக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகின்றேன் நண்பர்களே, இத்துடன் நான் ஓய்வு பெறுகிறேன் என்று சொல்லி விட்டு உலகக் கோப்பை தொடருடன் வெளியேறிய பிரெய்ன் லாராவின் ஓய்வு….
பாப் உல்மரின் கொலைக்குப் பின்பு பல்வேறு சர்ச்சைகளில் அடிபட்டு, இருந்தாலும் சக மற்றும் எதிர்நாட்டு வீரர்களிடம் பெரும் மதிப்பைப் பெற்று, மைதானத்தை விட்டு கண்ணீருடன் வெளியேறிய இன்சமாம் உல் ஹக்….
இப்படி ஒரு சிலரின் ஓய்வு பெறல் மட்டும் நம் மனதில் அப்படியே தங்கி விடுகின்றது. நானும் காத்திருக்கிறேன் கங்குலிக்கான அந்த நாளுக்காக. நடுவில் அதிசயங்கள் எதுவும் நிகழாமலிருந்தால் இன்றிலிருந்து சரியாய் ஒரு மாதம் கழித்து நவம்பர் 10 ஆம் தேதி பிரியத்துக்குரிய ஒரு விளையாட்டு வீரனை மரியாதையுடன் அனுப்பி வைக்கும் அந்த நாளுக்காக. ஒன்றுமட்டும் நிச்சயம், அன்று போட்டியை டீவியிலும் நேரடியாகவும் பார்க்கும் பெரும்பாலானோர், ஆட்டம் முடிந்து முதல் ஆளாய் கங்குலி மைதானத்தை விட்டு வெளியே வரும் போது தன்னையுமறியாமல் எழுந்து நின்று கைதட்டுவார்கள். அவற்றில் ஒன்று நிச்சயம் என்னுடையதாயும் இருக்கும்.
——————————————-
தனிப்பட்ட முறையில் BCCI யின் ”நான்தான் நாட்டாமை” என்பது போன்ற செயல்பாடுகள் எனக்குள் உச்சகட்ட கோபத்தை அடிக்கடி கிளறி விட்டிருக்கிறது. ட்ரான்ஸ்பரன்ஸி இல்லாத தன்மை, ஊழல், மொக்கைத்தனமாய் தலைவர், கௌரவத் தலைவர் என்பது போன்ற பதவிகளின் பின்னே ஒளிந்தொருக்கும் தனி மனிதர்களின் நாற்காலி ஆசை, குறிப்பிட்ட சில நபர்கள் மட்டும் காலம் காலமாய் அனுபவித்து வரும் அவலம், ஊழல், இத்தனை வருடங்களாய் ஒரு வெப்சைட் இல்லாமலிருந்தது என்று இந்தியக் கிரிக்கெட்டில் மோனோபாலியை முன்னெடுத்துச் சென்ற முழு தவறுகளுக்குமான காரண கர்த்தா BCCI யையே சேரும்.
ICL ல் ஒரு சில விமர்சனங்கள் இருந்தாலும் இந்த மோனோபாலியை உடைத்தெறிய இதுவே சிறந்த மாற்று என்ற விதத்திலும், ICL போட்டிகளை நடத்த கிரவுண்டுகளைத் தரக் கூடாது, டீவி உரிமைகள் வாங்கக் கூடாது, அங்கே விளையாடினால் இந்தியாவிற்காய் ஆட அனுமதிக்கப் பட மாட்டாது என்று ஒரு மூன்றாந்தர சினிமா வில்லன் போல் நடந்துக் கொண்ட BCCI யினால் ICL மேல் ஏற்பட்ட அனுதாபமுமாய் சேர்ந்து ICL கண்டிப்பாய் வெற்றி பெற வேண்டும் என்ற பிரியம் எனக்கு உண்டு.
நாளை ICL ன் 6 வது டோர்ணமெண்ட் துவங்க இருக்கிறது. இது வரை நடந்த பெரும்பாலான போட்டிகளை இருட்டடிப்பு செய்த போதும் இந்த தொடர் எப்படியோ டென் ஸ்போர்ட்ஸில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த போட்டிகளில் IPL ஐப் போல அதிகச் செலவோ, அரை நிர்வாண அழகிகளோ, ஏரியல் வியூ கேமிராக்களோ, அளவுக்கதிகமான பரிசுத் தொகையோ நிச்சயமாய் இருக்கப் போவதில்லை.
இதில் விளையாடும் பெரும்பாலானோர் இன்னும் உலகத்துக்கு சரியாய் அறிமுகமாகாதவர்களே. IPL போல இதில் எல்லா போட்டிகளிலும் 200 க்கு அருகில் ரன்கள் குவியாது. இருந்தாலும் நம் வீட்டுப் பிள்ளைகள் ஆடும் போட்டியைப் போல இவர்களது ஆட்டத்தை நாம் கண்டு ரசிக்கலாம். மெல்ல மெல்ல வளர்ந்து வரும் இவர்கள் செய்யும் தவறுகளை, முயற்சிகளை எட்ட நின்று பார்க்கலாம்.
இன்னமும் மணி கட்ட ஆளில்லாமல் BCCI எனும் பூனை துள்ளிக் குதித்துக் கொண்டுதானிருக்கிறது.
Hi Nandha…
Great to read your post…
Good one…!!!
Dear Nandha,
I agree with your points on BCCI, Ganguly. I am going to miss him. Any how just like you i am also waiting for that sizzling moment. Nov 10.
And i am really happy to see my thoughts from others. Go ahead.
Thank you.
//இன்னமும் மணி கட்ட ஆளில்லாமல் BCCI எனும் பூனை துள்ளிக் குதித்துக் கொண்டுதானிருக்கிறது.//
அது இப்போதைக்கு அடங்காது நந்தா.
கங்குலியை பற்றி நீங்கள் சொன்னவைகளில் நான் முழுக்க ஒத்துப் போகிறேன். நல்ல கேப்டன் அவர்.
//இதில் விளையாடும் பெரும்பாலானோர் இன்னும் உலகத்துக்கு சரியாய் அறிமுகமாகாதவர்களே. IPL போல இதில் எல்லா போட்டிகளிலும் 200 க்கு அருகில் ரன்கள் குவியாது. இருந்தாலும் நம் வீட்டுப் பிள்ளைகள் ஆடும் போட்டியைப் போல இவர்களது ஆட்டத்தை நாம் கண்டு ரசிக்கலாம். மெல்ல மெல்ல வளர்ந்து வரும் இவர்கள் செய்யும் தவறுகளை, முயற்சிகளை எட்ட நின்று பார்க்கலாம்.//
பார்க்கலாமே நமக்கு என்ன கசக்குதா என்ன.
உங்களை தொடர் விளையாட்டுக்கு அழைத்திருக்கிறேன் , நன்றி
//இன்னமும் மணி கட்ட ஆளில்லாமல் BCCI எனும் பூனை துள்ளிக் குதித்துக் கொண்டுதானிருக்கிறது.//
அதே.. அதே..
எனக்கு கங்குலியை மிகவும் பிடிக்கும்..
//லார்ட்ஸ் மைதானத்தில் ஃப்ளிண்ட்ஆஃபுக்கு பதிலடி கொடுத்த சட்டை சுழற்றலை அவ்வளவு எளிதில் எவரும் மறந்து விட முடியாது. ஒன் மேன் ஷோ என்பதை ஒரு மேட்சில் நாம் பார்த்திருப்போம்.//
நல்ல இடுகை நண்பரே!
நம் நாட்டின் மிக மோசாமான அம்சம், கொஞ்சம் வெற்றி வந்தவுடன் ரசிகர்கள் கூட்டம் சேர்வது. ரசிகர்கள் சேர்வது தப்பு இல்லை. ஆனால் விளையாட்டு வீரர்களை ரசிகர்களுக்காக தேர்வு செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது!
கங்குலி இன்னும் ஒரு வருஷத்திற்கு முன்பே போயிருந்தால் இன்னும் மரியாதையுடன் சென்று இருக்கலாம்! விளையாட்டு வீரர்களும் தாங்கள் ஓய்வு பெறவேண்டிய காலகட்டத்தை சரியாக தேர்வு செய்வது இல்லை! இது கவாஸ்கர் தொடங்கி இன்று வரை தொடர்கிறது!
நம் நாட்டை வேர்ல்ட் கப் பைனல் வரை கூட்டி சென்றவருக்கு நல்ல மரியாதையை சர்வாதிகாரி BCCI தருமா என்பது சந்தேகமே!
//ஆட்டம் முடிந்து முதல் ஆளாய் கங்குலி மைதானத்தை விட்டு வெளியே வரும் போது தன்னையுமறியாமல் எழுந்து நின்று கைதட்டுவார்கள். அவற்றில் ஒன்று நிச்சயம் என்னுடையதாயும் இருக்கும்.//
இந்த வரிகளை படிக்கும்போதே, மயிர்கூச்சல் ஏற்பட்டது. கை தட்டுவதோடு நிறுத்தாமல், கண்ணீரும் சிந்துவர் பலர். அவற்றில் நானும் ஒருவனாக இருப்பேன். கங்குலி ஓய்வு அறிவித்தபோதே என் கண்கள் குளமாகின. விடைபெறும்போது கேட்க வேண்டுமா என்ன?
இப்பொழுது நினைத்தால் கூட இதயம் கனக்கிறது.
உங்கள் அனுமதி இல்லாமல் உங்களை இந்த தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன். ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன்.
http://awardakodukkaranga.wordpress.com/2008/10/19/சினிமா-சினிமா-தொடர்-பதிவ/
அன்புடன் ஆர்வி
hi,
i read the blog jus now.. i’m a grt devotee of sourav… its so eager to 2 see dada playin well in IPL.. but the bad thing is only dada is playing and none others except gayle. mc cullum plays rubbish.. and no proper middle orders as well as tail enders.