நந்தாவின் கிறுக்கல்கள்

June 23, 2008

ரமணி சந்திரன், வலையுலக ஃபோபியா – சொல்ல மறந்த கதைகள்

எப்போதும் ரமணிசந்திரன் அவர்களின் எழுத்து மேல் பெரிதாய் ஒரு மரியாதை இருந்ததில்லை எனக்கு. இருப்பினும் சும்மா இருக்கப் பொறுக்காமல் சண்டித்தனம் செய்யும் மனதிற்கு அப்போதைக்கு கைகளில் அகப்பட்டது எதுவாயினும் படித்துப் பார்க்க விருப்பம் இருந்திருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு அப்படி ஏதேச்சையாய் இரு புத்தகங்களை படிக்க நேர்ந்துத் தொலைத்தது. முதலாவது ஒன்றை படிக்க ஆரம்பித்த சரியாய் பதினைந்தாவது நிமிடத்தில் அது நடந்தது. அடி மனதிலிருந்து பொங்கும் உச்சகட்ட கோபத்தில் அந்த புத்தகத்தை சுவற்றில் விசிறி அடித்தேன்.

எப்போதும் என்னைப்போலத்தான் மற்றவர்களும் சிந்திக்க வேண்டும் என்ற பைத்தியக்காரத்தனமான சிந்தனை எனக்கு இருந்தது கிடையாது என்றாலும், பல வாசகர்கள் உருகி உருகி அம்மா, அம்மா என்று அழைத்துக் கொண்டிருப்பதும், இவரது கதைகளை சோறு தண்ணி இல்லாமல் படித்துக் கிடப்பதுமான தமிழ் சூழல் மீதும், இவரது தீவிர வாசகர்களான எனது சில நண்பர்கள் மீதும் எனக்கு ஏனோ கண்மண் தெரியாமல் கோபம் வந்தது.

இவரது ஒவ்வொரு புத்தகத்தின் ஆரம்பத்திலும் “அருணோதயம் ரமணன்” அவர்களின் “இன்று லட்சக் கணக்கான வாசகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும் ரமணி சந்திரன்…” என்ற டெம்ப்ளேட் வார்த்தைகளுடன் தொடங்கும் முன்னுரைக்கு சற்றும் குறைவில்லாது ஒரு டெம்ப்ளேட் கதையோடு ஒவ்வொரு புத்தகமும் வந்து பெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறது.

இளம் வயதில் தொழிலதிபராய் இருக்கும் ஒரு நாயகன், நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பாசமான நாயகி, இருவரில் எவருக்கேனும் ஏதேனும் ஒரு காரணத்தால் எதிர்பாலினத்தவரைக் கண்டாலே ஆகாது. நாயகன் பெரும்பாலும் மிக அழகாயும், புத்திசாலியாயும் இருப்பான். நாயகி அவனை எவ்வளவு தான் வெறுத்தாலும் அவன் சிரிக்கும் போது அப்படியே சொக்கிப் போவாள். நாவலின் பத்தாவது அத்தியாயத்தில் எதோ ஒரு காரணத்திற்காய் நாயகிக்கும், நாயகனுக்கும் பொய்யாய் ஒரு கல்யாணம் நடக்கும். நாயகி அவன் வீட்டிற்கு மனைவியாய் நடிக்கப் போவாள். திருமணத்திற்கு முன்பு ப்ளேபாயாக இருந்த நாயகன், கல்யாணத்திற்குப் பின்பு “மெட்டி ஒலி கோபி”யை விட ரொம்ப நல்லவனாய் நடந்து கொள்வான். நடுவில் வில்லியாய் எதாவது ஒரு இளம் பெண் அவன் மீது ஈஷிக் கொண்டு வளைய வருவாள். கடைசியில் இருவரும் எல்லா பிரச்சினைகளையும் தீர்த்து விட்டு ஒன்று சேருவார்கள். பெரும்பாலான கதைகளில் படுக்கையறையில் நாயகி தீரா காதலுடன் நாயகனின் அணைப்புக்குள் தன்னை சுருக்கிக் கொண்டு நிற்கும் ஒரு வகையான கனவுச் சூழ்நிலையுடன் முடிவடைந்திருக்கும்.

இந்த ஒரே கதையை எத்தனை முறை ரமணிசந்திரன் அவர்கள் பல்வேறு விதங்களில் திகட்ட திகட்ட கொடுத்தாலும் தமிழ் கூறும் நல்லுலகு மறுக்காமல் வாங்கி வாசித்து சந்தோஷப் பட்டு உருகிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான நடுத்தர மற்றும், கீழ் நடுத்தர பெண்களின் வாழ்நாள் கனவாக நல்ல கணவனை பெறுவதே என்ற சூழலை நாம் உருவாக்கி வைத்திருப்பதுவும், பெண்களுக்கு இயல்பாகவே மறுக்கப் படும் பாலியல் ஏக்கங்களும், விருப்பங்களும், நிஜத்தில் நடக்காத கணவனின் அன்பான ஆக்கிரமிப்பை புத்தகங்களிலாவது தேடிப்பார்த்து படித்து சுய இன்பம் பெற்றுக் கொள்ளுவதும், எல்லாவற்றுக்கும் மேலாய் மெல்ல மெல்ல Submissive நடத்தைக்கு தான் மாற வேண்டியதன் பொருட்டும் பெண்களுக்கு ரமணி சந்திரனின் கதைகள் பொதுவாய் பிடித்துப் போகிறதோ என்ற எண்ணம் ரொம்ப காலமாகவே எனக்குள் இருந்து வந்திருக்கிறது.

நான் விசிறி அடித்த புத்தகத்திலும் இப்படி ஒரு டெம்ப்ளேட் இல்லாமலில்லை. ஆனால் என்னை மிகவும் கோபத்திற்குள்ளாக்கியது நாயகன் நாயகியை விரும்புவான். அப்போதே நாயகன் சொல்லுவான் “நான் இதுவரை ஆசைப்பட்டு எதையும் அடையாமல் விட்டதில்லை” என்று.  நாயகி நிர்தாட்சண்யமாய் அவனை மறுத்து விட ஒரு சந்தர்ப்பத்தில் அவளை மயக்கத்திற்குட்படுத்தி விருப்பமில்லாமல் பாலியல் உறவு கொண்டு விடுவான். தமிழ் சினிமாவின் பாணியில் சொல்லுவதென்றால் அவளை கெடுத்து விடுவான். (எவன்தான் கண்டு பிடிச்சானோ இப்படி வாக்கிய அமைப்பை).

இந்த அத்தியாயங்களில் நாயகியின் மன நிலையையும், நாயகனின் வெற்றிக் களிப்பையும் சொல்லி இருப்பார் நாவாசிரியர். பின்பு வேறு வழியில்லாமல் வெறுப்புடன் அவனை திருமணம் செய்து கொண்டாலும் நாளாக நாளாக அவன் மேல் மெதுவாய் ஈர்ப்பு கொண்டு கடைசி அத்தியாயத்தில் காதல் நிரம்பிய வசனங்கள் உடைய, நாயகனின் அணைப்பில் நாயகி தன்னை மறந்து கிடக்கும் ஒரு படுக்கையறைக் காட்சியுடன் நாவல் முடிகின்றது. இதில் இன்னொரு முக்கியமான விஷயம் பத்து வருடங்களுக்கு முன்பே எழுதப்பட்ட இந்த நாவல் திரும்ப திரும்ப வாசகர்களால் படிக்கப்பட்டு இப்போது பதினைந்தாவது பதிப்பைத் தொட்டிருக்கிறது.

இன்னொரு கதையில் நாயகன் சுத்தமாய் ப்ளேபாய். வழக்கம் போல் பணக்காரன், தொழிலதிபர். நாயகன் நாயகியை படுக்கைக்கு அழைப்பான். நாயகி இவனைப் போய் காதலித்தோமே என்று பிரிந்து சென்று கிராமத்திலிருப்பாள். நாயகியின் சகோதரி ஏதேனும் ஒரு பணக்காரனிடம் செட்டிலாக வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் ஆள்: தேடிப்பார்த்து, கடைசியில் அந்த நாயகனுடனேயே அவனை வளைத்துப் போடும் பொருட்டு அவனுடன் உறவு கொண்டு ஒரு குழந்தையைப் பெற்ரு விட்டு இறந்து விட, தியாகச் சொரூபமான நாயகி அப்பாவைப்போலவே இருக்கும் அந்தச் சிறுவனை வளர்த்துக் கொண்டிருப்பாள். திடீரென்று ஒருநாள் அவனுக்கு ஞானோதயம் வந்து இவளிடம் திரும்பி வர, வழக்கம் போல் ஆரம்பத்தில் வீம்பாய் பேசும் நாயகி கடையில் அந்த நாயகனுடன் ஒன்று சேர்ந்து தனது வாழ்க்கையை மறுபடி அவன் கையில் கொடுத்து விட்டு, வாழ ஆரம்பிப்பாள். இந்த நாவலும் பன்னிரண்டு முறைக்கும் மேல் மறுபதிப்பு செய்ப்பட்டிருக்கிறது.

என்னைக் கேட்டால் ஒன்று சொல்லலாம் ரமணி சந்திரன் நாவலின் நாயகிகளை பேசாமல் “சுயமரியாதை இல்லாத ஜென்மங்கள்” என்று அடைமொழி இட்டுக் கூப்பிட்டுக் கொள்ளலாம். அதைவிட இப்படி எல்லாம் எழுதும் இவர்தான் பெண்களின் எழுத்தாளர் என்று எவரேனும் சொல்லும் போது சொல்லுபவர் மீது ஒரு பரிதாப உணர்வுதான் ஏற்படுகிறது. ஆண் கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பான், பொம்பளைப் புள்ளைதான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிப் போகணும் என்ற ஒரு வகையான தாழ் மன உணர்வுகளையும், அழகியலும், பாலியல் ஏக்கங்களும், மசாலாவும் சேர்ந்து கலந்த ஒரு கனவுச் சூழ்நிலையில் பல வாசகர்களை தன் சுயம் தொலைத்து விட்டு வாழ வகை செய்ததையும் தாண்டி, பெண்களின் எழுத்தாளர் என்று சொல்லிக் கொள்ளும் ரமணி சந்திரனின் எழுத்துக்கள் சாதித்தது என்ன?

————————————–

தசாவதாரத்தைப் பற்றி எழுதவே பயமாயிருக்கிறது. ஏதோ ஃபோபியா வந்தது போல எங்கு திரும்பினாலும் அதே புராணம்தான். அந்த காரணத்தினாலேயே தலைப்பில் கமல் என்றோ, தசாவதாரம் என்றோ வைக்க வெறுப்பாயிருக்கிறது. ஒட்டு மொத்தமாய் பார்த்தால் படம் பார்த்து நான் சற்றே ஏமாற்றம் அடைந்தது என்னவோ உண்மைதான். படத்தின் முதல் அரைமணி நேரமும்,  கடைசி அரைமணி நேரமும் கொடுத்த பிரமிப்பை படம் முழுதுமே கொடுத்திருந்தால் இப்படம் ஒட்டு மொத்த தமிழ் சினிமாவிலேயே சிறந்த படங்களில் ஒன்றாய் வந்திருக்கக் கூடும். நடுவில் ஏற்படும் தொய்வுகளினால் அது தவறிப் போயிருந்திருக்கிறது. ஆனால் ஒட்டு மொத்தமாக இந்த படத்தை குப்பை என்ற அளவுக்கு என்னால் சொல்லத் தோன்ற வில்லை. மீடியாக்களின் அதிககபட்ச ஹைப்பும், நம்முடைய அதிகபட்ச எதிர்பார்ப்பும் சேர்ந்து மற்றவர்களுக்கு எல்லாம் பாஸ்மார்க் 35 என்றால் கமலுக்கு மட்டும் 80 என்று வைத்து அளவிடத் தோன்றி இருக்கின்றது.

அதற்காக இந்த படத்தில் குறைகளே இல்லையா என்றெல்லாம் கேட்க வேண்டாம். ஒன்றில்லை பல குறைகளைப் பட்டியலிட முடியும். 2006 ஆம் வருட மாடல் காரை வைத்துக் கொண்டு 2004 ல் அமெரிக்காவில், பயோ லேபிலிருந்து கமல் தப்பிச் செல்வது, சிட்டிசன் அஜீத் போன்ற சில மேக்கப்புகள், கிருஷ்ணவேணிப் பாட்டியின் வேகம் மற்றும் அந்த வயதில் எல்லார் தோள்களிலும் மேல் கால் வைத்து எளிதில் ஓடுவது, ஆளவந்தானில் இருப்பது போன்ற அதே வகை க்ளைமாக்ஸ் சேஸிங், வில்லனாக சித்தரிக்கப் பட வேண்டிய புஷ்சை சமரச காரணங்களுக்காக ஹீரோவினைப் போல காமித்தது, என்று பல விஷயங்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

சொல்லப்போனால் இது போன்ற பல குறைகளை கமலின் முயற்சிகளுக்காக பொறுத்துக் கொண்டு போக வேண்டி இருக்கின்றது. கமல் சொன்னால் அப்படியே கேட்டு செய்யும் சந்தான பாரதி போன்றோரை விட, கமலை தட்டி, வேகத்தடை போட்டு கொண்டு செல்லும் இன்னொரு ஆளை கமல் தன் பக்கத்தில் வைத்தே ஆக வேண்டும். அப்படி ஒன்று மட்டும் ஒன்று நடந்து முதல் அரைமணி நேரம் போலவே முழுதுமாய் ஒரு படம் மட்டும் வந்து விட்டால் அது உலகம் முழுதும் பேசப்படும் ஒரு படமாய்தான் இருக்கும் என்ற நம்பிக்கை ஒரு சில காட்சிகளைப் பார்க்கையில் ஏற்படுகின்றது. அந்த உணர்வை கடைசி வரை ஏற்படுத்தாததுதான் படத்தின் மிகப் பெரிய குறையே.

அவதார் சிங் மருத்துவரிடம் பேசும் காட்சிகளிலும், வின்சென்ட் பூவராகவனின் பாத்திரப் படைப்பும் எனக்கு அப்படி ஒரு சந்தோசத்தை தந்திருக்கின்றது. படம் பூடகமாய் பல விஷயங்களைப் பேசிச் சென்றிருக்கிறது. பூவராகவன் என்ற தலித் முன் வரும் வின்சென்ட் என்ற கிறித்துவப் பெயர் சொல்லும் அர்த்தங்கள் பலப் பல. ஒரு இஸ்லாமிய குடும்பத்தின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அந்த தெருவிலுள்ள 200 இசுலாமியக் குடும்பங்களையுமே மசூதியில் வைத்து விசாரணை செய்யும் அடக்கு முறை காட்சியை தைரியமாய் சொல்ல முயன்றிருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாய் இருக்கின்றது. இந்தக் கதைகளெல்லாம் தமிழ் நாட்டில் நடக்காமலில்லை. மேலப்பளையத்திலும் இன்னும் பல ஊர்களிலும் இன்றும் இசுலாமிய பலர் வெறும் சந்தேகத்தினடிபடையில் போட்ட வழக்குகளால் தன் வாழ்க்கையை தொலைத்து நின்றிருக்கும் கதைகளை அந்த காட்சி எனக்கு உணர்த்தியது. ஒரு தமிழ் படத்தில் வாய் ஓயாமல் பேசும் தெலுங்குக்காரரை படம் ம்ழுக்க அதே நேட்டிவிட்டியுடன் வர விடும் துணிச்சல் வெகு சிலருக்கு மட்டுமே இருக்கின்றது.

மணல் கொள்ளையை எதிர்க்க வேண்டியதன் அவசியத்தை இவ்வளவு தீவிரமாய் படங்களில் காட்டியதாயும் எனக்கு நினைவில்லை. இப்படி சின்ன சின்ன சந்தோசப் படும் விஷயங்களும், குறைகளும் படம் முழுக்க நிறைந்திருக்கின்றது.

ஆளரவமில்லாத காட்டின் நடுவே ஓர் வீட்டில், ஒர் அழகிய இளம் பெண்ணுடன் தனியே ஒரு இரவை கழிக்கும் இளைஞன் அன்றிரவு அவளை எந்த வித தவறான் எண்ணத்துடன் அணுகாமலிருந்தால் மறு நாள் காலையில் அந்த பெண் அந்த இளைஞனைப் பற்றி என்ன நினைப்பாள???நல்லவன்னுதான் நினைப்பாள் என்று ஒற்றை வார்த்தையில் சொன்னீர்களேயானால் இல்லை தவறு.

அந்த பெண் ஒரு சாதாரணப் பெண்ணாயிருந்தால் அவன் ரொம்ப நல்லவன்னு நினைப்பாள். அதே பெண் மெச்சூரிட்டியான பெண்ணாகவோ அல்லது தன்னை மெச்சூரிட்டியான பெண்ணாகவோ நினைத்துக் கொள்பவளாய் இருந்தால் அந்த ஆண் தன்னை அடைய நினைத்து போடும் வேஷங்களில் இதுவும் ஒன்று என்று நினைப்பாள். அதே பெண் ஒரு குழந்தையைப் போன்ற கள்ளம் கபடம் இல்லாதவளாயிருநாதாலோ அல்லது பைத்தியக்காரியாயிருந்தாலோ அவன் மீது அந்த ஒரு சம்பவத்தால் புதிதாய் எந்த ஒரு எண்ணமும் ஏற்படாமல் முந்தின நாள் இரவு படுக்கப் போகும் போது எந்த எண்ணத்துடன் இருந்தாளோ அதே எண்ணத்துடனேயே மறு நாள் காலையில் இருப்பாள். இல்லை அந்தப் பெண்ணே அவன் மீது அதீத காமம் கொண்டவளாயிருந்தால் அவன் தன்னை அணுகாமல் குறித்து எரிச்சலுற்றிருப்பாள் அல்லது அவனது ஆண்மை குறித்தே சந்தேகப் பட்டிருப்பாள்.

ஆக இங்கு சம்பவம் என்னவோ ஒன்றுதான். ஆனால் அவை ஏற்படுத்தும் விளைவுகள் ஆட்களைப் பொறுத்து மாறி நிற்கின்றது.

தசாவதாரம் குறித்தான நண்பர்  பைத்தியக்காரனின் பதிவையும் அப்படிப்பட்ட ஒரு வகையாகத்தான் ஏனோ எனக்குத் தோன்றுகிறது. எப்போதும் திரைப்படங்களிலும், புத்தகங்களிலும் நுண்ணரசியலைத் தேடித் தேடி கண்டு பிடிக்க முயலும் எனக்கு அவரது இந்த விமர்சனம் ஏற்றுக் கொள்ளும்படியானதாய் இருக்க வில்லை. குறிப்பாய் முற்போக்கு பார்ப்பனர்கள் ஆபத்தானவர்கள் என்ற குற்றச் சாட்டு, ஒருவர் என்ன செய்தாலும் பிறப்பினடிப்படையில் பார்ப்பனர்ரய் இருந்து விட்டால் உரித்துக் காயப்போட நினைக்கும் தீவிரத்துவம் எனக்கு வருத்தத்தையே தருகின்றது. இன்னொரு நண்பர் கூட கமலஹாசனிடம் பூனைக் குட்டி மறைந்து நிற்கின்றது அது எப்போது வேண்டுமானாலும் வெளியே வரலாம் என்று சொல்லும் போது கமல் சாதீய அடுக்கில் உயர் சமுதாயத்தில் பிறந்தது அவர் குற்றமா என்று கேட்கத் தோன்றுகிறது.

தனது பெரும்பான்மையான செய்லகளில் கடவுள் மறுப்பையும், மனிதம் சார்ந்த விஷயங்களையும் தொடர்ந்து வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ எக்ஸிபிட் செய்து கொண்டிருக்கும் போதே இத்தகைய குற்றச் சாட்டுகள் எழுப்பப் படும் போது, கமல் மட்டும் ரஜினியைப் போன்று பாபா, ஆன்மீகம், ரிஷிகேஷ் என்று பேசிக் கொண்டிருந்திருப்பாரேயானால், வலைப் பதிவுகளில் முக்கால்வாசி பேருக்கு மேல் கமலின் மீது கொலை வெறியுடன் திரிந்திருப்பார்கள். எனக்குத் தெரிந்து கமல் மீது பலர் சந்தேகம் கொள்ள ஒரே காரணம் அவருக்கும், மதன், க்ரேஸி,சுஜாதா,சாருஹாசன்,மணிரத்னம், சங்கர் போன்றோருடன் இருக்கும் நெருக்கம். இதை ஒரு காரணமாக என்னால் ஏற்றுக் கொள்ள முடிய வில்லை.

நான் இப்படிச் சொல்வதற்கு அர்த்தம் கமல் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் என்பதல்ல. ஒருவர் தனது செயல்களில் சாதிய அடுக்குகளை ஆதரித்தும், வர்ணாசிரம தர்மத்தை தூக்கிப் பிடித்தும் நடந்து கொள்வாரேயெனில் அவரது செயல்களை குத்திக் கிழித்துப் போடுவதில் தவறேதும் இல்லை. ஆனால் எப்படி பிறப்பினடிப்படையில் ஒருவரை தாழ்ந்தவர் என்று சொல்லி ஆதிக்கம் செலுத்துவது எவ்வளவு தவறான செயலோ, அதே அளவு தவறு பிறப்பினடிப்படையில் ஒருவர் உயர் சாதியைச் சேர்ந்தவர் “என்னிக்கு இருந்தாலும் அவன் தன் ஜாதிப் புத்தியைக் காட்டியே தீருவான் என்பது”.

பின்குறிப்பு 1: “ஏம்பா ஆவனவன் ரமேஷ் பிரேம், ஜெயமோகன், சாரு எழுதியதை வெச்சு சண்டைப் போட்டுக்கிட்டிருக்கான். நீ இப்போதான் ரமணி சந்திரனை குற்றம் சொல்லிக்கிட்டிருக்க” என்ற எண்ணம் உங்களில் எவருக்கேனும் இப்பதிவைப் படிக்கும் போது ஒரு கணமேனும் தோன்றியிருக்குமானால், தலையில் ஒரு ஒளி வட்டத்துடன் உங்களுக்கென்று ஒரு எல்லைக் கோட்டை வகுத்துக் கொண்டு பதிவுலகில் வலைய வந்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். உங்களை நீங்களே ஒரு முறை சுய பரிசோதனை செய்து கொள்ளும் நேரம் இது. :)

பின்குறிப்பு 2: பதிவின் இரண்டாவது பகுதி ஒருவேளை சர்ச்சையைக் கிளப்பலாம். கருத்தியல் ரீதியிலான எனது இந்த எதிர் குரலை பைத்தியக்காரன் சரியாக புரிந்துக் கொள்ளுவார். ஆகையால் வேறு எவரேனும்ம் அதிகமாய் உணர்ச்சி வசப்பட்டு இங்கு வந்து சவுக்கை சுழற்ற வேண்டாம். பொறுமையாய் வந்து எதிர் வினையாற்றுங்கள்.

65 Comments »

  1. ஆஆஆவ்வ்வ்வ் …..
    கோச்சுக்காதே சும்மா லுலு :) )

    Comment by அய்யனார் — June 23, 2008 @ 3:32 pm

  2. மன்னிக்கவும் நீங்கள் ரமணி சந்திரனை பற்றி எழுதியதுடன் எனக்கு ஒப்புதல் இல்லை. நான் அவரைப் பற்றி ஏற்கனவே பதிவு போட்டவன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/06/1.html

    அதிலிலிருந்து சிலவற்றை மீண்டும் இங்கே தருகிறேன்.

    //இப்போது ரமணி சந்திரன். அவர் பல வருடங்களாக எழுதி வந்தாலும் சில ஆண்டுகள் முன்னால்தான் அவர் என் கவனத்தைக் கவர்ந்தார். குமுதத்தில் “வல்லமை தந்து விடு” என்ற தொடர்கதை. அப்போது தில்லியில் இருந்தேன். தமிழ் பத்திரிகைகள் ஒழுங்காகக் கிடைக்காது. துளி ஏமாந்தாலும் சில இதழ்கள் விட்டு போய் விடும். ஆனால் ரமணி சந்திரனின் இக்கதை வெளிவந்த காலத்தில் நான் ஒரு குமுதம் இதழைக் கூட மிஸ் செய்யவில்லை. அதே போல குங்குமம் பத்திரிகையில் அவர் தொடர்கதை வந்து கொண்டிருந்த சமயத்தில், பத்திரிகை நிர்வாகம் கொடுத்த தாராள பரிசு பொருட்களால் ஒரு இதழ் கிடைக்கவில்லை. எனக்கு ஒரே கோபம். பத்திரிகைக்கே போன் செய்து எனக்கு விட்டுப் போன தொடர் கதையின் பக்கங்களை ஃபேக்ஸ் செய்ய கேட்டுக் கொள்ள அவர்களும் அவ்வாறே செய்தனர்.

    அதைப் பற்றி அறிந்த சக பதிவாளர்களுக்கு வேடிக்கையாக இருந்திருக்கிறது. எனக்கும் ஒரே ஆச்சரியம். ரமணி சந்திரனின் கதை பிடிக்காதவர்களும் இருக்கிறார்களா என்று. அவர் கதையில் வரும் கதாநாயகிகள் பாஸிடிவாக நினைத்து செயல்புரிபவர்கள். பிரச்சினைகள் வரும், அவற்றை அவர்கள் அழகாகச் சமாளிப்பார்கள். அவர் கதைகளின் டெம்பிளேட் ஒன்றும் பெரிய கம்ப சூத்திரம் அல்ல. ஆனால் எனக்கு மிகவும் பிடித்த டெம்பிளேட் அது. கதாநாயகர்கள் வெறும் சப்போர்ட் ரோல்தான் செய்வார்கள். கதாநாயகிகள் எல்லோருமே தைரியம் மிக்கவர்கள். இப்போது வரும் சீரியல்கள் நாயகி மற்றும் வில்லிகள் போல இல்லை அவர்கள். அவர்கள் செயல்பாடுகள் உற்சாகம் விளைவிப்பவை. விதியே என்று அழுது கொண்டு உட்காராது ஆக்கம் புரிபவர்கள் அவர்கள்.

    கவித்துவமான தலைப்புகள் கொடுப்பவர் ரமணி சந்திரன் அவர்கள். இப்போது அவள் விகடனில் வரும் தொடர்கதையின் தலைப்பு “வெண்ணிலவு சுடுவதென்ன”. மற்ற கதைகளில் சில பின்வருமாறு:

    “தவம் பண்ணி விடவில்லையடி”, “கனவு மெய்ப்பட வேண்டும்”, “கொஞ்சம் நிலவு, கொஞ்சம் நெருப்பு”, “மை விழி மயக்கம்”, “நேசம் மறக்கவில்லை நெஞ்சம்”, “காத்திருக்கிறேன் ராஜகுமாரா”, “எனக்காக நீ”, “பொன்மானைத் தேடி”, “விடியலைத் தேடி”, “கானமழை நீ எனக்கு”, “தரங்கிணி”, “அழகு மயில் ஆடும்”, “நாள் நல்ல நாள்”, “இனி வரும் உதயம்”, “கிழக்கு வெளுத்ததம்மா’, “என் உயிரே கண்ணம்மா” போன்றவை//.

    இப்போது நீங்கள் இங்கு குறிப்பிட்டது.

    //என்னைக் கேட்டால் ஒன்று சொல்லலாம் ரமணி சந்திரன் நாவலின் நாயகிகளை பேசாமல் “சுயமரியாதை இல்லாத ஜென்மங்கள்” என்று அடைமொழி இட்டுக் கூப்பிட்டுக் கொள்ளலாம். அதைவிட இப்படி எல்லாம் எழுதும் இவர்தான் பெண்களின் எழுத்தாளர் என்று எவரேனும் சொல்லும் போது சொல்லுபவர் மீது ஒரு பரிதாப உணர்வுதான் ஏற்படுகிறது//.
    கிடையவே கிடையாது. ரமணி சந்திரனின் கதாநாயகிகள் போராடுபவர்கள். அவருடைய பல கதைகளைப் படித்தவன் என்பதாலேயே கூறுகிறேன்.

    //ஆண் கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பான், பொம்பளைப் புள்ளைதான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிப் போகணும் என்ற ஒரு வகையான தாழ் மன உணர்வுகளையும், அழகியலும், பாலியல் ஏக்கங்களும், மசாலாவும் சேர்ந்து கலந்த ஒரு கனவுச் சூழ்நிலையில் பல வாசகர்களை தன் சுயம் தொலைத்து விட்டு வாழ வகை செய்ததையும் தாண்டி, பெண்களின் எழுத்தாளர் என்று சொல்லிக் கொள்ளும் ரமணி சந்திரனின் எழுத்துக்கள் சாதித்தது என்ன//?
    அவருடைய லேட்டஸ்ட் கதை குமுதத்தில் தொடர்கதையாக வந்ததைப் படித்திருந்தால் நீங்கள் அப்படி சொல்லவே மாட்டீர்கள். அதில் வரும் கதாநாயகனை உண்டு இல்லை என பண்ணி விடுகிறார் ரமணி சந்திரன்.

    நீங்கள் எவ்வளவு புத்தகங்கள் படித்தீர்கள் எனத் தெரியவில்லை.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    Comment by டோண்டு ராகவன் — June 23, 2008 @ 3:34 pm

  3. கட்டுரைக்கான effect ஐ பாத்தியா :) ) முதல்ல இந்த தம்மாத்தூண்டு மேட்டர்லலாம் சிக்காம வெளிய வா..இது இவிங்களுக்கான ஒலகம் எப்ப புரியுதோ அப்ப ஒடனே ஜீட்தான்

    Comment by அய்யனார் — June 23, 2008 @ 3:39 pm

  4. நந்தா,

    ரமணி சந்திரன் புதினங்களை கல்லூரி, பள்ளிக்காலங்களில் படித்து, இந்த முன்மாதிரியயை வைத்து எழுதப்படுவதைக் கண்டு, ஒதுக்கிவைத்துவிட்டேன்..

    தங்களில் பதிவின் உட்கருத்தை அப்படியே வழிமொழிகிறேன்…

    ஃஃஃஃ

    கமலின் கடவுள் மறுப்பு மேல் உள்ள நம்பிக்கை, சாதிமறுப்பில் எனக்கு இன்னும் வரவில்லை.

    ஃஃஃ

    தமிழ் திரைப்படம் குறித்தான தொடர் என்னவாயிற்று….?

    ஃஃஃ

    பின்னுட்ட சங்கிலி என்னாச்சு..? காணவில்லை என்று புகார் செய்யனும்மா..?

    Comment by TBCD — June 23, 2008 @ 3:40 pm

  5. முதல்ல நந்தா அண்ணன் இப்படியெல்லாம் கூட எழுதுவிங்களா நீங்க…
    எனக்கும் அதே சலிப்பு ஏற்பட்டிருக்கிறது சில நாவல்களில் இழுவையும் அதிகமாக இருக்கும்.

    Comment by தமிழன் — June 23, 2008 @ 3:44 pm

  6. /அப்போதே நாயகன் சொல்லுவான் “நான் இதுவரை ஆசைப்பட்டு எதையும் அடையாமல் விட்டதில்லை” என்று. நாயகி நிர்தாட்சண்யமாய் அவனை மறுத்து விட ஒரு சந்தர்ப்பத்தில் அவளை மயக்கத்திற்குட்படுத்தி விருப்பமில்லாமல் பாலியல் உறவு கொண்டு விடுவான். தமிழ் சினிமாவின் பாணியில் சொல்லுவதென்றால் அவளை கெடுத்து விடுவான். (எவன்தான் கண்டு பிடிச்சானோ இப்படி வாக்கிய அமைப்பை).

    இந்த அத்தியாயங்களில் நாயகியின் மன நிலையையும், நாயகனின் வெற்றிக் களிப்பையும் சொல்லி இருப்பார் நாவாசிரியர். பின்பு வேறு வழியில்லாமல் வெறுப்புடன் அவனை திருமணம் செய்து கொண்டாலும் நாளாக நாளாக அவன் மேல் மெதுவாய் ஈர்ப்பு கொண்டு கடைசி அத்தியாயத்தில் காதல் நிரம்பிய வசனங்கள் உடைய, நாயகனின் அணைப்பில் நாயகி தன்னை மறந்து கிடக்கும் ஒரு படுக்கையறைக் காட்சியுடன் நாவல் முடிகின்றது.
    /

    I think this was made into a film ,(ragangal maaruvathillai, starring Prabu and Ambica).But there was a change in the ending, with Prabhu dying due to heart attack when Ambica changes her heart and start loving him.

    Comment by prabakaran — June 23, 2008 @ 3:45 pm

  7. என்னது காந்தி செத்துட்டாரா?

    Comment by Mohandoss Ilangovan — June 23, 2008 @ 3:45 pm

  8. :) அந்த நாவலைப் பத்தி ஒரு வருசம் முன்னாலயே புலம்பினதா நினைவு! திரும்பவும் அந்தக் கொடுமையைப் படிச்சிட்டீங்களா என்ன?

    Comment by பூர்ணா — June 23, 2008 @ 3:46 pm

  9. >>> பெரும்பாலான நடுத்தர மற்றும், கீழ் நடுத்தர பெண்களின் வாழ்நாள் கனவாக நல்ல கணவனை பெறுவதே என்ற சூழலை நாம் உருவாக்கி வைத்திருப்பதுவும், பெண்களுக்கு இயல்பாகவே மறுக்கப் படும் பாலியல் ஏக்கங்களும், விருப்பங்களும், நிஜத்தில் நடக்காத கணவனின் அன்பான ஆக்கிரமிப்பை புத்தகங்களிலாவது தேடிப்பார்த்து படித்து சுய இன்பம் பெற்றுக் கொள்ளுவதும் <<<

    Very True :-)

    Comment by யாத்திரீகன் — June 23, 2008 @ 5:03 pm

  10. நல்ல அலசல்.

    Comment by முரளிகண்ணன் — June 23, 2008 @ 8:40 pm

  11. இவங்க எழுத்து எனக்கு பிடிக்கலைங்கற உங்க கருத்த சொல்றது எப்ப சொன்னா என்ன ? என் கல்லூரியிலும் பின் பெஞ்சில் உக்காந்து வகுப்பை கவனிக்காம ரமணி சந்திரன் வாசித்த பெண்கள் இருந்தாங்க.. நானும் இரண்டு படிச்சு பாத்துட்டு என்னடா இது ஒரே மாதிரி ..அப்பறம் இதே மாதிரி அந்த ஆம்பிளை கேரக்டருக்குத்தான் எத்தனை ஒரு அகம்பாவம்ன்னு படிக்கற விட்டுட்டேன்..
    :) நீங்களும் தசாவதாரம் எழுதிட்டீங்களா…. எழுதாதவங்க லிஸ்ட் ரொம்ப கம்மி யாகிட்டே போனா நான் ரெக்கார்ட் செய்யலாம்ன்னு இருக்கேன்.. தசாவதாரம் எழுதாத ஒரே பதிவர் ன்னு

    Comment by கயல்விழி முத்துலெட்சுமி — June 23, 2008 @ 9:09 pm

  12. //ஆஆஆவ்வ்வ்வ் …..
    கோச்சுக்காதே சும்மா லுலு :) )//

    என்ன அய்யனாரே காமெடியா இருக்கா… கவனிச்சுக்கறேன் :)

    Comment by நந்தா — June 24, 2008 @ 1:10 am

  13. தாமதமான பதிலிற்கு மாப்பு டோண்டு அவர்களே.

    எனக்கும் ஒரே ஆச்சரியம். ரமணி சந்திரனின் கதை பிடிக்காதவர்களும் இருக்கிறார்களா என்று.//

    நல்லா கேட்டீங்க போங்க இங்க ஒரு கூட்டமே இருக்கோம்.

    //அவர் கதையில் வரும் கதாநாயகிகள் பாஸிடிவாக நினைத்து செயல்புரிபவர்கள். பிரச்சினைகள் வரும், அவற்றை அவர்கள் அழகாகச் சமாளிப்பார்கள். கதாநாயகர்கள் வெறும் சப்போர்ட் ரோல்தான் செய்வார்கள். கதாநாயகிகள் எல்லோருமே தைரியம் மிக்கவர்கள். இப்போது வரும் சீரியல்கள் நாயகி மற்றும் வில்லிகள் போல இல்லை அவர்கள். அவர்கள் செயல்பாடுகள் உற்சாகம் விளைவிப்பவை. விதியே என்று அழுது கொண்டு உட்காராது ஆக்கம் புரிபவர்கள் அவர்கள்.//

    ஏங்க எதுவும் காமெடி பண்ணலையே நீங்க. என்னுடைய குற்றச்சாட்டே அவருடைய நாயகிகள் சுயமரியாதை அற்றவர்கள் எனபதுதான். நீங்கள் அப்படியே அதற்கு நேர்மாறாய் சொல்லுகிறீர்கள்.

    //அவருடைய லேட்டஸ்ட் கதை குமுதத்தில் தொடர்கதையாக வந்ததைப் படித்திருந்தால் நீங்கள் அப்படி சொல்லவே மாட்டீர்கள். அதில் வரும் கதாநாயகனை உண்டு இல்லை என பண்ணி விடுகிறார் ரமணி சந்திரன்.//

    சொல்லப்போனால் அவருடைய சமீப காலக் கதைகள் கொஞ்சம் பரவாயில்லை என்று சொல்லலாம். அதாவது கடந்த இரண்டு வருடக் கதைகள். அதற்கு முன்பு வந்தவை எல்லாம் ஒரே டெம்ப்ளேட், அதே நாயகியின் சப்மிஸ்ஸிவ் மன னிலை, அதை வேறு மறைமுகமாய் அப்படி இருந்தால்தான் நல்ல பெண் என்பது போன்ற நிலை நாட்டல் என்று பல கதைகளை என்னால் சொல்ல முடியும்

    அதே போல நல்ல தூய தமிழ் பெயர்களை, நாயகன் மற்றும் நாகியின் பெயர்களாகவும், கதையின் தலைப்புகளாகவும் வைத்து வருவது ஒன்று வேண்டுமானால் நிச்சயம் நல்ல செயல். பாராட்டுவதற்குரியது. அதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

    //நீங்கள் எவ்வளவு புத்தகங்கள் படித்தீர்கள் எனத் தெரியவில்லை.//

    இதுக்கு என்ன அர்த்தம். நான் எல்லா புக்கையும் கரைத்துக் குடித்தவன் நான் சொன்னா சரியாதான் இருக்கும் என்று சொல்ல வருகிறீர்களோ???

    அதற்கு பதிலாக, நான் பயங்கரமா படிப்பாளி என்று சொன்னாலும் சரி உங்க அளவுக்கு இல்லைன்னாலும் ஓரளவுக்கு நான் புத்தகங்களை வாசிப்பவன்தாங்க என்று ஒரு தன்னடக்கத்தோடு சொல்வது போல சொன்னாலும் சரி அது நிச்சயம் ஒரு வித கர்வத்தின் வெளிப்பாடாய் சொல்வது போலதான் இருக்கும். என்ன பதில் சொல்வது. ஒற்றை வரியில் சொல்கிறேன். “நானும் பல புத்தகங்களைப் படித்திருக்கிறேன்”.

    சரி நான் கோபம் கொண்டதற்குக் காரணமான இரு புத்தகங்களும் அதன், கதையையும் சொல்லி இருக்கிறேனே. அதைப்பற்றி எதுவும் சொல்ல வில்லையே. நீங்கள் சொன்ன, தன்மானம் உடைய, பிரச்சினைகளை சமாளிக்கும், பாசிடிவ் மன நிலை உடைய நாயகிகள் எனபதற்கு அர்த்தம்தான் அந்த நாயகிகளா??? அதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள் டோண்டு சார்.

    நீங்கள் எவ்வளவு புத்தகங்கள் படித்தீர்கள் எனத் தெரியவில்லை.

    Comment by நந்தா — June 24, 2008 @ 1:26 am

  14. //ரமணி சந்திரன் புதினங்களை கல்லூரி, பள்ளிக்காலங்களில் படித்து, இந்த முன்மாதிரியயை வைத்து எழுதப்படுவதைக் கண்டு, ஒதுக்கிவைத்துவிட்டேன்..தங்களில் பதிவின் உட்கருத்தை அப்படியே வழிமொழிகிறேன்…//

    நன்றி டிபிசிடி.

    ஃஃஃஃ
    //கமலின் கடவுள் மறுப்பு மேல் உள்ள நம்பிக்கை, சாதிமறுப்பில் எனக்கு இன்னும் வரவில்லை.//

    இல்லைங்க என்னால் தீர்மானமாய் நம்ப முடியாத எதையும் அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாது. அது யார் சொல்லி இருந்தாலும் சரி. இது குறித்தான விவாதம் பல இடத்தில் நடத்திக் கொண்டிருக்கிறேன்.பார்க்கலாம்.
    ஃஃஃ

    //தமிழ் திரைப்படம் குறித்தான தொடர் என்னவாயிற்று….?//

    கூடிய சீக்கிரம். பதிவு முழுக்க சினிமா சம்பந்தப்பட்டதே வருகிறதோ என்ற எண்ணம் எனக்கு.

    ஃஃஃ
    //பின்னுட்ட சங்கிலி என்னாச்சு..? காணவில்லை என்று புகார் செய்யனும்மா..?//

    நீட்சியில் ஏதோ பிரச்சினை இப்போ வந்துடுச்சு பாருங்க. நன்றி.

    Comment by நந்தா — June 24, 2008 @ 1:31 am

  15. //முதல்ல நந்தா அண்ணன் இப்படியெல்லாம் கூட எழுதுவிங்களா நீங்க…
    எனக்கும் அதே சலிப்பு ஏற்பட்டிருக்கிறது சில நாவல்களில் இழுவையும் அதிகமாக இருக்கும்.//

    வாங்க தமிழன் எப்பவும் போலதானே எழுதி இருக்கேன். ஏதாவது வித்தியாசம் தெரியுதா என்ன. கருத்துக்கு நன்றி.

    //I think this was made into a film ,(ragangal maaruvathillai, starring Prabu and Ambica).But there was a change in the ending, with Prabhu dying due to heart attack when Ambica changes her heart and start loving him//

    தகவலுக்கு நன்றி பிரபாகரன். தேடிப்பார்க்கிறேன். சினிமாவில இதைத்தாண்டி யோசிக்க மாட்டாங்க. என்ன செய்ய???

    //என்னது காந்தி செத்துட்டாரா?//

    மோகன்தாஸ் பின்குறிப்பு 1.

    //அந்த நாவலைப் பத்தி ஒரு வருசம் முன்னாலயே புலம்பினதா நினைவு! திரும்பவும் அந்தக் கொடுமையைப் படிச்சிட்டீங்களா என்ன?//

    ஆமாங்க பொன்ஸ். எல்லாமே ஒரே மாதிரியா இருக்கா. அதான் கண்டு பிடிக்க முடியலை. தேவையில்லாமல் டென்ஷனானதுதான் மிச்சம்.

    Comment by நந்தா — June 24, 2008 @ 1:35 am

  16. நன்றி யாத்திரீகன்.

    முரளி கண்ணன் ஒருவழியா மறுபடி எழுத தொடங்கியாச்சு. :) . இனிமேலாவது கேப் விழாமல் பார்த்துக்கணும்.

    //இவங்க எழுத்து எனக்கு பிடிக்கலைங்கற உங்க கருத்த சொல்றது எப்ப சொன்னா என்ன ? என் கல்லூரியிலும் பின் பெஞ்சில் உக்காந்து வகுப்பை கவனிக்காம ரமணி சந்திரன் வாசித்த பெண்கள் இருந்தாங்க.. நானும் இரண்டு படிச்சு பாத்துட்டு என்னடா இது ஒரே மாதிரி ..அப்பறம் இதே மாதிரி அந்த ஆம்பிளை கேரக்டருக்குத்தான் எத்தனை ஒரு அகம்பாவம்ன்னு படிக்கற விட்டுட்டேன்..//

    அப்பாடா கேக்கவே சந்தோஷமா இருக்குங்க. அப்புறம் நான் தசாவதாரத்தைப் பத்தி எழுதலை பைத்தியக்காரனுக்கு எதிர் வினை தான் எழுதியிருக்கேன். அதான் தலைப்புல கூட அது சம்பந்தமா எதுவும் வரலை பாருங்க. (எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டியிருக்குதுடா சாமி. இனிமே பட விமர்சனம் எழுதுறது பெரிய குற்றமா ஆயிடும் போல இருக்கு.)

    :)

    Comment by நந்தா — June 24, 2008 @ 1:38 am

  17. //நீங்கள் எவ்வளவு புத்தகங்கள் படித்தீர்கள் எனத் தெரியவில்லை.//

    என்று நான் கேட்டதன் பொருளே எவ்வளவு ரமணி சந்திரன் நாவல்கள் படித்தீர்கள் என்பதுதான். நான் அவரது நாவல்களை அதிக அளவில் வாசித்துள்ளேன். நான் ஏற்கனவே கூறியபடி அவரது நாவல்களின் டெம்பிளேட்டே தைரியமான போராடும் கதாநாயகிகள்தான். அந்த மேக்ரோ அளவைத் தவிர ஒவ்வொரு நாவலிலும் அது எம்மாதிரி வெளிப்படுகிறது என்பதுதான் கதை. அப்படிப் பார்த்தால் எல்லா எழுத்தாளர்களுக்குமே டெம்பிளேட்டுகள் உண்டு, உதாரணம் சுஜாதா, பாலகுமாரன், தேவன், எஸ்.வி.வி., ஜெயகாந்தன் ஆகியோர். ஒவ்வொரு நாவலிலும் சம்பந்தப்பட்ட ஆசிரியரின் கைரேகை நிச்சயம் இருக்கும்.

    ரமணி சந்திரனின் டெம்பிளேட் எனக்கு நன்றாக இருக்கிறது. அவ்வளவே. நீங்கள் சொன்ன கதைகளையும் படித்திருக்கிறேன். கடைசியில் கதாநாயகியின் மனதைப் பெற நாயகன் எவ்வளவு கசரத் செய்ய வேண்டியுள்ளது என்பதையும் பாருங்கள். பை தி வே அப்படியே லட்சுமியின் “பெண்மனம்” ப்ளாட்தான் (படம் இருவர் உள்ளம்).

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    Comment by டோண்டு ராகவன் — June 24, 2008 @ 2:00 am

  18. ——-//என்னது காந்தி செத்துட்டாரா?//

    மோகன்தாஸ் பின்குறிப்பு 1.——

    இனி நான் திரும்ப ஆரம்பிக்கணுமா முதலில் இருந்து? வேணும்னா கடைசியில் நிறுத்தினதில் ஆரம்பிக்கிறேனே.

    நான் பதிவுகளை கடப்பாரையாக நினைப்பதில்லை சமுதாயத்தை புரட்டிப்போடும் விதமாக நான் பதிவுகளைப் பார்ப்பதில்லை.

    Comment by Mohandoss Ilangovan — June 24, 2008 @ 2:01 am

  19. மோகன் தாஸ் அடங்க மாட்டீங்கறீங்க நீங்க.

    //நான் பதிவுகளை கடப்பாரையாக நினைப்பதில்லை சமுதாயத்தை புரட்டிப்போடும் விதமாக நான் பதிவுகளைப் பார்ப்பதில்லை.//

    இதுக்கு பல பதில்களை சொல்லலாங்க. ஒன்றை மட்டும் சொல்கிறேன். “நானும் அப்படி நினைக்க வில்லை”. அதே சமயத்தில் இது போன்ற கோபங்களையோ, விமர்சனங்களையோ, கருத்துக்களையோ, எழுதாமல் இருந்தோமேயானால் அப்புறம் பதிவுலகம் முழுக்க சமையல் குறிப்பு மட்டும்தான் எழுத வேண்டியிருக்கும்.

    Comment by நந்தா — June 24, 2008 @ 2:34 am

  20. வழக்கம்போல பதிவினை விட பின்னூட்டங்கள் சுவாரஸ்யமாக இருக்கிறது…

    குறிப்பாக

    //அதற்கு பதிலாக, நான் பயங்கரமா படிப்பாளி என்று சொன்னாலும் சரி உங்க அளவுக்கு இல்லைன்னாலும் ஓரளவுக்கு நான் புத்தகங்களை வாசிப்பவன்தாங்க என்று ஒரு தன்னடக்கத்தோடு சொல்வது போல சொன்னாலும் சரி அது நிச்சயம் ஒரு வித கர்வத்தின் வெளிப்பாடாய் சொல்வது போலதான் இருக்கும். என்ன பதில் சொல்வது. ஒற்றை வரியில் சொல்கிறேன். “நானும் பல புத்தகங்களைப் படித்திருக்கிறேன்”. //

    கமலஹாசன் வலைப்பூ தொடங்கி எழுதுவது போலவே இருந்தது!

    Comment by லக்கிலுக் — June 24, 2008 @ 2:38 am

  21. //என்று நான் கேட்டதன் பொருளே எவ்வளவு ரமணி சந்திரன் நாவல்கள் படித்தீர்கள் என்பதுதான். நான் அவரது நாவல்களை அதிக அளவில் வாசித்துள்ளேன். நான் ஏற்கனவே கூறியபடி அவரது நாவல்களின் டெம்பிளேட்டே தைரியமான போராடும் கதாநாயகிகள்தான். அந்த மேக்ரோ அளவைத் தவிர ஒவ்வொரு நாவலிலும் அது எம்மாதிரி வெளிப்படுகிறது என்பதுதான் கதை. அப்படிப் பார்த்தால் எல்லா எழுத்தாளர்களுக்குமே டெம்பிளேட்டுகள் உண்டு, உதாரணம் சுஜாதா, பாலகுமாரன், தேவன், எஸ்.வி.வி., ஜெயகாந்தன் ஆகியோர். ஒவ்வொரு நாவலிலும் சம்பந்தப்பட்ட ஆசிரியரின் கைரேகை நிச்சயம் இருக்கும்.//

    டோண்டு சார் ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒரு எழுத்து நடை இருக்கும்தான். ஆனால் கதையில் எத்தனை பேர் டெம்ப்ளேட்டை வைத்திருக்கிறார்கள். நீங்களேதான் போன பின்னூட்டத்தில் டெம்ப்ளேட் இருக்கிறது. ஆனால் எனக்குப் பிடித்த டெம்ப்ளேட் என்று சொல்லி இருக்கிறீர்கள். இப்போ வேறு வகையில் சொல்கிறீர்கள்.

    நான் டெம்ப்ப்ளேட் என்று எதைச் சொல்கிறேன் என்று எனது பதிவை இன்னொரு முறை பார்க்கவும் கதையமைப்பிலேயே ஒரே மாதிரியாக எத்தனை கதைகளை எழுதி இருக்கிறார்கள் தெரியுமா?? குறிப்பாய் மனைவியாக நடிக்கப் போய் அப்புறம் அந்த நாயகனிடமே மனதை பறி கொடுக்கும் நாவல்கள் எத்தனை எத்தனை.

    //கடைசியில் கதாநாயகியின் மனதைப் பெற நாயகன் எவ்வளவு கசரத் செய்ய வேண்டியுள்ளது என்பதையும் பாருங்கள்.//

    ஏன் சார் உங்களுக்கு இதில் கொஞ்சம் கூட தவறான ஒரு கற்பிதத்தை முன் வைக்கிறார் என்ற எண்ணமே எழ வில்லையென்றால் என்னால் ஒன்றுமே செய்ய முடியாது. என்னைப் பொறுத்த வரை வில்லன் போல சித்தரிக்கப் பட வேண்டிய ஒருவனை நாயகனாக காட்டி, அதுவும் “தன் மீதுள்ள அதிகபட்ச காதலால்தான் பாவம் நாயகன் இவ்வாறு நடந்து கொண்டான்” என்ற எண்ணத்தை நாயகி வாயிலாகவே வெளிப்படுத்துவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.

    //ரமணி சந்திரனின் டெம்பிளேட் எனக்கு நன்றாக இருக்கிறது. அவ்வளவே. //

    எனக்கு மிக மிக மோசமானதாகப் படுகிறது. அவ்வளவே. நான் இதை ஒரு சமுதாயக் கண்ணோட்டத்துடன், பெண்களுக்கான அளவு கோல்களை நிர்ணயிக்கும் இவரது எழுத்துக்கு எதிரான கண்ணோட்டத்தில் பார்க்கிறேன்.

    Comment by நந்தா — June 24, 2008 @ 2:43 am

  22. //வழக்கம்போல பதிவினை விட பின்னூட்டங்கள் சுவாரஸ்யமாக இருக்கிறது…//

    //கமலஹாசன் வலைப்பூ தொடங்கி எழுதுவது போலவே இருந்தது!//

    லக்கி பாராட்டறீங்களா இல்லை உள்குத்தான்னு ஒண்ணுமே புரியலை. :)

    Comment by நந்தா — June 24, 2008 @ 3:55 am

  23. //அப்புறம் பதிவுலகம் முழுக்க சமையல் குறிப்பு மட்டும்தான் எழுத வேண்டியிருக்கும்.//

    நீங்க இவ்வளவு ஆணாதிக்கவாதியா இருப்பீங்கன்னு நான் நினைக்கலை. :) )

    சமையற்கலைன்னா சும்மாவா, அதையும் இலக்கியத்தில் முக்கியமா பின்நவீனத்தில் சேர்க்கணும்னு பேசிக்கிட்டிருக்காங்க எந்த வகையறாவில் என்பது தான் இப்ப கேள்வி. :) )

    Comment by Mohandoss Ilangovan — June 24, 2008 @ 4:07 am

  24. //ங்க இவ்வளவு ஆணாதிக்கவாதியா இருப்பீங்கன்னு நான் நினைக்கலை. :) )//

    மோகன் தாஸ் நீங்க இப்போ ஃபுல் ஃபார்ம்ல இருக்கீங்க. ஒண்ணும் பேசறதுக்கில்லை.

    பதிவினை ஹைஜாக் செய்ய முயற்சிக்கும் ரமணி சந்திரன் அதி தீவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்விர வாசகரான மோகன் தாஸை வன்மையாய் கண்டிக்கிறேன்.

    Comment by நந்தா — June 24, 2008 @ 4:13 am

  25. Dear Nanda

    I agree with your views on Ramanichandran’s novels. This was what I had also understood & concluded, a long ago.
    ‘am really happy to see thay there is one more person who think like me!
    I can give some more examples for this: Rajesh kumar & Lakshmi!!
    Almost all of his novels are murder mystery only and Laksmi’s are again some kind of stereo type. Sivashankari & Indumathi’s novels are not stereo types. There will be some variety…
    That is where I found the difference between these writers & Sujatha and I stopped reading the above.
    To extend this theory, in fact, even Rajini’s movies, except the first few ones, also have stereo type stories. To fall in the first half & rise in the 2nd half!

    I was really surprised to see so many women so interestingly reading Ramani chandran’s novels…

    I expect more such writing from you !

    Regards
    Rajasekaran

    Comment by Rajasekaran — June 24, 2008 @ 7:10 am

  26. ரமணி சந்திரன் நாவல்கள் குறித்த பார்வை நன்று நந்தா.

    Comment by selvanayaki — June 24, 2008 @ 10:02 am

  27. மோகனுக்கு ரிப்பீட்டே..
    எலேய் நந்தா ஒனக்கு சமையல்குறிப்புனா அம்புட்டு எளக்காரமா போச்சா..நாம மாங்கு மாங்கு னு இந்த பதிவ எழுதி கிழிச்சி யாருக்காவது உபயோகமா இருக்கா..ஆனா சமையல் குறிப்பு இருக்கு பத்தியா அத தெனமும் தொறந்து வச்சிதான் நாங்க சமைக்கிறோம்..எங்க ரூம்ல அதிகம் படிக்கப்பட்ட பக்கம் எதுனா அறுசுவை.காம் தான்..எல்லாம் பேசாம் ஆளுக்கொரு சமையல் குறிப்பு பக்கம் தொறந்தாலும் நல்லாதான்யா இருக்கும்..

    Comment by அய்யனார் — June 24, 2008 @ 12:20 pm

  28. //மோகனுக்கு ரிப்பீட்டே..//

    அய்யனார் ஜாக்கிரதை. அஷ்டே.

    Comment by Mohandoss Ilangovan — June 24, 2008 @ 12:41 pm

  29. வேண்டாம், வேண்டாம்னு பார்த்துட்டு நானும் ஜோதியில… அய்யோ, ஏன் சார் அந்த “மாதிரி” எழுத்தாளர்க்காக நேரம், முயற்சி, பேன்ட்விட்த் வேஸ்ட் பண்ணிட்டு! இது தான் பெண் தன்மானம் என்று வழிவகுக்கும் ஆண்களுக்கு(ம் பெண்களுக்கும்) சின்னதா கோயில் கட்டணும். (அந்த கோயிலிலிருந்து வெளி வர வழி கிடையாது, சொல்லிடாதீங்க)

    //கோபங்களையோ, விமர்சனங்களையோ, கருத்துக்களையோ, எழுதாமல் இருந்தோமேயானால் அப்புறம் பதிவுலகம் முழுக்க சமையல் குறிப்பு மட்டும்தான் எழுத வேண்டியிருக்கும்.// மோகன் தாஸும் அய்யனாரும் “கோபம், விமர்சனம், கருத்து” எல்லாம் விட்டுட்டு சமையல் குறிப்பு மட்டும் பிடிச்சிட்டாங்க பாத்தீங்களா? நுண்ணரசியல்!!

    Comment by kekkepikkuni — June 24, 2008 @ 2:37 pm

  30. நந்தா,

    தலைப்பில் திரைப்படத்தின் பெயர் வைக்காமல் திரைப்படத்திற்கு விமர்சனம் எழுதியவர் நீங்கள் ஒருவர்தான் போல :-)

    நன்றாக எழுதியிருக்கிறீர்கள் :-)

    //“ஏம்பா ஆவனவன் ரமேஷ் பிரேம், ஜெயமோகன், சாரு எழுதியதை வெச்சு சண்டைப் போட்டுக்கிட்டிருக்கான். நீ இப்போதான் ரமணி சந்திரனை குற்றம் சொல்லிக்கிட்டிருக்க”//

    அட, ‘ஓம் சாந்தி ஓம்’ போன்ற வணிக, பேய்ப் படங்களில் உள்ள பின்னவீனத்துவக் கூறுகளை ஆராய்வதை விட ரமணி சந்திரனை விமர்சிக்கலாம் என்றுதான் தோன்றுகிறது. :-) )

    Comment by Sridhar Narayanan — June 24, 2008 @ 3:48 pm

  31. //I was really surprised to see so many women so interestingly reading Ramani chandran’s novels…//

    அதேதாங்க என்னுடைய வியப்பும்.

    //தலைப்பில் திரைப்படத்தின் பெயர் வைக்காமல் திரைப்படத்திற்கு விமர்சனம் எழுதியவர் நீங்கள் ஒருவர்தான் போல //

    ஆமாங்க. அப்படி ஒரு வெறுப்பாயிடுச்சு.

    //அட, ‘ஓம் சாந்தி ஓம்’ போன்ற வணிக, பேய்ப் படங்களில் உள்ள பின்னவீனத்துவக் கூறுகளை ஆராய்வதை விட ரமணி சந்திரனை விமர்சிக்கலாம் என்றுதான் தோன்றுகிறது. :-) )//

    விடுங்க சாருவை மன்னிச்சுடலாம். :)

    நன்றி ராஜசேகரன், செல்வநாயகி, கெக்கெபிக்கிணி மற்றும் ஸ்ரீதர் நாராயணன்.

    Comment by நந்தா — June 25, 2008 @ 4:06 am

  32. I totally agree to ur views about ramani chandran’s novels…
    all are stereotypes…I stopped reading after reading one or two novels… englishla mills and boons,charlotte series madhiri, tamilla ramani chandran’s books…

    Comment by Raji — June 30, 2008 @ 12:05 pm

  33. நந்தா
    கிட்டத்தட்ட உன்னோட அனைத்து பதிவுகளையும் இப்போத்தான் படிச்சி முடிச்சேன்! (வேலையில்லையான்னு எல்லாம் எதிர்கேள்வி போடக்கூடாது!)
    மிக ஆழமான நினைவலைகள், அருமையான மொழி வளம் – கலக்கறடா!

    இதுலே எனக்கு சில கருத்துக்கள் இருக்கு.

    * இத்தனை புதினங்கள் எழுதின அவங்களோட சாதனை கண்டிப்பாக அங்கீகரிக்கப்பட வேண்டியது (அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.)

    * ஆனால் ‘ஒரே மாதிரி இருக்கு’ங்கறதும் ஒரு வகையில் உண்மைதான்.
    என்னோட சித்திக்கு இவங்க நாவல்கள் ரொம்பப் பிடிக்கும். ஆனாலும் அவ சொல்றது என்னன்னா -
    “எல்லாம் ஒரே மாதிரிதான்டா இருக்கும். ஒரு ரெண்டு மூனு நாவல் படிச்சுட்டேனா நீயே சுலபமா இது மாதிரி எழுதிடலாம்”

    * இவங்கன்னு இல்லை, தேவிபாலா, அனுராதா ரமணனின் ஆரம்பகால நாவல்கள் (சமீபத்திய அவங்க கதைகள் – மாம் ஃப்ரம் இந்தியா, ஸ்தீரீ ரத்தினங்கள், இதெல்லாம் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்), வித்யா சுப்பிரமணியன், மணிமாலா (ன்னு நினைக்கிறேன்; இவங்க பேர் ஞாபகமில்லை, ஆனா வித்யா சுப்பிரமணியன் மாதிரியே, லெண்டிங் லைப்ரரி புத்தகங்கள் படிக்கும் வீட்டுப் பெண்களுக்கு பிடித்த இன்னொரு எழுத்தாளர்) எல்லோரும் சொல்றது கிட்டத்தட்ட ஒண்ணுதான்!

    **”ஒரு பொண்ணு கஷ்டப்படறா, ஆனா பண்பாட்டை (?) மீறாம அதை எதிர்க்கறா, ஆம்பளைங்க முதல்ல புறக்கணிக்கறாங்க, வசை பாடறாங்க, etc…etc… கடைசி அத்தியாயத்துலேயோ அல்லது அதற்கு முந்தைய அத்தியாயத்துலேயோ திருந்திடறாங்க!”**
    (இதுல அனுராதா ரமணனின் சில புதினங்களில் வரம்புக்கு(?) மீறி சில முடிவுகள் இருக்கும். எனக்கும் அது பிடித்திருந்திருக்கிறது!)

    எங்க சித்தி, அவங்க அம்மா, எங்க பெரியம்மா, எங்க சித்தியோட சித்தி எல்லோருக்கும் இது போன்ற நாவல்கள் மிகவும் பிடிக்கும்! எனக்கும் இவை பிடிக்கும்! எந்த அளவுக்கு பிடிக்கும்னா, ஒரு நாவலை ஆரம்பிச்சேன்னா கண்டிப்பா படிச்சு முடிச்சுடுவேன்!
    இதுக்கெல்லாம் காரணம் எளிது – உன்னோட மொழியில் சொன்னா, சென்னைக்கு இந்தப் பக்கமும், பெங்களூருக்கு இந்தப் பக்கமும் இருக்கும் பெண்கள் பெரும்பாலோனாரின் கணவன், அப்பா, பிள்ளை மூவருமே அதிகாரம் செலுத்தும் ஆணாதிக்கவாதிகள்தான் (பிள்ளைகளை வேணா தவிர்த்துடலாம்! ஆனா அவங்களும் கணவன் ஆனா இதே நிலைமை தான்!). அந்தப் பெண்களுக்கு இந்த புதினங்களில் வரும் கதாநாயகிகளுடன் தங்களை தொடர்புபடுத்திக்க முடியுது; அடையாளம் கண்டு கொள்ள முடியுது! நாவல்லயாச்சும் பரவால்ல! கடைசியில ஹீரோ திருந்திடறான் இல்லனா நாத்தனாரோ, மாமியாரோ மருமகளைப் புரிஞ்சுக்கறாங்க; ஆனா நிஜத்துலே… புரியுதா! அதான் இவங்களோட சக்ஸஸ் ஃபார்முலா! டோண்டு சாரும் நிச்சயம் இது மாதிரி ஆணாதிக்கவாதிகளை நிறையப் பார்த்திருப்பார் (அவர் அப்படி இருக்கமாட்டார்னு நம்பலாம்!). அதான் அவராலயும் எத்தனை நாவல்களானும் ரசிக்க முடியுது!

    இதே நிலைமையை திரைப்படங்கள்ல பார்த்தேன்னா விக்ரமன் கையாண்டிருப்பார் – **ஒரு ஆளு முன்னேற்றான்!** (மனுஷனை ‘சென்னைக் காதலு’க்கப்புறம் ஆளையே காணோம்! சென்னை இவரை கைவிட்டிருச்சு போல!)

    அன்புடன்
    வெங்கட்ரமணன்.

    Comment by venkatramanan — July 9, 2008 @ 3:17 am

  34. //மீடியாக்களின் அதிககபட்ச ஹைப்பும், நம்முடைய அதிகபட்ச எதிர்பார்ப்பும் சேர்ந்து மற்றவர்களுக்கு எல்லாம் பாஸ்மார்க் 35 என்றால் கமலுக்கு மட்டும் 80 என்று வைத்து அளவிடத் தோன்றி இருக்கின்றது.
    //
    அருமையான ஒப்புமை.
    உண்மை அதுதான் நந்தா…

    Comment by princenrsama — July 15, 2008 @ 1:40 pm

  35. Hi,

    Gents also reading ramani ?? it is a surprise to me . I accept the story line is same in all her stories. it all
    spoke about love that is possible only in fantasies.Thatz why gals(including myself) love to read those stories.Not only ramani most of authors are writing the stories which drove the readers into an imaginary world.very few only writing about the real life.About ur comments on those novels i wud like to remind you those have been written a decade ago .and your comment on calling her as amma , why you comrades call balakumaran as a guru? ( i knw for this line alone ‘ll drive as many comments).He also only selling the stories na???. I dont see any harm to call her as amma . its suit her age also.

    Regards,
    Uma

    Comment by Uma — July 25, 2008 @ 5:15 am

  36. Hai

    Gents Iam also reading her novels.pls dont send like this ok.ur commends are idiotic commends.

    Comment by priya — July 26, 2008 @ 5:02 am

  37. வாருங்கள் உமா.

    தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். ரமணி சந்திரனின் தீவிர வாசகியோ? சற்றேனும் கோபமடைந்து விட்டீர்களோ?பின்னூட்டத்தில் அப்படி தெரிவது போல் ஒரு பிரமை. :)

    வாசிப்பு என்பது காலத்திற்கேற்ப பரிணாம வளர்ச்சி அடையும் ஒன்று. இப்பதிவின் நோக்கம் இந்த இந்த எழுத்தாளரை வாசிப்பவர்கள் நல்ல ரசனையுடையவர்கள், வேறு சிலரை படிப்பவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள் என்று தரம் பிரிப்பது அன்று. அப்படி தரம் பிரிக்க நான் யார்? ஆகையால் அது அல்ல இங்கே நான் சுட்டிக்காட்டுவது.சொல்லப்போனால் ரமணி சந்திரன் அவர்களை, வயதின் காரணமாய் அம்மா என்று அழைப்பதில் எனக்கு ஏதும் பிரச்சினையில்லைதான். நான் முக்கியமாய் சொல்ல விரும்புவது தனது எழுத்துக்களின் மூலமாய் R.C அவர்கள் தனது வாசகர்களுக்கு எதை கற்பிக்கிறார், அல்லது பல காலமாய் கற்பித்து வந்திருக்கிறார் என்பதையே. அதை சொல்லிக் காட்ட, ஏன் இடித்துரைக்க, ஒரு வாசகனாக எனக்கு முழு உரிமையும் இருக்கிறது.

    //I accept the story line is same in all her stories. it all spoke about love that is possible only in fantasies.Thatz why gals(including myself) love to read those stories.//

    ஒத்துக் கொண்டதற்கு நன்றி. இதையேதான் நானும் சொல்லி இருந்தேன்.

    //Not only ramani most of authors are writing the stories which drove the readers into an imaginary world.very few only writing about the real life.//

    இல்லைங்க. என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். பாலகுமாரனையும், ரமணி சந்திரனையும் தாண்டி இன்னும் பல எழுத்தாளார்கள் எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள். வேண்டுமானால் சொல்லுங்கள் லிஸ்ட் அனுப்பி வைக்கிறேன்.

    //.About ur comments on those novels i wud like to remind you those have been written a decade ago .//

    சரிதான். பதினைந்து வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டவைதான்.ஆனால் இப்போது இருபதாவது மறுபதிப்பாக வெளியிடப்பட்டு இன்னமும் நன்றாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இதற்கு என்ன சொல்லுகிறீர்கள்? இது போன்ற சில கதைகள் தேவையற்று அதிக முக்கியத்துவம் பெறப்பட்டு சிலாகிக்கப்படும் போது “அடக் கொடுமையே, இதையா பாராட்டறீங்க” என்று எதிர்குரல் எழுப்பித் தீர வேண்டியிருக்கிறது. சரி நீங்களே சொல்லுங்கள்.அந்த இரண்டு கதைகளின் உள்ளடக்கத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? அது சரி என்று உங்களுக்கு படுகிறதா???

    //why you comrades call balakumaran as a guru? ( i knw for this line alone ‘ll drive as many comments).//

    ஹா ஹா. எழுத்தாளனை எப்போதும் ஒரு குருவைப்போல ஒரு பீடத்தில் அமர்த்தி வைப்பதில் எனக்கு விருப்பமிருந்ததில்லை. அது பாலகுமாரனோ, ஜெயமோகனோ, ரமணி சந்திரனோ, யாராயிருந்தாலும் அதுதான். அதே சமயம் இது தனிப்பட்ட வாசகனுக்கும், எழுத்தாளனுக்குமிடையேயான உறவு. அதில் தலையிட்டு கருத்து சொல்லவும் எனக்கு உரிமையில்லை என்பதையும் ஏற்றுக் கொள்கிறேன்.

    இந்த பதிவை எழுதும் போதே, பலருக்கு இது கோபத்தைக் கிளப்பக்கூடும் என்று எதிர்பார்த்தேன். எழுத்தாளர்கள் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் பலர் ஒவ்வொரு அரசியலை பின்புலமாய் வைத்து ஏதேனும் ஒரு கருத்தை நிறுவ முயற்சித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். ஒவ்வொரு எழுத்தாளருக்கும் தனிப்பட்ட நடை என்ற ஒன்றிருக்கும். அதை அவரது பல புத்தகங்களில் காணலாம். ஆனால் கதைகளையே ஒரே வகையான டெம்ப்ளேட்டில் வைத்து எழுதும் வெகு சில எழுத்தாளர்களில் ரமணி சந்திரனும் ஒருவர். இந்த குற்றச்சாட்டை எவராலும் மறுக்கவும் முடியாது.

    நீங்களோ அல்லது வேறு எவரேனுமோ இந்த கனவுத்தன்மைதான் பிடித்திருக்கிறது என்று கூறி இதை விட்டு வெளிவர விருப்பமில்லாமல் இருந்து கொள்வது உங்கள் தனிப்பட்ட உரிமை. ஆனால் அதே சமயம் அதிலுள்ள சில விஷயங்கள் தவறு என்று நான் கருதுபவையை சொல்லிக் கொண்டுதான் இருப்பேன். யார் கோபப்பட்டாலும்…

    Comment by நந்தா — July 26, 2008 @ 5:24 am

  38. //Hai

    Gents Iam also reading her novels.pls dont send like this ok.ur commends are idiotic commends.//

    என்ன பிரச்சினைங்க பிரியா உங்களுக்கு??? ரமணி சந்திரன் கதை நாயகிகளைத்தான் நான் சற்று இழித்துப் பேசியிருக்கிறேன். சொன்னேன். வாசகரையோ அல்லது வாசகிகளையோ பெரிதாய் எதுவும் சொல்ல வில்லையே.

    //இவரது கதைகளை சோறு தண்ணி இல்லாமல் படித்துக் கிடப்பதுமான தமிழ் சூழல் மீதும், இவரது தீவிர வாசகர்களான எனது சில நண்பர்கள் மீதும்//

    அதுவுமில்லாமல் பெண்கள் மட்டும்தான் R.C யை படிக்கிறார்கள் என்று நான் சொல்லவே இல்லையே. ஆனால் அந்த விகிதாச்சாரத்தில் பெண்கள் அதிகம் என்ற ரீதியில் தான் சொல்லியிருப்பேன். மேலே நான் எழுதி இருக்கும் வரிகளைக் கவனியுங்கள். பொதுப்படையாகத்தான் சொல்லி இருக்கிறேன். கமெண்ட் போடும் முன்பு கொஞ்சம் நன்றாக படித்து விட்டு போட முயற்சிக்கலாமே?

    அதேசமயம் பெண்களின் எழுத்தாளர் என்று அவர்களை நான் சொல்வது நான் வைத்த பெயர் இல்லை. அவருக்கு எழுத்துலகத்தில் ஏற்கனவே இருக்கும் பெயர்.

    அப்புறம் இடியாட்டிக் கமெண்ட்ஸ் என்றெல்லாம் சொல்லி இருந்தீர்கள். என்ன கமெண்ட் எப்படி இடியாட்டிக் என்று பொறுமையாக சொன்னீர்களேயானால் ஒருவேளை நான் தவறாக எழுதி இருந்தால் திருத்திக் கொள்கிறேன். பொத்தாம் பொதுவாய் சொன்னால் எப்படி?

    “டாய் எங்க தலைவனையாடா தப்பா சொல்ற “என்று சீறிப்பாயும் ஒரு அடிமட்ட அரசியல் தொண்டனுக்கும், தியேட்டர் வாசலில் கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்யும் ரசிகனுக்கும், நமக்கும் கொஞ்சமாச்சும் வித்தியாசம் இருக்கணுங்க.”

    யோசியுங்கள்.

    Comment by நந்தா — July 26, 2008 @ 5:37 am

  39. //மணல் கொள்ளையை எதிர்க்க வேண்டியதன் அவசியத்தை இவ்வளவு தீவிரமாய் படங்களில் காட்டியதாயும் எனக்கு நினைவில்லை//

    அந்த வசனங்கள் கூர்மையானவை

    Comment by புருனோ — July 29, 2008 @ 9:13 pm

  40. ரமணி சந்திரனின் நாவல்களை இந்த அளவிற்கு விமர்சித்திருக்க வேண்டாமோ என்று தோன்றுகிறது. எல்லா கதையும் ஒரே மாதிரியிருந்தாலும் புதிது புதிதாய் வாங்கிப் படித்துக் கொண்டுதான் இருக்கிறோம். ரமணி சந்திரனின் நாவல்களை வாசிக்கும் பெண்கள் வேறு எழுத்தாளர்களை வாசிப்பதில்லையா…உண்மையிலேயே எனக்குள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி தந்தவை அவருடைய நாவல்கள்தான். வாசிப்பின் மகத்துவத்தை இன்று உணர்வதற்கு தூண்டுக்கோலாய் இருந்தது அவருடைய நாவல்கள்தான். எல்லாருடைய எழுத்துக்களையும் வாசிக்கும் பக்குவம் இன்று வந்துவிட்டாலும் அவருடைய நாவல்களை படிக்கும் ஆவல் இன்னமும் குறையவில்லை.அப்புறம் நடுத்தர வர்க்க பெண்கள் மட்டுமே படிக்கிறார்கள் என்பது ஏற்றுக் கொள்ளும்படி இல்லை.

    Comment by புனிதா — August 19, 2008 @ 8:25 pm

  41. வணக்கம் புனிதா. வெகு தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

    ரமணி சந்திரன் மட்டுமல்ல எந்த எழுத்தாளர்களுமே விமர்சனத்திற்குட்பட்டவர்கள்தான். பல பேர் விரும்புகிறார்கள் என்ற காரணத்திற்காக எதையும் அப்படியே ஆராதிக்க பழகிக் கொள்ள வேண்டும் என்பதில் எனக்கு எப்போதும் உடன்பாடு இருந்ததில்லை.

    நீங்கள் ரமணி சந்திரன் அவர்கள் எழுத்துக்களயும் தாண்டி நகர்ந்து விட்டதில் சந்தோசமே. ஆனால் தனது எல்லையை அதற்குள்ளாகவே சுருக்கிக் கொண்டவர்களும் அதிகளவில் இருக்கத்தான் செய்கின்றார்கள். சொல்லப் போனால் எழுத்தாளாரது தவறு எதுவும் இல்லைதான். இது வாசகர்களின் பிரச்சினையே.

    //எல்லா கதையும் ஒரே மாதிரியிருந்தாலும் புதிது புதிதாய் வாங்கிப் படித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.//

    எல்லா கதை ஒரே மாதிரியாய்தான் இருக்கிறது என்று நீங்கள் மட்டுமல்ல அவரை ஆதரித்த எல்லாருமே ஒத்துக் கொண்டுதானிருக்கிறார்கள். உங்களுக்கு அவரைப் பிடிக்கும் என்பதால் இது எல்லாம் ஒரு குற்றமா என்று நீங்கள் புறம் தள்ளி விட்டுப் போயிடலாம். அதற்காக பிறரும் அவ்வாறு செய்யக் கூடாது என்று நீங்கள் சொல்ல முடியாதல்லவா?

    மிக முக்கியமாக இன்னொன்றை நான் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.

    //என்னைக் கேட்டால் ஒன்று சொல்லலாம் ரமணி சந்திரன் நாவலின் நாயகிகளை பேசாமல் “சுயமரியாதை இல்லாத ஜென்மங்கள்” என்று அடைமொழி இட்டுக் கூப்பிட்டுக் கொள்ளலாம்.// (பதிவில் சொன்னது)

    அவரது வேறு பல நாவல்களை நண்பர்கள் சிலர் வாதத்திற்காக வரும் போது எதிர் கருத்துக்களைச் பெயருடன் சொல்ல வேண்டுமே என்று படித்துப் பார்த்ததில் மேலே நான் சொல்லியுள்ள எனது எண்ணத்தை இன்னமும் அதிகப்படுத்திதான் இருக்கின்றன. சமீபத்தில் படித்துப் பார்த்த “பொழுதி விடிகிற வேளையிலே”, “இந்த மனம் எந்தன் சொந்தம்” போன்ற பல கதைகளின் நாயகிகளையும், மன்மதனைப் போன்ற கதாநாயகனையும், பெண்கள் கூட்டமே அவன் பின்னால் அலைவது போன்ற தோற்ற அமைப்பும், நாயகி நாயகன் மீது எவ்வளவு கோபமாய் இருந்தாலும் அவன் சிரிக்கும் போது அப்படியே சொக்கிப் போவதும், நாயகனின் பணத்துக்காக அத்தைப் பெண்ணோ, அக்காள் மகளோ, நாயகியின் தங்கையோ, யாரேனும் ஒருவர் பிரதான வில்லியாய், நாயகனின் மேல் ஈஷிக் கொண்டு வலம் வருவதும், தேவைப்பட்டால் அவர்கள் நாயகனுடன் உல்லாசமாக இருக்க தயாராக இருப்பதாய் அழைப்பு விடுப்பதுவும்….முடியலைங்க.

    ஆதர்ச புருஷர்களாய் ஒரு நடிகரை தலையில் வைத்துக் கொண்டாடுவதற்கும், எழுத்தாளரை கொண்டாடுவதற்கும் பெரிய வித்தியாசம் இல்லைங்க. எவரது படைப்பும் விமர்சனத்திற்குட்பட்டதே. விமர்சனங்களும் விருப்பு வெறுப்பின்றி அமைந்தாக வேண்டியவையே.

    நன்றி புனிதா.

    Comment by நந்தா — August 25, 2008 @ 6:41 am

  42. நானும் அவங்க புத்தகங்கள் படிச்சிருக்கேன். நீங்க சொல்லியிருப்பது உண்மைதான்.

    தொடக்கம் இரண்டு பக்கம், நடுவில் இரண்டு பக்கம், பிறகு முடிவில் இரண்டு பக்கம் வாசித்தாலே கதை முழுமையாக தெரிந்து விடும்.

    பல சமயங்களில், பெண்களை எதற்காக இப்படி சித்தரிக்கிறாங்க ன்னு கோபம் வந்திருக்கு. முக்கியமாக அந்த submissive மனநிலை எரிச்சலடைய வைத்திருக்கிறது. நான் மட்டுமில்லை, பலரும் (பல வயது முதிர்ந்த பெண்களும் கூட) கோபப்படுவதை பார்த்திருக்கிறேன்.

    ஆனாலும் மீண்டும், மீண்டும் அந்த கதைகளை வாசிக்க காரணம் ஏதோ நிறைவேறாத சில கனவுகளை கதையின் சில பகுதிகள் நிறைவேற்றுவதுதான் என நினைக்கிறேன்.

    Comment by கலை — August 27, 2008 @ 4:53 am

  43. I haven’t read read Ramani Chandran ever before. Living abroad has its advantages, I guess. :-) ) I read a couple of chapters in kumudam online sometime back, and I didn’t think that I would ever read her books either. I knew that she was popular in certain circles, but I am not planning to read Mangaiyar Malar either (Is this magazine still being published?)

    Now you have created a strong desire to read her books. Your description gives the impression that her books are real trash, and I can’t quite believe that trash is this popular in Tamil Nadu. So I am going to think that you are wrong, or I am going to read trash – either way I am going to curse you! :-) )

    Thanks to venkatramanan for pointing out this post…

    Comment by RV — August 31, 2008 @ 11:51 am

  44. அப்பாடா புரிதலுக்கு நன்றி கலை.

    //முக்கியமாக அந்த submissive மனநிலை எரிச்சலடைய வைத்திருக்கிறது. //

    என்னை ரௌத்ரமே கொள்ள வைக்கிறது. :)

    வாங்க RV. எப்படிப் பார்த்தாலும் எனக்கு சாபம் உறுதி. சரி ஆரம்பிக்கறதும் ஆரம்பிக்கறீங்க. அவங்களோட கண்ணே மணியேன்னு ஒரு புத்தகம் இருக்கு. அதுல ஆரம்பிங்க.

    இதுல நாயகனும் நாயகியும் காதலிப்பார்கள். நாயகியிடம் நாயகனின் தாயார் சில பொருளாதார காரணங்களுக்காக நாயகனை விட்டுப் பிரிந்து விட வேண்டும் என்று வேண்டு கோள் வைப்பார். தியாகி பட்டம் எனும் போதையை விரும்பும் நாயகியும் ஒரு பொய்க்காரணத்தை கடித்தத்தில் எழுதி வைத்து விட்டு அவனை விட்டு வேறு ஊருக்கு போய் விடுவாள். (இதெல்லாம் ஃப்ளாஷ்பேக்ல வரும்). நாயகியின் தம்பி நாயகனிடம் பணம் கடன் வாங்கியிருப்பான். கடனைத் தீர்க்கும் பொருட்டு நாயகியையும் அவளது தம்பியையும் வேலைக்கு சேரச் சொல்லுவான். இருவரையும் தகுதிகளுக்கேற்ற வேலை கொடுக்காமலும், வார்த்தைகளாலும், இன்னும் வேறு வழி முறைகளாலும் அவளை பழி வாங்குவான்.

    என்னளவில் இதை பழி வாங்குவது என்பதை விட Humiliation என்றுதான் சொல்ல தோன்றுகிறது. ஏறக்குறைய ஒரு சேடிஸ்டைப் போல நடந்து கொள்வான். நடு நடுவில் ஆண்களுக்கு வலை விரிப்பவள், பணத்திற்காக எதையும் செய்பவள் என்பது போன்ற பேச்சுக்கள் வேறு. இப்படி இருந்தும் ஒரு முறை அவன் அவளது விருப்பமில்லாமல் அவளை கட்டியணைக்கும் போது அவளது மனமும் உடலும் நெகிழ்ந்து விடுகிறது என்று எழுத்தாளர் குறிப்பிடு்வார்.

    (ஏம்மா வயித்துக்கு உப்பு போட்டுதான சாப்பிடற என்று நாயகியைப் பார்த்து கேட்கத் தோன்றியது எனக்கு)

    கடைசியில் உண்மை தெரிந்ததும் நாயகனை கல்யாணம் செய்து கொள்ள நாயகி தயாராகி விடுவாள்.

    ஆங் சொல்ல மறந்துட்டனே. வழக்கம் போல இதுலயும் வில்லி மாதிரி ஒரு பெண் கேரக்டர். வழக்கம் போல அந்த பெண் நாயகனை அடைய எதையும் செய்ய தயாராயிருப்பாள். அவளது வாழ்நாள் இலட்சியமே அவனை எப்படியாவது கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். அவன் ஏற்கனவே மணம் புரிந்திருந்தவனாயிருந்தாலும் சரி.

    RV நீங்க இதுக்கு மேல என்ன சாபம் விடணும். உங்களுக்கு சொல்றதுக்காக தேடிப் பிடிச்சு இதைப் படிச்சு பார்த்தேன். இதை விடவா நீங்க என்னை கடுப்பேத்திடப் போறீங்க. :)

    Comment by நந்தா — September 3, 2008 @ 4:44 am

  45. [...] ரமணி சந்திரனை படித்ததில்லை. நந்தா எழுதியதை படித்த பிறகு இவ்வளவு மோசமாக [...]

    Pingback by வெங்கட்டின் சூப்பர் போஸ்ட் « Awarda Kodukkaranga — September 5, 2008 @ 2:12 am

  46. நந்தா,

    திட்டிக்கிட்டே நிறைய புஸ்தகங்கள் படிச்சிருக்கீங்க போல. இந்த அலகு குத்திக்கிறது, தீ மிதிக்கிறது மாதிரி ஏதாவது வேண்டுதலா? :-) )

    எனக்கு புஸ்தகம் சிபாரிசு செய்ய தேடி பிடிச்சு படிச்சத்துக்கு நன்றி!

    Comment by RV — September 5, 2008 @ 11:18 am

  47. Dear friend,

    I want to make you clear one thing. There are so many categories of writers like Mr.Sujatha specialised in Science fictions, Rajeshkumar in Thriller and murder mystery and also female writers like Lakshmi,Sivashankari,Anuradha Ramanan, Vidhya Subramaian etc in their own way of presentations attracting their own readers. All their creations are only imaginations and not the real one. Even in movies also they exaggerate the emotions to some extent beyond the real happenings. I am fond of reading Mrs. Ramanichandran writings. It doesn’t mean i am behind the illegal way of falling in love in the stories. If you just cross it out Madam has portrayed relationships like Mother-in-law, Friend, Mother, Brother, etc in very nice manner. To be frankly saying i have strong faith in Love and Affection not the romance relationship you are telling. I don’t even have faith in Love at first sight or Love marriage. I am an NRI living in abroad missing all such relationships.I was really surprised to see how narrow-minded you are and having under estimating thought about females. Sorry for being harsh towards you. But I was astonished to see how you judged persons on yr own thoughts.
    I am not only wife, but also mother, sister to my brothers, daughter-in-law to my mother-in-law and so on.Love is more than that of anything in imagination. I think i have given enough explanation for you

    regards
    KK

    Comment by KK — November 29, 2008 @ 11:02 pm

  48. //There are so many categories of writers like Mr.Sujatha specialised in Science fictions, Rajeshkumar in Thriller and murder mystery and also female writers like Lakshmi,Sivashankari,Anuradha Ramanan, Vidhya Subramaian etc in their own way of presentations attracting their own readers. All their creations are only imaginations and not the real one.//

    ஆமாங்க நான் இல்லைன்னு சொல்லலையே. அதுவுமில்லாமல் நான் அவரு இப்படி எழுதி இருக்காரு. இவரு இவ்ளோவ் அழகா எழுதி இருக்காருன்னு சொல்லி ரமணி சந்திரனை மற்றவர்களுடன் ஒப்பிட்டு எழுத வில்லையே. நான் எழுதி இருப்பது அவரது கன்டென்ட் சரியா தவறா? அது எனக்குள் ஏற்படுத்தி இருக்கும் பாதிப்புகள் ஆகியவையே. அவை குறித்தான எனது மதிப்பீடுகள். அவ்வளவே.

    //Even in movies also they exaggerate the emotions to some extent beyond the real happenings. //

    நீங்க சினிமான்னு போனீங்கன்னா தீவிர சினிமா விமர்சனங்களை படிச்சுப் பாருங்க. கடிச்சு குதறி எடுத்திருப்பாங்க. அதோட ஒப்பிட்டீங்கன்னா என்னுடைய விமர்சனம் காரம் குறைவானதே.

    //It doesn’t mean i am behind the illegal way of falling in love in the stories. If you just cross it out Madam has portrayed relationships like Mother-in-law, Friend, Mother, Brother, etc in very nice manner. To be frankly saying i have strong faith in Love and Affection not the romance relationship you are telling. I don’t even have faith in Love at first sight or Love marriage. I am an NRI living in abroad missing all such relationships.//

    புரியலை. உறவுகளின் நடுவே இருக்கும் மெல்லிய காதலுணர்வை நான் தவறு என்றே சொல்ல வில்லையே. அந்த காதலுணர்வுகளை இவர் தவறுகளுக்கு நியாயம் கற்பிக்கப் பயன் படுத்தும் போது எல்லையில்லா கோபம் வருகின்றது. காதல் திருமணங்களில் உங்களுக்கு நம்பிக்கையில்லை என்கிறீர்கள். ஆனால் காதல் உணர்வுகள் அழகானவை, மிகத் தேவையானவை என்று சொல்கின்றீர்கள். சரி உங்களாஇப் போலவே மற்றவர்களும் இருக்க வேண்டும் என்று அவசியமும் இல்லையே. இது எனக்கும் பொருந்தும்தான்.

    //I was really surprised to see how narrow-minded you are and having under estimating thought about females. Sorry for being harsh towards you. But I was astonished to see how you judged persons on yr own thoughts.//

    இதெல்லாம் கம்மிங்க. அதெப்படிடா நீ எனக்குப் பிடிச்ச எழுத்தாளரைப் பத்தி தப்பா சொல்லலாம்னு கெட்ட வார்த்தைகளில் திட்டியது உட்பட பல மடல்கள் பல விதங்களில் வந்திருக்கிறது. அதனால் இது பழகிடுச்சு.

    சரி விஷயத்திற்கு வருகிறேன். நான் நினைக்கிறேன் நீங்க ரமணி சந்திரனை தப்பா எழுதி விட்டானே இவன் என்ற கொதிப்பில் இந்த வரிகளை எழுதி இருக்கிறீர்களோன்னு. ஏன்னா தலைகீழா தேடிப்பார்த்துட்டேன் என் பதிவுல பெண்களை கேவலப்படுத்துவது போல எங்கே எழுதி இருக்கேன்னு. ஆனா எனக்கு எதுவும் சிக்கலை. முடிஞ்சா அடுத்த பதில்ல எந்த வரி தவறானவைன்னு சொல்லிட்டுப் போங்க. பொத்தாம் பொதுவா என் பதிவு குப்பை, தவறானதுன்னு பல பேரு கடுப்புல சொல்லிட்டுப் போயிட்டாங்க. ஒருத்தரும் இதுதான் தப்புன்னு எதையும் குறிப்பிட்டு சுட்டிக்காட்டலை. நீங்கள் அப்படி எதையாவது சுட்டிக்காட்டிச் சொன்னீங்கன்னா எனக்கும் பதில் சொல்ல வசதியா இருக்கும்.

    ஒரு பொண்ணை ஒருதலைபட்சமா காதலிச்சதுக்காகவே அவளை வன்புணர்வின் மூலம் அடைகின்றான் ஒரு நாயகன். தனது சகோதரியிடம் உறவு கொண்டு அவளிற்கு குழந்தையைக் கொடுத்து விட்டு போன தனது முன்னாள் காதலன்(???) திரும்பி வருகையில் அவனிடம் தஞ்சம் புகும் நாயகி, தன்னையும், தனது தம்பியையும் பழிவாங்கும் பொருட்டு Humiliate செய்யும் நாயகனிடம் (முன்னாள் காதலன்) மயங்கி நிற்கும் நாயகி…. இப்படிப்பட்ட நாயகன்களை உத்தம புருஷர்களாய் காட்டுவதன் மூலமும், அவர்களிடம் நாயகிகள் சுய மரியாதை அற்று அடங்கிப் போவதையும், அதுதான் சரி என்ற கற்பிதத்தையும் உருவாக்கும் ரமணி சந்திரன் நாவல்களில் உங்களுக்குப் பிடித்தமான விஷயங்கள் பல இருக்கலாம். ஆனால் அதில் இருக்கும் அபத்தங்களை மற்றவர்கள் சொல்லக் கூடாது என்று நீங்கள் சொல்ல முடியாது.

    //I think i have given enough explanation for you//

    சத்தியமா இல்லைங்க. குறிப்பிட்டு இது சரிதான். இது எந்த வகையில தவறு என்று நான் சொன்னவைகளின் மீது கேளுங்கள். பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

    அதை விடுத்து காதல் புனிதமானது. அவரது கதைகளில் காதல் இருக்கிறது அதனால எனக்குப் (பல பேருக்குப்) பிடிக்கும். அதைப் போய் மோசம்னு சொல்றியே என்னமாதிரி ஆளு நீ? ன்னு கேட்டா நான் சொல்ல ஒன்றுமில்லை.

    Comment by நந்தா — December 1, 2008 @ 2:49 am

  49. Dear friend,

    What you have focused in this article that all these women are going behind such trash things (creations of Mrs. Ramanichandran) by spending their valuable time. Am I correct? See what is our culture ? Oruvanukku Oruthi forms the base for true relationship. Also Love and affection, Faith & Give and take are some of the qualities needed for true relationship. Has Ramanichandran missed anything of this in her stories ? Even though Hero is really a flirt person Herione is following the culture and putting her efforts to change him.Also all of her stories will have happy endings (which is not possible in real life). I am not forcing my opinion on you.I am justifying her writings. Thats all.

    Even in ur story Kadhal enapaduvathu yathanin… you have expressed love in real life. But my view is “Love is like a friendship before marriage.” We won’t show our love by hugging or kissing in our culture. But things changed lot we are following fusion of Western and Indian culture. we have rights to share certain issues like future careers, talking about families, likes and dislikes, general talks not physical touches. Can I say that all ur readers are having bad taste. I too loved ur story bcoz of the feel of love expressed in diff. logic.

    You just replace yourself as writer of romantic novels and present your writings and give me the impression that You are better than Ramanichandran I will accept that Ramanichandran’s writing is trash. Done . (Just jk)

    Gratitude
    Kayal K

    Comment by KK — December 1, 2008 @ 6:32 am

  50. Continution of above…

    Paragraph 5 in ur article Indha Ore kadhayai ramanichandran… the whole para.(as if all readers of Ramanichandran are behind some issues longing for something. I don’t even want to say such things in my comments) annoyed me lot. You can criticise Mrs. Ramanichandran but what about her readers particularly women. Express ur thoughts without hurting others feelings.

    Comment by KK — December 1, 2008 @ 7:31 am

  51. //What you have focused in this article that all these women are going behind such trash things (creations of Mrs. Ramanichandran) by spending their valuable time. Am I correct?//

    இல்லைங்க. இதை எல்லாம் போய் ஏன் படிக்கறீங்கன்னு நான் அவரது வாசகர்களிடம் கேட்டால் அவர்களது ரசனையில் நான் தலையிடுவதாய் இருக்கும். என்னுடைய முக்கிய நோக்கம் அவர்களது எழுத்துக்களில் முன்வைக்கும் கற்பிதங்களை கேள்விப்படுத்துவது, ஒழுக்க விதிகளை ஆண்களுக்கு ஒருவாறும், பெண்களுக்கு ஒருவாறும் விதிப்பதை விமர்சனம் செய்வது என்ற முறையிலேயேதான்.

    அது மட்டுமல்ல எனது இப்பதிவின் நான் எவரையேனும் சிறுமைப்படுத்த முன்றிருந்தால் அது ரமணி சந்திரனையும் அல்ல அவர்களது வாசகர்களையும் அல்ல. அது அவர்களது கதையின் நாயகிகளையும், நாயகன்களையுமாகத்தான் இருக்கும்.

    //See what is our culture ? Oruvanukku Oruthi forms the base for true relationship. Also Love and affection, Faith & Give and take are some of the qualities needed for true relationship.//

    கலாச்சாரம், குடும்ப அமைப்புகள் ஆகியவற்றை நீங்கள் பாரம்பரியம் எனும் கண்ணாடி வழியே பார்க்கும் போது ஒரு மாதிரியும், பெண்ணியம் எனும் கண்ணாடி வழியே பார்க்கும் போது ஒரு மாதிரியும் தெரியும். அதை பற்றி விவாதிக்க வேண்டுமென்றால் ஒரு தனித் தொடரே எழுத வேண்டும். ஒரு பாராவில் என்னால் பதில் அளிக்க முடியும் விஷயமல்ல அது. ஒன்றே ஒன்று சொல்லலாம். தனி மனித உரிமைகளை மதிக்காத அமைப்பும், கலாச்சாரமும் சிறந்த ஒன்றாய் இருக்கவே முடியாது.

    //Even though Hero is really a flirt person Herione is following the culture and putting her efforts to change him.//

    இந்த இடத்திலதான் நான் வேறுபடுகின்றேன். ஏற்கனவே சொல்லி இருந்தது போல ஆண் கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பான், பொம்பளைப் புள்ளைதான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிப் போகணும் என்ற ஒரு வகையான தாழ் மன உணர்வுகளை என்னால் ஒத்துக் கொள்ள முடிய வில்லை. அதுதான் இங்கே பிரச்சினையே.

    //I am not forcing my opinion on you.I am justifying her writings. Thats all. //

    புரிதலுக்கு நன்றி. எனது நிலைப்பாடும் அதுவே.

    இதுக்கு அப்புறம் நீங்க பாராட்டினதுக்கும், எதிர் வினைகளை கண்ணியத்துடன் எடுத்துச் சொன்னதற்கும் இன்னொரு நன்றி.

    Comment by நந்தா — December 1, 2008 @ 8:50 am

  52. பதிவு மிக அருமை.. :) (ரொம்ப லேட்டா வந்து கமெண்ட்டுரனோ?? பரவால்ல.. ;) ) பின்னூட்டங்களும் அருமை.. :)

    Comment by ஸ்ரீமதி — December 4, 2008 @ 3:44 am

  53. Sir.. நீங்க ரொம்ப பொறுமைசாலியா இருக்கீங்க :)
    அமாம், ராஜேஷ் குமார் ஆயிரமாவது நாவல் எழுதி கின்னஸில் இடம் பெற்றிருக்கிறாரே. அவருக்கு எதாவது செய்தி வைத்திருக்கிறீர்களா ;-)

    Comment by Karthikeyan G — January 16, 2009 @ 1:26 pm

  54. Huh..
    Nanda… I am sorry I have no time to write a comment in tamil. very very excellent writing. I mean your articles…I thousand percent accept what you said about Ramani chandran ..I wish , being a woman, she should write more responibly..

    I have started reading your blog..will take time to read them all ..

    keep writing..
    cheers,
    Janu

    Comment by Janu — January 31, 2009 @ 8:30 am

  55. good but bad i too hate ramani stories but her writing style is changed now

    Comment by sara — April 24, 2009 @ 1:10 am

  56. naan konja naala ninaichitrunhden. aana ivlo alasal indha topic la nadandirukunu ipathan paakaren. im toooooooo late. but very happy to join u all. i started to read
    her b4 6 months n i read 7 to 9 novels. really im tired. ramani ma’am pls try to change. nandha sir superb!

    Comment by jothi — April 29, 2009 @ 5:53 am

  57. நன்று சரா மற்றும் ஜோதி. அந்த சாரை மட்டும் கட் பண்ணிடுங்க ப்ளீஸ். ஸ்கூல் வாத்தியாரை கூப்பிடற மாதிரி இருக்கு.

    Comment by நந்தா — April 29, 2009 @ 6:10 am

  58. [...] பணிபுரியும் நந்தா, பக்காவாக ஒரு பதிவினை போட்டிருந்தார். அவருக்கு  பதில் எழுத [...]

    Pingback by kettu kuttusuvaraava(na)thu eppadi? « Small Eyes. Big World.. — May 19, 2009 @ 7:58 am

  59. ஹலோ நந்தா,

    உங்களை இங்கே பார்ப்பதில் மிகுந்த சந்தோஷம் :)

    இதோ என்னுடையை வாழ்க்கையில் ரமணி சந்திரனின் பங்கு…
    படித்து உங்கள் பிரஷர் ஏறினால் நான் பொறுப்பல்ல…

    http://akhilnjaya.wordpress.com/2009/05/19/ramanichandranandme/

    ஜெயா.

    Comment by ஜெயா — May 19, 2009 @ 8:43 am

  60. [...] பணிபுரியும் நந்தா, பக்காவாக ஒரு பதிவினை போட்டிருந்தார். அவருக்கு  பதில் எழுத [...]

    Pingback by கெட்டு குட்டி சுவராவ(ன)து எப்படி? « Small Eyes. Big World.. — May 19, 2009 @ 8:45 am

  61. [...] அவர் ரமணி சந்திரனை பற்றி எழுதிய ஒரு பதிவை பார்த்துவிட்டு எப்படியாவது [...]

    Pingback by இன்னும் கொஞ்சம் தமிழ் சரித்திர நாவல்கள் « கூட்டாஞ்சோறு — June 11, 2009 @ 4:41 am

  62. Some Stories are same concept but the reader gain information like that how to take decisions in a particular situation,and how to make a correct conversation.so any story or novel is only dependent on users thinking cabability and their konwledge growth

    Comment by shanmuga — June 24, 2009 @ 11:48 am

  63. அருமையான உங்கள் விமர்சனம் என்னை RC அவர்களின் கதைகளை வாசிக்க வைத்தது. Great publicity by the way :)

    தான் செய்த தவறுகளை உணர்ந்து திருந்தி மன்னிப்புக்கேட்கும் மனிதர்களுக்கு இன்னொரு சந்தர்ப்பம் கொடுக்கலாம் அல்லவா? அதைத்தான் RC கதைகளில் வரும் நாயகிகள் செய்கிறார்கள் போலும்.

    Comment by Ano — September 27, 2009 @ 2:54 pm

  64. Mr. Nandha,
    If you dont like rc novels thats up to you. There are many fans for her novels whether you like it or not its none of our business.
    There are many things to worry about in this world. I think its not necessary to write such a comment on someone else when we are not capable of doing anything as such.
    I have collected nearly 60 novels of rc so far. Pl dont hurt others by doing so.

    aagneslazar

    Comment by Aagneslazar — January 23, 2010 @ 8:22 am

  65. //If you dont like rc novels thats up to you. There are many fans for her novels whether you like it or not its none of our business.
    There are many things to worry about in this world. I think its not necessary to write such a comment on someone else when we are not capable of doing anything as such.
    I have collected nearly 60 novels of rc so far. Pl dont hurt others by doing so.//

    இதுல இன்னொருத்தர் ஃபீலிங்கை ஹர்ட் பண்றது எங்க இருந்து வந்தது? உங்க பேச்சுக்கே வர்றனே. இப்போ உங்களுக்கு என் பதிவு பிடிக்கலைன்னா பேசாம கண்ணை மூடிக்கிட்டு போயிருக்கலாமே. ஏன் மெனக்கெட்டு கமெண்டு போடறீங்க? இது சும்மா கேட்கணும்னே கேட்டது. அப்படித்தான் உங்க கமெண்டும் எனக்கு தோணுச்சு.

    அதுவுமில்லாம நான் எங்கேயும் ர.சந்திரனை எனக்கு பிடிக்கலை. அதனால யாரும் படிக்காதீங்கன்னு கட்டளை போடலை. அவருடைய நாவல்களில் உள்ள தவறுகளைச் சுட்டிகாட்டி இதனால் எனக்கு பிடிக்கலைன்னு சொல்றேன். பெண்களைச் சிறுமைப்படுத்தும் விதமாய் எழுதும் அவரை எனக்கு பிடிக்காமல் போனது தவறில்லை என்று சொல்கிறேன். இதில் உங்களுக்கு ஏன் ஆவேசம் என்று புரிய வில்லை. எழுத்தாளனுக்கெதிராய் எந்த ஒரு விமர்சனத்தையும் எழுப்பக்கூடாதா என்ன?

    Comment by நந்தா — January 25, 2010 @ 4:54 am

RSS feed for comments on this post. TrackBack URL

Leave a comment

Powered by WordPress