nav-left cat-right
cat-right

சந்தோஷ் சுப்ரமணியம், யாரடி நீ மோகினி – ஒரு பார்வை

சந்தோஷ் சுப்ரமணியம்

இயக்குநர் ராஜா தனது தம்பிக்கு இன்னொரு வெற்றியை வரவழைத்து கொடுத்திருக்கும் ஒரு திரைப்படம். வறட்டு கூச்சல்களுடைய திரைப்படங்களுக்கு நடுவே சிலீரென்ற ஒரு பரவசத்தை ஏற்படுத்தும் ஒரு படம். பல்வேறு காட்சிகளில் சின்ன சின்னதாய் கவிதைகளை ஒளித்து வைத்திருக்கும் ஒரு படம். இப்படி சின்ன சின்னதாய் பல பாராட்டல்களை தந்து விட்டுப் போகலாம் சந்தோஷ் சுப்ரமணியம் திரைப்படத்திற்கு.

தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உறவை மையமாய் வைத்து இன்னுமொரு கதை என்று சாதாரணமாய் ஒற்றை வரியில் முடித்து விடக்கூடிய கதையை வைத்து ஒரு பெரிய தோரணமே கட்டியிருக்கிறார்கள். பிரகாஷ்ராஜ், சயாஜி ஷிண்டே, ஜெனிலியா,ரவி, கீதா, சந்தானம், கௌசல்யா, பாஸ்கர் என்று படம் முழுக்க நட்சத்திரப் பட்டாளங்களாய் நிரப்பியிருக்கிறார்கள்.

தனது மகனுக்கு வழிகாட்டுவதாய் நினைத்துக் கொண்டு, அவனது ஒவ்வொரு செயலையும் தானே முடிவெடுக்கும் ஒரு தந்தைக்கும், தனது சுயத்தை வெளிக் கொணரத் துடிக்கும் ஒரு மகனுக்கும் இடையே நடக்கும் உணர்வுகள்தான் கதை. எல்லாவற்றிலும் தனது தந்தையின் தலையீடு இருந்தாலும், தனக்கான ஒருத்தியைத் தேர்ந்தெடுப்பதிலும், சுயமாய் ஒரு தொழில் தொடங்குவதிலும் மட்டும் முற்றிலும் தனது விருப்பபடி மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைக்கும் மகனாய் ஜெயம் ரவி நன்றாகவே நடித்துள்ளார். மிக முக்கியமாய் இந்த படத்தில் அவருக்கு வாய்ஸ் மாடுலேஷன் நன்றாய் வந்திருக்கிறது. அதீத பாசமான, கண்டிப்பான தந்தையாய் பிரகாஷ் ராஜ். சொல்ல வேண்டுமா என்ன. நன்றாகவே நடித்திருக்கிறார்.

தொடை தெரிய 4 பாட்டிற்கு வந்து இடுப்பை ஆட்டி விட்டு போகும் கதாநாயகிகளின் படங்களுக்கு நடுவே நாயகியை படம் முழுதும் முழு உடையிலேயே வலம் வர வைத்ததற்கே இயக்குநருக்கு தனியாக ஒரு சபாஷ் போட வேண்டும். ஜெயம் ரவி, பிரகாஷ் ராஜ் இருரையுமே சர்வ சாதாரணமாய் தூக்கி சாப்பிட்டு விடுகிறார் ஜெனிலியா எனும் ஹாசினி. ஒரு குழந்தையின் குதூகலத்தை, குறும்புகளை, மழலைச் சிரிப்பை எப்படி நாள் முழுக்க உட்கார்ந்து பார்த்துக் கொண்டே இருக்கலாமோ அது போல படத்தில் இவர் செய்யும் செய்கைகளை, அமைதியாக உட்கார்ந்து ரசித்துக் கொண்டே இருக்கலாம். இதற்கு முன்பு இது போன்ற வேடங்களை லைலாதான் செய்திருக்கிறார். அதில் காணப்படாத ஓர் அழகியல் உணர்வு இவரிடத்தில் கொஞ்சம் அதிகமாகவே தெரிகிறது.

“பாரு புக்ஸ் ஃபுல்லா ப்ராப்ளம்தான்”, பாத்ரூமிலிருந்து வரும் ஜெயம் ரவியிடம் “இந்தப் பக்கமிருந்தா வந்த என்று கேட்டு விட்டு பதிலுக்கு காத்திருக்காமல் சிரிக்கும் காட்சி”, பெண் தோழியிடம் பேசுவது போல பேசிக் கொண்டே, “பை ப்பா” என்று இயல்பாய் சொல்லும் காட்சி, ”கொம்பு முளைச்சிடும், இன்னொரு தடவை வந்து முட்டு”, “அய்யோ இங்க டிரைவரே இல்லை”, என்று தான் வரும் காட்சிகளிலெல்லாம் இவர் மட்டுமே தெரிகிறார்.

க்ளைமாக்ஸ் படத்திற்கு ஒரு பெரிய பலம். ஜெயம் ரவி சிறப்பாகச் செய்திருக்கிறார். மழை, தாஸ் போன்ற படங்களிலெல்லாம் அவரது குரலைக் கேட்டு பீதியடைந்ததைப் போல இந்த படத்தில் எதுவும் ஏற்படாதவாறு, வாய்ஸ் மாடுலேஷன் நன்றாகவே வந்துள்ளது. குறிப்பாக “சிரிக்கிறாங்கப்பா ஆஃபிஸ்ல எல்லாரும்” எனும் இடத்தில் ஏற்படும் பிசிறல் சோக உணர்வை அதிகப் படுத்துகிறது.

கௌசல்யா எதற்கு இந்தப் படத்தில் என்று கேட்குமளவிற்கு ஒன்றுமேயில்லாத ஒரு வேட்ம். கீதாவுக்கு பெரிதாய் நடிக்க வாய்ப்பில்லாமல் இருந்தாலும் கிடைக்கும் ஒரு சில காட்சிகளில் நன்றாகச் செய்திருக்கிறார். எடிட்டிங், ஒளிப்பதிவு ஆகியவை எல்லாமே நன்றாகவே இருக்கிறது. இதற்கு மேல் வேறு என்ன சொல்வது? திரும்ப திரும்ப படத்தின் உள்ளடக்கங்களைப் பற்றி (கதை, திரைக்கதை, வசன்ம், இது போன்று) மட்டுமே பேசுவதனால் அலுப்பு தட்டுகிறது. மொத்தத்தில் சந்தோஷ் சுப்ரமணியம் அழகியல் விரும்பிகள், மெலோ டிராமா பிரியர்கள், இளைஞர் பட்டாளம், குடும்பமாக பார்க்க விரும்புபவர்கள், என்று முக்கியமான ஆட்களைக் குறிவைத்து எடுக்கப்பட்ட, அவர்களது எதிர்பார்ப்புகளை எந்த வகையிலும், ஏமாற்றாதவாறு எடுக்கப்பட்ட படம் என்று சொல்லலாம். என்னுடைய தனிப்பட்ட கருத்தாய், பெரும்பாலானோர் இது போன்ற படங்களை விரும்ப வாய்ப்பிருக்கிறது என்று சொல்லிக் கொள்கிறேன்.

சரி ஆனால் இப்படத்தின் மூலம், பிரதிக்கும், வாசகனுக்கும் இடையேயான தொடர்பு எப்படிப்பட்டதாய் இருக்கிறது, என்று பார்த்தால் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. முதலில் ஹாசினி யார்? அவள் ஒரு விளையாட்டுப் பெண்ணா, குழந்தை மனமுடையவளா? இல்லை லூசா??? நம்முடைய வாழ்க்கையில் இது வரை ஒருவரையாவது இது போன்ற குணாதிசயங்களோடு பார்த்திருப்போமா??? ஒரு ஆண் கிளர்ச்சியுறாமல் இருக்க வேண்டுமானல், பொம்பளை புள்ளை தான் ஒழுங்கா நடந்துக்கணும், ”பாத்து பல்லிளிச்சா ஆம்பளைப் புள்ளை சபலப் படத்தான் செய்வான்”, என்று முழுக்க, முழுக்க வன்மம் நிறைந்த ஆணாதிக்க சமுதாயத்தில், ஜெனிலியா போன்ற ஒரு அழகான பெண், குழந்தைத் தனத்தோடு, பார்க்கும் எல்லோரையும் நண்பராக்கிக் கொள்ள நினைக்கும் ஒரு பெண்ணிற்கு டீக்கடை மாஸ்டரையும், பாணி பூரி கடை அண்ணாவையும் தவிர வாலிப வயதில் நண்பர்களே இல்லாமல் இருப்பது ஆச்சர்யமே.

சந்தோசுக்கும், ஹாசினிக்கும் காதல் ஏற்படுவதைக் கூட அவ்வளவு தெளிவாக காட்ட வில்லை. ஹாசினியின் கதாபாத்திரத்தில் இருக்கும் அத்தனை ஓட்டைகளையும் பார்வையாளர்களிடமிருந்து மறைப்பது அழகியல் தடவப்பட்ட காட்சிகள்தான். சொல்லப் போனால் இது ஒரு வகை ஃபேண்டஸி. நம்மில் பெரும்பாலோருக்கு, அப்படி ஒரு குழந்தைத்தனமான பெண்ணாய் இருக்கவோ, அல்லது அப்படிப்பட்ட பெண்ணை தோழியாகவோ, காதலியாகவோ வாய்க்கக் கிடைக்க பெற்றவராகவோ இருப்பதில் ஏற்படும் சந்தோஷ உணர்வுகளை, இந்த ஃபேண்டஸி காட்சிகள் சற்றே தூண்டி விடுவதால், இது போன்ற லாஜிக் மீறல்கள் எளிதில் புறம் தள்ளப் பட்டு விடுகிறது.

நாளை சந்தோசும், ஹாசினியும் கல்யாணம் செய்து கொண்ட பின்பு, தான் வங்கியில் கடன் வாங்கி ஆரம்பித்த பிஸினஸைப் பார்க்க சந்தோஷ் போக ஆரம்பித்த பின்பு. அப்போது ஹாசினி என்ன செய்வாள்? ரவியுடன் அலுவலகம் சென்று அங்கேயும், இதே போன்று குறும்புகளைச் செய்வாளா???அப்போதும் சந்தோஷ் அதை விரும்புவானா? அல்லது கீதாவைப் போல சமையலறைக்குள்ளேயே, அன்னாசிப் பழத்தை வைத்துக் கொண்டும், தாளிக்கும் கரண்டியை வைத்துக் கொண்டும் தனது குறும்புத்தனங்களை ஹாசினி தொடர்ந்து கொண்டிருப்பாளா? கல்யாணம் ஆன பொம்பளை மாதிரியா நடந்துக்கிற என்று அப்போது யாரும் சொல்ல மாட்டார்களா என்பது போன்ற கேள்விகள் வலிந்து யோசித்தால் மட்டுமே ஏற்படுவது, ஹாசினியின் குழந்தைத் தனத்திற்கு கிடைத்த வெற்றியாக பார்க்கலாம்.

இந்த படத்திலும் பல லாஜிக் மீற்ல்கள், பார்வையாளர்களை உணர்ச்சி வயப்பட்ட நிலையிலேயே வைத்திருக்கும், முலாம் பூசப்பட்ட காட்சிகள், பெரும் வேகத்தடையாய் பாடல்கள், மொக்கையான காமெடிகள் என்று பல விஷயங்கள், யதார்த்த நிலையிலிருந்து விலகி இருந்தாலும், அந்த காட்சிகள் எவையும் பார்வையாளானின் மனதில் மோசமான விளைவை ஏற்படுத்துவதில்லை என்ற காரணத்திற்காகவும், ”ஜனரஞ்சக சினிமா” எனும் லேபிளைக் கொடுப்பதன் மூலமும், விட்டு விடலாம். சொல்லப் போனால், மனதை ரிலாக்ஸ் செய்ய இது போன்ற படங்கள் தேவைதான்.

பி.கு: படத்தின் உள்ளடக்கங்களை வைத்து இங்கே நான் சொல்லியிருக்கும் பாராட்டுகளும், விமர்சனங்களும் ”சந்தோஷ் சுப்ரமணியம்” ன் மூலப் பதிப்பான தெலுங்கு படத்திற்கும், அதன் இயக்குநருக்கும் மட்டுமே போய்ச் சேரக் கூடியவை. ராஜாவை பாராட்ட வேண்டுமென்றால், ஒன்றே ஒன்றுக்கு பாராட்டலாம். விஜய் தெலுங்கிலிருந்து தேர்ந்தெடுக்கும், ஹீரோயிச, அதீத வன்முறை நிறைந்த, மொக்கை படம் போல் ஒன்றைத் தேர்ந்தெடுக்காமல், இது போன்ற ஒரு படத்தை தேர்ந்தெடுத்ததற்கு.

யாரடி நீ மோகினி

இந்தப் படத்தைப் பற்றி என்ன சொல்வது?? ஆரம்பிக்கும் முன்னே ஒன்றே ஒன்று சொல்லி விடுகிறேன். நீங்கள் இந்தப் படத்தை ரசித்துப் பார்த்தீர்களா?? நான் இந்தப் படத்தின் மீது வைக்கும் விமர்சனம் உங்களுக்கு ஒருவேளை கோபத்தைக் கூட வரவைக்கலாம். எனவே தொடர்ந்து படிப்பது உங்கள் இஷ்டம்.

என்னைக் கேட்டால் இது போன்ற படங்கள் ஒரு சாபக் கேடு என்றுதான் சொல்வேன். தெலுங்கில் இந்த படத்தை செல்வராகவன் இயக்கி இருக்கிறாராமாம். இது போன்ற கதையில், செல்வராகவன் மட்டும் எப்படி வித்தியாசமாய் எடுத்து விட முடியும் என்று இதன் தெலுங்குப் பதிப்பையும் பார்க்க விருப்பம்தான். ஆனால் இந்த படம் தந்த கோபத்திலிருந்தே நான் இன்னும் மீள வில்லை. இன்னொரு ரிஸ்க் எடுக்க பயமாய் இருக்கிறது. ரொம்பவும் சந்தோஷமாய் இருக்கும் ஒரு தருணத்தில் அதை பார்க்கலாம்.

ஒரு துறையைப் சார்ந்து படம் எடுப்பதற்கு முன்பு, அந்த துறையப் பற்றி கொஞ்சமெனும் அறிவைப் பெற்றுக் கொண்டு படம் எடுத்துத் தொலையலாம். எனக்குத் தெரிந்து எந்த மென்பொருள் துறை அலுவலகத்திலும் ப்ராஜக்டை பிரிண்ட் அவுட் எடுத்து கொடுப்பதில்லை. நான் கடைசியாய் பிரிண்ட் அவுட் எடுத்தது கல்லூரியில் எதோ ஒரு சாதாரண ப்ரோக்ராமுக்காக. இங்கே சர்வதேச துறையில் அதைச் செய்து கொண்டிருக்கிறார்களாம்.

தனுஷின் இண்டர்வியூ காட்சிகள், முதன் முறை அலுவலகம் செல்லும் போது தனுஷிடம் மனோபாலா, நயன்தாரா நடந்து கொள்ளும் முறை, ”காஞ்ச மாடு வக்கப்புல்லை பார்ப்பது போன்று” தனுஷ் நயன்தாராவிடம் நட்ந்து கொள்ளும் முறை, என்று எந்த காட்சிகளிலும் யதார்த்தம் என்ற ஒன்றை எவ்வளவு தேடினாலும் கிடைக்கவில்லை. ஒரு கம்பெனியின் ப்ராஜக்ட் லீடரை, அவரது சீனியர் எல்லார் முன்னிலையிலும் திட்டுவது, “system.out.println” கூடத் தெரியாத ஒருவர், ஓவர் நைட்டில் ஒட்டு மொத்த ப்ராஜக்டையே 2 டீ குடித்தவாறே முடிப்பது, கீபோடர்டை பட பட வென்று தட்டியவுடன், ஒட்டு மொத்த ப்ராஜக்டே க்ராஷ் ஆகி விட்டது எனும் காட்சி ஆகியவற்றையெல்லாம் பார்க்க, பார்க்க உள்ளுக்குள்ளே ரௌத்ரம் பொங்குகிறது. எப்படி எடுத்தாலும் பார்வையாளர்கள் படம் பார்ப்பார்கள் எனும் ரசிகனை அடிமட்ட மடையனாகவே பார்க்கும் ஒரு எண்ணத்தைத் தவிர வேறு எதுவும் இதில் ஒளிந்திருப்பதாய் நினைக்க முடியவில்லை.

மனோபாலா சாஃப்ட்வேர் இஞ்சினியரின் கதாபாத்திரமாம். அடக் கொடுமையே. செல்வராகவன் தொடர்ச்சியாய் விடலைப்பையன்களின் மன நிலையை படம் பிடித்துக் காட்டுகிறேனென்று சொல்லிக் கொண்டு இதிலும் அதைச் சற்றே பிரதிபலித்திருக்கிறார். “நமக்கெல்லாம் இப்படி ஒருத்தி படு பயங்கர அழகா, வெள்ளையா, மாடர்னா ஒருத்தி கிடைப்பாளா” எனும் ஏக்கத்தை இன்னொரு முறை உபயோகப் படுத்திக் கொண்டிருக்கிறார். லிஃப்டில் நயன்தாராவுடன், தன்னை ஒப்பிட்டுப் பார்த்து தனுஷ் பொறாமைப்படும் காட்சி அதைச் சொல்கிறது. தனுஷைப் பார்த்தால் பக்கத்து வீட்டுப் பையனைப் போன்ற ஓர் உணர்வு ஏற்படுவது உண்மைதான். ஆனால் இன்னும் எத்தனை முறை தனுஷை இதே போன்ற கேரக்டர்களில் நடிக்க வைப்பார்களோ????

படத்தின் கதை என்று பார்த்தால், தனுஷ் நயந்தாராவை எதேச்சையாய் பார்க்கிறார். அவரை கவர் செய்வதற்காகவே (தனுஷின் நடவடிக்கைகள் இந்த வார்த்தையைத்தான் என்னை உபயோகப் படுத்த வைக்கின்றன.) நயன் வேலை செய்யும் அலுவலகத்தில் 2 நாள் கடினமாய் உழைத்து சேர்ந்து விடுகிறார். 5 வருஷமா தனுஷ்க்கு வேலை கிடைக்க வில்லை என்பதை இங்கே மறந்து விட வேண்டும். அப்புறம் நயனிடம் காதலை சொல்ல, அவ்ர் மறுக்க, தனுஷ் அப்பா ரகுவரன் சிபாரிசிற்கு வந்து நயனிடம் பேச, நயன் ரகுவரனை திட்டி அனுப்பி விட, அடுத்த நாள் காலையில் ரகுவரன் இறந்து கிடக்கிறார். சோகத்திலிருந்து தனுஷை மீட்க அவரது நண்பர் கார்த்திக் தனது கிராமத்தில், கூட்டுக் குடும்ப வீட்டிற்கு கூட்டிப் போக அங்கேதான் தெரிய வருகிறது நயந்தான் கார்த்திக்கை கட்டிக் கொள்ளப் போகும் முறைப் பெண் என்று. அப்புறம் என்ன, தனுஷின் தொடர்ச்சியான ஹீரோயிச நடவடிக்கைகள் நயனிற்கு தனுஷின் மீது காதலை வரவைத்து விடுகிறது. வழக்கம் போல் கார்த்திக் விட்டுக் கொடுக்கிறார். அவர்களது குடும்பமும் இதெல்லாம் அடிக்கடி எங்க வீட்ல நடப்பதுதான் என்பது போல கேசுவலாக இதை எல்லாம் ஏற்றுக் கொள்கிறது. அவ்வளவுதான். சுபம். நாயகனும் நாயகியும் ஒன்று சேர்ந்து விட்ட சந்தோசத்தில் ரசிகர்கள் வீடு திரும்புகின்றார்க்ள்.

இந்த கதையை வைத்து இந்தியாவில் படமெடுக்க வேண்டுமென்றால், 2 1/2 மணி நேரம் இதை இழுக்க வேண்டும். ஆனால் இந்த கதை அவ்வளவு நேரம் வராதே. என்ன செய்யலாம். ரசிகர்கள் இதைதான் எதிர்பார்க்கிறார்கள் என்று சொல்லி 5 பாடல்கள் அதில் இரண்டு அல்லது மூன்று பாடல்களில் நடிகை தொடை, தொப்புள், க்ளிவேஜ் தெரிய ஆட வேண்டும். 2 சண்டைக் காட்சிகள், 5 க்ளிஷே காட்சிகள், மொக்கையாய் 4 காமெடி காட்சிகளை வைத்தால் ஒருமணி நேரம் சேர்ந்துவிடும். அப்புறம் என்ன தமிழ் சினிமா ஃபார்மூலா ரெடி. 2 1/2 என்ன 3 மணி நேரம் கூட எடுக்கலாம்.

முதல் பாதி முழுக்க, முழுக்க கலாட்டாவாகவும், காமெடியாகவும் போக, இரண்டாவது பாதி முழுதும் செண்டிமெண்ட், ஹீரோவின் தியாகம், பீறிட்டு அடிக்கும் காதல் உணர்ச்சி என்று எல்லா கலவையையும் இரண்டாவது பாதியில் கொட்ட இதோ கதை ரெடி. ஒரு காலத்தில் ஆர்.பி.சௌத்ரி த்யாரிப்பு இயக்குநர்களும், விக்ரமன் அவர்களும் ஆரம்பித்து வைத்ததை இன்றும் தமிழ் சினிமா தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இங்கே காமெடி என்று செய்யும் லூட்டிகள் எரிச்சலைத்தான் வர வைக்கின்றது.

ஆஸ்திரேலியா டூர் காட்சிகளும் குறிப்பாக நயன் குடித்து விட்டு செய்யும் லூட்டிகளும் பார்வையாளனின் அடிமட்ட ரசனைக்கு தீனி போடும் நோக்கத்தைத் தவிர வேறு எதற்காகவும் எடுக்கப் பட்டதாய் தெரிய வில்லை. முக்கியமாய் குடித்து விட்டு நைட்டியை இழுத்து விட்டு தான் உட்காருவேன் எனும் காட்சி, நயனைச் சீண்டி தனுஷ் பாடும் பாடல், திடீரென்று நயன் தாராவை தனுஷ் ஒருமையில் கூப்பிட ஆரம்பிப்பது, என பல விஷயங்கள் என்னைப் பொறுத்த வரை ஆண் பார்வையாளனின் விகார உணர்வை குறிவைத்துத்தான் எடுக்க பட்டிருக்கிறது. ஒரு பெண்ணை ஒரு தலை பட்சமாய் காதலிக்க ஆரம்பித்து விட்டாலே போதும் அவள் மீது என்ன உரிமை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் எனும் ஓர் ஆதிக்க எண்ணத்தின் வெளிப்பாடாய்த்தான் தனுஷ் தனது சீனியாரான நயனை திடீரென்று ஒருமையில் கூப்பிட ஆரம்பிக்குகம் காட்சிகள் உணர்த்துகிறது.

மற்றவர்களுக்கு எப்படியோ, நயன் ரகுவரனை திட்டும் காட்சிகளில் எல்லாம் ரகுவரன் மீது எனக்கு சற்றும் பரிதாபம் ஏற்பட வில்லை. நயன்தாரா செய்தது சரிதானே என்றுதான் எண்ணத் தோன்றியது. ஆனால் அனுதாபம் ஏற்பட வேண்டுமே.விளைவு ரகுவரன் சாகிறார். தனுஷ் அநாதை ஆகிறார்.இன்னும் எத்தனை வருடங்களுக்குதான் எனக்குன்னு யாருமில்லை நான் ஒரு அநாதை என்று எவரேனும் சொல்லும் போது, பிண்ணனினியில் நூறு வயலின்கள் சோக கீதம் பொழிய, எதிரில் கேட்டுக் கொண்டிருப்பவர் உடனே கண்களை கசக்க ஆரம்பித்து “நான் இருக்கேன்பா உனக்கு” என்று பரிதாப்த்தின் அடிப்படையில் காதல் எழுவதை காட்டிக் கொண்டிருப்பார்களோ தெரிய வில்லை. இப்படி பரிதாபப்பட்டும், அனுதாபம் காட்டி காட்டியேதான் இன்னமும் பலரது உணர்வுகளை நாம் காயப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

கார்த்திக், தனுஷ், நயன் ஆகியோர் ஊருக்குப் போகும் போது காட்டும் பாடலும், அதில் ஆடும் நடிகையின் நடன அசையுகளும் குறிப்பாய் பாடலின் இறுதிக் கட்டத்தில் வயல் வெளியில் ஒற்றைப் பாதை பிண்ணனியில் தெரிய, வலப்பக்க ஓரமாய் நின்றுக் கொண்டு நடிகை இடுப்பை அசைத்து செய்யும் நடன அசைவுகள்…… இதுக்குப் பேசாமல் மெகாசீரியல் எடுத்துப் பொழைக்கலாம்.

ஒரு காலத்தில் ரெக்கார்டு டான்ஸ் பார்ப்பது என்பதை தவறான, அறுவறுப்பான ஒன்றாகப் பார்த்த சமூகம் இப்போது குடும்பத்துடன் உட்கார்ந்து அதைக் கண்டு களிக்கிறது என்பதை நினைத்து தமிழ் சினிமா பெருமைப்பட்டுத் தொலையட்டும்.

பி.கு: இதற்கு மேலேயும் இந்த படத்தில் நிரம்பியிருக்கும் அபத்தங்களை காட்சிக்குக் காட்சி காட்டி பட்டியலிடலாம்தான். இந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்ததே அதிகம் என்று தோன்றுகிறது.

29 Responses to “சந்தோஷ் சுப்ரமணியம், யாரடி நீ மோகினி – ஒரு பார்வை”

  1. Hari says:

    Check this out..

    I read your blog in the reader. I completely agree with your views. But, you have to move away from the crap. The best thing you could do to bad movies/books/blogs/posts/comments…is ignoring, which no one does.When u can, u have found a way to like things.

    Just to distract you, something which was similar to your topic and came to my reader,the same day as yours

    http://dilbertblog.typepad.com/the_dilbert_blog/2008/04/new-movie-revie.html

  2. சாத்தான் says:

    நீங்க பி.கு-ல போட்டத மு.கு-ல போட்டிருக்கணும்….

  3. சாத்தான் says:

    நான் சந்தோஷ் சுப்ரமணியம் பத்தி சொன்னேன்…

  4. ஆகா, பட்டாச வெடிச்சிட்டே நந்தா….

    //நாளை சந்தோசும், ஹாசினியும் கல்யாணம் செய்து கொண்ட பின்பு, தான்
    வங்கியில் கடன் வாங்கி ஆரம்பித்த பிஸினஸைப் பார்க்க சந்தோஷ் போக
    ஆரம்பித்த பின்பு. அப்போது ஹாசினி என்ன செய்வாள்? ரவியுடன் அலுவலகம்
    சென்று அங்கேயும், இதே போன்று குறும்புகளைச் செய்வாளா???அப்போதும்
    சந்தோஷ் அதை விரும்புவானா? //

    ஆகா, என்னடா நந்தா இன்னும் தன் ட்ரேட்மார்க் கேள்விகள கேக்கலீயேன்னு நினைச்சேன்.

    //ஒரு துறையைப் சார்ந்து படம் எடுப்பதற்கு முன்பு, அந்த துறையப் பற்றி
    கொஞ்சமெனும் அறிவைப் பெற்றுக் கொண்டு படம் எடுத்துத் தொலையலாம்//

    நம்ம துறை பத்தி சொன்னதால நமக்கு இதுல இருக்குற ஓட்டையெல்லாம் தெரியுது. அப்போ இவ்ளோ நாளா நமக்கு தெரியாத‌
    துறைகளை பத்தி சொல்லும் போது இப்படித்தானே நம்ம ஏமாத்தியிருப்பாங்க..

    சும்மாவே நாலு பேரு கூடிப்பேசினா நாப்பது தடவ சம்பந்தமேயில்லாம ஐ.டி. துறையினர பத்தி தப்பா பேசுறாங்க… இதுல இவுங்க வேற இப்படி படம் எடுத்தா வெளிங்கிரும்.

    யாரடி நீ மோகினி ஒரு மெகா மொக்கை என்பதில் சிறிதளவும் ஐயமில்லை ஐயா ;) ))))))))))

  5. Valavan says:

    Yaaradi Nee Mogini: I got much more angered when I saw 42 marks (Ananda Vikatan) given to this crap… hmmm… (some bloggers also mentioned its gud comedy movie… pothumda saami…)

  6. நந்தா…

    யாரடி நீ மோகினி பற்றி நான் நினைத்து வயிறு எரிந்து கொண்டிருந்ததை அழகாக எழுதிவிட்டீர்கள். அப்பாடா… நிம்மதி.

    சந்தோஷ் சுப்ரமணியம் பார்க்க எனக்கு சுத்தமாக விருப்பம் கிடையாது. அதன் தெலுங்கு பதிப்பைப்பார்த்து ரசித்தவன் நான். ஏற்கனவே, ரவி மற்றும் அவர் அண்ணன் கூட்டணியாக எடுத்த சம்திங் சம்திங் பார்த்து, பிரபுதேவாவை விட வருத்தப்பட்டேன். இவர்கள் original ஆக படம் எடுத்து தமிழ் ரசிகர்களை திருப்திப்படுத்தட்டும்.

    அன்புடன் நித்யகுமாரன்.

  7. அன்பின் நந்தா,

    தமிழ்த் திரைப்படங்களின் மீதான நுட்பமான பார்வை உங்களுக்கு வாய்த்திருக்கிறது.இப்படங்களைப் பார்த்த போது எனக்கு வந்த தார்மீகக் கோபங்கள் உங்கள் வரிகளில் அருமையாகப் பிரதிபலிக்கின்றன.

    சந்தோஷ் சுப்ரமணியம்:

    முதலில் இயக்குனருக்குப் பாராட்டுக்கள்.கவர்ச்சியை நம்பாமல்,குடும்பத்தோடு பார்க்கமுடியுமான,அழகான படம் தந்தமைக்கு.

    இயக்குனர் ராஜாவுக்கும்தான்.அரிவாள் வீச்சும்,ரத்தக் களறியும்,அடியாட்களும்,ஆவேச நாயகர்களுமாக எத்தனையோ தெலுங்குப்படங்கள் இருக்க இதுபோன்றதொரு படத்தைத் தமிழில் தந்தமைக்கு.

    ஜெனிலியா( ஹாசினி) தன் சம்பளத்தில் பாதியை அவருக்குப் பிண்ணனிக்குரல் கொடுத்த சவீதாவுக்குக் கொடுக்கவேண்டும்.
    அந்தக் குரல் இல்லையென்றால் ஹாசினியின் பாத்திரம் அவ்வளவு சோபித்திருக்கமுடியாது.
    (“சம்பளத்தை விடுங்கள்.அதில் கிடைக்கும் ஐயாயிரத்தை விட சம்பந்தப்பட்ட நாயகிகள் தொலைபேசியிலாவது பாராட்டமாட்டார்கள்-சிம்ரன்,லைலா,ஜோதிகா வைத்தவிர”என்கிறார் சவீதா)

    அண்ணனாக வரும் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ்,அக்காவாக வரும் கௌசல்யா எனப் பிரபலங்களை வீணைத்திருப்பதுதான் பாவமாக இருக்கிறது.

    நந்தா,படத்தின் பின்னரான காலப்பகுதியில் உங்களின் பார்வை சரியானதாகவே உள்ளது.எனினும் இப்பொழுது வரும் தமிழ்சினிமாக்களில் அப்படியெல்லாம் யோசிக்கத் தலைப்பட்டால் ஒன்றுகூடத் தேறாது.

    யாரடி நீ மோகினி :

    கதை,வசனம் செல்வராகவனுடையதாக இருக்கும் போது லாஜிக் பற்றிப் பேசத் தேவையில்லை.படம் பார்ப்பவர்களை முட்டாளாக அல்லது முட்டாளாக்க நினைத்துக் கொண்டே கதை விவாதத்தில் இறங்குகிறார்கள் போலும்.

    தனுஷ் பாத்திரம்,தனது தந்தையையே வா,போ எனத் திட்டிக்கொண்டு…என்ன சொல்வது..?

    இவர் ஒருதலையாய்க் காதலிப்பதற்காக,நயன்தாரா இவர் சொற்படிக் காதலித்தேயாக வேண்டுமா? நயன்தாரா மேல் நியாயம் இருக்கும் பட்சத்தில் அந்த இடத்தில் வரும் தனுஷின் வசனங்கள் மிகக் கீழ்த்தரமானவையாக இருக்கின்றன.

    அடுத்து தனுஷின் உற்ற நண்பனாகவும்,நயன்தாராவின் முறைப்பையனாகவும் வரும் கார்த்திக்கின் பாத்திரம்.அன்று தொடக்கம் இன்று வரை இவர் நடித்த அத்தனை படங்களிலும் இவரது முறைப்பெண்ணை நாயகனுக்குத் தாரை வார்ப்பதாகவே இவரது கதாபாத்திரம் அமைந்து வருகிறது.
    தன் உற்ற நண்பன் வேலை செய்யும் ஆபிஸ்,தனது முறைப்பெண் வேலை செய்யும் ஆபிஸ் இவருக்கு எள்ளளவும் தெரியாது எனக் காட்டும்போது ஒரு காதில் பூச்சுற்றல்.அதிலும் தனது முறைப்பெண் ஆஸ்திரேலியா வரை போகும் போதும் இவருக்கு அவர் யாருடன் போகிறாரெனத் தெரியாது.தனுஷும் தன் உற்ற நண்பர்களிடம் இது பற்றி..ஊஹூம்..மூச்.இரண்டாவது காதிலும் ஒரு பூச்சுற்றல்.

    அந்தக் கிராமம்.
    குடும்பத்தோடு அதிகாலையில் வெட்டவெளியில் டாய்லெட் போவது படுகேவலத்தின் உச்சம்.இன்றும் கூட இது போன்ற கிராமங்கள் இருக்கின்றதா என்ன?

    அதிலும் தனுஷ் போன்ற ஒரு சுள்ளான்,ஊர்ப் பெரிய ரவுடிக்கு எல்லோர் முன்னிலையிலும் அடித்து,சில நிமிடங்களில் சொத்துத் தகராறைத் தீர்த்துவைப்பது நடக்கக் கூடிய காரியமா என்ன?

    இப்படியெல்லாம் கஷ்டப்பட்டுப் பெற்ற சொத்துக்களை எல்லோரும் விட்டுவிட்டு தனுஷின் வீட்டுக்கு வந்துவிடுவதுதான் படத்தின் ஒட்டுமொத்தக் காமெடி.

    பிற்பாதியில் ஒரே ஆறுதலெனில் அது நயன்தாராவின் தங்கையாக வரும் புதுமுகம் சரண்யா மோகனின் நல்ல நடிப்பும்,சொந்தக் குரலும் தான்.

    //பி.கு: இதற்கு மேலேயும் இந்த படத்தில் நிரம்பியிருக்கும் அபத்தங்களை காட்சிக்குக் காட்சி காட்டி பட்டியலிடலாம்தான். இந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்ததே அதிகம் என்று தோன்றுகிறது.//

    இதையே தான் நானும் சொல்லவேண்டியிருக்கிறது நண்பா :)
    ‘நேபாளி ‘ விமர்சனத்தையும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

    என்றும் அன்புடன்,
    எம்.ரிஷான் ஷெரீப்.

  8. நந்தா… ஒரு பார்வையா… இரு பார்வையா…? :)

  9. //நந்தா… ஒரு பார்வையா… இரு பார்வையா…? :) //

    தலை இங்க இத்தனை பேரு சந்தாங்க இல்லை. அவங்களுக்கு யாருக்காவது இப்படி ஒரு கேள்வி கேக்கணும்னு தோணுச்சா.. சும்மாவா பா.க.ச வெச்சிருக்காங்க.

    //நீங்க பி.கு-ல போட்டத மு.கு-ல போட்டிருக்கணும்….//

    சாத்தான் நீங்கள் பின் குறிப்பாய் நான் சொல்லிய விஷயத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். அந்த பகுதியை போல்ட் செய்து விட்டேன்.

    ஹரி நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கட்ட்டுரையைப் படித்து விட்டு வருகிறேன்.

  10. //I read your blog in the reader. I completely agree with your views. But, you have to move away from the crap. The best thing you could do to bad movies/books/blogs/posts/comments…is ignoring, which no one does.When u can, u have found a way to like things.//

    ஹரி இதற்கு முன்பான எனது இரண்டு இடுகைளைப் படியுங்கள். நேர்மையான திரை விமர்சனங்கள் கண்டிப்பாக தேவையான ஒன்று என்பதுதான் நிலை. நிராகரித்தலும், கரித்துக் கொட்டுதலும் அந்தந்த கால சூழலும், அந்த படங்கள் ஏற்படுத்தும் கோபமும்தான் முடிவு செய்கின்றன.

    //நாளை சந்தோசும், ஹாசினியும் கல்யாணம் செய்து கொண்ட பின்பு, தான் வங்கியில் கடன் வாங்கி ஆரம்பித்த பிஸினஸைப் பார்க்க சந்தோஷ் போக ஆரம்பித்த பின்பு. அப்போது ஹாசினி என்ன செய்வாள்? ரவியுடன் அலுவலகம் சென்று அங்கேயும், இதே போன்று குறும்புகளைச் செய்வாளா???அப்போதும் சந்தோஷ் அதை விரும்புவானா?

    ஆகா, என்னடா நந்தா இன்னும் தன் ட்ரேட்மார்க் கேள்விகள கேக்கலீயேன்னு நினைச்சேன். //

    அது இல்லாமல் எப்படி பிரேம். உண்மையில் யாதார்ர்த்தவாதத்தில் பார்க்கையில், ஹாசினி போன்ற பெண்கள் தோழியாகவோ, காதலியாகவோ இருக்கையில் சந்தோஷப் படும் ஆண் மனம் அவளை மனைவியாய் வாய்க்கப் பெற்ற பின்பு அதே குதூகலத்துடன் நேசிக்குமா என்று தெரிய வில்லை. “இயல்பாயிருத்தல்” என்பதே கல்யாணத்திற்கப்புறம் தவறு என்று ஆகி விட்ட நிலையில் இது போன்ற கேள்விகள் எழத்தான் செய்கின்றன. அவளின் குழந்தைத்தனத்தை நேசித்த அதே ஆண் “ஏன் எல்லாத்துக்கிட்டயும் லூசு மாதிரி சிரிச்சு சிரிச்சு பேசிக்கிட்டிருக்க” என்று கேட்கலாம். யாருக்குத் தெரியும்… இவை எவையும் கற்பனைகள் இல்லை. நம் சமூகம் வகுத்திற்க்கும் ஒழுக்க விதிகளின் அடிப்படையில் யோசிக்கையில் இவை இயல்பாகவே எழும்புகின்றன. இன்னும் நிறைய இது குறித்துப் பேசலாம்தான். பார்க்கலாம்…..

  11. \\நமக்கெல்லாம் இப்படி ஒருத்தி படு பயங்கர அழகா, வெள்ளையா, மாடர்னா ஒருத்தி கிடைப்பாளா” எனும் ஏக்கத்தை இன்னொரு முறை உபயோகப் படுத்திக் கொண்டிருக்கிறார்\\
    நந்தா நச்.

  12. //Yaaradi Nee Mogini: I got much more angered when I saw 42 marks (Ananda Vikatan) given to this crap… hmmm… (some bloggers also mentioned its gud comedy movie… pothumda saami…)//

    வளவன் ஆ.வியின் விமர்சனத்தை எல்லாம் படிப்பதற்கு பேசாமல் உட்கார்ந்து மெகா சீரியல் பார்க்கலாம். :)

    ப்ளாக்கர்ஸ் மட்டுமல்ல, எனது அலுவலக நண்ண்பர்களில் பலர் கூட படம் “செமை காமெடிங்க” என்று சொல்லும் போது என்னால் தாங்கவே முடிவட்தில்லை.. டேய் உங்களைத்தாண்டா மாக்கான்னு நினைச்சு பாடம் எடுத்திட்டிருக்கான். அதை வேற உக்காந்து ரசிக்கறீங்களாடா என்று தினமும் சன்டை போட்டுக் கொண்டிருக்கிறேன்.

    //யாரடி நீ மோகினி பற்றி நான் நினைத்து வயிறு எரிந்து கொண்டிருந்ததை அழகாக எழுதிவிட்டீர்கள். அப்பாடா… நிம்மதி.

    சந்தோஷ் சுப்ரமணியம் பார்க்க எனக்கு சுத்தமாக விருப்பம் கிடையாது. அதன் தெலுங்கு பதிப்பைப்பார்த்து ரசித்தவன் நான். ஏற்கனவே, ரவி மற்றும் அவர் அண்ணன் கூட்டணியாக எடுத்த சம்திங் சம்திங் பார்த்து, பிரபுதேவாவை விட வருத்தப்பட்டேன். இவர்கள் original ஆக படம் எடுத்து தமிழ் ரசிகர்களை திருப்திப்படுத்தட்டும்.//

    வாருங்கள் நித்யகுமாரன்,

    “உனக்கும் எனக்கும்” படத்தின் மூலமான தெலுங்குப் பதிப்பை நான் தெலுங்கு தெரியாமலே 4 தடவை பார்த்திருக்கிறேன். அதற்குப் பின்பு தமிழ் பதிப்பை (உனக்கும் எனக்கும்) பார்த்ததாலேயே தெளிவாய் அப்படியே ஈயடிச்சான் காப்பி என்பதை உணர்ந்துக் கொள்ள முடிந்தது. இந்தப் படத்திலும் அதே கதைதான் என்பதில் சந்தேகமேயில்லை. என்னுடைய அத்தனை பாராட்டுகளும் தெலுங்கு இயக்குநரையே சேரும்.

    யாரடி நீ மோகினி யைப் பற்றி இன்னும் கிழித்து எடுக்கலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் “தூரப் போ சனியனே” என்று தூக்கி எறிந்து விட்டேன்.

  13. நந்தா, யாரடீ நீ மோகினிக்கு எல்லாம் இவ்வளவு பெரிசா எழுதுவது நேர விரயம். இதைப் பார்த்து பார்வையாளர்கள், படத் தயாரிப்பாளர்கள் இருவருமே திருந்தப் போவதில்லை. record danceக்கு விமர்சனம் எழுதினது போலத் தான். தெரிந்தே செய்பவர்களை விமர்சித்து என்ன ஆகப் போகிறது?

    சந்தோஷ் சுப்ரமணியத்துக்கு எழுதிய விமர்சனத்தை மூலப் படத்தைத் தேடிப் பிடித்து எழுதி இருந்தால் தமிழுக்கு வெளியில் வரும் நல்ல படங்களைத் தேடிப் பார்க்க வாசகர்களுக்கு ஆவல் வரும். தெலுங்குப் படம் என்றாலே மட்டமாகப் பார்க்கும் மனநிலையில் தமிழ்நாட்டில் இருக்கிறது. ஆனால், அதை எல்லாம் தாண்டி கதை, நுட்பத்தில் நிறைய முன்னேறி விட்டார்கள்.

    எல்லாரும் குப்பை என்று தெரிந்தே தான் பார்க்கிறார்கள். எனவே, இது குப்பை, அது குப்பை என்று அடையாளம் காட்டுவதை விட, எது நல்ல படம் என்று உலக அளவில் உள்ள திரைப்பட்டங்களைப் பார்த்து அடையாளம் காட்டுவது பயனுள்ளதாக இருக்கும். தமிழ் இணையம் முழுக்க தமிழ்த் திரைப்பட விமர்சனங்கள் நிறைந்து கிடக்கின்றன. தரமான உலகப் படங்களுக்கான அறிமுகம் தான் குறைவு. மதி, சுரேஷ் கண்ணன், பாலாஜி, டி சே என்று ஒரு சிலர் இது போன்று படித்து அறிமுகப்படுத்தும் படங்களை தேடித் தேடிப் பார்த்திருக்கிறேன். உங்கள் விமர்சனத் திறமைக்கும், கலைப்பார்வைக்கும் அவை நல்ல தீனியாக இருக்கும். நேர்மறையாகச் சொல்லவும் நிறைய விசயம் இருக்கும். எதிர்மறையாகவே இருக்கும் தமிழ்ப் படங்களையே தொடர்ந்து கிழித்துக் கொண்டிருந்தால் உங்களுக்கே அலுப்புத் தட்டி விடும்.

  14. lakshmi says:

    //ரொம்பவும் சந்தோஷமாய் இருக்கும் ஒரு தருணத்தில் அதை பார்க்கலாம்.// எதுக்கு? அந்த சந்தோஷத்தை கெடுத்துக்கவா? ஏன் நந்தா இப்படி ஒரு சுயவதை வெறி? ;)

    //எப்படி எடுத்தாலும் பார்வையாளர்கள் படம் பார்ப்பார்கள் எனும் ரசிகனை அடிமட்ட மடையனாகவே பார்க்கும் ஒரு எண்ணத்தைத் தவிர வேறு எதுவும் இதில் ஒளிந்திருப்பதாய் நினைக்க முடியவில்லை.// ரமணாவுல கேப்டன் வின்டோஸ் மீடியா ப்ளேயர் ஸ்கீரினில் ஓடிகிட்டிருக்கையில் கீ போர்டில் வேக வேகமாக எதையோ தட்டி நாட்டுல நடக்கற லஞ்ச ஊழலையெல்லாம் கண்டுபிடிப்பாரே, அதையும் ட்ராலியெல்லாம் வச்சு சுத்தி சுத்தி காமிப்பாங்களே பாத்ததில்லையா என்ன? என்னங்க நீங்க? மின்னலோட சக்திய பிடிச்சு ஒரு மாத்திரைல அடச்சு வச்சு சுட்டா அனுகுண்டை விட பவர்ஃபுல்லா இருக்கும்னு கண்டுபிடிச்சு ஆனா அதை உலக நன்மைக்கு எப்படி பயன்படுத்தறதுன்னு ஆராய்ச்சி பண்ற விஞ்ஞானியா புரட்சித்தலைவர் நடிச்சத பாத்து புல்லரிச்சுப் போனவங்களோட புள்ளங்க/பேரப்புள்ளங்கதானே ராசா நமெல்லாம்? அவ்ளோ சீக்கிரம் திருந்திடுவோமா என்ன? இல்லை டைருடக்கருங்கதான் அதுக்கு விட்டுடுவாங்களா?

    //அப்புறம் என்ன, தனுஷின் தொடர்ச்சியான ஹீரோயிச நடவடிக்கைகள் நயனிற்கு தனுஷின் மீது காதலை வரவைத்து விடுகிறது. வழக்கம் போல் கார்த்திக் விட்டுக் கொடுக்கிறார். அவர்களது குடும்பமும் இதெல்லாம் அடிக்கடி எங்க வீட்ல நடப்பதுதான் என்பது போல கேசுவலாக இதை எல்லாம் ஏற்றுக் கொள்கிறது. அவ்வளவுதான்//நீளமா பேரு வச்ச ஷாருக், கஜோல் நடிச்ச ஹிந்தி படத்துல புடிச்சுது இந்த சனி, இன்னும் எத்தனை நாள் தொடருமோ தெரியலையே….

    //ஒரு பெண்ணை ஒரு தலை பட்சமாய் காதலிக்க ஆரம்பித்து விட்டாலே போதும் அவள் மீது என்ன உரிமை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் எனும் ஓர் ஆதிக்க எண்ணத்தின் வெளிப்பாடாய்த்தான் தனுஷ் தனது சீனியாரான நயனை திடீரென்று ஒருமையில் கூப்பிட ஆரம்பிக்குகம் காட்சிகள் உணர்த்துகிறது.// இந்த மாதிரி படங்கள் ஒன்னும் புதுசில்லையே நந்தா? இந்த மனப்பான்மையோட விளைவுதான் தன் காதலை ஏத்துக்க மறுக்கற பெண் மேல ஆசிட் வீசற இளைய சமுதாயத்தை உருவாக்குது.

    விமர்சனத்துல கதை படிச்சதுலேர்ந்தே பாக்குறதில்லைன்னு முடிவு பண்ணிட்டேன். இப்போ நீங்களும் என் முடிவு சரிதான்னு உறுதிப் படுத்திட்டீங்க. என் ரத்த அழுத்தத்தை ஒரளவு காப்பாத்தினதுக்கு நன்றி நந்தா.

  15. >>> ப்ளாக்கர்ஸ் மட்டுமல்ல, எனது அலுவலக நண்ண்பர்களில் பலர் கூட படம் “செமை காமெடிங்க” என்று சொல்லும் போது என்னால் தாங்கவே முடிவட்தில்லை.. டேய் உங்களைத்தாண்டா மாக்கான்னு நினைச்சு பாடம் எடுத்திட்டிருக்கான். அதை வேற உக்காந்து ரசிக்கறீங்களாடா என்று தினமும் சன்டை போட்டுக் கொண்டிருக்கிறேன் <<<<

    hahahaha.. i was kinda telling the samething :-) )))

  16. நந்தா வரவர திறனாய்வு ரேஞ்சுக்கு எழுதுறீங்க. யாருக்கும் தோணாத கேள்வி எல்லாம் கேட்கிறீங்க.
    \\முதலில் ஹாசினி யார்? அவள் ஒரு விளையாட்டுப் பெண்ணா, குழந்தை மனமுடையவளா? இல்லை லூசா??? நம்முடைய வாழ்க்கையில் இது வரை ஒருவரையாவது இது போன்ற குணாதிசயங்களோடு பார்த்திருப்போமா??? \\

    ஷங்கர் படங்கள் ஒருவகை பேண்டஸி என்றால் இது வேறுவகை.
    படம் பார்க்கும் போதே தோன்றியதா? இல்லை அசை போடும் போதா?

  17. நன்றி ரிஷான் ஷெரீஃப். தாமதத்திற்கு மன்னிக்கவும்.

    //இதையே தான் நானும் சொல்லவேண்டியிருக்கிறது நண்பா..
    ‘நேபாளி ‘ விமர்சனத்தையும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.//

    இப்போதான் யா.நீ.மோ பாத்தே மண்டை காய்ஞ்சு போய் உக்காந்துட்டிருக்கேன். இப்போ இது வேறயா… எதுனாலும் பேசித் தீத்துக்கலாம்.

    ரவிஷங்கர் உங்களது பின்னூட்டம் நியாயமானதே. என்னங்க செய்ய சில சமய்ங்களில் எழும் கோபம் நம் உள்ளுணர்வையும் மீறி நம்மை பதிவு போட வைத்து விடுகிறது. கூடிய சீக்கிரம் நல்ல படங்கள் என்று நான் கருதுவதையும எழுதுகிறேன்.

    //விமர்சனத்துல கதை படிச்சதுலேர்ந்தே பாக்குறதில்லைன்னு முடிவு பண்ணிட்டேன். இப்போ நீங்களும் என் முடிவு சரிதான்னு உறுதிப் படுத்திட்டீங்க. என் ரத்த அழுத்தத்தை ஒரளவு காப்பாத்தினதுக்கு நன்றி நந்தா.//

    லக்ஷ்மி சும்மா ஒன்னும் இல்லை. டாக்டர் ஃபீஸா 4 புக் கொடுத்திடணும் ஆமா… :)

  18. நன்றி யாத்ரீகன், முரளி கண்ணன்.

    //படம் பார்க்கும் போதே தோன்றியதா? இல்லை அசை போடும் போதா?//

    இல்லைங்க இந்த உணர்வுகள் படம் பார்க்கும் போதே ஏற்பட்டவைதான். எவ்வளவுதான் படத்தை ரசித்துப் பார்க்க நினைத்தாலும், இது போன்ற உணர்வுகள்,கேள்விகள், சின்ன சின்ன தவறுகள் ஆகியவையை தேடத்தான் செய்கின்றது மனது.

  19. karikalan says:

    வணக்கம் நண்பரே!
    இன்றுதான் உமது வலைத்தலத்தில் நுழைந்தேன். உண்மையிலேயே இது அருமையான விமர்சனம் தான். சரியாக அவதானித்துள்ளீர்கள். இந்த படங்களைப்பார்த்தபோது எனக்கு என்ன உணர்வுகள் ஏற்பட்டதோ அதில் பெரும்பான்மையான கருத்துக்கள் இதில் இடம் பெற்றுள்ள்து.

    வாழ்த்துக்கள்!

  20. TBCD says:

    எனக்கும் இதே கேள்விகள் கிட்டத்தட்ட ஓடியது. ஷ்ரேயாவை முட்டாளாக காட்டியதுப் போல் , கதாநாயகிகள் பேக்குகளாகவே காட்ட வேண்டிய கட்டாயம் ஏதோ இயக்குனர்களுக்கு இருக்கிறது. விசுப்பட கதாநாயகிப் போல் திர்மானமா யோசிச்சா, நாயகனுக்கு இடம் இருக்காது என்று நினைக்கிறாங்களோ என்னமோ.
    ஏதோ ஒரு சமரசம் இருக்கனும்.

    ஆனால், அவனுக்கு அவளிடம் பிடித்தது, அவளுக்குப் பிடித்ததைச் செய்வது. துடுக்குத்தனத்தால் பெதுவாக கவரப்படுவது என்பது நான் இதுவரை தமிழ் திரையில் மட்டுமே காணுவது. :P

    காதல் வருகிறது, வந்துவிட்டது என்று காட்சிப்படுத்துதல் என்பது சிரமம் தான். அதுவும் தமிழ் திரைப்படத்துறையினர்க்கு. ரொம்ப சிரமமான ஒன்று. அதை நீங்க திரையில் காட்டச் சொன்னால் எப்படி.

    நாயகிக்கு எல்லாருமே நண்பர்கள் என்பதுப் போல் சொல்லுறாங்க. ஒருவனைக் கூட ரங்கநாதன் தெருவிற்கு அழைப்பதுப் போல் கூட சொல்லப்படுது. (சும்மா உங்க கேள்விக்கு பதில்)

    யாரடி மோகினி பார்ட், நான் படிக்கவில்லை ஏன்னா, படம் இன்னும் பார்க்கவில்லை. முதலில் பார்க்கிறேன், அதன் பின்னே படிக்கிறேன். :P

    (பின்னுட்ட சங்கிலி வந்தாச்சுப் போலிருக்கே..கேட்டதும் கொடுப்பவனே நந்தா, நந்தா…)

  21. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி கரிகாலன்.

    டிபிசிடி யாரடி நீ மோகினி பார்க்கப் போறீங்களா??? என் ஆழ்ந்த அனுதாபங்கள். பின்னூட்ட சங்கிலி போட சொல்லி அறிவுக் கண்ணை திறந்ததே நீங்கதான…

  22. Sridhar Narayanan says:

    சந்தோஷ் சுப்ரமணியம் இன்னும் பார்க்கவில்லை. பொதுவாக தெலுங்கு / தமிழ் படங்களில் அழகியலும் சரி வன்முறையும் சரி அதீதமாகத்தான் காட்டுவார்கள். subtle உணர்வுகள் ரசிகர்களுக்கு புரியாது என்பது போல். ஹிந்தி படங்கள் சற்று தேவலாம். மலையாளப் படங்கள் இந்த விசயத்தில் பல படிகள் முன்னேறி உள்ளன என்று சொல்லாம்.

    யாரடி நீ மோகினி பார்த்தேன். நீங்கள் கோபப்பட்ட அபத்த காட்சிகளெல்லாம் பார்த்து (படத்தில்) சிரிப்பு வந்தது. அதிலும் தனுஷ் இரவு பூரா உட்கார்ந்து வேலை செய்து மறுநாள் காலையில் மிக ஸ்டைலாக பிரின்ட் அவுட்களை வாரி வழங்குகிறார். எல்லாரும் அதை வாங்கி என்னமோ டைப் செய்கிறார்கள். தேவுடா… இந்த கொலாப்ரேஷன் யுகத்திலும் எப்படி இவர்களால் இப்படிப் பட்ட காட்சிகளை எடுக்க முடிகிறது. அட ஐடி கம்பெனிகளை விடுங்கள். இன்று எல்லா நிறுவனங்களுமே இ-மெயில் மூலமாக இணைத்து கொண்டுள்ள போது இப்படிப் பட்ட காட்சிகள் யோசிக்க பத்து-பதிமூன்று வருடங்கள் (1995-ல் இந்தியாவிற்க்கு இன்டர்நெட் வந்துவிட்டது)பின்னால்தான் போக வேண்டும்.

    முக்கியமான சறுக்கல் அந்த படத்தில் என்னவென்றால் – கார்த்திக்கும் தனுஷும் நெருக்கமான நன்பர்கள். ஆனால் தனுஷ் எந்த கம்பெனியில் வேலை பார்க்கிறார் என்று கார்த்திக்கிற்க்கு தெரியாது. அதே கம்பெனியில் அவருடைய மாமா பெண் வேலை பார்க்கிறாள் என்றும் தெரியாது. அவருக்கு கல்யாணம் நிச்சயம் ஆகியிருப்பதும் தெரியாது. அபத்தமான படம்.

    கே விஸ்வநாத் நல்லதொரு நடிகர். அவரை இப்படி ஒரு ஸ்டீரியோ டைப்பாக ஆக்கிவிட்டார்கள். அய்யோ பாவம்.

    ரகுவரனின் நன்றாக செய்திருந்தார். செல்வராகவன் டைப் காட்சிகள் (நல்ல காட்சிகள்) சில இருந்தன். பையனோடு சேர்ந்து குடித்து கொண்டே பையனுக்கு ‘தினமும் குடிக்காதே’ என்று அட்வைஸ் செய்வது போன்ற காட்சிகள் ரசிக்க வைத்தன :-) .

    மொத்தத்தில் ரசிகர்களை முட்டாள்கள் என்று நினைத்து கொண்டு தங்களுடைய முட்டாள்தனத்தை வெளிபடுத்துகிறார்கள். அவ்வளவே. :-)

  23. பூர்ணா says:

    ரெண்டு விமர்சனமும் நல்லா இருக்கு.. ஆனா ஹாசினி அப்படியே வாழ்க்கை பூரா இருக்க முடியாதுன்னா நினைக்கிறீங்க? அனுபவங்கள் அவளையும் கொஞ்சம் பக்குவப்படுத்தும். அது போதாதா?

    ஆனா அவ்வளவு குழந்தைத்தனமா இருக்கிற பொண்ணுக்கு முத்தம் கொடுப்பது பத்தி எல்லாம் மட்டும் என்னத்தப் புரிஞ்சி வெட்கப்படத் தோணுதுன்னு புரியலை(பொம்மரில்லு).. இன்னும் தமிழ்ப்படம் பார்க்கலை..

    யாரடி நீ மோகினி பார்த்து படு கோபம் தான். அது தெலுங்குலயும் பாஸ்கர்னு ஒருத்தர் தான் இயக்குனர். செல்வராகவன் கதை வசனம்னு நினைக்கிறேன். அந்தப் படத்தைப் பார்த்துடாதீங்க.. ரெண்டுல ஒண்ணு தான் தாங்கலாம்.. ரெண்டும் பார்த்தா நொந்து போய்டுவீங்க :)

  24. Raji says:

    Intha rendu padamum paarkala innum…Paakalamnu ninachitrundhen…Good I came across your blog…

    //”காஞ்ச மாடு வக்கப்புல்லை பார்ப்பது போன்று” தனுஷ் நயன்தாராவிடம் நட்ந்து கொள்ளும் முறை, என்று எந்த காட்சிகளிலும் யதார்த்தம் என்ற ஒன்றை எவ்வளவு தேடினாலும் கிடைக்கவில்லை.//

    //பல விஷயங்கள் என்னைப் பொறுத்த வரை ஆண் பார்வையாளனின் விகார உணர்வை குறிவைத்துத்தான் எடுக்க பட்டிருக்கிறது.//

    almost all the recent movies in Tamil are no exception to the above points…
    They spoil the mentality of people esp the teen generation…

    I am really happy to see ur blog pointing out these things…
    Tamil Cinema rasigarkalukku eppo nalla kaalamnu theriyala…

  25. //ராஜாவை பாராட்ட வேண்டுமென்றால், ஒன்றே ஒன்றுக்கு பாராட்டலாம். விஜய் தெலுங்கிலிருந்து தேர்ந்தெடுக்கும், ஹீரோயிச, அதீத வன்முறை நிறைந்த, மொக்கை படம் போல் ஒன்றைத் தேர்ந்தெடுக்காமல், இது போன்ற ஒரு படத்தை தேர்ந்தெடுத்ததற்கு.//

    இங்க மட்டும் என்ன வாழுது. இந்தப் படமே ஒரு பெரிய மொக்கை… இருங்க… யாரடி மோகினி விமர்சனத்தை படிச்சிடு வரேன்… அடுத்த கும்மிக்கு…

  26. இரண்டாவதாக சொல்லி இருப்பது ஓகே சார்…

  27. santhosh says:

    யாரடி நீ மோகினி படத்துக்கு போய்ட்டு நாங்க பட்ட பாட்டை அப்பிடியே சொல்லிட்டீங. திரை அரங்கில் இருந்து நம்பல இப்படி ஒரு கதைய காட்டி தொரத்தராங்க(இத்தனைக்கும் மொகினியோ , பிசாசொ , பேயோ, கட்டேரியோ இல்லமயே).உங்க விமர்சனம் 100% உன்மை. இன்னும் திட்டி எழுதி இருக்கலாம்ல…‌

  28. இந்தப் பீன்னூட்டம் இடும் இந்நேரம் எங்கள் வீட்டில்
    பொம்மரில்லு படம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
    முதல் தடவை அல்ல, பல தடவை பார்க்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

    மேலும் பார்க்க http://pudugaithendral.blogspot.com/2008/05/blog-post_07.html

  29. TBCD says:

    பார்த்தேன் கொடுமையயை. பார்த்துட்டு உங்க விமர்சனத்தையும் படிச்சேன். சேம் பிளட்.

    எதுக்கு அதே பிளட் தானா என்று இங்க வந்து பாருங்க.

    இன்றைய கொத்துப் புரோட்டா : தமிழ்திரையுலகின் சாபக்கேடு யா.நீ.மோ

Leave a Reply