nav-left cat-right
cat-right

போடா லூசு

பின்ன எதுக்குடா தெரியாத மாதிரி நடிச்ச?
சிணுங்கலாய்க் கேட்டாய் நீ.

தெரிந்தே இருந்தாலும்,
உன்னை சீண்டி விட்டு,
அழ வைத்து, வேடிக்கை பார்த்து,
எதிர்பார்க்காத ஒரு நொடியில்
நான் காட்டிடும் அந்த வெள்ளி கொலுசை,
உதடுகள் குவித்து,
விழிகள் விரிய, இமைகள் படபடக்க,
நீர்த்துளிகள் மெல்ல எட்டிப் பார்க்க,
ஆச்சர்யமும், ஆனந்தமும் கலந்த கலவையாய்,
நீ நின்றிடும்
அந்த ஒரு சில நொடிகளை ரசிக்கத்தான்
என்று எப்படி சொல்வது?
மெல்லச் சிரித்து, அழுத்திச் சொல்கிறேன்.
மறக்க முடியுமா உன் பிறந்த நாளை?
போடி லூசு!

போடி லூசாம்!
எனக்குத் தெரியாதா?
என்னுடைய எல்லா பாவங்களையும் ரசிப்பவன் நீ!
மெல்ல எட்டிப்பார்த்த அந்த நீர்த்துளிகளைத் தவிர,
அந்த சிணுங்கல்,
அந்த கோபம்,
அந்த அழுகை, ஆச்சர்யம், ஆனந்தம்
எல்லாமே பொய்யாய்,
உனக்காகத்தான்டா! எல்லாம் உனக்காகத்தான்!

நான் எப்படிடா நினைப்பேன்?
நீ என் பிறந்த நாளை மறந்திடுவேன்னு.
போடா லூசு.

8 Responses to “போடா லூசு”

  1. ஆழியூரான் says:

    அழகான கவிதை…உண்மையிலேயே இப்படி ஒரு காதலி கிடைத்தால் சொர்க்கம்தான் போங்கள்..

  2. ரவிசங்கர் says:

    ஓ..நீங்களும் கவிஞர் தானா..அது தான் நம்ம wavelength புரியுது :) நீங்கள் இன்னிடம் இருந்து இன்னும் கவிதைகளை எதிர்ப்பார்ப்பதற்கு மகிழ்ச்சி..ஆனா, கவிதைய inspire பண்ணத் தான் ஆளக் காணோம் :) ..இப்ப என் பதிவுல இருக்கிறது எல்லாம் பழைய paper கவிதைகள் :)

  3. ரவிசங்கர் says:

    //நான் எப்படிடா நினைப்பேன்?// இந்த வரி படத்துல தப்பா வந்திருக்கே..கவனியுங்க..

    //மெல்ல எட்டிப்பார்த்த அந்த நீர்த்துளிகளைத் தவிர,//

    முக்கியமான வரி!

    தொடர்ந்து எழுதுங்க..மானே தேனே என்று clicheக்களாக எழுதுவதை விட இது போல் உண்மை நிகழ்வுகளில் இழையோடும் கவித்துவத்தை படம்பிடிப்பது தான் அழகு

  4. npuvenk says:

    That was superb..

    Kanngal paarkum sila nodigalai,
    Ithayam padam pidikkum nijamaana unarvugalai,
    Varthai sinthaamal varigal seithulleergal.

    Vazhtukkal !

  5. அருட்பெருங்கோ says:

    அழகானக் கவிதை நந்தா…
    ஆரம்பமே அசத்தலாக இருக்கிறது!
    வாழ்த்துக்கள்!!!

  6. jothi says:

    photos alahu. matrathellam nandhavin kirukkalkal.

  7. Ravichandra says:

    ஒண்ணுத்துக்கும் உதவாத விஷயங்களை
    ரசிக்கறதுல கூட
    ஒரு சுகம் இருக்குடா மச்சான் !”

  8. //நான் எப்படிடா நினைப்பேன்?// இந்த வரி படத்துல தப்பா வந்திருக்கே..கவனியுங்க..
    //மெல்ல எட்டிப்பார்த்த அந்த நீர்த்துளிகளைத் தவிர,//
    முக்கியமான வரி!
    தொடர்ந்து எழுதுங்க..மானே தேனே என்று clicheக்களாக எழுதுவதை விட இது போல் உண்மை நிகழ்வுகளில் இழையோடும் கவித்துவத்தை படம்பிடிப்பது தான் அழகு

Leave a Reply