nav-left cat-right
cat-right

பதிவர் பட்டறை – ரவிஷங்கர், சிந்தாநதிக்கு சமர்ப்பணம்

உங்கள் வீட்டில் நடந்த ஒரு முக்கிய திருமணத்தில் கொஞ்சமேனும் கஷ்டப்பட்டு ஓடியாடி வேலை செய்து, கல்யாணத்தை நல்ல படியாக நடத்தி முடித்திருக்கிறீர்களா??? அப்படியெனில் உங்களால் இந்த உணர்வுகளை நிச்சயம் புரிந்துக் கொள்ள முடியும்.

இதுல பார்த்தீங்கன்னா, அப்படி ஓடியாடி வேலை செய்யும் போது நண்பர்களிடம் இந்த வார்த்தைகளை கண்டிப்பாய் சொல்லியிருப்பீர்கள். “கல்யாணம் முடிஞ்சவுடனே நான் அப்படியே அடிச்சுப் போட்ட மாதிரி தூங்கப்போறேன், அப்போ எவனும் என்னை எழுப்பக்கூடாது” என்று. ஆனால் அப்படி சொன்னவர்களில் எவரும் கல்யாணம் முடிஞ்ச அடுத்த ரெண்டு நாளைக்கு சரியாகத் தூங்க மாட்டாங்க.

எதையோ சாதிச்சத் திருப்தியோ அல்லது காற்று புகக் கூட இடமில்லாதவறு, மனது முழுதும் நிரம்பியுள்ள சந்தோஷமோ அவர்களை வெகு நிச்சயமாய் தூங்க விடாமல் செய்யும்.

இன்றைய வலைப்பதிவர் பட்டறையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் உழைத்தவர்கள் எவருக்கும் இன்று தூக்கம் கெடுவது நிச்சயம். அந்தளவில் என்னைப் பொறுத்த வரை மிகச் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது இந்த பட்டறை.

இதில் நான் மிக முக்கியமாகச் சொல்ல வேண்டியது ஒன்று இருக்கிறது. நானெல்லாம் கடைசியில போய் 4 பெஞ்சை தூக்கிப் போட்டுட்டு, “நானும் உழைத்தேன் என்று சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்ளும் போது,

வெகு நிச்சயமாய் இந்த பட்டறையில் நம்மால் கலந்துக் கொள்ள முடியாது என்று தெரிந்திருந்தும், கடந்த 40 நாட்களாக உயிரைக் கொடுத்து உழைத்து, இன்று இந்த பட்டறை நடக்கும் போது அதைப் பார்த்து சந்தோஷப்பட முடியாமல், வெறுமனே தொலைபேசி வாயிலாகவும், படங்களின் மூலமாகவும் அதைப் பார்த்து சந்தோஷப் பட்டுக் கொண்டு இது நன்றாக நடந்து முடிய வேண்டுமென்று, தூரத்திலிருந்து வாழ்த்திக் கொண்டிருக்கிறார்களே ரவிஷங்கர், சிந்தாநதி, அவர்களைப் பார்த்துப் பிரமித்துப் போய் நிற்கிறேன். உண்மையில் அவர்களின் உழைப்பு வெகு நிச்சயமாய் பாராட்டப் பட வேடிய ஒன்று.

வலைப்பதிவர் பட்டறை எத்தனை மணிக்கு தொடங்கியது, எத்தனை பேர் வந்தாங்க, யார் யாரு என்ன பேசினாங்க என்பதை தெளிவா, முழு விபரங்களோடு போட மற்ற நண்பர்கள் காத்துக்கிட்டிருகாங்க. ஆனால் நான் வலைப்பதிவில் நடந்த ஒரு சில சுவாரஸ்யமான சம்பவங்களை நினைவு கூற விரும்புகிறேன்.

“பரிமேலழகர்” அப்படின்னு செய்முறைப்பயிற்சி அறை ஒன்றை இதில் வைத்திருந்தோம். அதில் பதிவர் மற்றும் பதிவரல்லாதோர், தனக்கு வலைப்பதிவு குறித்து ஏற்படும் எந்த ஒரு சந்தேகத்தையும் அங்கே செய்து பார்த்துக் கொள்ளலாம்.

அவ்ர்களது சந்தேகங்களை தீர்த்து வைக்க ஒரு 4 அல்லது 5 பேராவது அங்கே இருந்துக் கொண்டே இருப்பார்கள். அவர்களில் ஒருவனாக நானும் ஒரு 1 மணி நேரம் இருந்தேன்.அப்போது என்னிடம் விளக்கம் கேட்டவர்கள் மொத்தம் 5 பேர்.

அதில் முதல் மூன்று பேர் கல்யாணம் ஆன இளம் ஜோடிகள். மூன்று ஜோடிகளிலும் வலைப்பதிவராய் இருந்தவர்கள் பெண்களே. கதைகளும் கவிதைகளும் எழுதுபவர்கள்.அதிலும் இரண்டு பேர் சொந்த தளத்தில் இருந்துக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். என்ன தமிழ் மணத்தில் பதிவு செய்யாதவர்கள். ஆகையால் நம்மால் அறியப் படாதவர்கள். அந்த மூன்று ஜோடிகளையும் நான் மாலை 5 மணி வரை அங்கே பார்த்தேன்.

கதை, கவிதை எல்லாம் உனக்கெதுக்கு என்று சொல்லாமல்,தனது மனைவியின் ஆர்வத்தை என்கரேஜ் செய்யும் வகையில், 7 மணி நேரம் இருந்து உற்சாகமூட்டிய அந்த கணவன்களிற்கு ஒரு வணக்கம். மோகன்தாஸ் கவனிக்க. (உள்குத்து எல்லாம் இல்லைங்க. அவரும் கல்யாணத்துக்க்கு பொண்ணு தேடிக்கிட்டிருக்கிறதா சேதி அதான்…….. இந்த விஷயத்தையும் காதுல போட்டேன்).

Physically challenged என்று சொல்லப்படுபவர்களில் ஒரு சிலர் வந்திருந்தனர். அவர்களில் கண்பார்வை குறைபாடு உடையவர்கள் என்னிடம் சொன்னது, “சார் இங்க பேசுனதை எல்லாம் கேக்க ரொம்ப ஆர்வமா இருக்கு. ஆனா நாங்க பண்றது இது சாத்தியமா?”. நான் அவர்களிடம் சொன்னது, நீங்கள் எழுதிதான் வலைப் பதிய வேண்டும் என்று அவசியமில்லை சார். ஒலிப்பதிவுகளாகவும் பதிவுகளிடலாம். நீங்கள் அதற்கு தயாராயிருந்தால் சொல்லுங்கள், உங்களது பதிவை வெளிச்சத்திற்குக் கொண்டு வர இங்கே பலர் இருக்கிறோம் என்று. அந்த அன்பர்கள் எங்களில் ஒரு சிலரின் தொலைபேசி எண்களை வாங்கிச் சென்றுள்ளனர்.

ஆக எல்லர்ரின் மனதிலும் ஒரு சிறு சலனத்தை உண்டு பண்ணியிருக்கிறது இந்த பட்டறை. இந்த சிறு பொறி கொடுக்கும் உற்சாகம் இருக்கிறதே அதை வார்த்தைகளை சொல்லி நிரப்பிட முடியாது.

ஒரு உண்மையான Unconfferrence கூட்டம் எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாய் இன்றைய பட்டறை இருந்தது. உண்மையான கருத்துப் பரிமாற்றங்களுடன், மிக நல்ல விவாதங்களுடன், ஒரு 50 நாள் தொடர்ந்து படித்தால் தெரிந்துக் கொள்ளக்கூடிய தகவ்ல்களுடன் படு சூடாக நடந்து முடிந்தது.

தருமி சார் இப்போதிருந்தே அடுத்த பட்டறை கண்டிப்பாய் மதுரையில் நடத்தியே ஆக வேண்டும் என்று எல்லாரிடமும் சொல்லிக் கொண்டிருந்தார். சார், இவ்வளவு வெறியா????

இதில் இன்னொரு க்ரூப் இல்லை இல்லை அடுத்த பட்டறையை பாண்டியில் நடத்தியே தீர வேண்டும் என்று கொலை வெறியுடன் திரிந்துக் கொண்டிருந்தது.

வலைப்பதிவர் பட்டறையில் அதிகம் கவனத்தை ஈர்த்தது தனி யூனிஃபார்மில் வந்து ஒரு கலக்கு கலக்கிய வ.வா சங்கத்தினர்தான்.

ISO தரச் சான்றிதழ் பெற்ற செந்தழல் ரவி அவர்கள் தோழர் ஜீவா படம் தாங்கிய ஒரு சிறு கையேட்டை கொண்டு வந்து யாருக்கும் தெரியக்கூடாது என்று பத்ரியிடம் மெதுவாக இது யாருங்க? எனக்கு தெரியாது. வெளியில் கொடுத்தாங்க நான் வாங்கிக்கிட்டேன் என்று கேட்டார். அதை நான் ஒட்டுக்கேட்டு விட்டேன்.

இன்று காலையில வண்டியில் வரும் போது பொன்ஸ் வர்களை டிராஃபிக் கான்ஸ்டபிள் பிடித்து விட்டார். பொன்ஸ் மனசாட்சியே இல்லாமல் நான் ஸ்டூடண்ட் சார், இங்க லைபரிக்கு படிக்க வ்ந்தேன் என்று ஒரு உலக ம்கா பொய்யை சொல்லியிருக்கிறார். அந்த புத்திசாலி கான்ஸ்டபிளும் அப்படியாம்மா சரி “நல்லா படிக்கணும் என்ன???” என்று சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார். நல்ல வேளை சாக்லேட் வாங்கி தந்து வழியனுப்பாமல் விட்டாரே…. எப்படி எல்லாம் ஏமாளிங்க இருக்காங்க பாருங்க மக்களே.

ஏற்கனவே அறிமுகம் ஆகியிருந்தாலும், எதற்கும் இருக்கட்டும் என்று நாமக்கல் சிபியிடம், சிபி நந்தா என்று என் பெயரைச் சொல்லி கை நீட்டினேன். அவரு கேஷுவலாக இன்னும் அரை மணி நேரத்திற்கு நான் கோவி.கண்ணன்பா என்று தன் அனானி வேளையைக் காட்ட ஆரம்பித்து விட்டார்.

இப்படி ஏகப்பட்ட கலாய்ப்புகளுடனும், சந்தோஷங்களுடனும், பரம திருதியுடனும் நடந்து முடிந்திருக்கிறது இந்த வலைப்பதிவர் பட்டறை. எல்லாம் முடிந்து கிளம்பும் போது பீச் ரோட்டில் வண்டியை ரொடு கிராஸ் செய்வதற்காக காத்திருக்கும் போது இரண்டு பேர் பேசிக் கொண்டு போனது என் காதில் விழுந்தது.

“ஏன் மாப்ளே சோறும் போட்டு, தொண்டை வரளக் கத்தி, உக்காந்து சொல்லிக் கொடுத்து, ஒரு வலைப்பதிவும் நமக்கு உருவாக்கி கொடுத்திருக்காங்களே, இதுக்கு மேலயும் நாம பண்ணாம இருந்தோம்னா நமக்குதாண்டா அசிங்கம்”.

19 Responses to “பதிவர் பட்டறை – ரவிஷங்கர், சிந்தாநதிக்கு சமர்ப்பணம்”

  1. அருமையான பதிவு நண்பா

  2. //ஆக எல்லர்ரின் மனதிலும் ஒரு சிறு சலனத்தை உண்டு பண்ணியிருக்கிறது இந்த பட்டறை. இந்த சிறு பொறி கொடுக்கும் உற்சாகம் இருக்கிறதே அதை வார்த்தைகளை சொல்லி நிரப்பிட முடியாது.//
    சரியாக சொன்னீர்கள் நண்பா

  3. நல்ல தொகுப்பு நந்தா,
    ரவி, சிந்தாந்தி மட்டுமல்ல உங்கள் அனைவரின் பங்களிப்பும் பாராட்டுக்குறியது.

    சத்தியா

  4. வடுவூர் குமார் says:

    நல்ல தமிழ் எழுத்தாளர்கள் வந்தால் படிக்க மட்டும் செய்யும் எங்களைப்போன்றவர்களுக்கு நன்றாக இருக்கும்.
    நன்றாக நடந்தேறிய செய்தி மகிழ்ச்சியாக இருக்கிறது.
    மதுரையோ/ பாண்டியோ… தீபாவளிக்கு பிறகு வைங்கப்பா,முடிந்தால் வருகிறேன்.

  5. sivagnanamji says:

    அதிர்வை உண்டாக்கி விட்டோம்;
    அலைகள் இனி பரவும்!
    நன்றி!

  6. நீ செய்த அட்டகாசங்களை எழுதாமல் விட்டுவிட்டீரே நந்தா…..

  7. பொன்ஸ் says:

    யோவ் நந்தா.. அதை எழுதாதீங்கன்னு சொன்னேன்னில்ல…. இனி இந்த டாக்டிஸை எல்லாரும் பயன்படுத்த தொடங்கிட்டா நான் என்ன பண்ணுறது?!!

  8. //யோவ் நந்தா.. அதை எழுதாதீங்கன்னு சொன்னேன்னில்ல…. //

    என்னாது இதை எழுதக்கூடாதா… இதெல்லாம் கல்வெட்டில பொறிக்க வேண்டியவை. நான் இத்தோட விட்டேனேன்னு சந்தோஷப்படுங்கப்போய்.

  9. \\\ஆக எல்லர்ரின் மனதிலும் ஒரு சிறு சலனத்தை உண்டு பண்ணியிருக்கிறது இந்த பட்டறை. இந்த சிறு பொறி கொடுக்கும் உற்சாகம் இருக்கிறதே அதை வார்த்தைகளை சொல்லி நிரப்பிட முடியாது.\\

    கலக்கிட்டிங்க……அனைவருக்கும் வாழ்த்துக்கள் ;-)

  10. நந்தா,
    தமிழ்மொழி எத்தனை நண்பர்களை இணைத்துள்ளது என்பதை நினைக்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது.நிகழ்ச்சியை அருமையாக விவரித்து எழுதியுள்ளீர்கள்.அனைவருக்கும் நன்றியும்,பாராட்டுகளும்.

  11. நானும் பட்டறை பத்தி ஒரு ஆறிப்போன பார்வை ஒன்னு போட்டுருக்கேங்க…. ஆனா உங்க லீலைகள் பத்தி மூச்சுக்கூட விடல‌
    எப்படி நம்ம நட்பு ;)

    http://premkumarpec.blogspot.com

  12. J K says:

    அருமையான பதிவு…
    //ஆக எல்லர்ரின் மனதிலும் ஒரு சிறு சலனத்தை உண்டு பண்ணியிருக்கிறது இந்த பட்டறை. இந்த சிறு பொறி கொடுக்கும் உற்சாகம் இருக்கிறதே அதை வார்த்தைகளை சொல்லி நிரப்பிட முடியாது. //

    சிறு பொறி தான். போகப் போக…..

  13. //கதை, கவிதை எல்லாம் உனக்கெதுக்கு என்று சொல்லாமல்,தனது மனைவியின் ஆர்வத்தை என்கரேஜ் செய்யும் வகையில், 7 மணி நேரம் இருந்து உற்சாகமூட்டிய அந்த கணவன்களிற்கு ஒரு வணக்கம்.//

  14. வேதா says:

    பட்டறைக்கு வரமுடியாமல் போனது வருத்தத்தை அளித்தாலும் பட்டறை பற்றிய உங்க எல்லாருடைய பதிவுகளும் மனதிருப்தியை அளிக்கின்றது. நன்றி :)

  15. thurgah says:

    நந்தா என்ன கொடுமை சார் இது.நீங்க செய்த குரங்கு சேட்டைகள் எல்லாம் இங்கே வரமால் போனது ஏன்????இது உமது பதிவு என்பதாலா?இந்த உண்மைகளை வெளியே சொல்ல எந்த புண்ணியவானும் இல்லையா????ச்சே என்ன உலகம்டா இது :P
    சரி சரி ரொம்ப டென்சன் ஆகதீங்க நந்தா.

  16. [...] 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15. Share [...]

  17. எங்களது சந்தேகத்தை தீர்த்து வைக்க ஆவலுடன் நீங்கள் உதவி செய்தது பார்த்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம். உங்களது மகிழ்ச்சியினையும் இக்கட்டுரையில் படித்து மிக்க மகிழ்ச்சி.

    உங்களிடம் சந்தேகம் கேட்ட ஜோடிகளில் ஒருவர்தான் நானும்.

    மிக்க நன்றி.

Leave a Reply