உங்க கிட்ட சொல்றதுக்கென்ன. காலையிலருந்து ஒரு வேலையும் ஓட வில்லை. எவ்வளவு யோசித்தும் ஞாபகம் வரவே இல்லை.. எப்படி மறந்தேன்? எப்படி மறந்தேன்? என்று என்னை நானே கேட்டுத் திட்டிக் கொண்டேன். அதுவாக இருக்குமோ? இதுவாக இருக்குமோ? என்று எதை எதையோ யோசித்துப் பார்த்து கடைசியில் அதுவுமில்லை, இதுவுமில்லை என்று மட்டுமே முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறேன்.
பேசாம அவகிட்டயே போன் பண்ணிக் கேட்டுடலாமா?
வேண்டாம்டா! இதையே மறந்துட்டியான்னு கேட்டு கேட்டு பிறாண்டிடுவா. ராட்சஸி. மனசாட்சி உள்ளுக்குள்ளிருந்து அபாயக் குரல் கொடுத்தது.
இந்த கேள்விக்கு விடை தெரியாம வேற வேலையும் எதுவும் செய்ய முடியாது. பேசாம ஆஃபிஸ்க்கு லீவு போட்டுடலாமா?
போட்டுட்டு? ஹ்ம்ம்ம் போட்டுட்டு படுத்துத் தூங்கு. லூசு. லீவு போட்டு உக்காந்து யோசிடா முட்டாளே. மீண்டும் மனசாட்சி.
அப்படி நினைத்துத்தான் காலையில் யோசிக்க ஆரம்பித்தேன். இதோ மணி இப்போ 5 இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
அவளைப்பற்றிய மற்ற எல்லா நினைவுகளும் இந்த 6 மணி நேரத்தில் வந்து போயிருக்கின்றது அதைத் தவிர…..
ச்சே இதை மறந்துட்டமேன்னு ஒரு விதமான வெறுப்புடன் எதிரில் தொங்கிக் கொண்டிருந்த கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஓடிக் கொண்டிருந்த முட்களின் ஒவ்வொரு நகர்வும் கூட அவளையே எனக்கு நினைவூட்டியது.
உங்களிற்கு ஒண்ணு தெரியுமா?
முதல் முறை அவள் இந்த அறைக்கு வந்த போது நான் வாங்கிய திட்டுக்கள் கொஞ்ச நஞ்சம் இல்லை. ஏன் இவ்ளோவ் நாஸ்டியா இருக்கு? இதை ஏன் இப்படியே போட்டு வெச்சிருக்க? இந்த பெல்டை இங்க மாட்டக் கூடாதா? அதை துடைச்சி வெக்கக் கூடாதா? என்று மாற்றி மாற்றி கேட்டுத் திட்டித் தீர்த்து விட்டாள்.
ஒரு 6 மாசத்துக்கு முன்னாடி செல் தீர்ந்து போயி ஓடாமல் கிடந்த வால் கிளாக்கை பார்த்தவள், என்னை முறைத்துப் பார்த்து தெரியும் இதுக்கு நீ கண்டிப்பா செல் போட்டிருக்க மாட்டேன்னு எனக்குத் தெரியும் என்று சொல்லியவள், தன் ஹேண்ட் பேகை திறந்து, கொண்டு வந்திருந்த செல்லை என் மீது எறிந்தாள்.
அந்த செல்தான் இப்போது இந்த கடிகாரத்திற்கு உயிர் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
கடைசியாய் போகும் போது ஹ்ம்ம்ம். இதே மாதிரி எப்பவும் ரூம் நீட்டா இருக்கணும். நான் எப்போ வேணாலும் சொல்லாம வந்து செக் பண்ணுவேன் என்று சொல்லி விட்டுச் சென்றாள். அதற்கப்புறம் நாங்கள் பார்த்துக் கொண்டதெல்லாம் வெளியில்தான். அவள் இந்த ரூமிற்கு வர வில்லை. ஆனால் இப்போதும் ரூம் க்ளீனாகத்தான் இருக்கிறது. காரணம் அவள்தான்.
அவளிடமிருந்து நான் கற்றுக் கொண்டது நிறைய. நான் குடையை மடித்து வைத்துக் கொள்ளும் போது சும்மா பக்கிள் எல்லாம் போடாம நார்மலா மடிச்சு வெச்சுக்குவேன். ஒரு நாள் அதைப் பார்த்துட்டு ஏன் இப்படி மடிச்சு வெச்சிருக்க? இங்க கொடு என்று வாங்கி ரொம்ப அழகாய் மடிச்சு சுத்தி பக்கிள் போட்டுக் கொடுத்தாள். அங்கங்கே நீட்டிக் கொண்டிருக்காமல், கடையிலே பேக் செய்து தருவதைப் போல இருந்தது.
இன்னிக்கு வரைக்கும் எப்படி ஒரு சில விஷயங்களை பெண்கள் செய்யும் போது மட்டும் இவ்வளவு நேர்த்தியாய், அழகாய் செய்ய முடிகிறது என்று வியந்து கொண்டிருக்கிறேன்.
பாருங்க.. குடை மேட்டரெல்லாம் ஞாபகத்திற்கு வருது. ஆனா இது மட்டும் வர மாட்டேங்குதே என்று சபித்துக் கொண்டே என் சிந்தனைகளைத் தொடர்ந்தேன்.
அவளை முதன் முதலில் என் வண்டியில் வர வைக்க நான் பட்ட பாடு இருக்கிறதே. 3 நாளா கால்ல விழாத குறையா கெஞ்ச, அப்பப்பா.. சொல்லி மாளாது.இப்போ அவளே ரொம்ப போர் அடிக்குதுடா எங்கயாவது தாம்பரம் தாண்டி தூரமா போய்ட்டு வரலாமென்று கேட்பது வேறு விஷயம்.
அவளுக்கும் சரி எனக்கும் சரி. ECR ரோட்டில் போவது அவ்வளவாய் பிடிக்காது. தாண்டி போற ஒவ்வொருவரும் ‘தள்ளிக்கிட்டு வந்திருக்கான் பார்றா’ என்பது போல மொத்தமாய் ஒரு பார்வை பார்த்து விட்டுப் போவார்கள். அது ஒரு மாதிரி கூசிப் போகும்.
அவளும் ஆரம்பத்தில் இது தெரியாமல் ஏன் அந்த பக்கம் போக வேணாங்கற என அடிக்கடி கேட்டு கேட்டு ஒரு நாளில் இப்போ நீ சொல்லியே ஆகணும் என்று ஒற்றைக் காலில் நின்றதால், கடைசியில் இதைச் சொல்லி விட்டுச் சொன்னேன்.
“அப்படி ஒரு தப்பான பார்வைல உன்னை பார்க்க வைக்க நான் காரணமா இருக்க விரும்பலை. இது ஒண்ணும் பொசஸிவ்னெஸ் இல்லை. அவனுங்க பார்க்கிற பார்வை எனக்கே சில சமயம் கூசிப் போகும். அதனாலதான் சொல்றேன்” என்றேன்.
சரி அப்போ கல்யாணமாயிட்டா மட்டும் அப்படி பார்க்க மாட்டாங்களா? அப்போ என்னை அந்த பக்கம் கூட்டிட்டே போக மாட்டியா?
யாரு சொன்னது? கல்யாணம் ஆனதுக்கப்புறம் எவனாவது அப்படி பார்க்கட்டும். என்னடா பார்க்கிற இவ என் ஆளுடான்னு சொல்லி தோள்ள கை போட்டு இழுத்துக்குவேன். இப்போதான் நீ தொட்டா கரப்பான் பூச்சியை பார்க்கற மாதிரி கேவலமா ஒரு லுக் விடறியே… என்றேன்.
சரி சரி வா இந்த பக்கமே போலாம் என்று இழுத்துச் சென்றாள். அன்றுதான் அவள் முதன் முதலாய் ரெண்டு பக்கமும் கால் போட்டு என் வண்டியில் உட்கார்ந்து வந்தது.
எப்பொதும் போலதான் உட்காருவாள் என்று வண்டியில் ஏறி அமர்ந்த நான், திடீரென்று அவள் அப்படி உட்கார்ந்ததும், ஏன் என்ற பார்வையோடு அவளை அப்படியே திரும்பிப் பார்த்தேன். அவளும் என்னைப் பார்த்தாள். ஒரு 3 – 4 நொடிகள்தான் பார்த்திருப்பாள். தலையை தாழ்த்தி விட்டு, நிலத்தைப் பார்த்தவாறு மெல்லிய குரலில் சொன்னாள்.
ப்ச்… வண்டியை எடுப்பா போலாம்.
நான் எதுவும் பேசாமல் வண்டியை ஸ்டார்ட் செய்தேன். அந்த சில வினாடிப் பார்வைகள் உணர்த்திய காதலை எந்த வார்த்தைகளாலும் நிரப்ப முடியாது.
எப்போதும் இது மாதிரியான பயணங்களில் எல்லாம் தாம்பரம் தாண்டிய கொஞ்ச தூரத்திலேயே போலாம் போலாம் என்று ஆரம்பிப்பவள். இன்று, என்ன அவசரம்? இன்னும் கொஞ்சம் தூரம் போலாம் என்று சொல்லிக் கொண்டு வந்தாள். அன்று நாங்கள் மேல் மருவத்தூர் வரை போய் வந்தோம்.
கோயிலுக்கு போலாம் என்று அவளும் சொல்ல வில்லை. நானும் போலாமா என்று கேட்க வில்லை.
அதற்கான பதில் இருவருக்குமே தெரிந்துதான் இருந்தது. அன்றைய பயணத்தில் நான் ஒன்றே ஒன்று தெரிந்துக் கொண்டேன். “நமக்கு ரொம்ப பிடிச்சவங்க, நம்ம மேல வெக்கிற அளவுக்கதிகமான நம்பிக்கையையும், அன்பையும் தவிர நமக்கு சந்தோஷத்தை தரக் கூடியது வேற எதுவும் இல்லை”.
ஆதரவாய் ஒருத்தி உங்கள் தோளில் சாயும் போது, ஏற்படும் பெருமித உணர்வை, உலகையே எதுத்து நிக்க முடியும் என்கிற வீராப்பை, நெஞ்சு நிமிர்த்தலை, தைரியமான பார்வையை நீங்கள் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? அன்று நான் உணர்ந்தேன்.
அதற்கப்புறம் தீண்டல்கள் எங்களை எப்போதும் சலனப் படுத்தியதில்லை. யாரும் கட்டம் கட்டி அறிவிக்காமலே எங்களது எல்லைகள் எங்களிற்கு தெளிவாய் தெரிந்திருந்தது.
ச்சே எங்கேயோ ஆரம்பிச்சு எங்கேயோ வந்துட்டேன். எதை யோசிக்கணுமோ அதைத் தவிர மத்ததை எல்லம் யோசிச்சுட்டிருக்கேன். பேசிட்டிருக்கேன். இப்படிதாங்க, காலைலருந்து இப்படியேதான் பொழுது நழுவிக் கொண்டிருக்கிறது.
எங்கே விட்டேன்? ஆங்ங்ங் தீண்டல்கள்.
அதற்கப்புறம் ஒருவரின் தீண்டலும், அருகாமையும் மற்றொருவர்க்கு தைரியத்தையும், பாதுகாப்பையும் கொடுக்கும் பொருட்டே என்று ஆனது.
என் காலில் ஆணி என்று சின்னதாய் ஒரு ஆபரேஷன் செய்த போது, சின்ன ஆபரேஷன் தாம்மா என்று சொல்லி வீட்டில் இருந்து யாரும் வர வேணாம் என்று சொல்லி விட்டேன். ஹாஸ்பிடலில் இருந்த அந்த ஒன்றரை நாட்கள் நண்பர்களும், அவளும்தான் கூட இருந்தார்கள்.
ஆபரேஷன் முடிந்து வந்த பின்பு ஊசியின் வீரியம் குறைய குறைய வலி என்னைக் கொல்ல ஆரம்பித்தது. அவ்வப்போது என் நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டே என்னைப் பார்த்துக் கொண்டிருந்தவள் என் கண்களில் என்ன படித்தாளோ தெரிய வில்லை, சரி நீங்க போய் சாப்டுட்டு எனக்கும் வாங்கி வந்துடுங்க என்று சொல்லி எல்லாரையும் துரத்தி விட்டு,என்னருகே வந்து கட்டிலில் உட்கார்ந்தவள் என்னப்பா ரொம்ப வலிக்குதா என்று என் கைகளை தன கைகளிற்குள் பத்திரப்படுத்திக் கொண்டு கேட்டாள்.
அவ்வளவுதான். அது வரை தாங்கிக் கொண்டிருந்த வலியை பொறுக்க முடியாமல் அப்படியே அவள் மடியில் சுருண்டுக் கொண்டு , முடியலைடா, ரொம்ப வலிக்குது என்று கண்களில் நீர் வழியச் சொன்னேன். ரொம்ப நாளைக்கப்புறம் நான் அழுதது அன்றுதான்.
வெட்கமில்லாம இன்னொருத்தர் முன்னாடி அழணும்னா அவங்க நமக்கு பிடிச்சவங்களா இருந்தா மட்டுமே சாத்தியம்.
அப்படியே அழுதவாறே எப்போ தூங்கிப் போனேன்னு எனக்கேத் தெரியாது. ஆனால் நான் விழிச்சப்பவும் என் கைகள் அவள் கைகளிற்குள்தான் இருந்தது.
இது மாதிரி பல நிகழ்ச்சிகள். பல தீண்டல்கள். எதுவுமே விகற்பமாய்த் தெரிய வில்லை.
ஒரு மழைக்கால மாலையில் எங்கேயோ போய்விட்டுத் திரும்பி வரும் வேளையில், திடீரென்று பிடித்த அந்த மழையில் எனது ஹெல்மெட்டையும், ஜெர்கினையும் அவளுக்குக் கொடுத்து விட்டு நான் நடுங்கிக் கொண்டே, அவளுக்குத் தெரியக் கூடாது என்று வண்டி ஓட்டி வர , ரொம்ப குளிருதாடா என்று அவள் என்னைக் கட்டிக் கொண்டது….
அதை நினைத்து அடுத்த நாள்,
“உன்னிடமிருந்து மறைக்க வேண்டும்
என்று நினைத்து நான்
செய்யும் எதையும்
ஒற்றைப் பார்வையில
எப்படித்தான் கண்டு பிடிக்கிறாயோ?
கள்ளி! நீ
பெண்ணா? பிசாசா?”
என்று எழுதித் தர, அதைப் படித்து விட்டு, நல்லா இருக்குடா! இதோட அர்த்தம் எனக்குப் புரியுது. ஆனா வெளில மத்தவங்கக்கிட்ட காட்டினீன்னா என்னப்பா, கவிதைல படிமங்களே இல்லைன்னு சொல்லுவாங்களே என்று நீ சொல்ல,
“நான் எங்கே கவிதையை எழுதினேன்? கவிதையைப் பற்றிதானே எழுதினேன்” என்று நான் சொல்ல வெட்கமாய் சிணுங்கி என் நெஞ்சில் குத்தியதில், உன் கண்ணாடி வளையல்கள் உடைந்து போனது,…
உன் அப்பாவிற்கு ஏதோ சீரியஸ் என்று அழுதவாறே நீ ஊருக்குக் கிளம்பிய போது, உன்னுடன் 8 மணி நேரம் பிரயாணம் செய்து உன் ஊர் வரை வந்து, உன் வீட்டுத் தெரு முனையில், “உங்கப்பாவுக்கு, ஒண்ணும் ஆகாது, தைரியமாய்ப் போ” என்று சொல்லி உன் நெற்றியில் முத்தம் கொடுத்து வழியனுப்பி விட்டு, அடுத்த பஸ்சை பிடித்து சென்னை வந்தது……
இருங்க இருங்க. இருங்க மை காட். என்ன சொன்னேன். “உன் நெற்றியில் முத்தம் கொடுத்து”. இதாங்க இதைத்தான் நான் காலைல இருந்து பைத்தியம் பிடிச்ச மாதிரி யோசிச்சுட்டிருக்கேன். எங்கள் இருவருக்கும் இடையேயான முதல் முத்தம் எது? எப்போது என்பதுதான்? அது இதுதான். இந்த சந்தர்ப்பத்தில்தான்.அப்பாடா… எதை எதையோ யோசிச்சு கடைசியா ஒரு வழியா கண்டு பிடிச்சாச்சு.
பின்ன, ஒருத்தரோட வாழ்க்கையில் முதல் முத்தம் என்பது மறக்கக் கூடியதா என்ன?
அன்னிக்கு லீவு போட்டு உக்காந்து யோசிச்சதுல இன்னொண்ணும் கண்டு பிடிச்சேன். “ஒண்ணுமே செய்யாம, இப்படி லீவு போட்டு முத்தத்தைப் பற்றி யோசிச்சுக்கிட்டிறதுல கூட ஒரு சுகம் இருக்கத்தான் செய்யுது”.
நந்தா சார், ஃபுல் ஃபார்ம்ல இருக்காருப்பா.. எல்லோரும் வழி விட்டு ஒதுங்கி நில்லுங்க.
அதெப்படிங்க கலக்கறீங்க? இதுக்குன்னே உக்காந்து யோசிப்பீங்களோ..? அதுதான் நீங்களே சொல்லிட்டீங்கல்ல?
சூப்பர் போஸ்ட்…வாழ்த்துக்கள்.
நந்தா இப்போவாது உண்மைய சொல்ல மனசு வந்ததே!!!!
யாரு அது!!!!!
கொஞ்சம் நீளமான பதிவு என்றபோதும், ஆரம்பித்தவுடன் விடாமல் படிக்க வைத்தது. மிக அட்டகாசமான பதிவு
ஆனா தலைப்பு மட்டும் “சொந்த செலவில் சூனியம்’ அப்படின்னு வெச்சிருக்கலாம்.
பொற்கொடிடீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ…………….. எங்கே போயிட்டீங்க? இங்கே பாருங்க, ஆடு தானா தன் தலையில் மஞ்ச தண்ணிய ஊத்திக்கிட்டு வந்து மண்டைய ஆட்டுது
காதல் கதை. நல்லா இருக்குங்க நந்தா.
அந்த சோகமான சீன்ல நெத்தில முத்தம் கொடுத்தது ஓகே. சந்தோஷமான சீன்லகூட அங்கதான் கொடுக்கணும்னு அவசியமில்ல.
நந்தா!
ம்ம்ம்ம் நடக்கட்டும்….
சொந்த செலவில் சூன்யம் வச்சுக்கிட்டதுக்கு வாழ்த்துக்கள்…
(பி.கு: நல்லாயிருக்கு நந்தா)
நந்தா,
படிக்க ஆரம்பித்து, முடிக்கும் வரை ஓரே காதல் மழை! ரொம்ப அனுபவித்து எழுதுகிறீர்கள். வாழ்த்துகள்
உருகுதே..உருகுதே..
வாங்க பொற்கொடி, ஏற்கனவே கொலை வெறில இருக்கீங்க. இப்போ இது வேற சேர்ந்துடுச்சு….. இதுக்குப் பேருதான் லீவு போட்டு யோசிக்கறதுங்கறது.
எழில் நீங்க அவங்க பக்கம் சேராதீங்க…. அது யாரா??? மேல பாருங்க இது சிறுகதை வகையைச் சார்ந்தது.
//கொஞ்சம் நீளமான பதிவு என்றபோதும், ஆரம்பித்தவுடன் விடாமல் படிக்க வைத்தது. மிக அட்டகாசமான பதிவு //
வாங்க பிரேம். உண்மையிலேயே இவ்வளவு பெரிய பதிவைப் படிக்க வெச்சுட்டேன்னதே எனக்கு சந்தோஷமா இருக்கு. வந்தா சும்மா போறதில்லையா? அவங்களை ஏன் கூப்பிடறீங்க. பொற்கொடியே மறந்துட்டாங்க. இப்போ போயி……
இவரு காதலுக்கு இலக்கணமெல்லாம் எழுதுவாராம்பா. ஆனா உங்க அனுபவமான்னு கேட்டா மட்டும் சூடத்தை அணைச்சு சத்தியம் பண்ணுவாராம் தனக்கு அப்படி ஒரு நினைப்பே கிடையாதுன்னு. எல்லோரும் நம்பிடுங்கப்பா. குறிப்பா எம்மாடி பொற்கொடி, நீ நம்பிடுடியம்மா…..
//காதல் கதை. நல்லா இருக்குங்க நந்தா.
அந்த சோகமான சீன்ல நெத்தில முத்தம் கொடுத்தது ஓகே. சந்தோஷமான சீன்லகூட அங்கதான் கொடுக்கணும்னு அவசியமில்ல.//
கதிர் நன்றி. குசும்பு மட்டும் போகாது. பாவனாவைக் கேட்டதா சொல்லுங்க.
வாங்க ஜேகே. ஆமாங்க ஆளாளுக்கு கொலை வெறியில இருக்காங்க. நன்றி.
ஆஹா…ஆஹா…
நந்தா முதல் முத்தம் கொடுத்த இந்த மொத்த கதையும் (ஆமா இது கதை தானே?) சூப்பர்
பாரி அரசு, ரவி நன்றிகள்.
லக்ஷ்மி வாங்க. ஒரு முடிவோடதான் வந்திருக்கீங்க போல. நாம சமாதானமா போயிடலாமே. ^:)^
ஆளாளுக்கு பொற்கொடியை வேற இழுக்கறீங்க. வுடுங்களேன் அவங்களே அமைதியா இருக்காங்க.
பின்றீங்களே தலைவா.. வாழ்க்கையில இதுவரைக்கும் ஒரு முத்தம் கூட கிடைக்காத/கொடுக்காத எனக்கெல்லாம் படிக்க, படிக்க வயிற்றெரிச்சலாகத்தான் இருந்தது. முத்தத்தின் சுவை எழுத்திலேயே இப்படி இனிக்கிறது என்றால் உண்மையான முத்தம்…? ……..ம்………
Excellent write up..Very interesting too
நந்தா
அருமையான நடை..
உணர்வுகளை எழுத்தில் கொணர்வது கடினம்.. நன்றாக செய்திருக்கிறீர்கள்…
/*செல்தான் இப்போது இந்த கடிகாரத்திற்கு உயிர் கொடுத்துக் கொண்டிருக்கிறது.*/
உயிர் கொடுத்தது கடிகாரத்துக்கா? உனக்கா நந்தா?
அருமை நந்தா…இரசித்தேன்…என் மனதை கிளறி பல பழைய சம்பவங்களை சிறகு விரிக்க வைத்துவிட்டது…
நன்றி ஆழியூரான். மனசைத் தேத்திக்கலாம் விடுங்க.
சௌம்யா உங்களிற்கு ஒரு பெரிய்ய நன்றி. உங்களிற்கு எனது எழுத்துக்கள் பிடித்துப் போனதில் மிக மகிழ்ச்சி.
நன்றி மாயன். போன ஜென்மத்துல என்னை 8 விளையாடக் கூப்பிட்டீங்க. இன்னும் போடலை நான். மன்னிச்சுக்கோங்க.
ஆஹா. ப்ரியன். உங்கள் வாழ்க்கையில் இது மாதிரி நூறு சம்பவங்கள் நடந்திருக்கும். கொஞ்சமேனும் உங்களின் நினைவுகளை கீறி விட்டதில் எனக்கும் பெருமையே. நன்றி.
நந்தா நீங்க ஒரு நல்ல காதல் நாவல் எழுதலாம்.
ஆஹா! முரளி. ஏத்தி விடாதீங்க. அப்புறம் தலை கால் புரியாம ஆட ஆரம்பிச்சுடுவேன்.
இதுக்கே என்னைப் போட்டுத் தள்ள பாதி பேரு கொலை வெறியில அலைஞ்சுட்டிருக்காங்க.
உங்களிடம் காதல் மனது இருக்கிறது. பெண்ணிய சிந்தனையும் உள்ளது. இந்த கலவையில் நீங்கள் நாவல் எழுதினால் ஒரு புதிய கோணத்தில் அது அமையும்
நன்றி முரளி கண்ணன். பார்க்கலாம் காலம்தான் பதில் சொல்லும்.
என்னமோ நடக்கிதிங்க. விலகுங்கப்பா விலகுங்கப்பா.
// இதாங்க இதைத்தான் நான் காலைல இருந்து பைத்தியம் பிடிச்ச மாதிரி யோசிச்சுட்டிருக்கேன். எங்கள் இருவருக்கும் இடையேயான முதல் முத்தம் எது? எப்போது என்பதுதான்? அது இதுதான். இந்த சந்தர்ப்பத்தில்தான்.அப்பாடா… எதை எதையோ யோசிச்சு கடைசியா ஒரு வழியா கண்டு பிடிச்சாச்சு. //
இதனால் இதை ஒரு கதை என்று நம்புகிறோம்.
//பின்ன, ஒருத்தரோட வாழ்க்கையில் முதல் முத்தம் என்பது மறக்கக் கூடியதா என்ன? //
Nandha, It was a very good post and the first post of urs that attracted me to read, coz of its title. I like it very much…. Keep going !!! All the best !!
என் கண்களில் என்ன படித்தாளோ தெரிய வில்லை, சரி நீங்க போய் சாப்டுட்டு எனக்கும் வாங்கி வந்துடுங்க என்று சொல்லி எல்லாரையும் துரத்தி விட்டு,என்னருகே வந்து கட்டிலில் உட்கார்ந்தவள் என்னப்பா ரொம்ப வலிக்குதா என்று என் கைகளை தன கைகளிற்குள் பத்திரப்படுத்திக் கொண்டு கேட்டாள்.
அவ்வளவுதான். அது வரை தாங்கிக் கொண்டிருந்த வலியை பொறுக்க முடியாமல் அப்படியே அவள் மடியில் சுருண்டுக் கொண்டு , முடியலைடா, ரொம்ப வலிக்குது என்று கண்களில் நீர் வழியச் சொன்னேன். ரொம்ப நாளைக்கப்புறம் நான் அழுதது அன்றுதான்.
ennapa ippadilam eluthethu ungaluku anupavam illana kanidipa engalala nampa mudiyathu yar ungalover
3-8-2007
அப்படியே அழுதவாறே எப்போ தூங்கிப் போனேன்னு எனக்கேத் தெரியாது. ஆனால் நான் விழிச்சப்பவும் என் கைகள் அவள் கைகளிற்குள்தான் இருந்தது
intha linesku pathil
என்னருகே வந்து கட்டிலில் உட்கார்ந்தவள் என்னப்பா ரொம்ப வலிக்குதா என்று என் கைகளை தன கைகளிற்குள் பத்திரப்படுத்திக் கொண்டு கேட்டாள்.amma முடியலைடா, ரொம்ப வலிக்குது என்று கண்களில் நீர் வழியச் சொன்னேன்
en valiyai avalal thanga mudiyamal.yarum enaku thara mudiyatha marunthai aval thanthal.aval iru kaikalaum ennai katti anithu kondu en ithazil aval kodutha mutham, ennai intha ulakathaiye marakka seithathu. (itha muthal muthatha thanga ivlavu nerama yosichitu irunthenu solli irukalam just enaku thonatha sonnenpa.)
neenga eluthuna kathai enaku rompa pudichi iruku
பாராட்டுகளுக்கு நன்றி காயத்ரி.
Hi Nanda,
excellent. After a long time i had got a good kavithai to read.
the way u narrated is simply superb.
y cant u try for cinema yaar..
And moreover ur lover is so lucky to have u.
All the best for ur love and lovely marriage
priya
//And moreover ur lover is so lucky to have u.
All the best for ur love and lovely marriage//
பிரியா வம்புல மாட்டி விடாதீங்க. இதெல்லாம் சும்மா உல்லலாய்க்கு எழுதறது.
இன்னிக்கு தான்யா படிச்சேன் இதை… அருமையா இருக்குய்யா…
நந்தா எப்படி சொல்ல
அனுபவமில்லாம இப்படி எழுத முடியாது.
அனுபவச்சிருக்கேன் நந்தா…
”காக்கை சிறகினிலே நந்தலாலா” பாடும் போது என் உணர்வோ அது இதுல இருக்கு நந்தா.
Chanceless…
அருமையா இருக்கு!
Super Excle love story…..
yaruppa andha nalla ponnu. apdilam yarum ilanu sonna nan nambiten.
nalla iruku
Hello Nantha
Good story, Hmmmm it just a story (Ethu kathaithane….) Think in Vadivel Voice
அக்மார்க் கதைதான். கதை மட்டும்தான்.
super story nantha
thalaiva kalakkal,
romba nalla irruku thaliva
very very nice i like your love.
Very Nice Thalaiva………….
அருமையான சம்பவம் உங்கள் வாழ்வில் நடந்து இருக்கிறது , முடிவு கொஞ்சம் சீக்கிரம் சொல்லுங்க
hello entha kadhai ya padichalae theriyuthu unga unmayana kadhanu yaen pa othtuka matingrika
நம்ப மாட்டேங்கறீங்களே. இது வெறும் புனைவு மட்டும்தாங்க.
உங்க காதலை ரொம்ப அனுபவச்சிருக்கீங்க
இது ஒரு புனைவுனு கத விடறதத்தான் நம்ப முடியல..
நடக்கட்டும்.
i didnt get my first kiss on my life but i feel know my lonely u make fellwith ur story .u have brigh future dont stop writing.ur imaginary having lot of creativity .u know why i am saying this i am in cine field .i know the pain of creativity i am proud to frnd of u thank u take care.
நன்றி ராஜா, புது மலர்.