
உன்கிட்ட எனக்கு ரொம்ப புடிச்சதே
உன் பங்ச்சுவாலிட்டிதான்.
நம் இருவருக்குமான சந்திப்புகளில்,
அலைகடலை வெறித்துப்பார்க்க வைத்தோ,
புற்களை பிடுங்கச் செய்தோ,
தெப்பக்குளத்தில் கல்லெறியச்செய்தோ,
ஓடுகின்ற பேருந்துகளை எண்ண வைத்தோ,
எனை நீ காக்க வைத்திருந்ததில்லை.
ஏதோ ஒரு காரணத்திற்காக
ஒரேயொரு நாள் தாமதமாய் வந்து
சமாதானமாய் எனைக் கொஞ்சியபோது
இதுதான் சாக்கென்று நான் சொன்னேன்.
“இனிமேல தாமதமாய் வரும்
ஒவ்வொரு முறையும்
நீ எனக்கு ஒரு முத்தம் தந்துடணும்
அப்போதான் சமாதானம் ஆவேன் என்று”
அன்றிலிருந்து இன்றுவரை நீ
தாமதமாய்,
தாமதமாய் மட்டுமே வந்திருக்கிறாய்
கள்ளி!!!! இப்போதும் சொல்லுவேன்.
முன்னை விட இப்போதான்
உன் பங்ச்சுவாலிட்டி ரொம்ப பிடிச்சிருக்கு.
நீங்க எழுதறதைப்பார்க்கும் போது சொந்த அனுபவம் மாடிரியே அப்படியே, ரியலா இருக்கு. ஆனால் கேட்டா மட்டும் இல்லைங்கறீங்க.
எப்படித்தான் புடிக்கறீங்களோ இந்த மாதிரி படங்களை எல்லாம்… காதல் பொங்கி வழியுது போங்க.
புது வீட்டில் அமர்க்களமான தொடக்கம். வாழ்த்துக்கள். படமும் விவரிப்பும் நல்லா இருக்கு.
ada ada….eppidi oree kadal mazai-a irukku
நந்தா, என்ன தான் நடக்குது அங்கே
நன்றி பாலஜி, ரவிஷங்கர், வசந்த்,பிரேம்.
இந்த படம் எனக்கே ரொம்ப பிடிச்சிருக்கு. அது என்னடா “எனக்கே” அப்படீங்கறீங்களா?? சரி விடுங்க “எனக்கும்”.
இப்படில்லாம் எழுதிட்டே போனீங்கன்னு வைங்க.. எல்லாம் நெசம்னு நெனச்சிடுவாங்க
அது சரி நந்தா, என் காதலி லேட்டா வந்தா ஒரு டஜன் காட்பரீஸோட வாங்குறாளே..! இது மாதிரி படங்களை எங்க புடிக்கிறீங்கன்னு போன ஜன்மத்துலேயே ஒரு பின்னூட்டத்துல கேட்டிருந்தேன்.
வாங்க செல்வேந்திரன். நிறைய்ய தளங்கள் இரூக்கிறது. காபிரைட் பிரச்சினை வாரமல் பார்த்து எடுக்க வேண்டும்.
istockphotos.com, gettyimages.com, corbis.com இப்படி பல உள்ளன. என்ன நீங்கள் சற்று பொறுமையாக தேடி எடுக்க வேண்டும். அதுதான் முக்கியம்.
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் தடையில்லாதபோது, கண்கொள்ளா காட்சிகள் தான்.
நந்தா சார்,
அதெப்படி உங்களால் சொந்த அனுபவம் ஏதுமில்லமல் இப்படி எழுத முடிகிறது என்று புரியவில்லை. மனதளவிலாவது ஒருமுறையாவது சாகாமல் சாவைப்பற்றிய கவிதை சாத்தியமில்லை என்பார்கள். ஒன்று நீங்கள் காதல் வயப்பட்டு அதை சொல்லாமல் மறைக்கிறீர்கள். இல்லையென்றால் எப்போதும் காதலைப்பற்றிய சிந்தனையில் ஒரு கற்பனையில் உங்களுக்கு தெரிந்த யாரோ ஒருவரை உங்கள் மனதில் காதலித்துக்கொண்டிருக்கிறீர்கள். இன்னும் அவருக்கு சொல்லவில்லையோ?
காதலைப்படைத்தவன்தான் முத்தத்தையும் படைத்திருக்கவேண்டும். காதலை முத்தத்திற்க்காயும், முத்தத்தை காதலுக்காகவும். அதுவும் எதிர்பாராதபோது.
யாரோ ஒருத்திக்கான உங்களது கனவுகள் அருமை.
மேலும், திரையுலகில் கமலஹாசன் பேரெடுத்ததுபோல பதிவுலகில் நீங்கள் எடுக்கப்போகிறீர்கள் என்று தோன்றுகிறது. வாழ்த்துக்கள்.
நந்தா ..ஒரே கிறக்கமா இருக்கே உங்க பக்கம்..காதல் போதையா
நன்றி தவப்புதல்வன்…
பொற்கொடி உங்க விஷயத்திற்கு வர்றேன். இங்க நந்தா தெரியுது. யாருங்க அது சார்.. (மரியாதைன்னு சொல்லாதீங்க). அது வேண்டாம்.
சத்தியமாய் காதல் அனுபவ்ம் எதுவுமில்லை அதே சமயம் ஒரு தலைக் காதலும் இல்லை.
என்னுடைய புதிரா புனிதமாவையும், பத்தினிப் பெண்களையும் படித்தவர்கள் என்னிடம் கேட்கின்ற கேள்வி உனக்கு கல்யாணம் ஆய்டுச்சுதானே?? என்றுதான். பயங்கர உணர்வுப் பூர்வமாய் எழுதிக் கிழித்து விட்டேன் என்று சொல்ல வர வில்லை. ஆனால் உணர்ந்து தான் எழுதினேன்.
அதையே யோசிக்கும் போது காதலைப் பற்றி யோசித்தால் தானாக அருவி மாதிரி கொட்டுங்க. நாம்(ன்) தினசரி பார்க்கும் பலரின் வாழ்க்கையில் காதல் கலந்துதான் இருக்கிறது. பார்வையிலேயே மாற்றி மாற்றி பேசிக் கொள்ளும் திருமணமான எனது தோழிகள் மற்றும் தோழர்கள், 9 மணி ஆனால் இன்னும் மிஸ்டு கால் வரலையே என்று தவிக்க ஆரம்பிக்கும் எனது கொலீக், எங்களிடம் ரவுசு விட்டாலும், 6 ம்ணி ஆனாலே “என் வூட்டுக்காரி will stand with துடைப்பக்கட்டை” என்று பயப்படும் என் P.M , என எல்லார் வாழ்க்கையிலும் காதல் இருக்கிறது. இப்படி பல பேரை சொல்லலாம்.
நம் எல்லார் வாழ்க்கையிலும் இது இருக்கிறது. அதை கொஞ்சம் கீறிப் பார்த்தேன். அதுதான் அப்பப்போ கரையை உடைத்துப் பாயும் வாய்க்கால் நீரைப் போல கதையாகவோ, கவிதையாகவோ, ஏதனும் ஒரு உருவத்தில் வெளிப்படுகிறது.
கருத்துக்களிற்கு நன்றி.
அழகான உணர்வுகள் நந்தா
) சமாதானமாய் ஒரு முத்தம் தானா ??
)) மேலும் கவியுங்கள் ! வாழ்த்துக்கள் !
அருமையான கற்பனை நந்தா..
நல்ல விளக்கம் சொல்லி மாய்கிறீர்கள் போங்கள்.. நான் என் கல்லூரிப் பருவத்தில் சக மாணவர்களுக்கும், ஏன் என் கவிதையைப் படித்து விட்டு விளக்கம் கேட்டு (உறுதியாய் அடித்துச் சொல்லி) விடாப்பிடியாய் உலுக்கிய ஆசிரியைக்கும் மாய்ந்து மாய்ந்து பதில் சொல்லி ஓய்ந்து போனது நினைவுக்கு வருகிறது..
தொடரட்டும் உங்கள் காதல் போதை ;)
வாழ்த்துக்கள்.
that picture is from kolkata , Victoria Palace.. the so called kolkata lovers paradise
i very like your KAVITHAI.I HAVE THE EXPERIENCE ABOUT KAVITHAI.
nandha sir,
romba nalla iruku. kadhal epdi elarukum romba pidikumo apdi than indha kavithaum elarukum romba pidikum.
enna nanda sir experience pola erukke.i have a experience like that,but she is love with another boy
ur kavithai is very good sir,keep that too,i have a feelings about her after reading ur kavithai.simply super sir.write about such a kavithai
nandha how r u? nenga ezhuthina kadhaikal padithaen romba romba azhaka iruku enna frienda ethupingla?
நன்றி. தாராளமாக.
நன்றி கார்த்திக்.
முத்தம் …உறவுகளின் பரிமாற்றல் சப்த்தம்.ஈருயிர்களின் உறவுகள் கடந்தது செல்லும் பாலம்.மனங்களின் மௌன உறசலின் மூங்கில் தீ!பிரிவையும்,உறவாக்கும்..காதல் கருவி…..முத்தம் உயிரினங்களின்…துணை உயிர்.!.இதழ்களின் மோதலில் ஏற்ப்படும் இதயத்துடிப்பின் அளவோ ……ஒளியின் வே(மோ)கத்திற்கு , ஈடானது. மேலே உள்ள படம் பார்த்ததில் பிறந்த வார்த்தைகள் இவை.நன்றி.