நந்தாவின் கிறுக்கல்கள்

யுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்
நான் படம் பார்த்த திரையரங்கில் இடைவேளையின் போது பல படத்தின் டிரெய்லர் போட்டார்கள். வரிசையாய் ட்ரெய்லர்கள் போட்டு சலிப்பேற்படுத்திக் கொண்டிருந்த அந்த சூழலில், பார்க்கின்ற முதல் ஃப்ரேமிலேயே இது வேறு படத்தின் ட்ரெய்லர் அல்ல, மிஷ்கினின் படம் என்பதை நமக்குப் புரிய வைக்கும் அளவுக்கு இயக்குனர் ஆளுமை செய்திருக்கிறார். சாதாரணமான காட்சிகளைக் கூட அசாதாரணமாய் எடுக்கும் கலை மிஷ்கினுக்கு அழகாய் வருகிறது.

ஒரு த்ரில்லர் படத்தை மிக மெதுவான திரைக்கதையின் மூலம் கூட நகர்த்த முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார். அகிரோ குரோசோவாவின் பாதிப்பிலிருந்து அவர் இன்னும் முழுதும் வெளிவர வில்லை என்பதை காட்சியமைப்புகள் உணர்த்திக் கொண்டே இருக்கின்றது. இன்னும் இரண்டு மூன்று படங்கள் செய்த பின்பு ஒருவேளை அந்த தாகம் சற்றே தணியலாம். நாம் பார்க்கின்ற பல வேற்று மொழிப் படங்கள் நமக்குள் ஏற்படுத்துகின்ற இத்தகைய படங்கள் தமிழில் வராதா என்ற உணர்வுகளை இது போன்ற படங்கள் தணிக்கின்றன.

மிகத்தீவிரமான உணர்வுக்குவியல்களை இந்த படம் உங்களுக்கு நிச்சயம் ஏற்படுத்தாது. (அவை மட்டும்தான் சிறந்த படங்களா என்ன?) ஆனால் படம் பார்க்கின்ற அந்த இரண்டரை மணி நேரங்கள் வெகு நிச்சயமாய் அந்த உலகிற்குள்ளேயே நம்மை ஆட்படுத்தி வைத்திருக்கும்.

எவர் கேமராமேனாகவும், இசையமைப்பாளாராக இருந்தாலும் மிஷ்கினின் படங்களில் மட்டும் அதகளாம் செய்யும் மர்மம் இன்னும் புரியவே இல்லை. படத்தின் மிகப்பெரிய பலம் ”சத்யா”வின் கேமராவும், ”கே”யின் இசையும்.

அஞ்சாதேயின் சாயல், இரண்டாவது பாதியில் திரைக்கதையில் ஏற்படும் தொய்வு, குறிப்பாய் க்ளைமேக்ஸ் பகுதிகளில் காணப்படும் சிறு சிறு பிழைகள் என்று சில குறைகள் இருந்தாலும் மிக நிச்சயமாய் யுத்தம் செய் ஒரு நல்ல த்ரில்லர் அனுபவத்தைத் தரும். வெகு நிச்சயமாய் குழந்தைகளுக்கான படமல்ல இது.

மிஷ்கினின் மிகப்பெரிய பலவீனம், அவரது காட்சிகளை மிக அதிகளவில் நேசிப்பதுதான். அதனாலேயே அவரையும் மீறி அவ்ரது எல்லா காட்சிகளிலும் ஒரு அழகியலை உணர முடிகின்றது. அது காதல், சண்டை, கொலை என எல்லாக் காட்சிகளிலும் வெளிப்படும் போது சில சமயங்களில் துருத்திக் கொண்டிருப்பதை உணர முடிகின்றது. கமலஹாசனுக்கு ஸ்பீடு பிரேக்கர் தேவை என்று பாலச்சந்தர் சொன்னார் ஒரு முறை. மிஷ்கினுக்கும் இன்னும் சில காலங்களில் அப்படி ஒன்று தேவைப்பட வேண்டி இருக்கும்.

2011 புத்தகத் திருவிழா – எனது அனுபவங்கள்
இதற்கு மேல் பெரிதாக என்ன எழுதிவிட முடியும் என்று தோன்ற வில்லை. புத்தகக் கண்காட்சியில் அன்றாடம் நடக்கின்ற நிகழ்வுகளை இட்லிவடை, தமிழ் பேப்பர், எஸ்.ரா, மருதன், பா.ரா, கிருஷ்ண பிரபு உள்ளிட்ட பல வலைப்பதிவர்கள் / எழுத்தாளர்கள் உடனுக்குடன் சுடச் சுட தந்து கொண்டேயிருந்திருக்கிறார்கள். எந்த புத்தகத்தை வாங்குவது? இந்த கேள்விக்கு அங்கதமாய், சீரியசாய், மொக்கையாய் என பல்வேறு விதங்களில் பலரும் பதிவு செய்து கொண்டே இருந்திருக்கின்றனர்.

இந்த நிலையில் எல்லாம் முடிந்து, போட்ட பந்தலை பிரித்து கொண்டிருக்கின்ற நிலையில், இன்று வந்து நானும் தான் போனேன் என்று என்ன பெரிதாய் எழுதி விட முடியும் என்று தெரிய வில்லை. எனவே என்னைப் பற்றிய சுய பிரதாபங்களைத் தவிர பெரிதாய் வேறு எந்த சுவாரஸ்யத்தையும் இந்த பதிவு தராமல் போகலாம் என்ற முன்னெச்சரிக்கையுடன் ஆரம்பிக்கின்றேன்.

எப்போதும் போலவே இந்த வருடமும் ஒரு நிறைவான அனுபவத்தை தந்து விட்டுச் சென்றிருக்கிறது இந்த புத்தகக் கண்காட்சி. குவியலாய் அத்தனை புத்தகங்கள் காணக்கிடைக்கும் இடத்தில் ஒரே ஒரு பேனா, பேப்பர் வாங்க ஒரு சின்ன எழுது பொருள் அங்காடி கூட இல்லாதது ஆச்சர்யமேதான். அடுத்த வருடம் யாரேனும் அங்கே கடை போட்டால் கல்லா கட்டலாம்.

பொதுவான அவதானிப்பில் இந்த வருடம் புத்தம் மற்றும் அம்பேத்கர் குறித்தான புத்தகங்கள் அதிகம் காணக்கிடைத்தது ஒரு மகிழ்ச்சியான விஷயமே. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பெரும்பான்மை மக்களின் பொதுப்புத்தியை எதிர்த்து போராடிய மனிதனை ஆங்கிலேயர்களின் கையாள் என்றும் காந்தியடிகளையே எதிர்த்த தேசத்துரோகி என்றும் அடிப்படைவாத, மதவாத சக்திகள் அவ்வப்போது முழங்கிக் கொண்டிருக்கும் சூழலில் இத்தனை மறுவாசிப்புகள் மன நிறைவை அளித்தன.

தமிழச்சி தங்கபாண்டியன் இந்த முறை 4 புத்தகங்கள் போட்டிருந்தார் போலிருக்கிறது. என்னை ஒன்று கூட கவரவில்லை. அரச கவிகள் இதைக் கேட்டால் என்னுடைய தமிழ் அறிவின் மீதே சந்தேகம் கொள்ளக் கூடும். உயிர் எழுத்தில் சு.தமிழ்செல்வியின் இரண்டு புத்தகங்களை வாங்கி விட்டு மூன்றாவதாய் ஒரு சிறுகதை தொகுப்பு வாங்கலாமா என்று யோசித்து புரட்டிய போது தமிழச்சி தங்கபாண்டியனுக்கு அர்ப்பணித்து இருந்ததைப் பார்த்த உடன் யாரோ நம்மை இந்த புத்தகத்தை வாங்கக் கூடாதுன்னு சொல்றாங்கன்னு புரிஞ்சுக்கிட்டு வேணாம்னு வெச்சுட்டேன்.

புத்தகங்களை அதிக விலை போட்டு விற்பவர்கள் என்று எவர் எவரைச் சொல்லலாம்?

கால்ச்சுவடு (இவங்களை அடிச்சுக்க முடியாது. அதிலும் கிளாசிக் வரிசை இருக்கே அது பகல் கொள்ளை)

ஜோ மல்லூரி (அந்த புத்தகத்துக்கு எல்லாம் அவ்வளவு வொர்த் கிடையாதுங்க)

சில நர்மதா பதிப்பக புத்தகங்கள் – ஏன் சார் மொக்கை புத்தகத்துக்கெல்லாம் நீங்க ஹார்ட் பைண்டிங் பண்ணி 50 ரூபாய் அதிகமா போட்டு வித்தீங்கன்னா நாங்களா பொறுப்பு

அடுத்துதான் வருகிறார் வித்தகக் கவிஞர் விஜய் – சினிமாக்காரர் என்பதாலேயே இவருடைய புத்தகங்கள் கொஞ்சமாச்சும் விற்பனை ஆகிறதோ?

கவிதைகளுக்கெல்லாம் அழகான பொண்ணுங்களை படம் பிடிச்சு போட்டு, கலர் கலர் எழுத்துக்களில்  கவிதை எழுதினது போயி இந்த முறை சிறுகதைகளிலும் அதையே செய்திருந்தார் போல. (பொண்ணு படம் இருந்ததா என்பதை கவனிக்க வில்லை) ஆனால் எதுவுமே குறைந்த பட்ச கவன ஈர்ப்பு கூட செய்ய வில்லை. ஏதோ ஒரு கவிதைத் தொகுப்பில் ஒரு கவிதையில் சினிமாவை வாழவைப்பவர் எங்கள் ராமநாராயணன் அண்ணன் என்ற ரீதியில் கவிதையில் ஒரு வரி எழுதி இருந்தார்.

வந்த கோபத்திற்கு இதெல்லாம் ஒரு கவிதைன்னு மனுஷன் வாங்குவானா? என்று பக்கத்திலிருந்த நண்பனிடம் மறந்து போய் கொஞ்சம் சத்தமாகவே சொல்லி விட்டேன். கடையில் இருந்த எல்லாருடைய பார்வையும் என் மீதே இருப்பதை புரிந்து கொண்டு சத்தம் போடாமல் இடத்தைக் காலி செய்தேன்.

நண்பன்னு சொல்லிக்கிட்டு ஒரு எதிரி எப்போதோ திருடிக் கொண்டு போனா நா.முத்துக்குமாரின் ஆனா ஆவன்னாவையும், விஜய் மில்டனின் கொலுசுகள் பேசக்கூடும் புத்தகத்தையும் தேடிப்பிடித்து வாங்கிக் கொண்டேன். விஜய் மில்டன் அடுத்து ஒரு காதல் கவிதை புத்தகத்தை வெளியிட்டாருன்னா வாங்கத் துடிக்கும் நபர்கள் குறைந்தது 20 பேரையாவது எனது நண்பர்களிடையே காட்ட முடியும்.

வாசிப்புப் பழக்கம் அதிகம் இல்லாதவர்கள், மற்றும் இரண்டு பக்கத்திற்கு மேல் படித்தால் தூக்கம் வருது என்று சொல்லுபவர்களிடையே வாசிப்புப் பழகத்தை அறிமுகப்படுத்த இத்தகைய அழகியல் சார்ந்த காதல் கவிதைகளை விட நல்ல சாய்ஸ் வேறு எதுவாக இருக்கும் என்று எனக்குத் தெரிய வில்லை. நானெல்லாம் பிறப்பதற்கு முன்பே இதில் முன்னோடியான கவிஞர் மீரா, தபூ சங்கரின் சில மாஸ்டர் பீஸ்கள் வரிசையில் நிச்சயமாய் கொலுசுகள் பேசக்கூடும் கவிதைகளுக்கு ஓர் இடமுண்டு.

குமரன் பதிப்பகம், கற்பகாலயம் மற்றும் திருமகள் பதிப்பகத்தில் இவர்களது புத்தகங்களையும், இதைப் பின்பற்றி புதிதாய் எழுத வந்திருக்கும் பல இளம் கவிஞர்களின் கவிதைகளையும் காணலாம். பெரும்பாலானவற்றில் டெம்ப்ளேட் ஒன்றுதான்.

அழகான இளம்பெண் + குறைந்த மூன்று பக்கங்களிலாவது தாவணியுடன் + கூடவே,

உப்பு மாவில்

கோலம் போட்டாலும்

நீ போடும் போது மட்டும்

எறும்புகள் இப்படி மொய்க்கிறதே

அது எப்படி?

வகை கவிதைகளை இங்கே காணப் பெறலாம். அழகான பெண்கள் மட்டுமே காதலிக்கத் தகுதியானவர்கள் என்ற உளவியல் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைத் தவிர வேறு எந்த விதமான தீவிர விமர்சனத்தையும் இத்தகைய கவிதைகளின் மீது வைக்க முடியாது. இதை ஒரு தீவிர எழுத்துருவாக்கங்களிற்கான நல்ல ஆரம்பம் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த முறை கண்காட்சியில் நான் அடைந்த ஒரு மிகப்பெரும் ஏமாற்றம் யூமாவாசுகியின் மஞ்சள் வெய்யில். புலம் பதிப்பகத்தில் நான் எடுக்கலாம் என்று கையை மெதுவாய் கொண்டு போய் கொண்டிருந்த அதே சமயத்தில் என் பக்கத்திலேயே இருந்த நபர் மின்னல் வேகத்தில் கிடைச்சிடுச்சி என்று சந்தோஷமாய் எடுத்துக் கொண்டார். உண்மையில் மயிரிழையில் தவற விடப்படுவதன் ஏமாற்றத்தை அன்று அனுபவித்தேன்.

ஒட்டு மொத்த கண்காட்சியில் வேறு எங்கேயும் ஒரு பிரதி கூட அந்த புத்தகம் இல்லை. சொல்லி வைத்திருந்த பல கடைக்காரகளும் அந்த பதிப்பகத்தினரை போனில் கூட பிடிக்கவே முடிய வில்லை என்றனர். மஞ்சள் வெய்யிலை வெளியிட்ட அகல் பதிப்பகம் இது போன்ற விஷயங்களில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்திருக்கலாம். கிடைக்கப் பெறாத புத்தகங்களின் வரிசையில் ஹெ.ஜீ.ரசூலின் மைலாஞ்சி கவிதைத் தொகுப்பையும் சேர்த்துக் கொள்ளலாம்.

சமீபத்தில் பண்புடன் குழுமத்தில் சாதி –மதம் – வர்க்கம் சார்ந்த உரையாடலில் இந்து மதத்தின் மிக முக்கிய நிறுவனமாக விளங்கும் காஞ்சி மடத்தின் பிராமண ஆதிக்கம் குறித்தான கேள்விக்கு அது ஒரு தனியார் வகை மடம். அதை வைத்து மட்டும் பேசக்கூடாது என்று நண்பர் ஒருவர் சொல்லி இருந்தார்.

அப்படியா இருக்கிறது உண்மை நிலை. இன்னமும் பல குடும்பங்களில் தெய்வத்திற்கு சமமாக சங்கராச்சாரியார்கள் வீற்றிருக்கும் சூழலில் இதை சரிதான் என எடுத்துக் கொள்ள வேண்டுமா என்பதை அவரவர்களே முடிவு செய்து கொள்ளட்டும். நான் கண்காட்சியில் சங்கராச்சாரியாரை தெய்வமாகவும்,, அவரது வாக்குகளை வேதமாகவும், அவரை பார்த்தேன் , நான் ஜென்ம சாபல்யம் பெற்றேன், அவரு தொட்டாரு – எனக்கு ரொம்ப நாளாய் இருந்த வயிற்று வலி சரியானது வகையான சாரு டைப் புத்தகங்களை பார்த்தேன்.

தெற்கே உதித்த சூரியன் – ராவ்

மகா பெரியவா -  பி.சுவாமி நாதன்

மகா பெரியவர்

மகா ஸ்வாமிகள் வரலாறு

மகா பெரியவரின் தரிசன அனுபவங்கள்

தெய்வத்தின் குரல் – பொன்னியின் செல்வனை விட இதற்கு பாகங்கள் அதிகம் போல

இவை எல்லாம் ஒரு சாம்பிள்தான். இதில் நான் ஆதி சங்கரர் குறித்தான புத்தகங்களை சேர்க்கவே இல்லை. ஏறக்குறைய ராமானுஜருக்கு இணையான அளவில் இவரைக்குறித்தும் புத்தகங்கள் இருக்கின்றது. இதுவா தனியார் அமைப்பு. இதற்கும் இந்து மதத்திற்கும் சம்பந்தமில்லையா? சரி இவர் வார்த்தைகள் எல்லாமே வேதம் என்றால் வேலைக்குப் போகும் பெண்களை வேசிகள் என்றாரே அதை வேதத்தின் எந்த பகுதியில் சேர்ப்பது?

ஏற்கனவே வேறொரு இழையில் சொன்ன மாதிரி விஜயபாரத்தத்தில் இட ஒதுக்கீடு – இந்துக்களுக்குள் பிளவு தேவையா என்ற ரீதியில் ஒரு புத்தகத்தைக் காண முடிந்தது. புத்தகத்தை எழுதிய மகானின் மனிதாபிமானத்தை மனதினுள் மெச்சிக் கொண்டேன். அதை விட கொடுமை மனு தர்ம சாஸ்திரம் மிகச்சிறந்த தர்ம சாஸ்திர நூல். அதை எல்லாரும் கண்டிப்பாய் வாழ்வில் கடைபிடிக்க வேண்டும் என்ற வகையான முன்னுரைகளுடன் சில மனுதர்ம நூல்களைப் பார்த்தேன். அதை எல்லாம் சொந்தமா காசு போட்டு வாங்கி அங்கேயே கொளுத்தலாமா என்று தோன்றியது. ஓவர் சீனு உடம்புக்கு ஆகாது என்று உள்ளுக்குள் ஒரு குரல் ஒலித்ததால் அமைதியாய் இடத்தைக் காலி செய்தேன். மனு தர்மம் அளவுக்கு இல்லாவிட்டாலும் சில பல பிற்போக்குத் தனங்கள் நிரம்பிய சாணக்கியரின் அர்த்த சாஸ்திரத்தையும் காண முடிந்தது.

சரி இப்படியே குத்தம் சொல்றதுக்குத்தானா நீ அங்கே போன என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. இது வரை பலமுறை முயற்சி செய்து கிடைக்கப் பெறாத பல புத்தகங்களை இந்த முறை கிடைக்கப் பெற்றேன்.

தமிழில் மிக முக்கிய ஆய்வாளர்களான தொ.பரமசிவன், பொ.வேல்சாமி, ஆ.சிவசுப்ரமணியன் ஆகியோரது புத்தகங்களில் என்னிடம் இல்லாதவை அனைத்தையும் வாங்கி விட்டேன்.

ரொமீலா தாப்பர், ஆர்.எஸ்.ஷர்மா, டி.டிகோசாம்பி ஆகியோரது இந்திய வரலாறு குறித்தான தடிமன் புத்தகங்களை வாங்கிக் கொண்டேன். பண்டைக்கால இந்திய வரலாறு, ஹரப்பா நாகரீகம், வேத கால மக்களின் வாழ்க்கை முறை தொடங்கி பிரிட்டிஷ் கால இந்தியா வரையிலான வரலாற்றை பேச விரும்பும் எவரும் இவர்களை எளிதில் புறம் தள்ளி விட்டு பேசி விட முடியாது. ஒரு வேளை நீங்கள் ஜெயமோகன் சொல்லுவதைத்தான் வரலாறு என்று நம்புபவராகவோ அல்லது தமிழ் ஹிந்துவில் கட்டுரைகள் எழுதுபவராகவோ இருந்தால் உங்களுக்கு இவை தேவைப்படாது.

கே.கே.பிள்ளையின் தமிழக மக்கள் வாழ்வும் பண்பாடும் புத்தகத்தை உலகத் தமிழாராய்ச்சி ஸ்டாலில் வாங்கிக் கொண்டேன். நீலகண்ட சாஸ்திரிகளின் சோழர் வரலாறு என்னிடம் ஏற்கனவே இருப்பதால் மற்றவர்களான கே.கே.பிள்ளை மற்றும் சாதாசிவப் பண்டாரத்தார் ஆகியோர் புத்தகங்களில் ச.பண்டாரத்தாரின் புத்தகம் எளிதில் வாசிக்க முடியாத படி மட்டமான முறையில் அச்சிடப் பட்டிருந்ததால் அதை வாங்க மனம் இல்லை.

எழுத்தாளர் ஜெயந்தனின் சிறுகதைகள் முழுத் தொகுப்பையும் வம்சியில் வாங்கினேன்.

இதைத் தவிர நிறைவான ஒன்று சிறுவர்களுக்கான பீர்பால் கதைகள், தெனாலிராமன் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள், முல்லா கதைகள், பரமார்த்த குரு கதைகள் ஆகியவற்றை வாங்கியதைச் சொல்லலாம். இந்த புத்தகங்களைத் தேர்ந்தெடுப்பதில் ஒரு சிக்கல் இருந்தது. பல பதிப்பகங்கள் இவர்களது கதைகளை வெவ்வேறு விலையில், 20 அல்லது 25 கதைகளை தொகுத்து போட்டிருந்த நிலையில் இந்த கதைகள் ஒன்றையும் விடாத முழுதும் அடங்கிய அதேசமயத்தில் விலை குறைவான புத்தகத்தை தேடுவதென்பது சவாலான ஒன்றாகவே இருந்தது. கடும் முயற்சிக்குப் பின்பு பிரேமா, நர்மதா ஹயக்ரீவர் பதிப்பகங்களில் இந்த புத்தகங்களை வாங்கி விட்டேன். நர்மதாவில் 200 மற்றும் 250 ரூபாய்க்கு பெரிய புத்தகத்தையும், அதையே சின்ன பைண்டிங்க்ல 70 ரூபாய்க்கும் போட்டிருப்பான். ஏமாந்துடாதீங்க.

மதங்களை பற்றி எழுதியதால் கிறிஸ்துவத்தில் இருந்து தள்ளி வைக்கப்பட்டார் என்று கேள்விப்பட்ட ஜோசஃப் இடமுருகு அவர்களது மத விமர்சனங்கள் குறித்தான புத்தகங்களை கீழைக்காற்றில் வாங்கிக் கொண்டேன்.

லீனா மணிமேகலையின் இதுவரையிலான கவிதைத் தொகுப்பு “பரத்தையருள் ராணி” கடைசி நாளுக்கு முன் தினமான சனி மாலையிலிருந்து உயிர் எழுத்து ஸ்டாலில் கிடைத்தது. இதை நீ கீழைக்காற்று ஸ்டால் பேரை சொன்ன உடனேதான் சொல்லணுமா என்று கேட்காதீர்கள். இது தற்செயல் நிகழ்வு அவ்வளவுதான்.

நாஞ்சில் நாடனின் சில படைப்புகள் (உயிர் எழுத்தில் கிடைக்கும் பச்சை நாயகி கவிதைத் தொகுப்பு உட்பட), அ.வெண்ணிலாவின் விட்டுப் போன படைப்புகள், ஆண்டாள் ப்ரியதர்ஷிணியின் சில கவிதை புத்தகங்கள், கலாப்ரியா கவிதைத் தொகுப்பு, கண்மனி குணசேகரன், வா.மு.கோமு, கோணங்கி, சு.ரா, நிலா ரசிகனின் வெயில் தின்ற மழை, மனுஷ்ய புத்திரனின் லேட்டஸ்ட் கவிதைத் தொகுப்பு, வண்ணதாசன், வண்ண நிலவன், எஸ்.ரா, உள்ளிட்ட பலரது புத்தகங்களை அள்ளிக் கொண்டேன்.

பி.கு: புத்தகப் பட்டியலை ஒன்று இரண்டு மூன்று என்று போட்டு பெரிய பட்டியலாய் போட்டுக் காட்ட ஏதோ ஒன்று என்னைத் தடுக்கின்றது. அது தயக்கமா, இல்லை அடக்கி வாசிக்க நினைக்கும் முயற்சியா என்று தெரியவில்லை. பிறிதொரு சந்தர்ப்பத்தில் ஒரு வேளை தயக்கம் களைந்து பட்டியலை போடலாம். தெரியவில்லை.

டைரிக்குறிப்புகள் 20-08-2010
ஆயிற்று. சரியாக சொல்லப்போனால்  இன்றுடன் 15 மாதங்கள் பதிவுகளை எழுதி. வெறுமனே பதிவுலகில் பார்வையாளனாகவும், அவசியப்படுகின்ற இடங்களில் மட்டும் பின்னூட்டமிடுபவனாகவும் மட்டுமே இருந்திருக்கிறேன்.

கடைசியாக சென்ற வருடம் மே மாதம் ஈழத்துப் போர் முடிவுக்கு வந்திருந்த அந்த கடைசி காலகட்டத்தில் எழுதியது.  அதற்குப் பின்பு தொடர்ச்சியாக நான் எழுத நினைத்த எந்த விஷயத்திலும் ஈழமும், சகோதர மக்களின் நிலை குறித்தான பொறுமலும், ஆளும் மத்திய, மாநில மானங்கெட்ட அரசுகளின் மீதான காழ்ப்பில்லாமல் எந்த விஷயமும் வெளிப்படவே இல்லாமல் போனது. இன்னும் சொல்லப்போனால் எழுதப்படுகின்ற அனைத்தும் அழுவாச்சிக் காவியங்களாக மட்டுமே இருந்தது பதிவுலகை விட்டு தள்ளி நிற்க வைத்ததன் முக்கிய காரணமாய் இருந்திருக்கிறது.

தொடர்ச்சியாக அந்த அமைதியும், எதை எழுதுவது என்ற என்ற பதிவு குறித்தான யோசனைகள் எதுவும் செய்ய வேண்டிய தேவையில்லாத அந்த சோம்பேறித்தனமும் மெல்ல ஆட்கொண்டு விட சுகம் பழகி விட்டது. அதுவே இவ்வளவு பெரிய இடைவெளிக்கு காரணமாகி விட்டது.இடைப்பட்ட காலங்கள் திரைப்படங்கள், புத்தகங்கள், கம்ப்யூட்டர் கேம்ஸ், ரௌத்ரங்கள், கண்டனங்கள், என்று நிகழ்வுகளின் பின்னே காணாமல் போயிருக்கிறது. பார்க்கலாம் இனியாயினும் இது சரியாக தொடருமா என்று?

சென்ற வாரம் ஊருக்குச் சென்றிருந்த போது கொங்கு முன்னேற்றப் பேரவையின் பொதுக்கூட்டம் நடந்ததை பார்க்க வேண்டி இருந்தது. பொதுக்கூட்டத்தில் பேசிய பலரும் புதிய பேச்சாளர்கள். மேடைப்பேச்சு குறித்தான அரிச்சுவடி கூட அதில் ஒரு சிலருக்கு தெரியவில்லை என்பதைப் பார்க்க வேடிக்கையாய் இருந்தது.  பேசிய அனைவரும் எடுத்துக்காட்டுகளுக்கு கொங்கு மண்டலத்தை உதாரணமாகச் சொல்லிக் கொண்டிருந்தனர். சில கம்யூனிஸ்டுகளுக்கு எதற்கெடுத்தாலும் சீனா ரஷ்யா என்பதைப் போல இவர்களுக்கு கொங்கு என்பதாகிப் போயிருக்கிறது.

சரி உதாரணம் சொல்றீங்கன்னா அதுக்கு ஒரு அளவு வேணாமா? மேடையில் பேசிய ஒரு பெண் ”உதாரணத்துக்கு எடுத்துக்கிடீங்கன்னா நாங்க கொங்குப் பெண்கள் எல்லாம் பணத்திற்காக எப்போது அடுத்தவரை நம்பியிருக்கக் கூடாதுன்னுட்டு அங்க இருக்கிற தனியார் டீவிக்களில் விளம்பரம் செய்வது, காம்பயரிங் பண்ணுவது, FM ல் பேசுவதுன்னு சொந்தக் காலில் நிக்கிறோமுங்க. நீங்களும் அதையே செஞ்சீங்கன்னா முன்னுக்கு வருவீங்கன்னு”அள்ளி விட்டுக்கிட்டிருந்தார். பேசறது எங்க மேட்டூர் பக்கத்துல இருக்கிற ஒரு சின்ன கிராமத்துல. ஏனுங்க அம்மணி கொஞ்சம் இடம் பார்த்து உதாரணம் சொல்லக்கூடாதா? அங்க உள்ள இருக்கிற பல ஊர்களில் இன்னும் கேபிள் வசதியே சரியா இல்லை. நீங்க என்னடான்னா டீவியில பெசி காசு சம்பாதிங்கறீங்க.

இதையெல்லாம் ஒரு சின்ன முறுவலை உதிர்த்து விட்டு தீர்மானமாய் நகர்ந்து விடலாம். ஆனால் அதைத் தண்டி கோபத்தைக் கிளப்பிய விஷயங்களும் நடந்தது. ஒரு விடுதலைப் போராட்ட வீரனை தனது சாதி வெறியின் பொருட்டு தங்களுக்கான தனிச் சொத்தாய் மாற்றிக் கொண்டிருந்தன அவலத்தை காண்வேண்டிய துர்பாக்கியம் நேர்ந்தது.  தீர்த்தகிரி என்ற தீரன் சின்னமலை எனும் விடுதலைப்போராட்ட வீரன் தான் பிறந்த சமூகம் காரணமாக கொங்கு வேளாளக் கவுண்டர்களிற்கு மட்டுமேயான உதாரண புருஷனாகவும், ரோல் மாடலாகவும் முன்னெடுக்கப்படிருக்கிறார். உண்மையில் இதைவிட மோசமாக அந்த வீரனை வேறு எவ்ரும் அசிங்கப்படுத்தி விட முடியாது. உதாரணத்த்ற்கும், கருத்தில் கொள்வதற்கும் கூட தன் சார்ந்த சமுதாயத்தில் பிறந்த தலைவனையே தேடுவது என்பதை ஓர் முற்றிப் போன சாதி வெறி பிடித்த நோய்க்கூறு மனநிலையாக மட்டுமே என்னால் பார்க்க முடிகின்றது

தொடர்ச்சியாக ஆவேசமாய் ஒருவர் அந்த காலத்தில் இருந்த மாதிரி “ஊர்க்கட்டுப்பாடுகள்” எல்லாம் வந்தால்தான் ஒரு ஒழுக்கமும், கட்டுப்பாடும் இருக்கும் என்ற ரீதியில் பேசியத்தைக் கேட்க நேர்ந்த போது படு கேவலமாய் இருந்தது. கூட்டத்திலிருந்த எவரும் அதற்கெதிராய் சின்ன முக்கல் முனகல் கூட இல்லாமல் பரவச நிலையில் கேட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்த போது “இப்போ எல்லாம் யாரு சார் ஜாதி பார்க்கிறா” என்ற ரீதியில் ஜெ.மோ தளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பேசிய நபர்கள் நினைவுக்கு வந்தனர்.

விவசாயிகள், மண் பாரம்பரியம் உடையவர்கள், 48% வருவாய் ஈட்டித் தருபவர்கள் என்று இவர்கள் பெருமை பேசும் அதே கொங்கு மண்டலம்தான் சாதி தீண்டாமைக்கு அடையாளச் சின்னமாய் இன்றும் நிலைத்து நிற்கும் உத்தப்புரம் சுவரின் மற்றைய வடிவங்களைத் தனக்குள் தாங்கி நின்றுக் கொண்டிருக்கிறது. இன்றும் பெ.தி.க வின் அறிக்கைகளின் படி தனி டம்ளர்களை புழக்கத்தில் வைத்திருக்கும் அதிகளவு டீக்கடைகளை கொண்ட மண்டலமாக இருப்பதிற்கும் சேர்த்து கொங்கு மண்டலம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

தொடர்ச்சியாக இது போன்ற அவலங்கள் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. காமராசர் எப்போதோ நாடார்களின் தலைவராகவும், ராணி வேலு நாச்சியார் தேவர்களின் வீரச் சின்னமாகவும், சமீப காலங்களில் தீரன் சின்னமலையும் கொங்கு வேளாளக் கவுண்டர்களுக்கான தனிச் சொத்தாகவும், ஆக மொத்தம் எல்லா தலைவர்களையும் கூறு போட்டு பிரித்துக் கொள்வதில் சாதி வெறி பிடித்த பல கூட்டங்கள் போராடிக் கொண்டிருக்கின்றன.

முத்துராமலிங்கரை தேவர்களின் பிரதிநிதியாக கொண்டாடுவதில் நாம் ஆச்சர்யம் கொள்ளப் போவதில்லை. தலைவன் எவ்வழியோ, தொண்டர்களும் அவ்வழி என்று சமாதானம் செய்து கொள்ளலாம். ஆனால் காமராசரையும், சின்னமலையையும் இப்படி கொண்டாடுவதன் அனர்த்தங்கள்தான் மிகப்பெரும் எரிச்சலைத் தருகின்றது.

ஆனால் இவர்கள் அனைவருக்கும் சாதி என்ற வார்த்தையை பயன்படுத்துவதில் மட்டும் இன்னும் தயக்கங்கள் மிச்சமிருக்கிறது. ஓட்டுகளுக்காகவோ, அல்லது கூசியோ ”நம்ம சாதி…” என்று பொது மேடைகளில் முழங்குவதில்லை.  மிகக்கவனமாக அதைத் தவிர்த்து சமுதாயம் என்ற முலாம் பூசிய வார்த்தையை கையாண்டுக் கொண்டிருக்கின்றனர். கெட்டவார்த்தைகளாக்கப்பட்டு விட்ட வார்த்தைகளின் அணிவகுப்பில் தொடர்ச்சியாக இந்த ”சமுதாயம்” என்ற வார்த்தையும் சேர்ந்திருக்கிறது. இனி வரும் காலங்களில் இது எப்படி வேண்டுமானாலும் உருமாற்றம் அடையலாம்.

இன்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளாம். செய்த குற்றங்கள் மறைக்கப்பட்டு இந்தியாவை ஒளிர வைத்தவர், எவர்க்கும் அஞ்சாதவர், சிறுபான்மையினருக்காகவும், ஏழைகளுக்காக்வும் பாடுபட்டவர் என்றெல்லாம் செய்தித்தாள்களிலும், போஸ்டர்களிலும் அங்காங்கே சிரித்துக் கொண்டிருக்கிறார்.

சில விஷயங்களில் காலமும், மாறதியும் ஒரு மிகப்பெரிய வரம். ஆனால் தான் வாழ்ந்த காலங்களில் செய்த தவறுகள் மறைக்கப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக புனித பிம்பமேற்றி சாதாரண மனிதரை ஒரு மாபெரும் தலைவனாக கட்டமைக்க முற்படும் ஊடகங்களும், அரசியல்வாதிகளும் இருக்கும் நாட்டில் காலமும், மறதியும் ஒரு மிகப்பெரிய சாபக்கேடு.

ஃபோபர்ஸ் ஊழல், போபால் பிரச்சினை, ஆண்டர்சனின் கைக்கூலியாகச் செய்ல்பட்டது, ”ஆலமரம் சாயும் போது பூமியில் அதிர்வுகள் ஏற்படத்தான் செய்யும்” என்ற மாபெரும் மனித நேயப் பார்வை, ஈழத்து மக்களை வேட்டையாடிய IPKF ஐ அனுப்பிய புண்ணியம், ஷா பனோ கேஸில் எடுத்த கோழைத்தனமான முடிவு என்று அவரின் மற்றொரு முகத்தையும் அவ்வப்போது எவரேனும் சுட்டிக்காண்டிருக்க வேண்டிய தேவையும் இருக்கிறது.

ஆளும் அரசுகளுக்கு ஆதரவாக வறட்டு ஜால்ரா சத்தங்கள் அதிகமாகிக் கொண்டிருக்கும் இந்த கட்டத்தில், செத்தவங்களைப் பத்தி தப்பா பேசக் கூடாது என்ற தேவையற்ற பழக்கங்களும், சராசரி மனிதர்களின் இயல் குணமான சிவப்பு தோலைப் பார்த்து மரியாதை கொண்டிருக்கும் பல கிராமத்து வெள்ளந்தி மக்களும் நிறைந்துள்ள சமுதாயத்தில் இதை செய்ய வில்லையெனில் அடுத்த தலைமுறையோ அல்லது அதற்கடுத்த தலைமுறையோ ”கூடிய சீக்கிரம் ராஜீவ்காந்தி ஆட்சி அமைப்போம்” என்ற கோஷத்தைக் கேட்க நேரிடும்.என்னைப் பொறுத்த வரை இன்னொரு முறை எம்மக்களுக்கு அந்த துர்பாக்கிய நிலை ஏற்பட வேண்டாம்.

மக்களின் பிரச்சினைகளை கலைஞர் அரசு எதிர் கொள்ளும் விதம் அதிமுக விற்கு சற்றும் சளைக்காமல் இருக்கிறது. இன்றைய நாளில் நம்முன்னே முக்கிய பிரச்சினையாய் இருப்பது பாதிக்கப்பட்ட ஒரு மக்கள் கூட்டம் தங்களது எதிர்ப்பு உணர்வை எந்த அறவழிப்போராட்டத்தின் மூலம் காண்பிப்பது என்பதே.

எதிர் பிரச்சாரம் செய்த மாணவர்கள் கைது, உண்ணாவிரதம் இருந்த தோழர்கள் மீது தடியடி, விமர்சனம் செய்த பத்திரிக்கையாளர் கைது, அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்திய மனித உரிமைகள் அமைப்பின் உறுப்பினரும்,சட்டக்கல்லூரி மாணவருமான அசோக்குமார் மீதான வெறி பிடித்த காவல் துறையின் சித்திரவதைகள், வசவுகள்… இப்படி பல விஷயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஒரு பக்கம் அறவழிப்போராட்டங்களைக் கூட இரும்புக்கரம் கொண்டு அடக்க நினைக்கும் அரசாங்கமும், காவல் துறையும். மறு புறம் மறியல், உண்ணாவிரதப் போராட்டங்களைக் கூட “பொதுமக்கள் அவதி, இயல்பு வாதிக்கை பாதிப்பு” என்ற தலைப்புகளின் மூலம் பிரச்சினையை திசை திருப்பும் ஊடகங்கள். இந்த மோசமான சூழலுக்கு நடுவேதான் ஜனநாயகமும் நீதியும் காப்பாற்றப்படுவதாக கலைஞர் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

இலங்கை – மெல்ல தமிழ் இனி…
ஒரு பெரும் இரைச்சலுடன் அந்த விமானம் வந்து நிற்கின்றது. வானத்திலிருந்த இறந்கி வரும் தேவ தூதனைப்போல வெள்ளை உடை அணிந்த அந்த மனிதர் கதவுகளைத் திறந்து, அமைதியாக இறங்கி வருகிறார். ஒரு பெரும் சாதனையாளரைப்போல அதே சமயம் தன்னடக்கத்துடன் இருப்பவரைப் போல அவர் தனது முகத்தை வைத்துக் கொள்கிறார்.

விமானத்தின் படிக்கட்டுகளில் மெல்ல இறங்கி வந்த அந்த மனிதரின் கால்கள் தரையில் பட்டதும் அப்படியே மெல்ல மண்டியிட்டு அமர்கின்றார். முட்டியிட்டு, நெற்றி நிலத்தில் பட தனது மண்ணை வணங்கிய அவர், தன்னைச் சுற்றி இருப்பவர்கள் ஆராவாரம் செய்ய மெல்ல எழுந்து புன்னகை செய்தவாறே தனது கூட்டத்துடன் செல்கின்றார்.

மேற்குறிப்பிட்ட அனைத்தும் ஸ்லோமோஷனில் நடந்து கொண்டிருக்கும் இந்தக் காட்சியமைப்பு மட்டும் ஏதேனும் திரைப்படத்தில் காண்பிக்கப்பட்டிருந்தால், பார்வையாளர்களாகிய நாம் அனைவரும், “க்ளைமாக்ஸ்ல பிச்சு உதறிட்டாண்டா மாப்ளை” என்று  உணர்ச்சி வசப்பட்டு போய் இருப்போம். பரவசத்தில் நமது கைகளின் ரோமங்கள் குத்திட்டு நிற்க எழுந்து நின்று கைகளை தட்டி விட்டு திரையரங்கை விட்டு சந்தோசமாய் வெளியே வந்திருப்போம்.

ஆனால் மேற்குறிப்பிட்ட காட்சிகள் காண்பிக்கட்டது திரைப்படத்திலும் அல்ல. வெள்ளை உடை அணிந்த அந்த மனிதன் தேவதூதனும் அல்ல. லட்சக்கணக்கான தமிழ் மக்களை அழித்த, பல்லாயிரக் கணக்கான பெண்களின் வாழ்க்கைய அலங்கோலப்படுத்திய, இன்னும் மூன்று தலைமுறைகளுக்கு ஒரு இனமே எழுந்த வர முடியாத படி படுகுழியில் தள்ளிய ஒரு மாபெரும் கூட்டத்தின் தலைவன் அவன். மஹிந்த ராஜபக்ஷே.

Rajapakshe

விடுதலைபுலிகளை தீவிரவாதிகள் என்று சொல்ல எவர் ஒருவருக்கும் முழு உரிமைகள் இருக்கின்றது. ஏனெனில் புலிகளின் தாக்குதலில் பல அப்பாவிகள் பலியாகியுள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் புலிகளை தீவிரவாதிகள் என்று தூற்றுகின்ற வாய்கள் இனவெறி இலங்கை அரசாங்கத்தை மட்டும் எதிர்த்துப் பேச மறுக்கும் கையாலாகாத் தனத்திற்கு மட்டும் இன்று வரை எந்த ஒரு இலங்கை ஆதரவாளரிடமிருந்தும் பதில் இல்லை.

ஆயுதம் தாங்கி எதிர் போராட்டம் நடத்தும் எந்த ஒரு அமைப்பையும் தீவிரவாதிகளாக பார்க்க நமக்கு கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அரசாங்கம் என்ற லேபிளின் கீழ் கொலைக் குற்றங்களை புரிபவன் மட்டும் தியாகியாக, தேவதூதனாக, நாட்டைக் காக்க வந்த சரித்திர நாயகனாக நமக்கு அடையாளம் காட்டப் படுகின்றான். இதோ இன்று இன்னும் ஒரு சரித்திர நாயகன் உருவாகி இருக்கின்றான். நாளைய வரலாறு இனி இவன் குறித்து மெல்ல புகழ் பாட ஆரம்பிக்கலாம்.

கோவி.லெனின் அவர்கள் எழுதிய கவிதையின் ஒரு பகுதியை இங்கே சொல்ல விரும்புகின்றேன்,

அதிகாரத்தின் சொற்களால்

கட்டமைக்கப்பட்ட

ஊடகங்களின் மொழியை

உள்வாங்கி

என்மொழியாய் வெளிப்படுத்தும்

அநேகர்களில் நானும் ஒருவன்.

அரண்மனைகளின் பீரங்கி

பாதுகாப்பானதென்றும்

குடிமக்கள் ஏந்தும் துப்பாக்கி

பயங்கரமானதென்றும்

சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது எனக்கு.

எவர் ஆதரவுமற்று

எந்த உதவியுமின்றி

சொந்த மண்ணில்

போராடுபவன்

தீவிரவாதி.

அண்டை அயலார்

துணைகொண்டு

அதிகார வெறியின்

மேல் நின்று

இனஅழிப்புச் செய்பவன்

தேசம் காப்போன்.

உலகத்தின் அகராதியில்

புதுப்புது அர்த்தங்களால்

மலிகின்றன பிழைகள்.

மடிகின்றன உயிர்கள்.

இன்னும் ஒரே ஒரு விஷயம் மட்டுமே எங்களை எதிர்பார்ப்புடன் வைத்திருக்கின்றது. இனியும் நீங்கள் புலிகளின் பெயர்களைச் சொல்லி தமிழ் மக்களின் உயிர்களை பறிக்க முடியாது என்ற ஒரே ஒரு எண்ணம் மட்டுமே, அங்கே எங்கள் உறவுகள் அடுத்து விடும் மூச்சுக் காற்றுக்கு ஆதாரமாய் இருக்கின்றது.

யாருக்குத் தெரியும்? எந்த ஒரு ஊடகத்திற்கும் அனுமதியை மறுத்து, உலகத்தின் கண்களிலிருந்து மறைந்து நின்று இத்தனை நாட்களாய் படுகொலைகள் செய்து கொண்டிருந்த போது வேடிக்கை பார்த்த உலக நாடுகளும், ஐ.நாவும், இலங்கை அரசு இனி இதைத் தொடர்ந்தால் மட்டும் கேட்டு விடவா போகின்றன?

மிச்சமிருக்கும் நம் கொஞ்ச நஞ்ச மனித நேய உணர்வுகளாவது இனி சாகாமல் இருக்கட்டும்.

வீர் சாவர்க்கர் – இலந்தை ராமசாமியின் புத்தகம் குறித்தான ஓர் அவசியமான விமர்சனம்
முன் குறிப்பு: வரலாற்று ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் என்று தன்னைச் சொல்லிக் கொள்பவர்கள் எவர் மீதும் இரண்டு காரணங்களுக்காக கண் மண் தெரியாமல் கோபம் கொள்ளலாம்.

1.வரலாற்றைத் திரித்தல். (பொய்களை பிரச்சாரப்படுத்துதல்)

2.புனித பிம்பப்படுத்துதல். (சில உண்மைகளை மட்டும் சொல்லாதிருத்தல் அல்லது தவறுகளை மறைத்தல்)

விநாயக் தாமோதர் சாவர்க்கர். தனது வாழ்க்கையில் மாபெரும் திருப்பங்களையும், குழப்பங்களையும் கொண்டவர். பின்னாளைய தலைமுறைக்கு இன்று வரை சரியாக அடையாளம் காட்டப்படாத ஓர் மனிதர்.

ஒரு பக்கச் சரித்திரம் இவரை தன்னிகரில்லா வீரத்தின் மொத்த உருவமாயும், பகத்சிங் போன்ற மாபெரும் புரட்சியாளர்களிற்கு இணையானவராகவும், பிரிட்டிஷார்கள் இவரைக் கண்டாலே நடுங்கும் அளவிற்கு பயந்திருந்தார்கள் என்றும், சிறந்த பேச்சாளர்,தன் கண்ணசைவிற்குக் காத்திருக்கும் ஓர் பெரும் சீடர் படைகளைக் கொண்டவர் என்றும் பல்வேறு விதமாய் இவர் புகழைத் தொடர்ந்துப் பாடிக் கொண்டிருக்கிறது.

ஆனால் இன்னொரு பக்கம் இவர் குறித்து தீவிர விமர்சனங்களும், குற்ற்ச்சாட்டுகளும் தொடர்ந்து வீசப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது. காந்தியடிகளின் கொலையில் மிகப்பெரும் பங்கு வகித்தவர், பிரிட்டிஷாரிடம் தொடர்ச்சியாய் மன்னிப்புக் கடிதங்கள் எழுதி மன்றாடியவர், இந்து மகாசபையைத் தோற்றுவித்து முஸ்லீம்களின் மீதான துவேஷத்திற்கு தொடர்ந்து பங்காற்றியவர், பல இளைஞர்களை தவறான பாதைக்கு வழிக்காட்டியவர் என்று இவர்மீதான மாற்று வரலாற்றுப் பார்வையும் முன்வைக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது.

இந்த சூழலில் கிழக்கு பதிப்பகம் மூலம் இலந்தை.சு.ராமசாமி அவர்களால் எழுதப்பட்ட வீர் சாவர்க்கர் புத்தகத்தை நான் படிக்கத் தொடங்கும் முன்பு என்னுள் பல்வேறு எதிர்பார்ப்புகள், கேள்விகள் இருந்தன. குறிப்பாய் வீர் சாவர்க்கரைப் பற்றி பல்வேறு தமிழ் மக்களால் விரும்பி படிக்கப்படும் கிழக்கு பதிப்பகம் எப்படிப்பட்ட வரலாற்றை முன்வைக்கப் போகின்றது என்ற பெரிய கேள்வி என் முன்னால் இருந்தது.

எடுத்த எடுப்பிலேயே சொல்லி விடுகிறேன். புத்தகத்தை படித்து முடித்ததும் நான் அடைந்த ஏமாற்றத்திற்கு அளவே இல்லை. சமீப காலங்களில் என்னை இந்தளவிற்கு கோபப்படுத்திய புத்தகம் வேறெதுவும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

புத்தகத்தின் முன் அட்டையில் இவ்வாறு போட்டிருக்கிறது. “தேசபக்தர். இந்து தீவிரவாதி. இஸ்லாமியர்களின் விரோதி. தீண்டாமையை ஒழிக்கப் பாடுபட்டவர். நிஜத்தில் யார் இந்த சாவர்க்கர்? அழுத்தம் திருத்தமாக பதில் சொல்கிறது இந்தப் புத்தகம்.” உண்மைதான் மிக அழுத்தமாய் இதைப் படிப்பவர்கள் மனதில் வீர் சாவர்க்கர் மீது ஒரு ஹீரோ வொர்ஷிப்பை ஏற்றி வைக்க அரும்பாடு பட்டிருக்கிறது இந்தப் புத்தகம்.

“படைப்பு உருவான பின்பு படைப்பாளி இறந்து விடுகிறான்” என்பதெல்லாம் வெகு நிச்சயமாய் இது போன்ற படைப்புகளிற்கு பொருந்தாது. ஏனெனில் இந்த நூலில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு சம்பவங்களும், சொல்லப்படுகின்ற காரணங்களும் முழுக்க முழுக்க படைப்பாளியின் கண்ணோட்டத்தின் வழியாகத்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு சில விஷயங்களைப் படிக்கும் போதே கூட “சாவர்க்கர் தவறு செய்து விட்டாரே” என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தாலும் அதற்கு சால்ஜாப்பாக தொடர்ச்சியாய் சில காரணங்களை சொல்லி சொல்லி தவறை இருட்டடிப்போ அல்லது நியாயப்படுத்தியோ சென்று வ்டுகிறார் ஆசிரியர்.

கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்கள் குறித்து ஒரு வருத்தம் ரொம்ப நாளாகவே எனக்கு உண்டு. அது பதிப்பகத்தின் டெம்ப்ளேட் எழுத்து முறை.

நான் ஃபிக்ஷன் வகை எழுத்துக்களை எழுதும் போது ஏதோ ஃபிஷன் வகை கதையை எழுதுவது போன்றதான எழுத்தாடல்கள், திடுக்கிடல் திருப்பங்கள், கதாநாயகன் அறிமுகத்தின் போது கொடுக்கும் பில்டப்புகளைப் போன்ற அறிமுகங்கள் போன்றவற்றைப் பற்றிச் சொல்லலாம்.

(உதாரணத்திற்கு இந்த புத்தகத்தில்: ஒரு காவலர் அவரை கைத்தடியால் பின் மண்டையில் தாக்கினார். சாவர்க்கர் சட்டென்று சுழன்று அதைக் கையால் பிடித்துக் கொண்டு சொன்னார். “நான் சாவதற்கு அஞ்ச வில்லை. ஆனால் நீங்கள் என்னைக் கொல்ல நினைத்தால் உங்களில் ஒருவனையாவது கொன்று விட்டுத்தான் சாவேன்” என்று சொன்னார்)

இது போன்ற பல உதாரணங்களைச் சொல்லலாம். இது போன்ற, ஏதோ சம்பவங்களை அருகிலிருந்து பார்த்தது போல் எழுதப்படும் எழுத்துக்கள் ஒரு மசாலா படம் பார்ப்பது போன்ற உணர்வைத் தருவது மட்டுமின்றி சம்பவங்களின் மீதான ந்ம்பகத் தன்மையை முற்றிலுமாய் குறைக்கின்றது.

ஆனால் இது முழுக்க முழுக்க எழுத்தாளர் மற்றும் பதிப்பகத்தின் தனிப்பட்ட உரிமை என்பது மறுக்க முடியாத உண்மை. அதேசமயம் அமெச்சூர் வாசகனை திருப்தி செய்ய வேண்டிய கட்டாயமாய் கூட இருக்கலாம். ஆகையால் இதை ஒரு குற்றச்சாட்டாய் இல்லாமல் தனிப்பட்ட ஒருவனின் கருத்தாய் பதிவு செய்கின்றேன்.

சாவர்க்கர் குறித்தான இந்த புத்தகமும் கிழக்கு பதிப்பகத்தின் டெம்ப்ளேட்டிலிருந்து சற்றும் அடி பிறழாமல் எழுதப்பட்டதே.

வரலாற்றுச் சம்பவங்கள் நிறைந்த புத்தகத்தை எழுதும் போது ஆதாரத்திற்காய் உபயோகப்படுத்திய தரவுகளை புத்தகத்தின் ஏதேனும் ஒரு சிறு மூலையிலாவது குறிப்பிட்டிருந்திருக்கலாம். வீர சாவர்க்கர் குறித்தான இந்த புத்தகம் என்றில்லை கிழக்கின் பல புத்தகங்களில் இது இல்லவே இல்லை.

ஆனால் மேற்குறிப்பிட்ட அனைத்தும் ஒரு சாதாரண விஷயங்களே. இதற்காக நான் கோபம் கொள்கிறேன் என்றால் அது ஓவர் ரியாக்ட் செய்வது போல் இருக்கும். என்னுடைய அடிப்படை கேள்வி இந்தப் பிரதியின் மூலம் எழுத்தாளர் தனது வாசகனுக்கு எதை உணர்த்த விரும்புகிறார் என்பதே?

சாவர்க்கரைப் பற்றி சுருக்கமாய் சொல்ல வேண்டுமென்றால் அந்தமான் சிறைக்கு செல்லும் வரை இருந்த சாவர்க்கர் மட்டுமே வீர் சாவர்க்கர். அதற்குப் பின்பு நடமாடிய சாவர்க்கர் முற்றிலும் வேறு மனிதர். இந்தியாவில் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கும் மத துவேஷங்களுக்கு வித்திட்டதில் தெரிந்தோ தெரியாமலோ அவருக்கும் பங்கிருக்கிறது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அவர் ஆற்றிய பணிகளை, துணிச்சலான நடவடிக்கைகளை போற்ற வேண்டியது எப்படி நம் கடமையோ, அதே போல அந்தமான் சிறையில் கோழைத்தனமாய் அவர் பிரிட்டிஷாரிடம் கெஞ்சிய மன்றாடல்களை, காந்தியடிகள் கொலையில் அவருக்கிருந்த பங்கினை (நேரடியாகவோ, மறைமுகமாகவோ), இந்து மகா சபையின் மூலமும், தனது தொடர் பிரச்சாரங்களின் மூலம் மக்களின் மனதில் அவர் விதைத்த மதத் துவேஷங்களை இடித்துரைப்பதும் நம் கடமையே.

ஆனால் இந்த புத்தகம் வாசகனுக்குள் விதைப்பது என்ன? “தேசபக்தியில் அவரது உயரத்தை எட்டிப்பிடித்தவர்கள் மிகக் குறைவு. சூரியனை மேகம் மறைப்பதால் சூரியனுக்குக் குறைவில்லை” என்பது போன்ற வாசகங்களும், புத்தகத்தின் இறுதியில், “இமயமலையின் சிகரங்கள் வெளியே தெரிவதில்லை என்பதற்காக சிகரங்கள் இல்லை என்று சொல்லி விட முடியுமா? சிகரம்தான் சின்னதாகப் போய்விடுமா? சிகரத்தை நோக்கிக் கை கூப்புவோம். அந்த மரியாதையையாவது செய்யக் கற்றுக் கொள்வோம்” என்ற இறுதி வரிகளும் வாசகனுக்கு எப்படிப்பட்ட பிம்பத்தை தோற்றுவிக்கிறது என்பது முக்கியம் அல்லவா?

சாவர்க்கர் குறித்தான தீவிர விமர்சனம் எழுப்ப வேண்டிய பகுதிகளில் எல்லாம் ஆசிரியர் விமர்சனத்திற்குப் பதிலாக சால்ஜாப்புக் காரணங்களை மட்டுமே அடுக்குகின்றார். ஒரு இடை நிலை வாசகன் வெகு எளிதாய் “பாவம்பா அவரு மட்டும் என்னதான் செய்வார்” என்பது போன்ற பிம்பத்தை வெகு எளிதில் ஏற்படுத்திக் கொள்ள தீவிர  முயற்சி செய்திருக்கிறார்.

அந்தமான் சிறையிலும், ரத்னகிரி சிறையிலும் இருந்த வார்டன்கள் அனைவரும் முஸ்லீம்கள். அவர்களால் அந்தமானில் அனைத்து இந்துக் கைதிகளும் கடும் துன்பப் பட்டார்கள். அதனாலேயே சாவர்க்கர் பெரும் மன மாற்றம் அடைந்தார் என்ற கருத்தை கொஞ்சம் கொஞ்சமாய் வாசகர்களுக்கு ஏற்றுகிறர் ஆசிரியர். ஆனால் அந்தமான் சிறையில் இருந்த வேறு எந்தக் கைதிகளும் இத்தகைய மன மாற்றத்தை அடைந்திருக்க வில்லை. அது மட்டுமல்லாமல் அந்தமான் சிறையின் புகார் பதிவேடுகளில் அது போன்று ஒரு குற்றச்சாட்டும் காணப்பட வில்லை.

“ஆயுள் காலத்திற்கு நாடு கடத்தப்பட்ட என் கதை” சாவர்க்கரால் 1927ல் வெளியிடப்பட்ட சுய சரிதை. இவரே 1908ல் “முதல் இந்திய சுதந்திரப் போர் – 1857″ என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார். இந்த இரண்டு புத்தகங்களுக்கு நடுவேதான் எத்தனை எத்தனை வித்தியாசம்.இந்து முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தி இந்தப் புத்தகத்தில் எழுதிய அதே சாவர்க்கர், தனது சரிதையை எழுதும் போது முஸ்லீம்களுக்கெதிரான துவேஷங்களையும், விரோதப் போக்கையும் விதைக்கிறார்.

முதல் உலக்ப்போரில் இங்கிலாந்திற்கு எதிராக துருக்கியும் ஜெர்மனியும் இணைந்ததை தனது எதிரிக்கு எதிரான குழுவாய் அவரால் காண முடிய வில்லை. அதை அவர் முஸ்லீம்கள் ரஷ்யாவின் உதவியுடன் இந்தியாவிற்கு வந்து கொள்ளையடிக்கும் முயற்சியாக பார்க்கிறார். மதாபிமானம் ஒரு மனிதனின் தேச பக்தியை எவ்வாறு நீர்த்துப் போகச் செய்து விடுகிறது என்பதை அவர் வாழ்ந்து காட்டி இருக்கிறார்.

இந்தியா சுதந்திரம் அடைந்த அன்று, இந்தியா முழுக்க தேசிய கொடியை ஏற்றிக் க்ண்டாடிக் கொண்டிருந்த அந்த தருணத்தில், தனது வீட்டில் இந்து மகாசபையின் கொடியை ஏற்றி வைத்து இந்தியக் கொடியை முற்றிலும் நிராகரித்தவர் சாவர்க்கர். தனது புத்தகத்தில் அதற்குக் பக்கம் பக்கமாய் காரணங்களை அடுக்கியவர். மதாபிமானத்தால் அவர் செய்த இந்த செயல்கள் குறித்து புத்தகத்தில் எங்கும் மருந்துக்குக் கூட கோடிட்டுக் காட்டப்பட வில்லை.

சாவர்க்கர் 1911 ஆம் ஆண்டு ஜூலை 4 அன்று அந்தமானுக்குக் கொண்டு வரப்பட்டார். அவரது உடல் நிலை நலிவடையத் தொடங்கியது 1915 – 16 க்கு மேல்தான். மிக மோசமாகத் தொடங்கியது 1918ல் தான். ஆனால் சாவர்க்கர், தான் சிறைக்கு கொண்டுவரப்பட்ட அந்த ஆண்டிலேயே (1911) முதல் மன்னிப்புக் கடிதம் / மனுவை எழுதி இருக்கிறார்.

1911 அக்டோபரில் முதல் கடிதம், 1912 டிசம்பர் 15 அன்று இரண்டாவது கடிதம், 1913 – நவம்பரில் ஒன்று, 1914 – பிப்ரவரியில் ஒன்று, இன்னும் 1915… 1918 என்று அவர் தொடர்ந்து முயற்சி செய்திருக்கிறார். ஆனால் இந்தப் புத்தகத்தில் வசதியாக தேவைப்படும் இடங்களில் வெறுமனே வருடங்களை குறிப்பிடாமல் இருப்பதன் மூலமும், அவர் உடல் நிலை மோசம் என்று காரணங்களை அடுக்குவதன் மூலமும் எழுத்தாளர் சாவர்க்கர் மீதான புனித பிம்பம் கலைந்து விடாதவாறு பார்த்துக் கொள்கின்றார்.

இன்னும் பிரிட்டிஷாருக்கு அவர் எழுதிய கடிதங்களை அப்படியே நான் இங்கு பிரசுரித்தால் படிக்கும் எவருக்கும் அவர் எந்தளவு தரம் தாழ்ந்து போகத் தயாராயிருந்தார் என்பதை எளிதில் இனம் கண்டு கொள்ள முடியும். சாவர்க்கரின் வரலாறை எவர் ஒருவர் எழுதினாலும் இந்த கடிதங்களை படிக்காமல் இருந்திருக்க மாட்டார்கள். ஆனால் ஆசிரியர் வசதியாக இந்த வாசகங்கள குறித்தான எந்த ஒரு சிறு குறிப்பையும் வாசகனிற்கு தெரியப்படுத்தவே இல்லை. புனித பிம்பத்தைக் கட்டிக் காப்பாற்றுவதில் மீண்டும் ஒரு முறை இங்கே வெற்றி பெற்றிருக்கிறார்.

அந்தமான் சிறையில் மற்ற கைதிகளை தூண்டி விட்டு வேலை நிறுத்தத்தை தூண்டி விட்ட சாவர்க்கர் தான் அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளவே இல்லை. அதற்குக் காரணமாய் அவருக்கு அவர் மனைவியிடமிருந்து கடிதம் வர வேண்டி இருந்தது. இதில் கலந்து கொண்டால்  அவருக்கு அந்த கடிதம் கிடைக்காது. பாவம் என்று சாவர்க்காரின் மனசாட்சியாகவே இருந்து பதில் தருகிறார் ஆசிரியர்.

ஆனால் அதே போராட்டத்தில்தான் 60 வயது முதியவர் சீக்கிய அரசியல் கைதி சர்தார் சோஹன் சிங், பிரித்வி சிங் என்ற இளைஞனும் 12 நாட்களுக்கும் மேலாக, உண்ணாவிரதம் இருந்து தனது வீரத்தை, புரட்சித் தன்மையை நிரூபித்திருக்கிறார்கள்.ஆனால் வரலாற்றுப் பாடங்களில் அவர்களின் சுவடுகளை தேடித்தான் கண்டு பிடிக்க முடிகின்றது.

சாவர்க்கர் மீதான உச்சகட்ட விமர்சனமே காந்தியடிகள் கொலையில் அவரது பங்குதான். ஆனால் கோட்சே தன் வாக்கு மூலத்தில் சாவர்க்கருக்கும், இந்தக் கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லி விட்டான் என்ற ஒற்றை வரியின் மூலம் எல்லா குற்றச்சாட்டுக்களையும் புறம் தள்ளுகிறார் ஆசிரியர். அது மட்டுமின்றி தொடர்ந்து நடந்த கலவரத்தில் அவரது சகோதரர் தாக்க்கப்பட்ட தகவல்களையும் தேவைக்கும் அதிகமான அளவில் பதியச் செய்வதன் மூலம் ஏற்படும் சிறு சந்தேக உணர்வையும் அனுதாப உணர்வாய் மாற்றுவதன் மூலம்  ஆசிரியர் தனது எழுத்து அரசியலை தொடர்ந்து கடை பிடித்திருக்கிறார்.

ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ், பிஜேபி போன்ற இந்துத்வா அமைப்புகள் மாறி மாறி தன் பங்குக்கு இவரை புனித பிம்பப்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. அந்தமானில் இவரது நினைவுச் சின்னங்களை வைத்து அத்வானி போன்றவர்களால் நடத்தப்பட்ட அரசியல் விளையாட்டுக்கள், முரளி மனோஹர் ஜோஷி போன்றவர்களால் சாவர்க்கரின் இன்னொரு முகம் தெரியாத படி “சுதந்திரப் போராட்ட நூல் வரிசைகள்” மீதான தடை என்று இந்த திருவிளையாடல்களை பெரிய பட்டியலே இடலாம்.

இந்த சூழலில் வந்திருக்கும் இப்புத்தகம் பல வரலாற்றாசிரியர்கள் தெரிந்தே செய்த புனித பிம்பப் படுத்துதலை தொடர்ந்து செய்கிறது. எழுத்தாளர்களின் சார்பு அரசியலை விரும்பாத, மிகைப்படுத்தி எழுதப்படும் வரலாறுகளை விரும்பாத எந்த ஒரு வாசகனுக்கும் இந்த புத்தகம் வெகு நிச்சயமாக சிறிதளவேனும் கோபத்தை ஏற்படுத்தும்.

ஒட்டு மொத்த புத்தகத்தில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் எழுத்துப் பிழை தட்டுப்பட்டது. புத்தக அட்டை வடிவமைப்பு, பேப்பர் தரம், எழுத்துருக்கள், ஸ்பேசிங் என்று அச்சு ஊடகத்தில் புதியதோர் பரிணாம வளர்ச்சிக்கு வித்திட்ட கிழக்குப் பதிப்பகத்தை எனக்குப் பிடித்திருப்பதற்கு எழுத்தாளனுக்கான ராயல்டி நேர்மை, மார்க்கெட்டிங், துவண்டிருந்த அச்சு ஊடகத்தை உயிர்த்தெழச் செய்ததில் கிழக்கின் பங்கு என்று தனிப்பட்ட முறையில் என்னிடம் பல காரணங்கள் இருக்கின்றன.

கிழக்கு பதிப்பகத்திடம் நான் கேட்டுக் கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். உங்களது அடுத்த புத்தகத்தில் எழுத்துப் பிழைகளைச் சரி பார்க்கிறீர்களோ இல்லையோ, தயவு செய்து கருத்தியல் பிழைகளைச் சரி பாருங்கள்.

நூலின் பெயர் : வீர் சாவர்க்கர்

நூல் ஆசிரியர் : இலந்தை சு.ராமசாமி

விலை : ரூ.80

பக்கங்கள் : 200

வெளியீடு : கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் சாலை,

ஆழ்வார்ப்பேட்டை, சென்னை – 600 018.

தொலைபேசி : 044-42009601/03/04

தொலைநகல் : 044-43009701

நூலினை ஆன்லைனில் வாங்க இங்கே சொடுக்கவும்.

ஆதாரத்திற்காய உபயோகப் படுத்தப் பட்டவை:

http://www.savarkar.org

http://en.wikipedia.org/wiki/Vinayak_Damodar_Savarkar

சாவர்க்கரும் இந்துத்துவமும் – ஏ.ஜி.நூரணி

காந்தி படுகொலை – பேசப்படவேண்டிய உண்மைகள் – பேராசிரியர்.கே.ராஜூ

Freedom at Midnight

Pdf and Video Footages of Indian Freedom Struggles.

கொளத்தூர் மணி அவர்களின் பேச்சு – இறுதி
இதன் முந்தைய பகுதி

ஒரே ஒரு பொற்கோயிலுக்குள் நுழைந்ததற்காக, இந்திரா காந்தியை சுட்டுக் கொன்றது நியாயம் என்று இன்றளவும் சீக்கிய சமுதயம் சொல்லி வருகின்றது. சுட்டுக் கொன்றவர்களை தியாகிகள் என்று சொல்லுகின்றார்கள். சத்வந்த் சிங், பீந்த் சிங் என்று இருவர் சுட்டுக் கொல்கின்றனர். பீந்த் சிங் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் சத்வந்த் சிங்கும், அவருக்கு உடந்தையாக இருந்தவரும் கைது செய்யப் பட்டு அவர்கள் இருவரும் கைது செய்யப் படுகின்றனர்.

உடனே சீக்கிய மத பீடம் அறிவிக்கின்றது. அவர்கள் மூவரும் தியாகிகள் என்று. அவர்கள் குடும்பத்தை தங்கள் பொறுப்பில் இன்று வரை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் சுட்டுக் கொல்லப்பட்ட பீந்த் சிங்கின் மனைவி தேர்தலில் நிற்கிறார். காங்கிரசைத் தவிர வேறு எவரும் அவரை எதிர்த்துப் போட்டியிட வில்லை. கமல் கவுன் ஹௌசா என்ற அவரது மனைவி போட்டியிய்யு 5,40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். காங்கிரஸ்காரனுங்க வாங்கின் ஓட்டு வெறுமனே ஐம்பதாயிரம்தான். இன்று வரை இந்திய வரலாற்றில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்ற சாதனைக்குச் சொந்தக்காராராய் இருகிறார்.

அவர் ராஜீவ் காந்திக்கு எதிராக ஐந்து ஆண்டுகள் நாடாளுமன்றத்தில் அமர்ந்துதான் இருந்தார். இன்றளவுக்கும் அவர்கள் மூவரும் தியாகிகளாய் போற்றப்படுகிறார்கள். ஆண்டுதோறும் ந்டக்கும் வைசாகி திருவிழாவில் அவர்களாது படங்கள் வைத்து வணங்கப்படுகின்றது. ஆக சீக்கிய மக்கள் இது தவறு என்று இம்மியளவும் கருத வில்லை. இவ்வளவிற்கும் பின்னாலும் ராஜீவ் காந்தி, ராகுல் காந்தி, சோனியா,மன்மோகன் சிங், ஜெயில் சிங் உள்ளிட்ட அமைத்து காங்கிரஸ் தலைவர்களும் நெடுங்காலமாக தொடர்ந்து மன்னிப்பு கேட்டுக் கொண்டே வந்திருக்கின்றார்கள்.

கொன்றது குற்றம் இல்லை. அது நியாயம் தான் என்று சொன்னவர்களிடம் நீங்கள் தொடர்ந்து மன்னிப்பு கேட்கிறீர்கள். நாங்கள் தான் துன்பியல் நிக்ழவு என்று சொல்லி இருக்கிறோமே எங்களுக்கு நீங்கள் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள். அதை அவர்கள் செய்தார்களா என்று தெரிய வில்லை. என்னுடைய கருத்து, செய்திருந்தால் உங்களைப் பாராட்டுகிறோம். செய்யாவிடின் கண்டிக்கிறோம். ஏனெனில் நீங்கள்தானே ஈழத்து மக்களுக்கு பாதுகாப்பு.உங்கள் மக்களின் மீதான படுகொலைகளுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது உங்கள் கடமைதானே.எனவேதான் சொல்கிறேன். நீங்கள் செய்யாதிருந்தால் உங்களை கண்டிக்கிறேன். செய்திருந்தால் பாராட்டுகிறேன்.

22 வருடங்கள் கழித்து இப்போதுதான் 1987 ஒப்பந்தத்தைப் பேசுகிறீர்கள். அதுவும் அரசியல்வாதிகள் பேச வில்லை. சிவசங்கரமேனன் எனும் அதிகார் பேசுகிறார். நாங்கள் கேட்டதும் அதேதானே. ஒப்பந்தத்தை ஒழுங்காக நிறைவேற்றுங்கள் என்று சொல்லிதானே திலீபன் அவர்கள் உண்ணாவிரதம் இருந்து அறவழியில் போராடி தனது உயிரை மாய்த்துக் கொண்டார். எனில் ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்தத் தவறிய நீங்கள் எந்த முறையில் புலிகளை குற்றம் சாட்டுகிறீர்கள்.

திலீபன் அவர்கள் உண்ணாவிரதம் இருந்த போது அது குறித்துப் பேச இந்திய அதிகாரிகளிடம் பேச பிரபாகரன் அவர்கள் வருகிறார். ஹர்கிரத் சிங் தனது புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார், அப்போதய தூதர் தீட்சித் அவர்களிடம் இருந்து பிரபாகரனைக் கொன்று விடும் படி ஆணை பிறப்பிக்கப் பட்டது. சமாதானம் பேச வருபவனை கொல்வது ராணுவ வீரனின் செயல் அல்ல என்று சொல்லி மறுத்து விடுகிறார்.இது எனது உத்தரவு அல்ல. பிரதமர் ராஜீவின் உத்தரவு என்று தீட்சித் சொல்லி தனது புத்தகத்திலும் பதிவு செய்திருக்கிறார். சொல்லியவர் இன்னும் உயிருடன் தான் இருக்கிறார். புத்தகமும் புழக்கத்தில்தான் இருகிறது.

ஒரு நாட்டின் தலைவன், காந்தீய வழியில் வந்தவன் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் ஒரு பாரதப் பிரதமர் சமாதானம் பேச வந்தவரை கொல்ல்ச் சொல்கிறார் எனில், அவருக்கு என்ன தண்டனை கொடுப்பது?

கலைஞர் சகோதர யுத்தம் என்று சொல்லி வருந்துகிறாரே. 2004 ல் தேர்தல் நடந்தது. TELO இயக்கத்தில் சபாரத்தினம் அவர்களுடன் நின்று ஆயுதம் எடுத்துப் போராடிய சிவாஜிலிங்கம் போட்டியிடுகிறார். ஆயுதம் தாங்கிப் போராடியவர்கள். இன்னும் சொல்லப் போனால் சபாரத்தினத்தை சுட்டுக் ஒன்ற போது அந்த பக்கம் நின்று புலிகளைப் பார்த்து சுட்டவர் சிவாஜிலிங்கம். அவர், செல்வம் அடைக்கலநாதன், ஸ்ரீகாந்தா, தன்னுடைய தலைவர் பத்மநாபாவைச் சுட்டுக் கொன்றதாக புலிகள் மீது பழி சுமத்திய சுரேஷ் பிரேமச்சந்திரன், இன்னொரு கட்சியைச் ச்சேர்ந்த சம்பந்தம் ஆகிய அனைவரும் புலிகளுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

அவர்கள் மறந்து விட்டார்கள். ஆனால் இங்கே இவர்கள் இன்னமும் சகோதர யுத்தம் என்று கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்பொது அவர்கள் புலிகள் தான் த்மிழ் மக்களுக்கு பாதுகாப்பு என்று சொல்கிறார்கள். ஆனால் இங்கிருந்து தொடர்பில்லாத நாம் பேசுகிறோம் சகோதர யுத்தம் என்று. ஸ்டாலின் – அழகிரி யுத்தம் வேண்டுமானால் சகோதர யுத்தமாய் இருக்கும்.

கனகரத்தினம் என்று ஒருஎம்.பி இருந்தார். தமிழ் மக்களிடம் ஆசி பெற்று வெற்றி பெற்று சிங்கள கட்சியில் போய் சேர்ந்தார். இந்த துரோகம் கண்டு கோபமுற்று அவருக்கு மரண தண்டனை என்று அறிவித்த புலிகள் 1978 -79 ல் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது குடும்பத்திற்கு எவ்வளவு கோபம் வந்திருக்கும். ஆனால் 1983 ல் நான்கே வருடங்களில் அவரது மகன் புலிகளின் இயக்கத்தில் சேர்ந்தார். சைமன் என்ற புனை பெயரில் இருந்தார். அவரது உண்மையான் பெயர் ரஞ்சன்.  தனது தந்தையைக் கொன்ற பின்பும் கூட அவர் புலிகள் இயக்கத்தில் சேர்ந்தார். ஆனால் இங்கிருந்துக் கொண்டு நாம் சகோதர யுத்தம் என்கிறோம்.

விமர்சனம் செய்யுங்கள். எவரொருவரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரல்ல. அவர் மீது மனித உரிமை மீறல் குறித்து விமர்சனம் செய்யுங்கள் தவறில்லை. ஆனால் எபபோது சொல்கிறீர்கள். ராஜபக்சே அரசு தமிழர்களின் கழுத்தில் கத்தியை வைத்திருக்கும் இந்த நேரத்தில்தானா சொல்லுவீர்கள்?

1984ல் பிரபாகரன் விடுதலை பெற்ற ஈழம் எப்படி இருக்கும் என்று கேட்கிறார்கள். அதற்கு பிரபாகரன் ஒரு கட்சி ஜனநாயக நாடாகத்தான் இருக்கும் என்று பேட்டி அளிக்கின்றார். அதுவும் 85ல். 24 வருடங்களில் அவரது கருத்துக்கள் மாறி கூட இருந்திருக்கலாம். அதை கலைஞர் தொடர்ந்து பேசி வருகின்றார் மிகப்பெரும் குற்றமாக.

கலைஞரிடம் ஒருமுறை நீங்கள் யாரை சந்திக்க விரும்புகிறீர்கள் என்று கேள்வி எழுப்பப் படுகின்றது. இதை பல பேரிடம் கேட்பார்கள்.  விபி.சிங் எனும் மாமனிதரிடமும் கேட்டார்கள்.

நம்மால் மறக்கப்பட்டவர், இறந்த போது எந்த பத்திரிக்கையும் அவர் குறித்து எழுத விலை. புகழை யாரும் பேச வில்லை. ஒரு நல்ல ஜனநாயகவாதி. அவரது காலத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைக் கூட தமிழ் நாடு தரவில்லை. ஆனால் அவரது கட்சி கர்நாடகத்தில் இருந்தது. எதைப்பற்றியும் கவலைப்படாமல் ”காவிரி நடுவர் மன்றத்தை” அமைத்தது அவர்தான். இட ஒதுக்கீட்டை அமல் படுத்தியவர், 56 ல் மறைந்து போன அம்பேத்கார் அவர்களுக்கு பாரத ரத்னா கொடுத்தவர். ந்ம்மாளுங்க தமிழனாய் பிறந்து தமிழ் பெண்ணாய் வளர்ந்து “நீராரும் கடலுடுத்த” தமிழ் தாய் வாழ்த்தை பாட மாட்டேன் என்று பாட மறுத்த சுப்புலட்சுமியைத்தான் பாராட்டுவார்கள். ஆனால் புரட்சியாளர் அம்பேத்கார் இறந்து 33 வருடங்கள் கழித்து வி.பி.சிங் பாரத ரத்னா பட்டம் கொடுத்தார்.

அப்படிப்பட்ட மனிதர் சொன்னார். தன் வாழ்நாளில் ஒருமுறையாவது பிரபாகரனைச் சந்திக்க வேண்டும் என்றார்.

அதே பொன்று கலைஞரிடம் கேட்டார்கள். கலைஞர் சொன்னார். நான் ஃபிடல் காஸ்ட்ரோவை ஒரு முறையேனும் பார்க்க விரும்புகிறேன். மக்களே ஃபிடல் காஸ்ட்ரோவும் ஒரு கட்சி ஆட்சிமுறையைதான் நடத்தியவர்தான்.

தான் வாழ்நாளில் ஒருமுறையேனும் சந்திக்க விரும்புபவர் என்று சொன்னவர் ஒரு கட்சி ஆட்சி முறையை நடத்தியவர். ஆனால் இவர் 25 வருடங்களுக்கு உந்திய பேட்டியை வைத்துக் கொண்டு பிரபாகரனை சர்வாதிகாரி என்கிறார்.

ரஷ்யாவிலும் ஒரு கட்சி ஆட்சி முறைதான். சீனாவில் ஒரு கட்சி ஆட்சி முறைதான்.அட ஏன்யா இவர் மகனுக்கு பேர் வைத்திருக்கிறாரே ஸ்டாலின் அவரும் ஒரு கட்சி ஆட்சி முறைக்காரர்தானே.

கலைஞர் அவர்களே ஏன் முரண்படுகிறீர்கள். ஏன் இந்த வன்மம்? எதை மனதில் வைத்துக் கொண்டு இப்படி முன்னுக்குப் பின் முரணாய் பேசுகிறீர்கள். என்ன கட்டாயம் உங்களுக்கு???

இதைத்தான் நாங்கள் கேட்கிறோம். நீங்கள் நடுநிலையுடன் இருந்து பதில் சொல்லுங்கள்.

கைது செய்யப்பட காரணமாயிருந்த கொளத்தூர் மணி அவர்களின் பேச்சு – பாகம் 1
ஈழத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற படுகொலைகள், அவலங்கள் எல்லார் மனதையும் உருக்கி இருக்கின்றது. ஏதேனும் ஒரு நல்ல தீர்வு வர வேண்டும், அங்கிருக்கின்ற தமிழ் மக்களுக்கு நல்ல தீர்வு அமைய வேண்டும், கண்ணியமான, உரிமை பெற்ற வாழ்வு அமைய வேண்டும் என்று எல்லாரும் விரும்புகிறோம். இப்படிப்பட்ட எண்ணம் வருவதற்கு ஒருவர் தமிழனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒருவன் மனிதாக இருந்தாலே போதும்.

ஈழ்ச் சிக்கல் என்று நாம் பேசத் தொடங்கும் போதெல்லாம் தொடர்ந்து சில முழக்கங்களை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். காங்கிரஸ்காரர்கள் மறக்க மாட்டோம் மன்னிக்க மாட்டோம் என்கிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு என்கிறார்கள். கலைஞர் அவர்களோ சகோதரயுத்தம் என்றும், சர்வாதிகாரி என்றும் சொல்கிறார்.

1987 ல் போடப்பட்ட ஒப்பந்தத்தை இப்போதுதான் காங்கிரஸ் பேசத் தொடங்கி இருக்கிறது. 1983 ல் கொடுத்த பேட்டியை இப்போதுதான் கலைஞர் நினைவு படுத்துகிறார். இன்றைய சிக்கல்களுக்கு என்ன்னய்யா தீர்வு என்றால் 25 வருடங்களுக்கு முந்தைய கதையைப் பேசுகிறார்கள். பழம் வரலாறு மட்டுமே பேசுகின்றார்கள் என்றால் இப்போது அவர்கள் உருப்படியாக எதையும் செய்ய வில்லை என்றுதான் பொருள்.

எதற்கும் இவர்கள் கூறும் ஒரே பதில் இதை ராஜீவ் கொலைக்கு முன், ராஜீவ் கொலைக்குப் பின் என்று பாருங்கள் என்கிறார்கள். எனவேதான் நாமும் அதைப் பற்றி பேச வேண்டிய தேவையாய் இருக்கிறது.

ஜாலியன் வாலாபாக் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். 1919ல் மிகக் கொடுமையான அடக்கு முறைச் சட்டமான ரௌலட் சட்டம் இயற்றப்பட்டது. (ரௌலட் – குமாரசாமி சட்டம்) அது இரண்டு காங்கிரஸ் தலைவர்களை நாட்டை விட்டே வெளியேற்றியது. அடக்குமுறையான அச்சட்டத்தைக் கடித்து ஜாலியன் வாலாபாக் எனும் பூங்காவில் அமைதியான முறையில் ஒரு பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அப்ப்போது முன்னறிவிப்பின்றி அக்கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டது. 340 பேர்தான் இறந்தனர் என்று ஐரோப்பியர்கள் சொன்னார்கள். 1000 பேர் என்று நாம் சொன்னோம்.

அந்த அவலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான் 20 வயதான உத்தம் சிங் எனும் இளைஞன். ”தன் நாட்டு மக்களை இன்னொரு நாட்டிலிருந்து வந்த ஒருவன் கொல்லுகிறான்” என்பதைப் பார்க்கிறான். அவனுக்கு ஆத்திரம் ஏற்படுகிறது. இந்தப் படுகொலைகளுக்கு காரணமானவனை எப்படியேனும் பழி வாங்க வேண்டும் என்று சபதம் ஏற்கிறான். இங்கிலாந்திற்கு செல்கிறான். உணவு விடுதியில் வேலை செய்வது உட்பட பல்வேறு முயற்சிகளின் மூலம் ஆயுதம் வாங்க முயல்கிறான். 21 வருடங்கள் கழித்து பிரச்சினைக்கு காரணமான உத்தரவைப் பிறப்பித்த கவர்னல் ஜெனரல் மைக்கேல் ஓ டயரை 1940ல் சுட்டுக் கொல்கிறான்.

அவன் மீது கொலைப்பழி சுமத்தப்பட்டு மூன்று மாதங்களில் விசாரணை நடத்தப் பட்டு 1940 ஜூலை 31ல் அவன் தூக்கிலிடப்படுகிறான். இந்த நாட்டில் படுகொலைகள் நிகழ்த்தியவனை அவர்களது நாட்டிற்கே சென்று 21 வருடப் போராட்டத்திற்குப் பின்பு சுட்டுக் கொல்கிறான் உத்தம் சிங். அப்படிப்பட்ட ஒரு சுதந்திரப் போராட்ட வீரனுக்கு நாம் உரிய மரியாதையைக் கொடுக்கத் தவறி விட்டோம் என்று கருதிய இந்திரா காந்தி 1974ல் சாது சிங்கை அனுப்பி அவரது உடலின் எச்சங்களைக் கொண்டு வர ஏற்பாடு செய்தார்.

34 ஆண்டுக்ளுக்கு பின்னால் புதைத்த உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அவரது எச்சங்கள் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடல் எச்சங்களும் அவையங்களும் இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்ட போது அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, அப்போதைய காங்கிரஸ் அகில இந்தியத் தலைவர் சங்கர் தயாள் சர்மா, அப்போதைய பஞ்சாபின் முதல்வர் ஜெயில் சிங் (இருவரும் பின்னாளில் குடியரசுத் தலைவர் ஆனவர்கள்) ஆகிய மூவரும் விமான நிலயத்திற்கே சென்று வரவேற்று மலர் வளையம் வைத்து மரியாதை செய்து அவரது சொந்த ஊரிலேயே அடக்கம் செய்தார்கள். அது ஒரு தியாகிக்கு தந்த மரியாதை. அதை நாம் பாராட்ட வேண்டும்.

இதை நான் இங்கு சொல்ல காரணம் இருக்கிறது. இப்படித்தான் ஈழத்தில் 6400 பொது மக்கள் கொல்லப்பட்டார்கள். 1000 பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள். இப்படிப்பட்ட ஓர் மனித பேரவலத்தால் கோபமடைந்து இதற்கு ஆணையிட்ட மனிதனை பழி தீர்க்க வேண்டி அந்த நாட்டுக்காரன் இந்த நாட்டுக்கு வந்தான். 21 ஆண்டுகள் ஆக வில்லை. ஒரு ஆண்டில் தனது காரியத்தை முடித்தான். உங்களிடம் நான் கேட்டுக் கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். 34 ஆண்டுகள் கழித்தும் உத்தம் சிங்கின் உடலை இந்தியா, மரியாதை செய்து பாராட்டுகின்றதென்றால் தானுவும் சிவராசனும் ஈழத்து மக்களுக்கு யார்?

340 அல்லது 1000 பேரைச் சுட்டுக் கொல்ல ஆணையிட்டவனை கொல்வது தியாகம் எனில், 6000 பேருக்கு மேல் கொல்லப்பட, 1000 பெண்கள் கற்பழிக்கப்பட, தனது நாட்டின் விதலைப் போராட்டம் 20 ஆண்டுகள் பின் தள்ளிப் போக காரணமாய் இருந்தவரைக் கொல்வதை மட்டும் எப்படி நீங்கள் கொலை என்று சொல்கிறீர்கள். அதனால்தான் நாங்கள் சொல்லுகிறோம். அது கொலை அல்ல. மரண தண்டனை.

எனவே தான் சொல்லுகிறோம் ஈழ வரலாற்றை ராஜீவ் கொலைக்கு முன் பின் என்று பார்க்காதீர்கள். அமைதிப்படைக்கு முன், அமைதிப்படைக்குப் பின் என்று பாருங்கள்.

1987 ஒப்பந்தத்திற்கு வருவோம். இப்போது கேட்கிறார்களே பிரபாகரன் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்று. 29 ஆம் தேதி ஒப்பந்தம் போடப்பட்டது. 30 ஆம் தேதி பிரபாகரனுடன் பேச்சு வார்த்தை ந்டத்தி ஆயுதத்தை ஒப்படைக்க்ச் சொல்லி வலியுறுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து 1987 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் தேதி “சுதுமலை” எனும் கிராமத்தில் பொதுக் கூட்டத்தில் தோன்றி, “நாங்கள் ஆயுதத்தை விரும்பி ஏற்க வில்லை. நாங்கள் போரின் மீது காதல் கொண்ட மன நோயாளிகளும் இல்லை. அற வழியில் எழுப்பப்பட்ட எங்களது கோரிக்கைகள் ஆயுதம் கொண்டு அடக்கப் பட்ட போது வேறு வழியற்று நாங்கள் ஆயுதம் ஏந்தினோம். ஆயுத்ங்களை ஒப்படைக்கச் சொல்லி இந்தியா எங்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறது. பாரதப் பிரதமரும் பல உறுதி மொழிகளை அளித்திருக்கிறார். முக்கியமாக தமிழ் மக்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று உறுதியளித்திருக்கிறார். இந்தியப் பிரதமரின் நேர்மையில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எனவே இந்த ஆயுதத்தை கையளிக்கிற இந்த நொடியிலிருந்து தமிழ் மக்களின் பாதுகாப்பை இந்திய அரசின் பொறுப்பில் விடுகிறேன்” என்று சொல்லி ஒப்படைத்தார்.

ஆகஸ்ட் 4 தொடங்கி 21 வரை இது தொடர்ந்தது. அது ஏன் த்டபட்டது என்பதை நான் சொல்ல வில்லை. அப்போது இந்தியா சார்பாக இலங்கையிலிருந்து, அமைதிப்படைக்குத் தலைமை தாங்கிப் போரை நடத்திய ஹர்கிரத் சிங் புத்தகம் எழுதி இருக்கிறார். அவர் சொல்கிறார். “இந்திய அரசு ஒரு புறம் அமைதிப் பேச்சு வார்த்தை என்று பேசிக் கொண்டே மறுபுறம் அவர்களுக்கு எதிராக ஆயுத சப்ளை உட்பட பல எதிர் வழிகளை செய்து கொண்டிருந்தார்கள். அதுவே 21 ஆம் அன்று யுத கையளிப்பை நிறுத்தக் காரணமாயிற்று.

ஒப்பந்தம் ஒப்பந்தம் என்கிறார்களே. ஒப்பந்தத்தின் அரசியல் கைதிகள் உட்பட அனைவருக்கும் பொது மன்னிப்பு மற்றும் விடுதலை என்றார்களே, ஏன் செய்ய வில்லை. 1987 அக்டோபர் 2 ஆம் நாள் இந்தியாவிலிருந்து ஆவணங்களை எடுத்துச் சென்ற வி.புலிகளை கைது செய்கிறார்கள். 17 பேர் இருக்கும் படகில் 2 துப்பாக்கிகள் மட்டுமே இருந்தது. புலிகளின் தலைவர்கள் மட்டும் தங்கள் பொறுப்பில் துப்பாக்கிகளை வைத்துக் கொள்ளலாம் என்று இருக்கிறது. இரண்டு தளபதிகள் படகில் இருக்கிறார்கள் 2 துப்பாக்கிகள் மட்டுமே இருக்கிறது. ஆக அவர்கள் ஆயுதமும் கடத்த வில்லை.

தளபதிகள் இந்திய தூதர் தீட்சித்திடம் சொல்லுகிறார். கொழும்புவிற்கு அவ்ர்கள் கூட்டிச் செல்வார்களேயானால் எங்களுக்கு அங்கு பாதுகாப்பு இல்லை. ஆகவே நாங்கள் நஞ்சருந்தி விடுவோம். அது மிகப் பெரும் அனர்த்தத்தில் முடியும். எனவே நீங்கள் நல்ல முடிவெடுங்கள் என்று பதிவு செய்கிறார். அவர்களது விருப்பத்திற்கு மாறாய் வலுக்கட்டாயமாய் அவர்களை கொழும்பு செல்ல முயலுகையில் 14 பேரர்கள் நஞ்சருந்தி மாளுகின்றனர்.

இப்போது இன்னொரு செய்தியை நான் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். இந்திராகாந்தி படுகொலையைத் தொடர்ந்து ஆயிரக் கணக்கான சீக்கியர்கள் காங்கிரஸ்காரர்களால் படுகொலை செய்யப் படுகின்றனர். டெல்லியில் மட்டும் 3000 சீக்கியர்கள் இறக்கின்றனர். இது குறித்து அப்போது பிரதமராக வந்து விட்ட ராஜீவ் காந்தி சொல்லுகிறார். “ஒரு பெரிய ஆலமரம் சாயும் போது பூமியில் சில அதிர்வுகள் ஏற்படத்தான் செய்யும்”

ஒரே ஒரு ஆலமரத்திற்கு இப்படி என்றால் இங்கே சாய்ந்தது ஒரு ஆலமரம் இல்லை. இரண்டு ஆலமரங்கள். புலேந்திரன் குமாரப்பா என்று இரண்டு பேர். ராஜீவ் காந்தி அவர்கள் விமான ஓட்டியாக இருந்து வேறு ஒரு நாட்டில் மது அருந்தி உல்லாச வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில், தங்கள் இளமையைத் துறந்து மக்களுக்காக, உரிமைகளுக்காக இயக்கத்திற்கு அர்ப்பணித்துக் கொண்டவர்கள் அவர்கள். 17 பேராக புலிகள் இயக்கம் இருந்த போது தம்மை இணைத்துக் கொண்ட போராளிகள் அவர்கள். ஒருவர் வடக்கு பகுதியின் தளபதி. இன்னொருவர் கிழக்கு மாகாணத்தின் தளபதி.

அப்படிப்பட்ட இரு ஆலமரங்கள் சாய்ந்த போது அந்த ம்க்களிடத்தில் என்ன அதிர்வு ஏற்பட்டிருக்கும்? ஜனநாயக வாதிகளாகிய உங்களுக்கே இப்படி என்றால் ஆயுதம் தாங்கிப் போராடிய அவர்களிடத்தில் எப்படி இருந்திருக்கும்? பெரியார் சொல்லுவார் விரல் உரலானால் உரல் என்னவாகும்? என்று. கோபமும், கொந்தளிப்பும் உங்களுக்கு மட்டுமே உரியது அல்ல. அது எல்லாருக்கும் பொதுவானதுதான்.

இன்னும் சீக்கியர்கள் குறித்தும், கருணாநிதி அவர்கள் குறித்தும் சகோதர யுத்தம் குறித்தும் இதன் தொடர்ச்சியாய் அடுத்த பாகத்தில் பேசப்படும்.

உலகை உய்விக்க வந்த ரட்சகர்கள்
ஆதித்யா டீவிங்குறானுங்க, காமெடி டைமுங்கறானுங்க, கலக்கப் போவது யாரு, அசத்தப் போவது யாருன்னுன்னு ஆளாளுக்கு ஒவ்வொரு பெயர் வெச்சுக்கிட்டு காமெடி செய்கிறோம்னு அலப்பறை செய்துக்கிட்டிருக்காங்க. இது அத்தனைக்கும் நடுவில சத்தமே இல்லாமல் “Bright Vision” தினமும் ஒரு மூன்றுமணி நேரம் சரெவெடியா காமெடி நிகழ்ச்சிகளை தந்துட்டிருக்காங்க. ஆனால் இவங்களுக்கு சரியான டைம் தராததால இவர்களுடைய காமெடி முயற்சிகளும், திறமைகளும்

உலகத்திற்கு தெரியாமலே போய்க்கிட்டிருக்கு.

தினமும் விஜய் டீவியில் இரவு 11 மணிக்கு மேல ஒரு மூணு மணி நேரம் தொடர்ச்சியா போடற நிகழ்ச்சிகளைப் பாருங்க. அங்க சில மேதாவிகள் தோன்றி தரிசனம் கொடுத்து நமக்கு என்ன பிரச்சினை வந்தாலும் தீர்த்து வெப்பாங்க. வேலை கிடைக்கலை, கல்யாணம் ஆகலை, உங்க வீட்டு நாய்க்கு உடம்பு சரியில்லை, பைக் அடிக்கடி பங்சர் ஆகுது, கிரிக்கெட் மேட்சுல முனாஃப் படேல்

செஞ்சுரியே அடிக்க மாட்டீங்கிறாரு, சாப்பிடும் போது விக்கல் வருது இப்படி உங்களுக்கு என்ன பிரச்சினை வந்தாலும் இவங்ககிட்ட போங்க. அவங்க சொல்ற ஆலோசனைகளைக் கடைபிடியுங்கள். வாழ்க்கையில ஓஹோன்னு முன்னுக்கு வந்துடுங்க.

மஹாதன் சேகர் ராஜா: யாரு இவருன்னு உங்கள்ல யாராவது கேட்டிங்கன்னா நான் மானாங்கன்னியா டென்ஷன் ஆயிடுவேன் சொல்லிப்புட்டேன் ஆமா. ஃபார்மேட் நியூமராலஜியை உலகிற்கு முதன் முதலில் அறிமுகப் படுத்தியவர் இவருதாங்க. பார்ப்பதற்கு ஒரு சாயலில் இளையராஜா மாதிரியே இருக்கும் இவர் அள்ளி வீசும் கருத்துக்களை சாணக்கியர் கூட சொல்லி இருக்க மாட்டார்.

அதாவது பார்த்தீங்கன்னா, சில பேரு நேர் வாக்கு எடுத்து தலை சீவுவார்கள். அவர்களது வாக்கைப் போலவே அவர்களது வாழ்க்கையும் நேராக சீரிய முறையிலே இருக்கும். ஆனால் சில பேரு பார்த்தீங்கன்னா ஃபேஷன் அது இதுன்னு சொல்லிக்கிட்டு கோணல் மாணலாக வாக்கெடுத்து சீவுவார்கள். அவர்களது வாழ்க்கையும் கோணல் மாணலாகத்தான் இருக்கும். தலை எழுத்து மட்டும் நம் வாழ்க்கையை நிர்ணயிப்பதில் தலை முடியும்தான் நம்ம வாழ்க்கையை நிர்ணயிக்கிறதுன்னு அள்ளி வீசுனாரு. ஆனா இதெல்லாம் சொன்ன நம்ம மஹாதன் சேகர் ராஜா அண்ணாச்சி தலையில ஒரு முடி கூட இல்லை. அட கடவுளே அப்போ இவருக்கு வாழ்க்கைன்னு ஒண்ணே இல்லையா? அய்யோ பாவம் என் எதிரிக்கு கூட இந்த நிலைமை வரக் கூடாதுப்பா.

பெயரியல் பேராசான் ராஜராஜன் : வெறும் வாயால முழம் போடறதுல இவரை விட்டா இன்னிய தேதிக்கு தமிழ்நாட்டுலயே ஆளு இல்லை. நம்ம காங்கிரஸ் தங்கபாலு கூட இவருக்கு அப்புறம்தான். தெரியாத்தனமா யாராவது இவருக்கிட்ட மாட்டிட்டா போதும் அதோட அவன் செத்தான். இவரோட சிந்தனைத் துளிகளில் இருந்து ஒரு சில.

அதாவது சார்லசும்,டயானாவும் பொறக்கும் போதே இவருக்கு இவர்னு பிறந்தவங்களாமாம். அவங்களோட ஜாதகப் பொருத்தம் அப்படியாமாம். ஆனா இத்தனையும் இருந்தும்,டயானா ஏன் சீக்கிரம் செத்துப்போனாங்கன்னு உங்களுக்கு யாருக்காவது தெரியுமா? அவங்க கல்யாண நாள் 29-07-181.நல்லா கூட்டிப்பாருங்க. 1 வரும். கூட்டுத் தொகை 1,3,7,9 வர்ரவங்க சீக்கிரம் செத்துப் போயிடுவாங்களாமாம்.

லட்சுமனண்னு ஒருத்தரு சார் எனக்கு தொழில்லயும் வாழ்க்கையும் வெற்றியே கிடைக்கறதில்லை. இதுக்கு நீங்கதான் நல்ல வழி காட்டணும்னு கேட்க தலைவரு சொல்றாரு: “உங்க பேரு லட்சுமனண். கடைசி ரெண்டு எழுத்து பாருங்க”னன்”. “னன்”ன்னுன்னா ஆங்கிலத்தில ஒண்ணுமே இல்லைன்னு அர்த்தம். அதனாலதான் உங்களுக்கு வெற்றிகளே கிடைக்க மாட்டேங்குது. இதுக்கு ஒரே வழி பேரை மாத்தறது மட்டும்தான்”.

சார் என் பொண்ணு பேரு நந்தினி சார். என் பொண்ணுக்கு ரொம்ப நாளா கண்ணாலம் தள்ளிப் போகுது சார். நீங்கதான் பார்த்து ஒரு நல்ல வழி காட்டணும்னு கேட்டாங்க. மனுஷன் அசராம அடிச்சாரு. “அம்மா உங்க பொண்ணு பேருல “நன்”ன்னுன்னு உச்சரிப்பு வருது. நன்ன்னுன்னா கன்னிகாஸ்திரிகள்னு அர்த்தம் அதனாலதான் உங்க பொண்ணுக்கு இன்னும் கல்யாணம் ஆகாம இருக்குது. பேரை மாத்திடுங்கம்மான்னு உடனே தீர்ப்பு சொல்லிட்டாரு”.

எப்படியெல்லாம் யோசிக்கிறானுங்க பாருங்கய்யா? இன்னும் இந்த மாதிரி உமாங்கிற பேரு, ரவிங்கிற பேரு இந்த மாதிரி பல பெயர்களுக்கு, மனுஷன் கைவசம் ஐடியா வெச்சிக்கிட்டு இருக்காரு.

என் பேரு கூட நந்தகுமார்தான். தலைவரு எங்க ஏரியா பக்கத்துலதான் விருகம்பாக்கத்துல இருக்காரு. நாளைக்கு நான் போலாம்னு இருக்கேன். நீங்க யாராவது வர்றீங்களா? பல்க் ஆர்டருன்னா ஏதாவது தள்ளுபடி கிடைக்கும்…

மஹாஸ்ரீராஜன்: இவரு சாதாரண ஆளு இல்லைப்பா. வெப்சைட் எல்லாம் வெச்சிருக்காரு. இவருக்கு தெரியாத விஷயமே இல்லை. ப்ரோனாலஜி, நியூமராலஜி, நேமியாலஜி, ஆஸ்ட்ராலஜி, க்ராபாலஜி, பால்மிஸ்ட்ரி அப்படி இப்படின்னு மனுஷன் புகுந்து விளையாடறாரு.பொறந்தா இப்படி ஒரு ஜீனியஸா பிறக்கணும்யா. இவரோட ஒரு திருவிளயாடலை நேத்து நைட் 1 மணிக்கு பார்த்து அசந்து போயிட்டேன்.

ராஜன்: சார் உங்களுக்கு தீராத கால்வலி இருக்கணுமே.

வாசகர்: ஆமா சார். ரொம்ப நாளா இருக்குது.

ராஜன்: ஏன் இருக்குது. உங்களுக்கு வயசும் சின்ன வயசுதான். 30 தான் ஆகுது. இன்னும் கல்யாணமும் ஆகலை.

வாசகர்: சார் நான் கொஞ்சம் வெயிட் அதிகம் சார். என் வெயிட் எல்லாமே என் கால்லதான இறங்குது. அதனால கூட கால் வழி வரலாம் சார். (அடப் பாவி இவ்வளவு நல்லா யோசிக்கிற ஆளு இங்க ஏன்யா வந்து மாட்டின?)

ராஜன்: என்ன சார் பெரிய வெயிட். என்ன ஒரு 90 இருப்பீங்களா?

வாசகர்: இல்லை சார் 80 இருக்கிறேன்.

ராஜன்: பாருங்க 80 தான். அதெல்லாம் காரணம் இல்லை. நான் சொல்லட்டுமா?

வாசகர்: சொல்லுங்க சார்.

ராஜன்: உங்க பேரு என்ன. இளமயில் (அடப் பாவிகளா எவ்வளவு அருமையான தமிழ் பெயர்). இள மயில்னு பேரு வெச்சவங்க எல்லாருக்கும் 25 வயசுக்கு மேல கால் வலி வந்தே தீரும். இதை யாராலும் மாத்த முடியாது. நீங்க எத்தனை டாக்டரைப் பார்த்தாலும் இது தீராது. என் கிட்ட வாங்க நான் சொல்ற பேரை வெச்சுக்குங்க. அதுக்கப்புறம் கால் வலி உங்க கிட்ட கூட நெருங்காது.

இதாவது பரவாயில்லை. ஒர் மாசத்துக்கு முன்பு இவரோட இன்னொரு நிகழ்ச்சி பார்த்து பயங்கர டென்ஷன் ஆயிட்டேன்.

ஒரு அம்மாவும் பொண்ணும் கல்யாணம் தள்ளிப் போகுதுன்னு வந்து இவருக்கிட்ட புலம்பி இருக்காங்க. தலைவரு ஏதேதோ பார்த்துட்டு அம்மா உங்க பொண்ணுக்கு பெரிய தோசம் இருக்குன்னு ஏதோ ஒரு பேரைச் சொன்னாரு. இது சாதாரண தோசம் இல்லைம்மா. பயங்கர கொடூரமானதுன்னு பயங்கரமா பில்டப் எல்லாம் விட்டாரு. அதுக்கு நிறைய செலவாகுமேன்னு சொல்லிட்டு, சரி விடுங்க இன்னொரு வழி இருக்கு. அதைச் செய்ங்க உங்க தோசமெல்லாம் போயிடும்னு ஒண்ணைச் சொன்னாரு. அதைக் கேட்டதுக்கப்புறம்தான் நான் டென்ஷன் ஆனதே.

அவரு சொல்றாரு“அம்மா உங்க தோசத்தைப் போக்கணும்னா ஆற்றின் கரையோரமாய் இருக்கும் அம்மன் கோவில் ஏதேனும் ஒன்றிற்குச் சென்று ஒரு பட்டு வேட்டி, சேலை வாங்கி தட்டில் வைத்து, சஹஸ்கர பரிகாரம்னு (பேரு இப்படிதான் ஏதோ காதுல விழுந்தது) ஒண்ணை பண்ணிட்டு அங்கே இருக்கும் அந்தண பிராமண தம்பதிகளின் காலில் நீங்கள் சாஷ்டாங்காமாய் விழுந்து கும்பிட்டு மனமுருக எங்களுக்கு நல்ல வழி காமியுங்கள்னு வேண்டிக்கிட்டு அந்த பட்டு வேட்டி சட்டையை அவர்களுக்குக் கொடுத்து விட்டு அவர்கள் ஆசியை வாங்கிக் கொண்டு வந்து விடுங்கள். உடனே உங்கள் தோசம் சரியாய் போய் விடும்”.

”மவனே இது ஒண்ணுக்கே உன்னை மிதிக்கணும்டா” ன்னுதான் எனக்கு தோணுச்சு.

இந்த திருட்டுல எப்படி பிக்பாக்கெட், பிளேடு போடறவனுங்க, செயினை பறிக்கிறவனுங்க, பூட்டின வீட்டுல க்டப்பாறை போட்டு திருடறவனுங்க, எல்லாரும் இருக்கிறப்பவே கூட்டமா போயி மிரட்டி பணம் பறிக்கிறவனுங்கன்னு வித்தியாசம் வித்தியாசமா இருக்கிற மாதிரி இவங்கள்ளயும் ஆயிரத்தெட்டு வெரைட்டி வெச்சிருக்காங்க.

சாஃப்ட்வேர் சத்குருன்னு லேட்ப்டாப், கோட்சூட் போட்டுக்கிட்டு கம்ப்யூட்டர் மூலமா உங்க கஷ்டங்களைத் தீர்க்குறேன்னு சொல்ற ஆளு, வைட் அண்ட் வைட் நீல்கண்ட சிவான்னு ஒருத்தரு, ஓசோன்ல இருந்து வர்ற காஸ்மிக் எனர்ஜியை வெச்சு உங்க வாழ்க்கையை மாத்தறேன்னு ஒருத்தரு இப்படி பலபேரு திரியறாங்க. இந்த காஸ்மிக் எனர்ஜி ஆளு இருக்காரே, அவரு சேலத்துல ஏற்காடு

அடிவாரத்துல, சில வருஷத்துக்கு முன்னாடி ஒண்ணுமே இல்லாம இருந்தாராம். அவரு காஸ்மிக் எனர்ஜின்னு ஒரு பக்கம் ஊரை ஏமாத்தினா அவங்க வீட்டுக்காரம்மா இன்னொரு பக்கம் வேறோ ஏதோ டெக்னாலஜி பேரை சொல்லிக்கிட்டு ஏமாத்திக்கிட்டு இருக்கு. இப்போ அந்த ஏரியாலயே இவங்கதான் பணக்காரங்க.

நம்ம சாஃப்ட்வேர் சத்குரு சொல்றாரு. மாருதி ஆல்டோ ஒரு ஃபெயிலியர் மாடலாமாம். ஏன் தெரியுமா? அதோட நம்பர்களைக் கூட்டிப் பார்த்தா 8 வரலையாமாம். அப்புறம் எப்படிங்க அது சக்சஸாகும்னு நம்மளைக் கேட்கிறாரு. மாருதி 800 அப்படி இல்லாததாலதான் ஜெயிச்சுடுச்சு. கூட்டினா 8 வருதாமாம். பார்றா இந்த சின்னப் புள்ளை தனக்குள்ள எவ்ளோ திறமைகளை ஒளிச்சு வெச்சிட்டிருக்கு. ராசா நீ இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லை.

இவனுங்களை சொல்லி தப்பு இல்லை. இவங்க எல்லாம் ஒரு மனுஷங்கன்னு

சொல்லிக்கிட்டு, இவங்ககிட்ட போயி ஏமாறாங்க பாருங்க அவங்களைச் சொல்லணும்.

காங்கிரஸ், பிஜேபி: எவருக்கு வாக்களிப்பது?
நான் மட்டுமல்ல. காங்கிரஸ் அரசின் மீது உச்ச கட்ட கொதிப்பில் இருக்கும் எந்த ஒரு ஈழ ஆதரவாளர்களுக்கும், முதுகெலும்பில்லாத இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்து துடித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரின் முன்பும் தொக்கி நிற்கும் கேள்வி இதுதான். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் எந்த அரசு மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும் என்று விரும்புவது? நம்முடைய ஓட்டுக்களை எவருக்கு அளிப்பது? என்பதுதான்.

தமிழகத்தைப் பொறுத்த வரை நமக்கு இருப்பது நான்கு வாய்ப்புகள் உள்ளன.

1. திமுகவிற்கோ – காங்கிரசு உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகளுக்கோ வாக்களிப்பதன் மூலம் மீண்டும் காங்கிரஸ் அரசு அரியணை ஏறுவதற்கு நாம் ஆதரவு தருவது.

2. அதிமுக, பாமக, மதிமுக கட்சிகளுக்கு வாக்களிப்பதன் மூலம் மூன்றாவது அணிக்கோ அல்லது பிஜேபி அரசுக்கோ நமது ஆதரவைத் தெரிவிப்பது.

3.பிஜேபி – சமக போட்டியிடும் ஒரு சில தொகுதிகள் உங்களது ஏரியாவாய் இருந்தால் நேரடியாய் அவற்றிற்கு வாக்களித்து உங்கள் ஆதரவைத் தெரிவிப்பது.

4. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தொடர் வெறியாட்டத்தை தடுக்கும் பொருட்டும், ஒரு வலுவான மாற்றுக் கட்சியை தமிழகத்தில் காலூன்றச் செய்யும் பொருட்டும் தேமுதிகவிற்கு வாக்களிப்பது. இதன் மூலம் அடுத்த சட்டமன்றத் தேர்தலிற்குள் இந்தக் கட்சியை இன்னும் பலப்படுத்த ஒரு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பது.

நான்காவதை நான் வலியுறுத்த காரணங்கள் இருக்கின்றது. ஒரு சில நாய்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். எவ்வளவுதான் எட்டி உதைத்தாலும் திரும்ப வந்து நம் காலையே முகர்ந்துக் கொண்டிருக்கும். இவனை விட்டால் நமக்கு வேறு நாதி இல்லை என்று நாம் ஆடும் ஆட்டங்களை அது தாங்கிக் கொண்டிருக்கும். நம்மை விட சிறந்த எஜமானனை அது கண்டு பிடிக்கும் வரை நம்முடைய ஆட்டத்தை நாம் தாராளமாய் ஆடலாம். கலைஞருக்கும், நமக்கும் இடையே இருக்கும் தற்போதைய உறவினைக் கூட இந்த எஜமானன் – நாய் உறவிற்கு ஒப்பிடலாம். ஏனெனில் நமக்கும் இப்போது இவரை விட்டால் நாதி இல்லை என்று சொல்லலாம்.

ஆகையால் இப்போதைய நிலையில் நாம் இவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெத்தே ஆக வேண்டும். எவனும் யோக்கியமில்லை எனவே நான் ஓட்டே போடப் போவதில்லை என்று எவரேனும் சொல்பவராயிருந்தால் உங்களுக்கு நான் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். உண்மையில் திமுக, அதிமுக இரண்டில் எவருக்கேனும் நீங்கள் பெரும் உதவியைத்தான் செய்பப் போகிறீர்கள். வெகு நிச்சயமாய் உங்களது ஓட்டுக்கள் அவர்களில் எவருக்கேனும் ஆதரவு வோட்டுக்களாய் கள்ளத்தனமாய் எப்படியேனும் சேர்க்கப் பட்டு விடும். ஆகையால் மறந்தும் வாக்களிக்காமல் இருக்காதீர்கள். சுயேச்சை எவருக்கேனுமாவது வாக்களியுங்கள்.

வலைப்பதிவுகளில் காங்கிரஸ் எதிர்ப்பு என்பது அதிமுக ஆதரவாய் போய் விடக்கூடாது என்பது குறித்து சில பதிவுகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன. அவற்றைக் குறித்தும் இங்கே நாம் சிந்திக்க வேண்டியதாய் இருக்கிறது. காங்கிரஸ் அளவுக்கு ஈழத் தமிழர் விவகாரத்தை பொழுது போக்காக அணுகிய கட்சி என்று பார்த்தால் தாராளமாய் அதிமுகவைச் சொல்லலாம். வெகு நிச்சயமாய் அந்த விஷயத்தில் திமுகவுக்கு பல அடிகள் முன்னால் அதிமுக நிற்கும் என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்தில்லை.

ஆனால் அதே சமயம் நாடாளுமன்ற தேர்தலினை நாம் வெறுமனே திமுக – அதிமுக என்ற அளவிலேயே மட்டும் பார்க்க முடியாது.

அதிமுகவை எதிர்க்க வேண்டியே திமுகவிற்கு வாக்களித்து மீண்டும் திமுக கூட்டணி வெற்றி பெற்று இதே காங்கிரஸ் மத்தியில் அமர்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த ஐந்து வருடமும் கடந்த ஒரு வருடமாய் இருந்த சூழ்நிலைகள்தான் நிலவும் என்பதையும் ஈழத்தமிழர்கள் விஷயத்தில் அடுத்த 5 வருடங்களிலும் இந்தியாவின் தலையீடுகள் இப்போது இருக்கும் மனிதாபிமான அளவில்தான் இருக்கும் என்பதையும் என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.

எனவே தீவிர மதவாதத்தை முன்னெடுத்துச் செல்லும் பிஜேபியா அல்லது மித மதவாதமும், மனிதாபிமானம் அறவே அற்ற காங்கிரஸ் கூட்டணியா என்பதை முடிவு செய்ய வேண்டிய தருணம் இது.

இப்படி ஒரு சாத்தியத்தை ஆராயலாம். மத்தியில் ஆளும் கூட்டணி அரசு ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் அக்கறை காட்ட வேண்டுமென்றால் இரண்டு விஷயங்களில் ஏதேனும் ஒன்று கண்டிப்பாய் நடந்தேற வேண்டும்.

1. ஈழத் தமிழர் விவகாரத்தில் தமிழக மக்களிடையே பெரும் விழிப்புணர்வு ஏற்பட்டு, இது ஒரு முக்கியப் பிரச்சினையாக தமிழகத்தின் பெரும்பான்மையான மக்கள் உணர்வுப் பூர்வமாய் நினைக்க வேண்டும். அது ஒரு பெரும் ஓட்டு வங்கியை உருவாக்க வேண்டும். மிக முக்கியமாய் இலங்கையின் மனித உரிமை மீறல்களை மீடியாக்கள் பலமாய் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். இதன் மூலம் ஈழத் தமிழர் விவகாரத்தில் துரோகம் செய்ய நினைக்கும் எவரும் அரசியல் காரணங்களுக்காகவாவது ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க வேண்டி வரும்.

2.மத்திய அரசிடம் தமிழகத்திலிருந்து பெரும்பான்மையான அல்லது அனைத்து கட்சிகள் அரசியல் கூட்டணிகளைத் தாண்டி ஒரு தலைமையின் கீழ் ஒன்று பட்டு ஒரே குரலாக தீவிர முடிவுகளை எடுக்கச் சொல்லி வற்புறுத்த வேண்டும். அப்படி ஒரு ஒருமித்த குழு ஒரு வலிமையான, மதிப்பு மிக்க தலைவரின் கீழ் அமையுமானால் அதற்கு தலைமைப் பொறுப்பில் இருக்க இப்போதைய சூழ்நிலையில் கலைஞரைத் தவிர வேறு எவருக்கும் தகுதி இல்லை. (நம் சாபக் கேடு இது). வைகோ ராமதாஸ் திருமா போன்றோரெல்லாம் ஒரே லெவல் லீடர்கள்தான். அனைவரையும் தாண்டி அனுபவத்திலும், வயதிலும், வாய்சிலும் பல படிகள் கலைஞர் மட்டுமே முன் நிற்கிறார். (அதிமுக எப்போதும் இது போன்றவற்றில் சேராது என்பது எனது ஆழமான நம்பிக்கை). இப்படி ஒரு கூட்டணி தொடர்ச்சியாய் மத்திய அரசை வலியுறுத்தி வந்தால் ஒருவேளை மத்திய அரசு பணிய வேண்டி வரலாம்.

இந்த இரண்டில் முதலாவது இப்போதைக்கு நடக்க வாய்ப்பில்லை. அதற்கு நாம் இன்னும் பல தூரம் பயணிக்க வேண்டும்.

இரண்டாவது நடக்க வேண்டுமென்றால் கண்டிப்பாய் மத்தியில் காங்கிரஸ் அரசு இருக்கக் கூடாது. ஏனெனில் மீண்டும் காங்கிரஸ் அரசு அமைந்தால் அமைச்சர் பதவிகளுக்காகவும், தனது ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளவும் கலைஞர் மீண்டும் அடுத்த சட்ட மன்றத் தேர்தல் வரை நாடகங்களை மட்டுமே மேற்கொள்ள வேண்டி இருக்கும். ஆனால் ஒரு வேளை பிஜேபி அரசு அமைந்தால், அந்த அரசிடம் தனது இன உணர்வை கலைஞர் வெளிப்படுத்த எந்த வித தடையும் இருக்காது. அதுவுமில்லாமல் எதிர்க்கட்சியாய் இருக்கும் போது கலைஞரிடம் இருக்கும் வீரத்தையும், ஆளுங்கட்சியிலிருக்கும் போது இருக்கும் வீரத்தையும் நாம் பார்த்தவர்கள்தானே.

அப்படி ஒருவேளை பிஜேபி அரசு அமைந்தால் நான் சொன்ன இரண்டாவது சாத்தியக் கூறு நடக்க வாய்ப்புகள் அதிகம். ஒரு வேளை காங்கிரஸ் அரசை பழிவாங்குவதற்காகவேனும் பிஜேபி அரசு ஈழத் தமிழர் விஷயத்திலோ அல்லது விடுதலைப்புலிகள் விஷயத்திலோ சற்றே ஆதரவு நிலைப்பாடுகளை எடுக்கலாம்.

ஆகவே இப்போது நம்முன் இருக்கும் ஒரே கேள்வி ஈழத் தமிழர் விவகாரத்தை மட்டும் கணக்கில் கொண்டு மதவாத பிஜேபியை ஆதரிக்க வேண்டுமா? ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாமே என்ற முடிவை எடுக்கலாமா? அல்லது காங்கிரஸ் கட்சியைத் தேர்ந்தெடுத்து கடந்த ஐந்து வருடங்களைப் போலவே அடுத்த ஐந்து வருடங்களைக் கழிக்கலாமா என்பதே.

பி.கு: கட்டுரை எந்த விதமான தீர்க்கமான முடிவையும் முன்வைக்காமல், வெறுமனே குழப்பங்களை மட்டுமே பேசி விட்டுச் சென்று இருக்கிறது. உண்மையில் நான் உட்பட என்னைப் போன்ற பலரும் குழம்பிப் போய்தான் இருக்கிறார்கள். இதைச் சொல்ல நான் வெட்கப் பட வில்லை. கண்ணை மூடிக் கொண்டு வாக்களிக்க நான் உடன்பிறப்பாகவோ, ரத்தத்தின் ரத்தமாகவோ இல்லாமல் இருப்பதன் வெளிப்பாடே இந்தக் குழப்பங்கள். சொல்லப்போனால் ஏதேனும் ஓர் கட்சியின் அடிமட்டத் தொண்டனாய் இருப்பதை விட, இப்படி குழம்பி இருப்பதை மோசமானதாகவோ, கேவலமானதாகவோ கருத வில்லை. இந்தளவுக்கு எந்த கட்சியின் மீதும் நம்பிக்கை இல்லாமல் போகச் செய்ததற்கு கட்சித் தலைவர்கள் வேண்டுமானால் வெட்கப் பட்டுக் கொள்ள்ட்டும்.

பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம்
இரண்டரை வருடங்களாய் உபயோகித்துக் கொண்டிருந்த என்னுடைய Splendor plus வண்டியை உடன் பிறப்புக்கு கொடுத்து விட்டு வேறொரு வண்டி வாங்கலாம் என்று முடிவு செய்ததிலிருந்து, நான் செய்த ஆராய்ச்சிகள் கொஞ்ச நஞ்சமில்லை. இப்போ நம்மகிட்ட வந்து எந்த பைக்குப்பா பெஸ்ட்டு என்று கேட்டால் உட்கார வைத்து அரை மணி நேரம் மொக்கையைப் போடும் அளவிற்கு அறிவு ஜீவியாகி விட்டேன்னா பார்த்துக்கோங்களேன். என்ன செய்ய கேக்கதான் ஆளில்லை. அதான் சுய தம்பட்டம் அடிக்கறதுக்குன்னே இங்க ஒரு இடம் இருக்கேன்னு இங்கெயே வந்துட்டேன்.

125 CC போகலாமா, 150 CC போகலாமா? என்பதிலிருந்து எல்லாவற்றையை அலசி ஆராய வேண்டியதாய் போயிற்று. 100 CC வண்டிகளின் மிகப் பெரிய பலவீனம் 50 கி.மீக்கு மேல் நாம் போனால் கன்ட்ரோல் கிடைக்காது என்பதுவும், அதன் சஸ்பென்ஷனும்தான். மிகப்பெரிய பலம் கையாளுதல் மிகவும் எளிது. கொஞ்சமேனும் Speed உம் Comfortability யும் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இவை உதவாது.

125 CC யில் இப்போது மார்க்கெட்டில் போட்டியிலிருப்பவை Honda Shine, Yamaha Gladiator, Suzuki Zeus, Bajaj Discover (135) ஆகியவை மட்டுமே. யாராவது XCD, Platina, TVS வண்டிகள் என்று வந்தீங்கன்னா நான் டென்ஷன் ஆயிடுவேன். நான் மோட்டார் சைக்கிள்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன். (அப்போ உபயோகிக்கிற நாங்க எல்லாம் கேனையனுங்களா என்று நீங்க டென்ஷன் ஆகாதீங்க. Opinion Differs.   )

ஒப்பிட்டுப் பார்த்தால் TVS எஞ்சினின் தரத்திற்கும் பஜாஜின் தரத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இல்லை என்றுதான் தோன்றுகிறது. ஒருகாலத்தில் TVS 50, Bajaj M80, Bajaj Cheetak வண்டிகளைக் கொடுத்த கம்பெனிகளா இவைகள் என்று பாவமாய் பார்க்கத் தோன்றுகிறது.

எனக்குத் தெரிந்தளவில் மற்றும் அனுபவத்தில் பஜாஜில் பல்சர் மற்றும் டிஸ்கவரைத் தவிர மற்ற வண்டிகள் மற்றும் அதன் எஞ்சின்கள் டப்பா வகையைச் சேர்ந்தவையே. டிஸ்கவர் வண்டிகளிலும் முதல் ஓரிரு வருடத்திற்கு எஞ்சின் நன்றாக உள்ளது அதற்கப்புறம் சல சல என்று ஆகி விடுகிறது என்று பரவலாய் சொல்கிறார்கள். “பதமா உபயோகிச்சா வண்டி கொஞ்ச நாளைக்கு தாங்கும்பா இல்லைனா டண்டணக்காதான்” என்று மெக்கானிக்குகள் சீரியசாய் அட்வைஸ் கொடுக்கிறார்கள். பஜாஜ் ஷோரூம்களிலேயே பஜாஜ் வண்டிகளுக்கு ரீசேல் மதிப்பு இல்லை. இதில் எங்கு போய் வெளியில் விற்பது?

யமாஹா க்ளாடியேட்டர் வண்டி பரவாயில்லை. ஆனால் யமாஹா வண்டிகளுக்கேயிரிய மைலேஜ் அதன் மிகப்பெரிய பலவீனம். அதிக தூரம் பிரயாணிப்பவர்கள் பின்னாடி ஒரு சின்டெக்ஸ் டேங்கை வாங்கி கட்டிக் கொண்டி நேரடியாய் பெட்ரோல் டேங்கிற்கு கனெக்ஷன் கொடுக்க வேண்டும். அந்தளவுக்கு இருக்கிறது மைலேஜ் பிராப்ளம். மற்றபடி இதில் மிகப்பெரிய அளவில் பிரச்சினை இல்லை. ஒரு சிலருக்கு இதன் ஸ்டைல் பிடித்திருக்கிறது. ஒரு சிலருக்கு ஸ்டைலிஷா இல்லை என்பது குறையாய் இருக்கிறது.

Suzuki Zeus வண்டியும் பரவாயில்லை என்று அதனை உபயோகிப்பவர்கள் சொல்கிறார்கள். இதன் மைலேஜ் இதன் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட். கண்டிப்பாய் 65 கிடைக்கும் என்று எல்லாருமே சொல்கிறார்கள். ஆனால் இதன் எஞ்சின் வெறுமனே 8.7 BHP மட்டுமே. மற்ற  Shine, Gladiator வண்டிகளில் இது 10 BHP. இது 5 கியர் வசதிகளைக் கொண்டது. அதனால் 80 கி.மீ ல் கூட நன்றாக போக முடிகிறது. அதே சமயம் 125 CC க்கு 5 கியர் என்பதுவும் யோசிக்க வேண்டியதாய் இருக்கிறது. இதன் ஸ்டைல் மிகவும் கன்சர்வேட்டிவ்வாய் இருக்கிறது. என்னைக் கேட்டால் “A Good bike and Value for Money”.

100 CC மார்க்கெட்டிங் பகுதியை தம் கையில் வைத்திருக்கும் ஹீரோ ஹோண்டா 125 மற்றும் 150 யில் கை விட்டு விட்டது என்றே சொல்லலாம். க்ளாமர் வண்டி அந்தளவு பலரைக் கவர வில்லை. மைலேஜ், எஞ்சின் கோளாறு என்று பல பிரச்சினைகள் எழுகின்றன. 150 CC யில் இப்போதுதான் விட்ட மார்க்கெட்டை கைப்பற்றுவதற்காய் Hunk களத்தில் இறங்கி வேட்டையை ஆரம்பித்துள்ளது. இருப்பினும் ஹீரோ ஹோண்டா க்ளாமரிலும்,Hunk லும் மைலேஜை அதிகரிக்கச் செய்தாலொழிய பெருவாரியான மக்களை திருதி செய்ய முடியாது. Hunk மற்ற விஷயங்களில் பரவாயில்லை. அதன் ஸ்டைலிஷ் லுக், பிக் அப், Top Speed Smoothness, பில்லியன் சீட்டிங் பொசிஷன் (காதலர்களுக்கு ஏற்றது) என்று பல நிறைகள் இருக்கின்றன.

இப்ப்படிப்பட்ட தொடர் ஆராய்ச்சிகளுக்குப் பின் எனது லிஸ்ட்டில் மிச்சமிருந்தவை Honda Shine, Unicorn, Pulsar, TVS Apache, Yamaha FZ16 மட்டுமே.

பல்சர் வண்டிதான் இப்போதைய இளைஞர்களின் கனவு பைக்காய் இருக்கிறது. அதற்குக் காரணம் அதன் ஸ்டைலிஷ் லுக்தான். ஆனால் நான் இந்த வண்டியை எடுத்த உடனேயே நிராகரித்து விட்டேன். காரணம் அந்த வண்டியை சற்றே முன்னோக்கி குனிந்தவாறுதான் ஓட்ட வேண்டும். அது வெளியிலிருந்து நம்மை பார்ப்பவர்களுக்கு மிகவும் ஸ்டைலாக இருக்கலாம். ஆனால் பிற்காலத்தில் முதுகு வலி வருவது நிச்சயம் என்று டாக்டர்கள் அடித்துச் சொல்கிறார்கள்.

அடுத்தது TVS Apache. இந்த வண்டியும் சீக்கிரத்திலேயே நிராகரிக்கப்பட்டு விட்டது என்னால். காரணம் TVS க்கே உரித்தான பராமரிப்புச் செலவு அதை விட முக்கியமய் இதன் உயரம். நான் இதில் ஏறி அமர்ந்தால் முட்டி இடைப்பது பெகு நிச்சயம். அந்தளவுக்கு உயரம் குறைவு இந்த வண்டி. ஆனால் இதன் ஸ்போர்ட்ஸ் மாடல் சமீப காலங்களில் பல இளைஞர்களைக் கவர்ந்துள்ளது. என்னைக் கேட்டால் பலசரை விட Apache RTR FI தான் படு அசத்தலாய் இருக்கிறது என்று சொல்வேன். ஆனால் என்ன செய்ய நான் தான் உயரமாய் பிறந்து விட்டேனே.

Yamaha FZ 16. பைக் பிரியர்களைத் தவிர இன்னும் அதிக பேரைச் சென்றடையாத பைக் இது. இந்த வண்டி மட்டும் சரியாக விளம்பரப்படுத்தப்பட்டால் Apache, Pulsar எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விடும். இதை நீங்கள் ஓட்டிச் செல்லும் போது ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்து பேராவது உங்களைத் திரும்பி பார்க்கா விடில் நீங்கள் தாராளமாய் என்னைக் கேள்வி கேட்கலாம்.

ஒரு 150 CC பைக்கில் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள். ஸ்பீடா? ஸ்போர்ட்ஸ் மாடல் ஸ்டைல் லுக்கா, அட்ராக்டிவ் கலரா, திறமையான டிஸ்க் ப்ரேக்கிங்கா? பெட்ரோல் டேங்க் டிசைனா? பெரிய்ய டியூப்லஸ் டயரா? இது எல்லாவற்றையும் சேர்த்துப் போட்டால் உங்களுக்கு கிடைப்பது இந்த பைக்தான். காதலியோடு அடிக்கடி சண்டை போடுபவரா நீங்கள். கவலை வேண்டாம். எவ்வளவுதான் சண்டை போட்டாலும் நீங்கள் இந்த பைக்கில் போகும் போது உங்களை தானாக அணைத்துக் கொள்வார். உங்கள் இருவருக்கும் நடுவே சமாதானப் புறாவாய் இந்த வண்டி உபயோகப்படும். “மைலேஜை பத்தி எல்லாம் எனக்கு கவலை இல்லைடா மச்சான். வண்டி நச்சுன்னு இருக்கணும்” என்று நண்பர்கள் நடுவே புலம்புபவர்கள் கண்ணை மூடிக் கொண்டு இதை வாங்கலாம்.

இது எல்லாம் இருந்தாலும் நான் இந்த பைக்கை வாங்கலை. ஒரே காரணம் என்னைப் பொறுத்த வரை This bike is purely for couples. Not for others. குடும்பத்திற்கும் சேர்த்து ஒரு பைக் வேணும்னா இது கொஞ்சம் கஷ்டம்தான்.

Honda Shine – 125 CC யில் இப்போது இருக்கும் நிலையில் பெஸ்ட் பைக் இதுதான் என்று சொல்லலாம். ஓரளவு சஸ்பென்ஷன், தரமான எஞ்சின், பிக் அப் என எல்லாமே சரியான தரத்தில்தான் இருக்கின்றது. இதை நிராகரிக்க வேண்டுமென்றால் ஒருவேளை உங்களுக்கு இதன் லுக் பிடிக்க வில்லை என்று நினைதால்தான் உண்டு. மற்ற படி என்னைப் பொறுத்த வரை இந்த வண்டிக்கென்று தனிப்பட்ட குறைகள் எதுவுமில்லை. 125 CC வண்டிகளுக்கென்று இருக்கும் வேகம், பிக் அப், ஸ்மூத்னஸ் ஆகியவற்றிலுள்ள எல்லைகள் மட்டும்தான் இதன் பிரச்சினை. (அதாவது எவ்வளாவுதான் நல்ல பிக் அப் இருந்தாலும் இது 150 CC வண்டியின் பிக் அப்பை விட குறைவாகத்தான் இருகும். மற்ற விஷயங்களிலும் அப்படியே). இவைகள் மட்டுமே இதன் குறைகள். எனக்கு ரொம்ப ஸ்பீடு எல்லாம்  வேண்டாம்பா. இன்னிக்கு இல்லைன்னாலும் என்னிக்காவது டேஞ்சர்தான். அதுவுமில்லாம நமக்கெல்லாம் மீடியம் ஸ்பீடு, மீடியம் வெயிட் இருக்கிற பைக்தான் கரெக்டு என்று சொல்லும் மத்திம வயதுக்காரர்கள் அல்லது மற்ற எல்லோரும் நம்பி இதை வாங்கலாம்.

Honda Unicorn – The Wing Rider. பெயருக்கேற்றார் போலவே இது நிஜமாலுமே விங் ரைடர்தான். சென்னையில் இன்றைக்கு ஆர்டர் கொடுத்தாலும் வண்டியை எடுக்க உங்களுக்கு குறைந்தது மூன்று மாதங்கள் ஆகும். Accessories விலையையும் சேர்த்து மொத்த ம்விலை 67,000 ஆகும் இந்த வண்டியை எடுக்க. இருப்பினும் இந்த வண்டிக்கு எக்கச்சகமான டிமாண்ட் இப்போது. காரணம் ஒன்றே ஒன்றுதான். இந்த வண்டியை ஓட்டும் ஒவ்வொரு கணங்களிலும் பறப்பது பொலத்தான் உணர்வீர்கள்.

இது அதிகப்படியான மதிப்பீடு அல்ல. இதன் Mono Suspension வேறு எந்த வண்டிகளிலும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. மற்ற வண்டிகளை விட இதில் முதுகு வலி வருவதற்கான சாத்தியக் கூறுகள் குறைவு. ஹெல்மெட் போட்டு ஓட்டும் போது எஞ்சின் சவுண்டை நீங்கள் கேட்டீர்கள் என்றால் உங்கள் காது ரொம்ப ஷார்ப் என்று உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளலாம். அவ்வளவு ஸ்மூத்தான எஞ்சின் சவுண்ட். அதை விட ஸ்மூத்தாய் கியர் பாக்ஸ். வெண்ணெய் மாதிரி வழுக்கிக் கொண்டு விழுகிறது கியர்கள். நமபி வாங்கக் கூடிய தரத்தில் ஹோண்டாவின் எஞ்சின்கள்.

தனது வண்டிகளின் ஒவ்வொரு உதிரிப்பாகங்களின் தரத்திலும் கூட மிகவும் கவனம் செலுத்தி இருக்கிறது ஹோண்டா. குவாலிட்டியில் இவர்கள் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளவே இல்லை என்பது உறுதி. இந்த வண்டியின் பலவீனங்கள், டெலிவரிக்காக காத்திருக்க வேண்டிய நிலை மற்றும் Post Sales Services. ஹோண்டா கண்டிப்பாக இன்னும் அதிக சர்வீஸ் சென்டர்களை அனைத்து ஊர்களிலும் பரவலாய் ஆரம்பிக்க வேண்டும்.

ஆகவே Honda Unicorn ஆ அல்லது Shine ஆ என்று கணக்குப் போட்டுப் பார்த்து யுனிகார்னையே தேர்ந்தெடுத்து விட்டேன். நான் இந்த வண்டியை வாங்கியது தாம்பரத்திலுள்ள லோதா மோட்டார்ஸில். நானும் எனது நண்பனும் 2 பைக் வாங்கறோம். கொஞ்சம் பார்த்து போட்டுக் கொடுங்க என்று சொன்ன போது. “சார் விலையில எல்லாம் கையை வெக்க முடியாது. வேணும்னா 20 நாளில் வண்டியை தருவித்துத் தருகிறேன்” என்று சொன்ன போது அவரு ஒரு ஆயிரம் ரூபாயைக் குறைச்சுக்கறேன் சார் என்று சொல்லி இருந்தால் கூட நாங்கள் அவ்வளவு சந்தோசப் பட்டிருக்க மாட்டோம்.

அவ்வளவு காசு கொழுத்துப் போயிடுச்சான்னு எல்லாம் யாரும் கேக்க வேண்டாம். ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங். என்ன செய்ய? 20 நாட்களில் தருகிறேன் என்று சொன்னவர் பத்தே நாட்களில் சார் வண்டி வந்துடுச்சுன்னு சொல்லி அடுத்த 2 நாட்களில் மற்ற வேலைகளை எல்லாம் முடித்து விட்டு 13 ஏ நாட்களில் வண்டியைக் கையில் வாங்கினோம். யுனிகார்ன் பைக்கை சமீப காலங்களில் இவ்வளவு சீக்கிரமாய் வாங்கியவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். உங்களில் எவரேனும் வாங்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தால் தயவு செய்து அடையார் GUN Motors பக்கமோ, அண்ணாசாலை Didar Motors பக்கமோ ஒதுங்கி விடாதீர்கள். எனக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடி ஆர்டர் கொடுத்த ஒருத்தர் இன்னும் 40 நாள்ல தந்துடறேன்னு சொல்லி இருக்காங்க என்று பாவமாய் சொல்லி விட்டுப் போனார்.

ஒருவழியாய் வண்டியை எடுத்து விட்டு, தாம்பரத்திலிருந்து வேளச்சேரி வரை வண்டியை ஒட்டிக்கொண்டு வந்த ஒவ்வொரு நொடியிலும் நானும் என் நண்பனும் காற்றில் மிதந்துக் கொண்டிருந்தோம். அது ஒரு பரவச அனுபவம்.  Yesss. Honda Unicorn is the real Wing Rider.

பி.கு: இது மோட்டார் பைக்குகள் குறித்தான எனது மதிப்பீடு. இது உங்களுடன் ஒத்து போக வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒத்துப் போச்சுன்னா நம்ம க்ரூப்புல இன்னொரு ஆளுடான்னு சந்தோசப் பட்டுக்கோங்க. படலைன்னா மொக்கையா எழுதி இருக்காண்டா மச்சான்னு மனசுக்குள்ள திட்டிக்கோங்க. விடுங்க பாஸ் இதெல்லாம் நமக்குள்ள சகஜம் தானே.