Protected: மனைவிகளுக்கு
There is no excerpt because this is a protected post.
Read Full Post »இலங்கை – மெல்ல தமிழ் இனி…
ஒரு பெரும் இரைச்சலுடன் அந்த விமானம் வந்து நிற்கின்றது. வானத்திலிருந்த இறந்கி வரும் தேவ தூதனைப்போல வெள்ளை உடை அணிந்த அந்த மனிதர் கதவுகளைத் திறந்து, அமைதியாக இறங்கி வருகிறார். ஒரு பெரும் சாதனையாளரைப்போல அதே சமயம் தன்னடக்கத்துடன் இருப்பவரைப் போல அவர் தனது முகத்தை வைத்துக் கொள்கிறார்.
விமானத்தின் படிக்கட்டுகளில் மெல்ல இறங்கி வந்த அந்த மனிதரின் கால்கள் தரையில் பட்டதும் அப்படியே மெல்ல மண்டியிட்டு அமர்கின்றார். முட்டியிட்டு, நெற்றி நிலத்தில் பட தனது மண்ணை வணங்கிய அவர், தன்னைச் சுற்றி இருப்பவர்கள் ஆராவாரம் செய்ய மெல்ல எழுந்து புன்னகை செய்தவாறே தனது கூட்டத்துடன் செல்கின்றார்.
மேற்குறிப்பிட்ட அனைத்தும் ஸ்லோமோஷனில் நடந்து கொண்டிருக்கும் இந்தக் காட்சியமைப்பு மட்டும் ஏதேனும் திரைப்படத்தில் காண்பிக்கப்பட்டிருந்தால், பார்வையாளர்களாகிய நாம் அனைவரும், “க்ளைமாக்ஸ்ல பிச்சு உதறிட்டாண்டா மாப்ளை” என்று உணர்ச்சி வசப்பட்டு போய் இருப்போம். பரவசத்தில் நமது கைகளின் ரோமங்கள் குத்திட்டு நிற்க எழுந்து நின்று கைகளை தட்டி விட்டு திரையரங்கை விட்டு சந்தோசமாய் வெளியே வந்திருப்போம்.
ஆனால் மேற்குறிப்பிட்ட காட்சிகள் காண்பிக்கட்டது திரைப்படத்திலும் அல்ல. வெள்ளை உடை அணிந்த அந்த மனிதன் தேவதூதனும் அல்ல. லட்சக்கணக்கான தமிழ் மக்களை அழித்த, பல்லாயிரக் கணக்கான பெண்களின் வாழ்க்கைய அலங்கோலப்படுத்திய, இன்னும் மூன்று தலைமுறைகளுக்கு ஒரு இனமே எழுந்த வர முடியாத படி படுகுழியில் தள்ளிய ஒரு மாபெரும் கூட்டத்தின் தலைவன் அவன். மஹிந்த ராஜபக்ஷே.
விடுதலைபுலிகளை தீவிரவாதிகள் என்று சொல்ல எவர் ஒருவருக்கும் முழு உரிமைகள் இருக்கின்றது. ஏனெனில் புலிகளின் தாக்குதலில் பல அப்பாவிகள் பலியாகியுள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் புலிகளை தீவிரவாதிகள் என்று தூற்றுகின்ற வாய்கள் இனவெறி இலங்கை அரசாங்கத்தை மட்டும் எதிர்த்துப் பேச மறுக்கும் கையாலாகாத் தனத்திற்கு மட்டும் இன்று வரை எந்த ஒரு இலங்கை ஆதரவாளரிடமிருந்தும் பதில் இல்லை.
ஆயுதம் தாங்கி எதிர் போராட்டம் நடத்தும் எந்த ஒரு அமைப்பையும் தீவிரவாதிகளாக பார்க்க நமக்கு கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அரசாங்கம் என்ற லேபிளின் கீழ் கொலைக் குற்றங்களை புரிபவன் மட்டும் தியாகியாக, தேவதூதனாக, நாட்டைக் காக்க வந்த சரித்திர நாயகனாக நமக்கு அடையாளம் காட்டப் படுகின்றான். இதோ இன்று இன்னும் ஒரு சரித்திர நாயகன் உருவாகி இருக்கின்றான். நாளைய வரலாறு இனி இவன் குறித்து மெல்ல புகழ் பாட ஆரம்பிக்கலாம்.
Read Full Post »வீர் சாவர்க்கர் – இலந்தை ராமசாமியின் புத்தகம் குறித்தான ஓர் அவசியமான விமர்சனம்
சாவர்க்கரைப் பற்றி சுருக்கமாய் சொல்ல வேண்டுமென்றால் அந்தமான் சிறைக்கு செல்லும் வரை இருந்த சாவர்க்கர் மட்டுமே வீர் சாவர்க்கர். அதற்குப் பின்பு நடமாடிய சாவர்க்கர் முற்றிலும் வேறு மனிதர். இந்தியாவில் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கும் மத துவேஷங்களுக்கு வித்திட்டதில் தெரிந்தோ தெரியாமலோ அவருக்கும் பங்கிருக்கிறது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அவர் ஆற்றிய பணிகளை, துணிச்சலான நடவடிக்கைகளை போற்ற வேண்டியது எப்படி நம் கடமையோ, அதே போல அந்தமான் சிறையில் கோழைத்தனமாய் அவர் பிரிட்டிஷாரிடம் கெஞ்சிய மன்றாடல்களை, காந்தியடிகள் கொலையில் அவருக்கிருந்த பங்கினை (நேரடியாகவோ, மறைமுகமாகவோ), இந்து மகா சபையின் மூலமும், தனது தொடர் பிரச்சாரங்களின் மூலம் மக்களின் மனதில் அவர் விதைத்த மதத் துவேஷங்களை இடித்துரைப்பதும் நம் கடமையே.
ஆனால் இந்த புத்தகம் வாசகனுக்குள் விதைப்பது என்ன? “தேசபக்தியில் அவரது உயரத்தை எட்டிப்பிடித்தவர்கள் மிகக் குறைவு. சூரியனை மேகம் மறைப்பதால் சூரியனுக்குக் குறைவில்லை” என்பது போன்ற வாசகங்களும், புத்தகத்தின் இறுதியில், “இமயமலையின் சிகரங்கள் வெளியே தெரிவதில்லை என்பதற்காக சிகரங்கள் இல்லை என்று சொல்லி விட முடியுமா? சிகரம்தான் சின்னதாகப் போய்விடுமா? சிகரத்தை நோக்கிக் கை கூப்புவோம். அந்த மரியாதையையாவது செய்யக் கற்றுக் கொள்வோம்” என்ற இறுதி வரிகளும் வாசகனுக்கு எப்படிப்பட்ட பிம்பத்தை தோற்றுவிக்கிறது என்பது முக்கியம் அல்லவா?
சாவர்க்கர் குறித்தான தீவிர விமர்சனம் எழுப்ப வேண்டிய பகுதிகளில் எல்லாம் ஆசிரியர் விமர்சனத்திற்குப் பதிலாக சால்ஜாப்புக் காரணங்களை மட்டுமே அடுக்குகின்றார். ஒரு இடை நிலை வாசகன் வெகு எளிதாய் “பாவம்பா அவரு மட்டும் என்னதான் செய்வார்” என்பது போன்ற பிம்பத்தை வெகு எளிதில் ஏற்படுத்திக் கொள்ள தீவிர முயற்சி செய்திருக்கிறார்.
Read Full Post »கொளத்தூர் மணி அவர்களின் பேச்சு – இறுதி
ஒரே ஒரு பொற்கோயிலுக்குள் நுழைந்ததற்காக, இந்திரா காந்தியை சுட்டுக் கொன்றது நியாயம் என்று இன்றளவும் சீக்கிய சமுதயம் சொல்லி வருகின்றது. சுட்டுக் கொன்றவர்களை தியாகிகள் என்று சொல்லுகின்றார்கள். சத்வந்த் சிங், பீந்த் சிங் என்று இருவர் சுட்டுக் கொல்கின்றனர். பீந்த் சிங் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் சத்வந்த் சிங்கும், அவருக்கு உடந்தையாக இருந்தவரும் கைது செய்யப் பட்டு அவர்கள் இருவரும் கைது செய்யப் படுகின்றனர்.
உடனே சீக்கிய மத பீடம் அறிவிக்கின்றது. அவர்கள் மூவரும் தியாகிகள் என்று. அவர்கள் குடும்பத்தை தங்கள் பொறுப்பில் இன்று வரை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் சுட்டுக் கொல்லப்பட்ட பீந்த் சிங்கின் மனைவி தேர்தலில் நிற்கிறார். காங்கிரசைத் தவிர வேறு எவரும் அவரை எதிர்த்துப் போட்டியிட வில்லை. கமல் கவுன் ஹௌசா என்ற அவரது மனைவி போட்டியிய்யு 5,40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். காங்கிரஸ்காரனுங்க வாங்கின் ஓட்டு வெறுமனே ஐம்பதாயிரம்தான். இன்று வரை இந்திய வரலாற்றில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்ற சாதனைக்குச் சொந்தக்காராராய் இருகிறார்.
அவர் ராஜீவ் காந்திக்கு எதிராக ஐந்து ஆண்டுகள் நாடாளுமன்றத்தில் அமர்ந்துதான் இருந்தார். இன்றளவுக்கும் அவர்கள் மூவரும் தியாகிகளாய் போற்றப்படுகிறார்கள். ஆண்டுதோறும் ந்டக்கும் வைசாகி திருவிழாவில் அவர்களாது படங்கள் வைத்து வணங்கப்படுகின்றது. ஆக சீக்கிய மக்கள் இது தவறு என்று இம்மியளவும் கருத வில்லை. இவ்வளவிற்கும் பின்னாலும் ராஜீவ் காந்தி, ராகுல் காந்தி, சோனியா,மன்மோகன் சிங், ஜெயில் சிங் உள்ளிட்ட அமைத்து காங்கிரஸ் தலைவர்களும் நெடுங்காலமாக தொடர்ந்து மன்னிப்பு கேட்டுக் கொண்டே வந்திருக்கின்றார்கள்.
Read Full Post »கைது செய்யப்பட காரணமாயிருந்த கொளத்தூர் மணி அவர்களின் பேச்சு – பாகம் 1
ஈழத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற படுகொலைகள், அவலங்கள் எல்லார் மனதையும் உருக்கி இருக்கின்றது. ஏதேனும் ஒரு நல்ல தீர்வு வர வேண்டும், அங்கிருக்கின்ற தமிழ் மக்களுக்கு நல்ல தீர்வு அமைய வேண்டும், கண்ணியமான, உரிமை பெற்ற வாழ்வு அமைய வேண்டும் என்று எல்லாரும் விரும்புகிறோம். இப்படிப்பட்ட எண்ணம் வருவதற்கு ஒருவர் தமிழனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒருவன் மனிதாக இருந்தாலே போதும்.
ஈழ்ச் சிக்கல் என்று நாம் பேசத் தொடங்கும் போதெல்லாம் தொடர்ந்து சில முழக்கங்களை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். காங்கிரஸ்காரர்கள் மறக்க மாட்டோம் மன்னிக்க மாட்டோம் என்கிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு என்கிறார்கள். கலைஞர் அவர்களோ சகோதரயுத்தம் என்றும், சர்வாதிகாரி என்றும் சொல்கிறார். 1987 ல் போடப்பட்ட ஒப்பந்தத்தை இப்போதுதான் காங்கிரஸ் பேசத் தொடங்கி இருக்கிறது. 1983 ல் கொடுத்த பேட்டியை இப்போதுதான் கலைஞர் நினைவு படுத்துகிறார். இன்றைய சிக்கல்களுக்கு என்ன்னய்யா தீர்வு என்றால் 25 வருடங்களுக்கு முந்தைய கதையைப் பேசுகிறார்கள். பழம் வரலாறு மட்டுமே பேசுகின்றார்கள் என்றால் இப்போது அவர்கள் உருப்படியாக எதையும் செய்ய வில்லை என்றுதான் பொருள்.
Read Full Post »உலகை உய்விக்க வந்த ரட்சகர்கள்
ஆதித்யா டீவிங்குறானுங்க, காமெடி டைமுங்கறானுங்க, கலக்கப் போவது யாரு, அசத்தப் போவது யாருன்னுன்னு ஆளாளுக்கு ஒவ்வொரு பெயர் வெச்சுக்கிட்டு காமெடி செய்கிறோம்னு அலப்பறை செய்துக்கிட்டிருக்காங்க. இது அத்தனைக்கும் நடுவில சத்தமே இல்லாமல் “Bright Vision” தினமும் ஒரு மூன்றுமணி நேரம் சரெவெடியா காமெடி நிகழ்ச்சிகளை தந்துட்டிருக்காங்க. ஆனால் இவங்களுக்கு சரியான டைம் தராததால இவர்களுடைய காமெடி முயற்சிகளும், திறமைகளும்
உலகத்திற்கு தெரியாமலே போய்க்கிட்டிருக்கு.
தினமும் விஜய் டீவியில் இரவு 11 மணிக்கு மேல ஒரு மூணு மணி நேரம் தொடர்ச்சியா போடற நிகழ்ச்சிகளைப் பாருங்க. அங்க சில மேதாவிகள் தோன்றி தரிசனம் கொடுத்து நமக்கு என்ன பிரச்சினை வந்தாலும் தீர்த்து வெப்பாங்க. வேலை கிடைக்கலை, கல்யாணம் ஆகலை, உங்க வீட்டு நாய்க்கு உடம்பு சரியில்லை, பைக் அடிக்கடி பங்சர் ஆகுது, கிரிக்கெட் மேட்சுல முனாஃப் படேல்
செஞ்சுரியே அடிக்க மாட்டீங்கிறாரு, சாப்பிடும் போது விக்கல் வருது இப்படி உங்களுக்கு என்ன பிரச்சினை வந்தாலும் இவங்ககிட்ட போங்க. அவங்க சொல்ற ஆலோசனைகளைக் கடைபிடியுங்கள். வாழ்க்கையில ஓஹோன்னு முன்னுக்கு வந்துடுங்க.
காங்கிரஸ், பிஜேபி: எவருக்கு வாக்களிப்பது?
தமிழகத்தைப் பொறுத்த வரை நமக்கு இருப்பது நான்கு வாய்ப்புகள் உள்ளன.
1. திமுகவிற்கோ – காங்கிரசு உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகளுக்கோ வாக்களிப்பதன் மூலம் மீண்டும் காங்கிரஸ் அரசு அரியணை ஏறுவதற்கு நாம் ஆதரவு தருவது.
2. அதிமுக, பாமக, மதிமுக கட்சிகளுக்கு வாக்களிப்பதன் மூலம் மூன்றாவது அணிக்கோ அல்லது பிஜேபி அரசுக்கோ நமது ஆதரவைத் தெரிவிப்பது.
3.பிஜேபி – சமக போட்டியிடும் ஒரு சில தொகுதிகள் உங்களது ஏரியாவாய் இருந்தால் நேரடியாய் அவற்றிற்கு வாக்களித்து உங்கள் ஆதரவைத் தெரிவிப்பது.
4. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தொடர் வெறியாட்டத்தை தடுக்கும் பொருட்டும், ஒரு வலுவான மாற்றுக் கட்சியை தமிழகத்தில் காலூன்றச் செய்யும் பொருட்டும் தேமுதிகவிற்கு வாக்களிப்பது. இதன் மூலம் அடுத்த சட்டமன்றத் தேர்தலிற்குள் இந்தக் கட்சியை இன்னும் பலப்படுத்த ஒரு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பது.
நான்காவதை நான் வலியுறுத்த காரணங்கள் இருக்கின்றது. ஒரு சில நாய்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். எவ்வளவுதான் எட்டி உடைத்தாலும் திரும்ப வந்து நம் காலையே முகர்ந்துக் கொண்டிருக்கும். இவனை விட்டால் நமக்கு வேறு நாதி இல்லை என்று நாம் ஆடும் ஆட்டங்களை அது தாங்கிக் கொண்டிருக்கும். நம்மை விட சிறந்த எஜமானனை அது கண்டு பிடிக்கும் வரை நம்முடைய ஆட்டத்தை நாம் தாராளமாய் ஆடலாம். கலைஞருக்கும், நமக்கும் இடையே இருக்கும் தற்போதைய உறவினைக் கூட இந்த எஜமானன் – நாய் உறவிற்கு ஒப்பிடலாம். ஏனெனில் நமக்கும் இப்போது இவரை விட்டால் நாதி இல்லை என்று சொல்லலாம்.
Read Full Post »பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம்
Honda Unicorn – The Wing Rider. பெயருக்கேற்றார் போலவே இது நிஜமாலுமே விங் ரைடர்தான். சென்னையில் இன்றைக்கு ஆர்டர் கொடுத்தாலும் வண்டியை எடுக்க உங்களுக்கு குறைந்தது மூன்று மாதங்கள் ஆகி இருக்கும். Accessories விலையையும் சேர்த்து 67,000 ஆகும் இந்த வண்டியை எடுக்க. இருப்பினும் இந்த வண்டிக்கு எக்கச்சகமான டிமாண்ட் இப்போது. காரணம் ஒன்றே ஒன்றுதான். இந்த வண்டியை ஓட்டும் ஒவ்வொரு கணங்களிலும் பறப்பது பொலத்தான் உணர்வீர்கள்.
இது அதிகப்படியான மதிப்பீடு அல்ல. இதன் Mono Suspension வேறு எந்த வண்டிகளிலும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. மற்ற வண்டிகளை விட இதில் முதுகு வலி வருவதற்கான சாத்தியக் கூறுகள் குறைவு. ஹெல்மெட் போட்டு ஓட்டும் போது எஞ்சின் சவுண்டை நீங்கள் கேட்டீர்கள் என்றால் உங்கள் காது ரொம்ப ஷார்ப் என்று உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளலாம். அவ்வளவு ஸ்மூத்தான எஞ்சின் சவுண்ட். அதை விட ஸ்மூத்தாய் கியர் பாக்ஸ். வெண்ணெய் மாதிரி வழுக்கிக் கொண்டு விழுகிறது கியர்கள். நம்பி வாங்கக் கூடிய தரத்தில் ஹோண்டாவின் எஞ்சின்கள்.
தனது வண்டிகளின் ஒவ்வொரு உதிரிப்பாகங்களின் தரத்திலும் கூட மிகவும் கவனம் செலுத்தி இருக்கிறது ஹோண்டா. குவாலிட்டியில் இவர்கள் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளவே இல்லை என்பது உறுதி. இந்த வண்டியின் பலவீனங்கள், டெலிவரிக்காக காத்திருக்க வேண்டிய நிலை மற்றும் Post Sales Services. ஹோண்டா கண்டிப்பாக இன்னும் அதிக சர்வீஸ் சென்டர்களை அனைத்து ஊர்களிலும் பரவலாய் ஆரம்பிக்க வேண்டும்.
Read Full Post »ஏர்டெல் ப்ராட்பாண்ட் : நுகர்வோர்கள் என்ன பைத்தியக்காரர்களா?
ஒவ்வொரு முறையும் நம்மால் தடுக்க முடியாத இடத்தில் தெரிந்தே நடக்கும் அநியாயங்கள் அளவுக்கதிகமான கோபத்தை ஏற்படுத்தி விட்டு நகர்வதுண்டு. அது அச்செயல் ஏற்படுத்தும் விளைவுகளால் மட்டுமல்லாது நம்மால் ஒன்றும் செய்ய முடியாத கையாலாகத்தனத்தின் காரணமாக சற்று அதிகமாகவே எதிரொலிக்கும். ஏர்டெல் ப்ராட்பேண்ட் தற்போது அறிவித்திருக்கும் Fair Usage Policy யும் அப்படிப்பட்ட ஒரு கோபத்தைக் கிளப்பிச் சென்றிருக்கிறது.
இதன் படி நீங்கள் Unlimited ப்ளானை உபயோகிப்பவராய் இருந்தாலும், உங்களுக்கென்று ஒரு குறிப்பிட்ட அளவு டவுன்லோட் அளவு நிர்ணயிக்கப்பட்டு விடும். உங்களது உபயோகம் அதைத் தாண்டிச் செல்லும் பட்சத்தில் உங்களது ப்ராட்பேண்ட் ஸ்பீடானது, சரி பாதியாக குறைக்கப்படும். (உதாரணத்திற்கு நீங்கள் 512 kbps உபயோகித்தால் 256 ஆக மாறி விடும்). இதே அளவு வேகத்தைதான் உங்களது அடுத்த பில் தேதி வரை நீங்கள் உபயோகிக்க முடியும். ஆனால் பில் மட்டும் உங்களது ஒரிஜினல் ப்ளானுக்கேற்றவாறுதான் வரும். (512 kbps க்குதான் வரும்). மீண்டும் அடுத்த மாதத்திலிருந்து நீங்கள் உங்களது சாதாரண ஸ்பீடிலேயே பயன் படுத்தலாம். ஆனால் நீங்கள் உங்களது உச்ச டவுன்லோடு அளவைத் தாண்டாதவரைதான். இல்லையெனில் மீண்டும் அதே கதைதான்.
ஏர்டெல்லின் இந்த அறிவிப்பானது தனி ஒருவரே அதிக பேண்ட்வித் உபயோகத்தை எடுத்துக் கொள்ளக் கூடாதென்று அறிமுகப் படுத்தப் பட்டிருக்கிறதாமாம். அப்புறம் என்ன வெங்காயத்துக்குடா Unlimited ப்ளான்னு இதைச் சொல்றீங்கன்னு கோபம்தான் ஏற்படுகிறது.
Read Full Post »நண்பர்களைப் பிரிந்த கதை
மச்சான் ரொம்ப போரடிக்குதுடா. எங்கயாவது பீச்சுக்கு போய்ட்டு வரலாமா? ரூம் மேட் கேட்டான்.
அப்படியா எந்த பீச்சுக்குடா போகறது? வெகு சீரியசாய் முகத்தை வைத்துக் கொண்டு கேட்டேன்.
திருவான்மியூர் பீச்சுக்கு போலாம்டா. கூட்டம் கம்மியா தான் இருக்கும். இல்லைன்னா பெசண்ட் நகர் போலாம். பக்கத்துலயேதான் இருக்கு.
சரி வேற யார் வர்றாங்க?
வேற யாருடா வருவா. நீயும் நானும்தான்.
சுரீர்னு கோபம் வந்தது எனக்கு. போடா போய் வேலையைப் பாருடா. பையனும் பையனும் பீச்சுக்குப் போறதாமாம். எந்த ஊர்லடா இந்த அநியாயம் நடக்கும். நீயும் நானும் போய் பீச்சுக்கு போய் என்ன பேச. இந்த நிலா வெளிச்சத்துல உன்னை பார்க்க மன்மதன் மாதிரியே இருக்கடான்னா சொல்றதா. இல்லை இந்த க்டலை பாரேன் எவ்வளாவு சந்தோசமா ஆர்ப்பரிச்சுட்டிருக்குதுன்னு நானும் கவிதை நடையா பேசறேன்னு மொக்கையை போட சொல்றியா? இதை எல்லாம் ஒரு பையனும் பையனும் பேசிக்கிட்டா நல்லா இருக்குமாடா? இதுக்கு நீ பேசாமா போய் தண்ணியடிச்சுட்டு கமுந்து படுத்து தூங்கலாம். இனிமே ஏண்டா குடிச்சு கெட்டுப் போறன்னு நான் உனக்கு அட்வைஸ் பண்ண மாட்டேன். இனிமே போரடிக்குதுன்னு தோணுச்சுன்னா போய் அதை பண்ணு. ஆனா என்கிட்ட வந்து பீச்சுக்கு போலாமான்னு மட்டும் கேக்காத. சொல்லிட்டேன் ஆமா.
அன்றையிலிருந்து அவன் என்னிடம் சாப்பிட போலாமான்னு கூட கேட்பதில்லை.
Read Full Post »